இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மான இறுதி வரைபு வெளியானது

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைபு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித…

இறுதி வரைவு முன்னேற்றகரமானது என்கிறது உலகத் தமிழர் பேரவை

இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு முன்னேற்றகரமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக வந்த…

ஐ.நா பின்புலத்தைக் கொண்ட அனைத்துலக தீர்ப்பாயம் போன்று சிறிலங்காவில் உருவாக்கப்பட…

சிறிலங்காவின் களநிலவரத்தை பிரித்தானியாவின் டேவிட் கமரூன் அரசாங்கம் புறக்கணிப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.  சியராலியோனில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.நா பின்புலத்தைக் கொண்ட அனைத்துலக தீர்ப்பாயம் போன்று சிறிலங்காவில் உருவாக்கப்பட வேண்டும் என்று, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் இந்தியாவின் தி இந்து…

ஐ.நா தீர்மானம் பற்றி குறை கூறுவதில் பயனில்லை! இலங்கை மீது…

ஐ.நாவில் வழமையான நிலையை விட இம்முறை தீர்மானம் வலிமையடையும் நிலையில் இதனை தமிழ் மக்கள் ஏற்பது காலத்தின் கட்டாயம். இத் தீர்மானத்தில் உள்ள சில சரத்துக்கள் தமிழருக்கு பலமடையும் நிலையில் உள்ளது என பேராசிரியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள். மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை மீதான…

இலங்கையில் துஷ்பிரயோகங்கள் நீடிக்கின்றன: புதிய குற்றச்சாட்டு

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகும் சூழ்நிலையிலும், அங்கே மோசாமான மனித உரிமை மீறல்களும், சித்ரவதைகளும், துஷ்பிரயோகங்களும், பாலியல் தாக்குதல்களும் தொடர்ந்து நடப்பதாக பிரிட்டனில் இருந்து இயங்கும் மனித உரிமை அமைப்பொன்று குற்றம்சாட்டியுள்ளது. பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தவர்கள் சிலர்,…

தமிழ் மக்களை முற்றாகப் புலம்பெயர நிர்ப்பந்திக்கும் சிங்கள அரச பயங்கரவாதம்!

ஜெனிவாவை திசை திருப்பவே அரசாங்கம் புலி நாடகங்களைப் போடுகின்றது  என்று வட மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் அவர் ஒரு சரியான கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பதற்கும் அப்பால், ஜெனிவாவை மட்டமே கருத்தில் கொண்டு சிங்கள ஆட்சியாளர்கள் அரச பயங்கரவாதத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள் என்பதாக…

வடக்கில் தீவிரமடையும் இராணுவத்தின் தேடுதல்கள்

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளாகின்ற நிலையில், இறுதி யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கின்றார்கள் எனக் கூறி, யுத்தம் நடைபெற்ற வடபகுதியில் கிராமங்களை இராணுவத்தினர் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அண்மைய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்…

‘பயிற்சி துன்புறுத்தல் வீடியோ உண்மையானதே’: இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவத்தில் பெண் இராணுவ பயிலுனர்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது, பயிற்சியாளர்கள் அவர்களை கேலி செய்து- திட்டி, தாக்கி துன்புறுத்துவதாக இணையதளங்களில் பரவியுள்ள வீடியோ காட்சிகள் உண்மை தான் என்று இலங்கை இராணுவம் கூறியுள்ளது. குறித்த பயிற்சி பெறும் இராணுவ வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இராணுவ சட்டவிதிகளுக்கு முரணாக…

ஜெனீவாவில் வாக்குமூலமளித்த மருத்துவரது குடும்பத்திற்கு அழைப்பாணை!!

இறுதி யுத்த கால உண்மைகள் மற்றும் மருத்துவ நெருக்கவாரங்கள் தொடர்பில் ஐ.நா வில் கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.வரதராஜாவிற்கு இலங்கையின் இரகசிய பொலீஸ் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரகசிய பொலிஸ் முன்னிலையில் மீண்டும் ஆஜராகுமாறு வீட்டுக்கு கடிதம் வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், உங்களால் வருகை தர…

த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் இணைய வேண்டும் என்பதே முஸ்லிம்களின் விரும்பம்

நீண்டகாலமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்துள்ள போதும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன்…

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு அறிக்கை ஐ.நாவில் தாக்கல்

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர், இலங்கையில் தமிழ் மக்கள் பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மனித உரிமை குழு தெரிவித்துள்ளது. போருக்கு பின்னர் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை இந்த குழு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் வழங்கியுள்ளது. 40…

சிங்களப் படையில் தமிழ்ப் பெண்கள்: கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நிகழ்ச்சி நிரலின்…

சிறீலங்கா படையில் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் படையில், அவர்கள் பயிற்சியின்போது துன்புறுத்தப்படும் காணொளி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நாம் முன்பே பல தடவை பதிவு செய்ததை இந்த காணொளிகள் உறுதி செய்கின்றன. அதாவது, சிறீலங்கா இராணுவத்தில் ஏற்கனவே சிங்களப் பெண்கள் இணைக்கப்பட்டிருந்தாலும்…

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை இராணுவ முகாமிற்கு வருமாறு…

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரையும் இன்று காலை கிளிநொச்சி பிரதான இராணுவ முகாம் பகுதிக்கு வருமாறு இராணுவத்தினர் அவசர அறிவித்தல் ஒன்றை பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன்     இணைக்கப்பட்ட மற்றும் புனர்வாழ்வு பெறாதா நிலையில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த…

சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள அமெரிக்காவின் செனட் சபை ஆதரவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க செனட் சபையின் தலைவர் பொப் மெனன்ட்ஸ் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் அமெரிக்க அரசாங்கத்தினால் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில்…

வடக்கில் வீடு வீடாகச் சென்று தேடுதல் நடத்திய படையினர்: அச்சத்தில்…

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் கிராமங்களில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் அங்கு மக்கள் பதற்றமும் அச்சமும் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் கிளிநொச்சி தர்மபுரம், புளியம்பொக்கணை பகுதியில் குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மீது, அந்த நபர் துப்பாக்கிப்…

சிங்கள புலனாய்வுப் பிரிவால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கர்பிணிப் பெண்!

தனது கணவர் காணமல் போயுள்ளார் என்று முறையிட்ட காரணத்தால், மனைவியின் வீட்டிற்குச் சென்ற சிங்கள புலனாய்வுப் பிரிவினர் கர்பிணிப் பெண் என்றுகூடப் பாராமல் தர்மிளாவை அடித்து இழுத்துச் சென்றுள்ளார்கள். இச் சம்பவம் கடந்த 11ம் திகதி திருகோணமலை உப்புவெளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மீடியாக்களில் செய்திகள் சில…

இறுதி யுத்தத்தில் மக்களின் கண்ணீரை ஆதாரத்துடன் ஐ.நாவில் எடுத்துரைத்த வைத்திய…

இறுதிக்கட்ட யுத்தத்தின் பேது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் இதற்கு ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகள் தெளிவு படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் முன்னெடுத்தன. என்னால் வாகரை முதல் மாத்தளன் வரை நடந்தவற்றை குறிப்பிட முடியும் எம்மை…

ஜெனிவாவில் எவ்வித தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!- பீரிஸ்

ஜெனீவா தீர்மானம் எதுவாக இருப்பினும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது   என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார். ஜெனீவாவில் எமக்கு பலமான சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.…

அமெரிக்காவின் திருத்த தீர்மானத்தினை பலவீனப்படுத்த சிறிலங்கா ஆதரவு நாடுகள் கடும்…

சிறிலங்காவுக்கு தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் முறைசாரா பகிரங்க கலந்தாய்வு, பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள அமெரிக்க சிறப்பு பிரதிநிதி Pயரடய ளுஉhசநைகநச அவர்களின் தலைமையில் இக் கலந்தாய்வு இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, உறுப்பு நாடுகளின் பார்வைக்காக, அமெரிக்கா…

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிக்கின்றன! சர்வதேச விசாரணை அவசியம்!–…

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக ஜேர்மனியும், டென்மார்க்கும் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் 25வது அமர்வில் அறிக்கை ஒன்றை விடுத்து இந்த நாடுகள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளன. யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க…

மனித உரிமை செயற்பாட்டாளர் விடுதலை கோரி ததேகூ ஆர்ப்பாட்டம்

இலங்கையின் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய ருக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவின் மகேசன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, வடமாகாண சபையினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள். மாதாந்த அமர்வுக்காக காலையில் கூடிய சபை…

இலங்கையின் அண்மைய கடத்தல்களை நான் அறிவேன்! விசாரணை செய்யும் அதிகாரம்…

கைது செய்யப்பட்ட இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களால் நவிப்பிள்ளையிடம் வினவப்பட்டபோது நவிப்பிள்ளையின் பதில் இறுக்கமானதாக இருந்தது. நேற்றைய தினம் ஞாயிறு கொழும்பு மனிதவுரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ (சுரமi குநசயெனெழ) என்பவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்…

யுத்தக் குற்றங்களுக்கான தண்டனை இலங்கையின் சட்டவாட்சியை வலுப்படுத்தும்!– வில்லியம் ஹெக்

ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு ஆதரவு கோரியுள்ள பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹெக், உண்மையை எதிர்பார்க்கும் மக்களுக்கு அதனை வழங்குவதற்கு நம்பகத் தன்மை வாய்ந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையான அரசியலை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன பொறிமுறையொன்றை…