யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற போஸ்டர்: விவகாரமானது…

யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற போஸ்டர் ஒட்டிய விவகாரம், பெரிய விவகாரம் ஆகியுள்ளது. யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன் கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டபோது, அதனை ஒட்டியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை பொதுமக்களில் ஒருவர்…

எமக்கான பேரம் பேசும் ஆற்றலை தமிழ் நாட்டு மக்கள் உருவாக்கித்தர…

ஈழத்தமிழரின் நீண்ட கால உரிமைப்போராட்டத்தின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எமக்கான பேரம் பேசும் ஆற்றலை தமிழ் நாட்டு மக்கள் உருவாக்கித்தர வேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குமான தொடர்பு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நிலவி…

தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம்! சர்வதேச அனுசரணையுடன் பேசத் தயார்! கூட்டமைப்பு…

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கெடுக்க மாட்டோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாட தயாராக…

கே.பிக்கு எதிரான சர்வதேச பிடிவிராந்து நீக்கம்- 96 இலங்கையர்களுக்கு எதிராக…

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக இண்டர்போல் பொலிஸார் வெளியிட்டிருந்த சிகப்பு பிடிவிராந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் கே.பி பயங்கரவாத செயல்களில் ஈடுபடாத காரணத்தினால் அவருக்கு…

திருகோணமலையிலும் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது இராணுவம்

இலங்கை ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணி இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் சீனன்குடாவை அண்மித்த வெள்ளைமணல் கடலோர பகுதியில் பொதுமக்கள் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி விமானப்படையினரால் திடீரென கையகப்படுத்தப்படுவதாக உள்ளுர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மபுள்பீச் தொடக்கம் கருமலையூற்று வரையிலான நிலப்பகுதியை விமானப்படை சுவீகரிப்பதற்கான எல்லைகள்…

இன அழிப்பு அரசின் அடுத்த சதி!

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உளவளத்துணை ஆலோசனைகள் (Counseling) வழங்க இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று அறிவித்திருக்கிறது. மே18 க்குப் பிறகு இன அழிப்பு அரசு "புனர்வாழ்வு முகாம்கள்" என்ற பெயரில் நடத்திய இனஅழிப்பு வதை முகாம்களில் வைத்து நடத்திய "உளவளத்துணை ஆலோசனைகள்" குறித்து…

அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் உறுதி செய்ய பிரித்தானியா அழுத்தம் கொடுக்க…

இலங்கையில் அனைத்தின மக்களது அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் முறையாக உறுதி செய்யப்படுவதற்கு, பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் யுத்தக் குற்றங்கள்…

போரில் இந்தியப்படைகள் பங்கேற்கவில்லை – மறுக்கிறார் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா படையினருக்கு இந்திய இராணுவத்தினர் நேரடியாக உதவி வழங்கியதாகக் கூறப்படுவதை, போருக்குத் தலைமை தாங்கிய சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.  “இது உண்மையல்ல. வேண்டுமென்றே கூறப்பட்ட பொய்போலத் தோன்றுகிறது. அங்கு எவரது படையினரும் எம்முடன் செயற்படவில்லை. தரைப்…

இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி

இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட 15 புலி ஆதரவு அமைப்புக்களின் உறுப்பினர்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் நவனீதம்பிள்ளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார். ஐக்கிய நாடுகள்…

சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பம்!- பிரித்தானியா

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கும் முகமான சாட்சியப்பதிவு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்த தகவலை பிரித்தானிய வெளியுறவு அமைசசர் வில்லியம் ஹேக் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் விசாரணையை பொறுத்தவரை, அதில்,…

கோத்தபாய ராஜபக்ச மலேசியப் பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடல்

மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அந்நாட்டுப் பிரதமர் நஜீப் ரசாக்கைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் ஆசியா பாதுகாப்பு சேவைகள்- 2014 மாநாட்டின்போது நடைபெற்றதாக மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மற்றும் அவரது குழுவினருடன்…

வடக்குக்கு வருகிறாராம் தென்னாபிரிக்காவின் ராமபோச!

தென்னாபிரிக்க அரசின் விசேட பிரதிநிதி சிறில் ராமபோச எதிர்வரும் மே மாத இறுதியில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கு வருகை தரவுள்ளார். இவர் தென்னாபிரிக்க அரசால் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியாவார். இங்கு வரும் சிறில் ராமபோச கள நிலைமைகளை நேரடியாக…

டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை காணாமல் போனவர்களை தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு வடக்கிலும் கிழக்கிலும்…

குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் திருப்தியில்லை: பிரிட்டன்

இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியாது என பிரிட்டன் அமைச்சர் ஷுகோ ஸ்வாயர் தெரிவித்துள்ளார். போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. எனினும் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை. ஐக்கிய நாடுகள்…

சர்வதேச விசாரணை வரும் ஜூன் மாதமே நடைபெறும்!- கொழும்பு ஆங்கில…

இலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா வில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள் வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாக ஐ.நா உயர்அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான பொறிமுறை…

சர்வதேச பொலிஸ்காரனாக அமெரிக்கா செயற்படுவதை இலங்கை அனுமதிக்காது: கெஹலிய

சர்வதேச பொலிஸ்காரனாக அமெரிக்கா செயற்படுவதை இலங்கை அனுமதிக்காது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு ஒன்று இலங்கைக்கு சென்று விசாரணைகளை நடத்த எதிர்பார்த்துள்ளது. எனினும் இந்த நிபுணர் குழுவின் நியமனம்…

நெடியவன், விநாயகம் பற்றி சர்வதேச பொலிஸில் இலங்கை புகார்

இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டுவதற்கு முயற்சிப்பதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்ற நெடியவன், விநாயகம் ஆகிய இருவரையும் கைதுசெய்வதற்காக இன்டர்போல் - சர்வதேச பொலிசாரிடம் உஷார்ப்படுத்தியிருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருக்கின்றார். விடுதலைப்புலிகளின் நடவடிக்கைளை மீண்டும் உருவாக்குவதற்கு உதவுபவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை விரிபடுத்துவது பற்றி வெளியாகியுள்ள தகவல்…

ஐ.நா விசாரணைக்குழுவில் புலி ஆதரவாளர்கள்?

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உள்ளடக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரினால் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும்…

மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் வழங்கக் கூடாதா? -அப்படியொரு…

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பணியகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு தகவல் வழங்கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அரசாங்கம் தெரி­வித்­துள்­ளமையானது. அவர்­களை அச்­சு­றுத்தும் செயற்­பா­டாகும். அப்­ப­டி­யொரு சட்டம் நாட்டில் இல்­லை­யென ஐக்­கிய தேசிய கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். ஐக்­கிய…

பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணிவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்: கோத்தபாய

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணிவொரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக இவ்வாறு சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வரும் நபர்களின் தராதரத்தைப் பாராது சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

சிறிலங்காவை கவலைக்குரிய நாடாக பிரித்தானியா அறிவிப்பு

சிறிலங்காவை கவலைக்குரிய நாடாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பிரகடனம் செய்திருக்கிறது.  பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால், 2013ம் ஆண்டுக்கான மனிதஉரிமைகள் நிலை பற்றிய அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், சிறிலங்காவில், கடந்த ஆண்டு சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை கவலைக்குரியதாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போருக்குப் பின்னர், உட்கட்டமைப்பு வசதிகளை மீள…

மான் வேட்டையை, புலி வேட்டையாகக் காண்பிக்கின்றது சிங்கள அரசு!

இப்போது, இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்படும் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்காக அழுவதா? அல்லது ஆத்திரம் கொள்வதா? என்ற அங்கலாய்ப்பு மட்டுமே ஒவ்வொரு தமிழனிடமும் எஞ்சி இருக்க முடியும். கடத்தல்கள், காணாமல் ஆக்குதல், ஆதாரமற்ற வகையிலான படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகளாக ஆக்கப்படும் தமிழ்ப் பெண்களது மரணங்கள், கலாச்சாரச்…

கோபி, தேவியன் அப்பன் ஆகியோர் இராணுவ உளவாளிகளே!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் புளியங்குளம் இராணுவ முகாமில் பல காலமாக இராணுவ உளவாளிகளாக செயற்பட்டு வந்தவர்கள் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வீரரான செல்வராஜா கமலராஜா ( இலக்கம் 776927)…