வடக்கில் தொடரும் சுற்றி வளைப்புக்கள் – 65 பேர் கைது

வட,கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் பெறுவதற்கான முனைப்புக்கள் உள்ளதாக இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதன்படி இரு மாகாணங்களிலும் இதுவரை 65 இளைஞர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். கடந்த மாதத்தின் முற்பகுதியில் கிளிநொச்சி- தர்மபுரம் கிராமத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்…

சுண்டிக்குளமும் பறிபோகின்றது! துரோகத்தின் கூட்டுகளவாணிகளாக அரச அதிகாரிகள்!!

வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியினில் பெருமெடுப்பிலான சிங்கள குடியேற்றம் மற்றும் சுற்றுலா விடுதிகளை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.வடக்கினில் கோத்தா மற்றும் நாமல் ராஜபக்ஸ தரப்புக்கள் தமது முதலீடுகளை விஸ்தரித்துவருகின்ற நிலையினில் தற்போது ஓட்டப்பந்தயத்தினில் பிந்தி ஓடி வந்து பஸில்ராஜபக்சவும் இணைந்துள்ளார். இதன் பிரகாரம் சுண்டிக்குளம் பகுதியினில் சுமார் பத்து…

சர்வதேசத்தின் கோரிக்கைகளை இலங்கை செவிமடுக்க வேண்டும்: பிரித்தானியா

சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை செவிமடுக்க வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரி தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கைக்கு செய்தியை அனுப்பியிருக்கிறது. இந்தநிலையில் அந்த சர்வதேச சமூகம் எதனை எதிர்ப்பார்க்கிறது, எதனை கேட்கிறது என்று இலங்கை ஆராய வேண்டும்…

சிங்கள தேசம் இன்னொரு போர்க்களத்தை நோக்கியே தமிழர்களை நகர்த்துகின்றது!

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்த்தப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவுக்கு வரும் நாட்களில், மீண்டும் வன்முறைப் பாதை ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழ் மக்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் வலிந்து திணித்து வருகின்றார்கள். வரைமுறையற்ற சிங்கள அரச பயங்கரவாதத்தால், தமிழீழம் மீண்டும் அதி உச்சபட்ச அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. வாழ்வதற்கான…

பசில் ராஜபக்சவை சந்திக்க மறுத்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – மத்திய…

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துப் பேசுவதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளதாக, யாழ்ப்பாண ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது.   வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், பசில் ராஜபக் ச விருப்பம்…

ஐ.நா.வின் விசாரணைக்கு பங்கேற்று, உரியமுறையில் பதிலளிக்க வேண்டும்!– லக்ஸ்மன் கிரியல்ல

அரசாங்கம் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஜெனீவா தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். தீர்மானத்தின் ஊடாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடும். அரசாங்கம் இவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கத் தயாரா? விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என…

சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும்!- பொதுபல சேனா

சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும் என்பதில் சந்தேகம் இ;ல்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிறிய குடும்பம் பொன்னானது என்ற கொள்கை காரணமாக பல சிங்களப் பெண்கள் குடும்பக்கட்டுபாடு செய்து கொண்டனர். முஸ்லிம்க்ள பல்வேறு வழிகளின் சிங்களப் பெண்களுக்கு…

சர்வதேச விசாரணை குழுவின் முன் சாட்சி வழங்குபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!- இலங்கை…

மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சர்வதேச விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களையும் சாட்சிகளையும் வழங்குகின்றவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்காக எதிர்வரும் வாரங்களில் நவநீதம்பிள்ளை குழு ஒன்றை நியமிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.…

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காது! பங்கேற்காது!– பீரிஸ் திட்டவட்டம்

இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஏபி செய்திசேவைக்கு இந்த கருத்தை இன்று வெளியிட்டுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொள்ளும் விசாரணையை…

விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் மலேசியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில்; இரண்டாம் நிலை தலைவரும் வெளிநாட்டில் இயங்கியவருமான கபிலன் அல்லது நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேஷிய அதிகாரிகளின் உதவியுடன் இலங்கை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டாரென கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவரான நந்தகோபன் சரியாக ஒரு மாதத்துக்கு…

அரசாங்கம் இராணுவ தீர்வினை நம்பியமையே தமிழ் மக்கள் பலியானமைக்கு காரணம்!-…

இலங்கை அரசாங்கம் இராணுவ தீர்வினை நம்பியதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான மக்களை இறுதி யுத்தத்தில் கொன்று குவித்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். த இன்டிபென்டன்ட் பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவில் 20 வருடங்களுக்கு முன்னர்…

இலங்கை மீதான விசாரணை! ஐநா நிபுணர் குழு நியமனம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியதன் பிரகாரம் விசாரணைக்கான  நிபுணர் குழுவொன்று மே மாத  நடுப்பகுதியில் நியமிக்கப்படலாம் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2002-2009 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள்…

போர்க்குற்ற கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது!

ஐக்கிய நாடுகளின் போர்க்குற்றக் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்ககூடாது என்று தென்னிலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு நாட்டுக்குள் அவர்களை அனுமதிப்பதன் மூலம் ஏற்கனவே அவர்கள் தயாரித்து வைத்திருக்கும் இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல் அறிக்கைக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதாக அமைந்து விடும் என்று…

இலங்கையைத் தண்டிக்குமா அமெரிக்கா!

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய சில நாட்களில், கொழும்பில் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒரு பாதுகாப்புக் கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடமும், இலங்கை பாதுகாப்பு அமை ச்சின் கூட்டுப்படைத் தலைமையகமும் இணைந்து ஒழுங்கு செய்த- வுநஅpநளவ நுஒpசநளள ௲…

இலங்கைக்கு எதிராக விரைவில் விசாரணைகள்?

இலங்கைக்கு எதிரான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார். எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக்குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது. வீடியோ கொன்பிரன்ஸ்…

தமிழ் இளைஞர்களை வன்முறைக்கு மீண்டும் இழுக்க அரசாங்கம் முயற்சி

தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்புக்களை தடை செய்யும் இலங்கை அரசாங்கத்தின் பாஷிச போக்கிற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது. என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 15 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்படவுள்ளமை குறித்துக்…

முழுப்போர் குறித்தும் விசாரணை நடத்துவது நல்லது – என்கிறார் அமெரிக்கத்…

சிறிலங்காவில் போரின் முழுக்காலப் பகுதியிலும், எல்லாத் தரப்பினராலும், மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகள் தொடர்பாகவும், நம்பகமான- சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது நாட்டுக்கு நன்மையளிக்கும் என்று அமெரிக்கா உணர்வதாக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட…

போர்க்குற்றம் இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா தலைவர்கள், இராணுவ தளபதிகளின் பட்டியல்…

இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள்,  இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுமான மையத்தினால் வெளியிடப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 2001ம்…

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்காக பிரித்தானியா சர்வதேச பங்காளிகளுடன் நெருங்கி…

இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார். தம்மைப் பொறுத்தவரை இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும்…

தமிழினப் படுகொலைகளும் பிணந்தின்னிகளும்

ஆகாதவனை அழிப்பதற்கான பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களில் “ அனுகூலச் சத்துரு” உத்தியும் ஒன்று என்று ஆரியநூல்கள் கூறுகின்றன, அவற்றுள் இன்னொரு உத்தி திருதராட்டிர ஆலிங்கனம். நண்பனைப் போல் உறவு கொண்டு, உதவுவது போல் நடித்து, நண்பன் ஏமாந்த வேளையில் அவன் கழுத்தை அறுப்பது அல்லது அவனை ஆபத்தில் மாட்டி…

புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் குடும்பங்களை குறிவைத்து தாயகத்தில் வேட்டையாடும் நடவடிக்கை ஆரம்பம்?

விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புக்களை ஒருபுறம் இலங்கை அரசு தடை செய்துள்ள நிலையில் மறுபுறம் புலம்பெயர் செயற்பாட்டாளர்களது குடும்பங்களை தாயகத்தில் வேட்டையாடும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் கரவெட்டி அல்வாய் தெற்கினை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு    பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு பிள்ளைகளின் தாயாரான…

போரின் இறுதியில் புலிகள் எவருமே படையினரிடம் சரணடையவில்லை – என்கிறது…

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, அத்தகைய சம்பவங்கள் இடம்பெற்ற சூழல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை ஆரம்பமாகியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான…

மனித உரிமை மீறல்: விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்

இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மேற்கொள்ளவிருக்கும் விசாரணைக்கு அந்த நாட்டு அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த ஐ.நா. பொதுச் செயலாளரின் துணை செய்தித்…