சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியின் முதல் தவணை இந்த…

சர்வதேச நாணய நிதிய நிதி உதவியின் முதல் தவணை 2023ஆம் ஆண்டின் 1வது காலாண்டில் பெறப்படும் என நம்புவதாக மத்திய வங்கி, கோப் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதிக் குழு, சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட…

ரணிலும் விரட்டியடிக்கப்படுவார் – நாடெங்கும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போல் இந்நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டுக்கு ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திவைத்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

இலங்கை வான்பரப்பின் வழியே செல்லும் விமானங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

இலங்கை வான்பரப்பின் ஊடாக பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தக் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். விமான நிலையம் மற்றும்…

ராஜபக்சவினருக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பிப்போம்-சம்பிக்க ரணவக்க

பின்வாசல் வழியாக அரசாங்கத்தின் ஆட்சியை முன்னெடுக்கும் ராஜபக்சவினருக்கு இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை கற்பிக்க போவதாக 43வது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை நேற்று முன்தினம் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து…

சீனா தொடர்பில் போலியான பீதியை கிளப்ப வேண்டாம்-அமெரிக்க தூதுவரிடம் கோரிக்கை…

இலங்கைக்குள் சீனா தொடர்பாக போலியான பீதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என சிங்கள தேசியவாத அமைப்பான தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்க முயற்சி சீன அரசின் நடவடிக்கைகளே இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நெருக்கடி அதிகரிக்க…

தேர்தலைப் பிற்போடும் யோசனை இதுவரை இல்லை: ரணில்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம், தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வேட்புமனுத் தாக்கல் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் நேற்று (22.01.2023) ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய…

மக்கள் உதவவில்லை என்றால் சிறை செல்வேன் – மைத்திரி எடுத்த…

நீதிமன்ற வழக்கு தீர்ப்பின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 10 கோடி ரூபாவை செலுத்துவதற்கு தன்னிடம் பணபலம் இல்லை முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த தொகையை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளதாகவும், மக்கள் செலுத்தாவிட்டால் சிறை செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10…

மகிந்த – கோட்டாபய மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜி7…

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மேலும் இரு இராணுவ அதிகாரிகள் மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும் நோக்கில், G7 நாடுகளை ஒன்று திரட்டுவதற்கு கனடா செயற்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். அண்மையில், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித…

இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் – வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும்…

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு அமைய இந்த வாக்குச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட உள்ளன. 340 உள்ளூராட்சி சபைகளுக்காகன தேர்தல் நடத்தப்பட உள்ளதுடன் அவற்றுக்கு தனித்தனியாக வாக்குச்சீட்டுக்கள்…

நெருக்கடிகளுக்கு தீர்வை வழங்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்-தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

பொருளாதார நெருக்கடி உட்பட நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு சரியான தீர்வு யோசனைகளை முன்வைக்க முடியாது போன எவருக்கும் மக்கள் வாக்களிக்கக்கூடாது என சிங்கள தேசியவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதால் அரசாங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. பொறுப்பை நிறைவேற்ற…

கோட்டாபயவின் செயற்பாடுகளே நாட்டின் அழிவுக்கு காரணம்-பைசர் முஸ்தபா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் காரணமாகவே நாட்டுக்கு தற்போதைய அழிவு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். ஏற்படுத்திய அழிவுக்காக வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் பதவியை கைவிட நேரிட்டது கோட்டாபாய ராஜபக்சவின் செயற்பாடுகளேயே இந்த…

ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் குழுக்களை இயக்கிய 14 இலங்கையர்களுக்கு சிறைத்தண்டனை

ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் குழுக்களை இயக்கியதற்காக 14 இலங்கை பிரஜைகளுக்கு வடக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாரிஸுக்கு வடக்கே 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள செரிஃபோன்டைன் பகுதியில் இருந்து இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாக கூறப்படும் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

சுற்றிவளைக்கப்படும் கொழும்பு, பல வீதிகள் முடக்கம் – மறிக்கப்பட்டது ஜனாதிபதி…

கொழும்பு - லோட்டஸ் வீதிப் பகுதியில் அனைத்து தொழிற்சங்க கூட்டணிகளும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் பிரதான வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை காலிமுகத்திடல் பகுதியிலும் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்…

நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : விஜயதாச…

நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் நீதிமன்ற சேவை ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்வதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அறிக்கை வழங்க்கடுமாயின் அதனை நீதி சேவை ஆணைக்குழுவிடம் சமர்பித்து பதிலை பெற்று தருவதாக அமைச்சர் கூறினார். நீதவான் ஒருவர் ஒரு…

இலங்கை அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட…

இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி அதிகரிப்பு, மருந்து பற்றாக்குறை தொடர்பில் நாடு முழுவதும் பல எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளன. அந்தவகையில், பல தொழிற்சங்கங்கள் இணைந்து இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த விடயத்தை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்…

இலங்கையின் கடன் தொகை 25 ட்ரில்லியனை ரூபாவை கடந்தது

இலங்கை அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 25 ட்ரில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின் மொத்த கடன் தொகை 25 ட்ரில்லியன் ரூபாவை கடந்துள்ளதாகவும், உள்நாட்டு கடன் தொகை அதிகரிப்பு…

கோட்டா, மஹிந்தவிற்கு எதிரான நடவடிக்கைகளை ஏனைய நாடுகளும் அமுல்படுத்த வேண்டும்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடாவின் பொருளாதாரத் தடைகளை, ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உரிமை…

இலங்கைக்கு தலாய்லாமா செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா

இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்தித்தனர். அவரை இலங்ைகக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அவரது பயண தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்தநிலையில், அவரது இலங்கை பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் உள்ள…

விரைவில் நாடு இரண்டாக பிளவடையும்: வீரவன்ச பகிரங்க குற்றச்சாட்டு

வெகு விரைவில் நாடு இரண்டாக பிளவடையும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் உறுதிமொழி வழங்கியிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உறுதிமொழி மூலம் நாடு விரைவில் பிளவடைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.…

மோசமான தோல்வி – இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை

2023 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சந்தித்த மோசமான தோல்வி தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை கிரிக்கெட் தேசிய அணியின் முகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையானது கேப்டன், தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்…

சர்வதேசத்திற்கு ஒரு முகத்தையும், ஈழத்தமிழர்களுக்கு ஒருமுகத்தையும் காட்டும் ரணில் அரசு

சர்வதேசத்திற்கு ஒரு முகத்தையும், ஈழத்தமிழர்களுக்கு ஒருமுகத்தையும் காட்டும் ரணில் அரசு!தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்துக்கு ஒரு முகத்தையும் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு ஒரு முகத்தையும் காட்டிக்கொண்டிருக்கிறது என பொத்துவில் தொடக்கம் பொலிக்கண்டி வரையிலான பேரியக்கத்தின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வேலன் சுவாமிகள் தெரிவித்தார். தேசிய பொங்கல் தினம் நேற்றையதினம்…

ஈழ விடுதலைப் போரில் சொல்லப்படாத பக்கங்ளை கூறும் பயங்கரவாதி நாவல்…

ஈழ விடுதலைப் போராட்டத்தில் சொல்லப்படாத பக்கங்ளை சுமந்த  தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீட்டு விழா கரைச்சி பிரதேச சபை அரங்கில் இன்று(15) இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபை பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பில், யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர், பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் இந்நிகழ்வு…

ராஜபக்சக்களுக்கு தடை விதிக்க புலம்பெயர் தமிழ் அமைப்பு பல நாடுகளிடம்…

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தடை விதிக்குமாறு புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று மேலும் பல நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு தடை விதிப்பதற்கு கனேடிய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை உலகத் தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. முற்போக்கான நாடுகளும் தடை…