லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்

இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, இங்கு பிரிட்டனில் இருக்கும் முஸ்லிம்களால் ஒரு கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு என்ற இயக்கத்தின் தலைமையில், பல சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த…

இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் விசாரணை! இம்மாத பிற்பகுதியில்…

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து இம்மாத பிற்பகுதியில் அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் பேச்சாளர் கூறியுள்ளார். இவ்வாறான விசாரணைகளை…

புலம்பெயர்ந்தோர் தொடர்பான இலங்கையின் தடையை இந்தியா ஏற்றுள்ளது – அமெரிக்கா…

16 புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விதித்திருந்த தடையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த தடை செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது, அவர் விமான…

சம்பூரின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிக்க முயற்சி?

சம்பூர் என்ற கிராமத்தின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  ஆங்கில ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. திருகோணமலை - மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரில் இருந்து பொது மக்கள் இடம்பெயர்ந்து 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும் அந்த மக்களை சொந்த இடங்களில்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 54 இராணுவ முகாம்கள்!- த.தே.கூ. திடுக்கிடும்…

இலங்கை இராணுவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 புதிய இராணுவ முகாம்களை உருவாக்கி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்த திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்த இராணுவ முகாம்களுக்காக மொத்தமாக 650 ஏக்கர் காணிப்…

இலங்கை மீது பொருளாதார தடையா? பதில் கூற இன்னும் கால…

இலங்கையில் போருக்கு பின்னர் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது முழுமை ஆதரவை வழங்கும். ஏனினும் இலங்கை நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டு;ம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தலைமையாளர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார் அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்…

‘இலங்கையில் கடும்போக்கு மதவாதச் செயற்பாடுகள்’: பாப்பரசர்

இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களுக்கும் பாப்பரசர் பிரான்சிஸுக்கும் இடையிலான சந்திப்பு வத்திக்கானில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் பாப்பரசருடனான சந்திப்பில் இம்முறை இலங்கையின் 11 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள் கலந்துகொண்டதாக வத்திக்கான் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. 'போர் முடிந்துவிட்ட போதிலும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும்…

ஐ.நா. தீர்மானம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை உள்ளடக்கியுள்ளது!- சுமந்திரன்

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை உள்ளடக்கியதாகவே இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். அத்துடன் மேற்படி தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு நன்மையில்லை என விமர்சிப்பவர்கள் தமிழ் மக்களுக்கு பாதகமான நிலைப்பாட்டை உண்டாக்குகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.ஊடக…

தாக்குதலில் தப்பி ஓடிய விக்கினேஸ்வரன்! பிரபாகரனைச் சர்வாதிகாரியென அவமதித்ததன் விளைவு!!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையினில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார். சாவகச்சேரியினில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தினில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சர்வாதிகாரியென தெரிவித்து பேசியிருந்தார். இதனால் சீற்றமடைந்த கூட்டமைப்பின் ஆதரவாளர்களான இளைஞர்கள் சிலர்…

பிரபாகரன் பற்றிய கருத்து தொடர்பில் விக்னேஸ்வரன் விளக்கம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேதின உரையின்போது தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பில் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் தனது மேதின உரையில், 'இராணுவத்தை ஒருபோதும் வட மாகாணத்திலிருந்து எடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி இறுமாப்பாகக் கூறியதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன். ஒருகாலத்தில் பிரபாகரனும் கேட்பாரின்றி…

சிறிலங்காவுடனான ஒத்துழைப்புகள், பயிற்சிகளை மட்டுப்படுத்தியது அமெரிக்கா

சிறிலங்காவில் போரின் போது இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து இன்னமும் விசாரிக்கப்படாததால், சிறிலங்காவுடனான தீவிரவாத முறியடிப்பு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அமெரிக்கா 2013ம் ஆண்டில் மட்டுப்படுத்தியுள்ளது. இந்த தகவல் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்ட தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா தொடர்பாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள…

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ராஜபக்சவினர் உதவி?

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் இரகசியமான நடவடிக்கைகளுக்கு இலங்கையின் இன்றைய அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது உறுதியாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயிற்சியளிக்கும் பயங்கரவாதிகளுக்கு ராஜபக்ஷவினர், இலங்கையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதாக தெரியவந்துள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும்…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சுயநல நாடகங்கள் அரங்கேறுகின்றன: விக்னேஸ்வரன்

இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேதின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத்தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார். தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், உலகு தழுவிய…

புலிகள் தொடர்ந்தும் இயங்குகின்றனர்! ஆயுதங்களையும் கொள்வனவு செய்கின்றனர்!- அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  எனினும் அவர்கள் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. எனினும் 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை…

தெரிவுக்குழு என்பது செத்துப் போன விடயம்! அதற்கு உயிர் கொடுக்க…

இனப்பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் தான் தீர்வு என்று  அரசதரப்பில் திரும்பத் திரும்பப் பேசப்படுகின்றது. கூட்டமைப்பைப் பொறுத்தவரை தெரிவுக்குழு செத்துப்போன விடயம். அதற்கு உயிர் கொடுக்க நாம் தயாரில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பா.உ. தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண…

சர்வதேச சமூகம் குறித்த அணுகுமுறை: ஒத்த நிலைப்பாட்டுக்கு சம்பந்தன் வலியுறுத்தல்

இலங்கைப் பிரச்சினையில், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு மற்றும் அதனை அணுகும் முறை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடாது என அக்கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் வலியுறுத்தி கூறியிருக்கின்றார். இன்று புதன்கிழமை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த தந்தை செல்வாவும் தீவிரவாதியா? வி.உருத்திரகுமாரன் கேள்வி

தமிழீழக் கோரிக்கையினை முன்வைக்கின்ற காரணத்தினால் புலம்பெயர் தமிழ் சமூகத்தினை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றவர்கள், தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த தந்தை செல்வாவினை தீவிரவாதியாக சித்தரிக்குமா? என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கேள்வியெழுப்பியுள்ளார். கனடாவில் இடம்பெற்றிருந்த ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கும் தமிழர்களுக்கான பரிகார நீதி தேடும் வழிமுறைகள் எனும்…

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் புலி உறுப்பினர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை!-…

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிகப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது. அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள…

தமிழ் தேசிய கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை! ஐவர்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதற்கான முன்னேற்பாடுகளை ஒட்டி, அந்த அமைப்புக்கான யாப்பைத் தயாரிப்பதற்கு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்திருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ…

பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்த புலனாய்வு உத்தியோகத்தர்?: ஒரு…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கைவிரல் அடையாளங்களை பதிவு செய்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் நிலாப்டீனுக்கு ஒரு லட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்தல் மற்றும் ஆயிரம் புலி உறுப்பினர்களை கைது செய்த நிலாப்டீனுக்கு…

தமிழ் கூட்டமைப்பின் அடுத்த நகர்வு குறித்து நாளை தீர்க்கமான முடிவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்பதற்காக கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் நாளை புதன்கிழமை திருகோணமலையில் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் ஒன்றுகூடவுள்ளனர். இந்த முக்கிய சந்திப்பில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுப் பேச்சுக்கான தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தம், கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுவின் தென்னாபிரிக்கா பயணம், ஜெனீவாவில் கடந்த…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாண சபை தீர்மானம்

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. நாட்டில் அமைதி நிலவுகின்ற போதிலும், தமிழ் மக்களுக்கு அழுத்தம் கொடுக்கத்தக்க வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக இந்தப் பிரேரணையை சபையில் முன்மொழிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வட…

தொண்டர் படையில் சேர யாழ் இளைஞர்கள் முண்டியடிப்பு !

இராணுவத்தின் தொண்டர் படையில் வேலைக்கு சேர்கின்றமைக்கு யாழ். மாவட்ட இளையோர்கள் பல நூற்றுக் கணக்கில் முண்டி அடித்து செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. ஈழ உணர்வு இணையத்தளங்களும் ஊடகங்களும் இதற்கு கடும் எதிர்பை வெளியிட்டுள்ளபோதிலும், முதலாம் கட்ட ஆட்சேர்ப்பு கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது என்று அதிர்வு இணையம்…