சர்வதேச விசாரணை அழைப்பின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் அவசியம்!-…

இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், பொறுப்புக்கூறல் என்ற விடயம் அவசியமான ஒன்றாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் இந்தக் கருத்தை அவரின்…

நவனீதம்பிள்ளையின் விசாரணைக் குழு, நாட்டுக்குள் வர அனுமதியளிக்கப் போவதில்லை: இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் விசாரணைக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. நவனீதம்பிள்ளை, நிபுணர் குழு ஒன்றை நிறுவி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கிற்கு விஜயம் செய்து சாட்சியங்களை திரட்டுவதற்கு அனுமதியளிக்குமாறு…

வெளிநாட்டு தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை

வெளிநாடுகளிலுள்ள 16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள்" என இலங்கை அரசு இந்த அமைப்புகளை வர்ணித்துள்ளது. இந்த அமைப்புகளுடன் இலங்கைப் பிரஜைகள் எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று இலங்கை அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு…

ஐநா விசாரணையை எதிர்கொள்ள இலங்கை அரசு தயாராகிறது! முதற்படியாக சர்வதே…

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  அதனை எவ்வாறு  கையாள்வது  குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த  ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள…

ஜெனிவா தீர்மானம் இலங்கையில் செல்லுபடியாகாது! விசாரணைக்கும் இடமளிக்கமாட்டோம்!

இலங்கைக்கு எதிரான சர்வதேசத் தலையீடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஜெனிவா தீர்மானம் இலங்கையில் செல்லுபடியாகாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றி பற்றியும் வினவிய போது ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய…

வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு

வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகிறது - வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகின்றது. போர் முடிந்து இந்தனை ஆண்டுகளாகியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வடக்கு மாகாணத்தில் இராணுவவத்திடமே அதிகாரங்களைக் கொடுத்துள்ளார் என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்…

ஐநாவில் இந்தியா பின்வாங்கியது பயத்திலா? யோகேஸ்வரன் எம்.பி கேள்வி

ஐ.நா கூட்டத் தொடரில் இந்தியா நடுநிலை வகித்திருப்பது, நம்பிக்கையோடு இருந்த பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவாத் தீர்மானத்தில் 25வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக…

இலங்கை மீதான விசாரணையில் மாற்றமில்லை! 14 லட்சம் அமெரிக்க டொலர்…

இலங்கையில் விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆணையாளர் அலுவலகம் விசாரணை மேற்கொள்ளும் என்று ஜெனிவா தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2002 ம் ஆண்டு தொடக்கம்…

தமிழ்ப் பெண்கள் மீதான வன்முறைகளே ஐ.நா.வின் விசாரணைக்கு முக்கிய பங்காற்றின!–…

இலங்கையில் தமிழ்ப் பெண்களிற்கு ஏற்பட்ட வன்முறைகள் மற்றும்  இழைக்கப்பட்ட அநீதிகள் என்பனவே ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் விசாரணை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படக் காரணமாக அமைந்தன என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழ்ப் பெண்களிற்கு ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனிதவுரிமை கண்காணிப்பகம், இங்கிலாந்தை…

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – வெள்ளை மாளிகை கருத்து

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் பணியகத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  வெள்ளை மாளிகையில், அதிபர் ஒபாமாவின் நேரடிக் கண்காணிப்பில் செயற்படும் தேசிய பாதுகாப்புச்சபையின் பேச்சாளர் கைற்லின் ஹேடன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில்,…

தமிழர்களுக்கு மீண்டும் துரோகமிழைத்து விட்டது இந்தியா- சீக்கிய அமைப்பு கண்டனம்

சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து நம்பகமான,சுதந்திரமான அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானத்துக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியா ஆதரவளிக்காதது குறித்து சீக்கியர்களின் அமைப்பான அனைத்துலக தல் கால்சா (Dal Khalsa) கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின்தலைவர், சர்தார் ஹர்சரன்ஜித் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை…

தீர்மானத்தை 24 நாடுகள் எதிர்த்தன என்று அரசாங்கம் கூறுவது, செந்தில்…

ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தில் அரசாங்கம் வெற்றியடைந்து விட்டதாக காட்டுவதற்கு செந்திலும் கவுண்டமணியும் சினிமாவில் வாழைப்பழம் வாங்கிய கணக்கினைப் போன்று அதனைக் காட்டி சிங்கள மக்களை ஏமாற்றுகின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை ஆதரித்து 23 நாடுகளும், அதனை எதிர்த்து 12 நாடுகளும், ஏனைய…

சர்வதேச விசாரணைக்கு அங்கீகாரம் தரப்பட்டிருக்கின்றது!- அமெரிக்க செனட் வெளிவிவகாரக் குழுத்…

இலங்கையில் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகின்ற போர்க்குற்றங்கள் மீது ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு இப்போது அங்கீகாரம் தரப்பட்டிருக்கின்றது என்று அமெரிக்க செனட் வெளி விவகாரக் குழுவின் தலைவர் றொபேட் மெனன்டெஸ் தெரிவித்துள்ளார். அந்த அங்கீகாரத்தைத் தந்த, ஐக்கிய அமெரிக்காவினால் இணைந்து பிரேரிக்கப்பட்டு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை…

ஜெனீவா தீர்மானத்தை நிராகரிக்கிறோம்! இந்தியா நடுநிலை வகித்தமை மகிழ்ச்சி! ராஜபக்ச

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக எ.எவ்.பி. செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளையில் தான் எங்கள் நாட்டுக்கே உரித்தான நல்லிணக்கப்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்றப் போவதாகவும் அறிவித்தார்.…

ஜெனிவா தீர்மானத்துக்கு இட்டுச் சென்ற இலங்கைப் போர்! – ஐநாவிலிருந்து…

இலங்கைப் போர் 25 வருடங்கள் தொடர்ந்த ஒன்று. அதன் இறுதி மாதங்களில் நாற்பதினாயிரம் பேர் வரை மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருந்தது. அந்தப் போரில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு…

மனித உரிமைகள் ஆணையர், நிபுணர்களின் துணையுடன் ‘விரிவான’ விசாரணை நடத்தலாம்!

இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் இலங்கையில் விரிவான விசாரணைகளை நடத்த இத்தீர்மானம் வழியமைத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், மெஸிடோனியா, மொரீஷியஸ், மொன்டேநேக்ரோ ஆகிய நாடுகள் முன்னின்று கொண்டுவந்த தீர்மானத்திற்கு 47…

இந்தியா ஆதரவளிக்காமை ஒட்டுமொத்த தமிழ்மக்கள் முகத்தில் கரி பூசியதற்கு ஒப்பானது!-…

அமெரிக்காவினால் ஜெனிவாவிலே கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காமை ஒட்டுமொத்த தமிழ்மக்கள் முகத்தில் கரி பூசியதற்கு ஒப்பானது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். நேற்று நடைபெற்ற ஜெனிவாத் தீர்மானத்தில் இந்தியா ஆதரவாக வாக்களிக்காமை பற்றி கருத்துக் கூறும்போதே இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் கருத்துக் கூறுகையில். கடந்த வருடம்…

தீர்மானத்தின் ஊடாக மிகத் தெளிவான செய்தி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது!– அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக இலங்கைக்கு மிகத் தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது. நித்தியமான சமாதானம், சௌபாக்கியத்தை ஏற்படு;த்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என்ற செய்தி இலங்கைக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன்…

இலங்கை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

இலங்கை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட…

நவநீதம்பிள்ளையின் அழைப்புக்கு கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல்

இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வு அழைப்பு விடுத்துள்ள சர்வதேச விசாரணைக்கு கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் போல் டேவர் பிரேரணை ஒன்று நேற்று முன்வைத்தார். சர்வதேசத்தின் முன் இலங்கையின் போர்க்குற்ற…

இலங்கையின் மனித உரிமை மீறல் மீதான புதிய தீர்மானம்! ஐநாவில்…

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தும் புதிய தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் மனித இனம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பேரவலத்தை தமிழர்கள் அனுபவித்தனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள்…

இலங்கைக்கு எதிராக 23, ஆதரவாக 14, நடுநிலையாக 10. எதுவும்…

இலங்கை மீதான வாகெடுப்பு புதன் மாலை அல்லது வியாழன் நடக்கலாம் அதில் வாக்களிப்பில் இலங்கைக்கு எதிரான வாக்குக்கள் அதிகரித்தாலும் 25 நாடுகள் ஆதரவு அளிக்குமானால் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை இன்னும் வலுப்படுத்தும் என மனித உரிமை ஆய்வாளர் ச.வி.கிருபாகரன் மற்றும் அரசியல் ஆய்வாளர் நிர்மானுஜன் ஆகியவர்கள் தெரிவித்தனர்.…

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு தருஸ்மான் நிபுணர்கள் குழு ஆதரவு!

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று, ஐநா பொது செயலாளர் பான் கீ மூனினால் இலங்கை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குழுவின் அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அது கலைக்கப்பட்டது.…