நஜிப் மூன்று அவசர காலப் பிரகடனங்களை ரத்துச் செய்யும் பிரேரணையை…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மூன்று அவசர காலப் பிரகடனங்களை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட அந்த மூன்று பிரகடனங்களும் அமலில் இருக்கின்றன. நீக்கப்படும் அவசர காலப் பிரகடனங்கள் வருமாறு: 1966ம் ஆண்டு சரவாக்கில் 'அரசியல் வேறுபாட்டை ஒடுக்குவதற்கு'…

ஹிசாம்: அமைதியாகக் கூடுதல் சட்ட மசோதா திரும்பப் பெற மாட்டாது

அமைதியாகக் கூடுவதற்கு வகை செய்யும் சட்ட மசோதாவை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உள்துறை அமைச்சர் ஹிசாம்முடின் ஹுசேன் கூறினார். முதல் வாசிப்பிற்காக செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்வாரா…

இராணுவ வாக்குகள் கூட இப்ராஹிம் அலியை காப்பாற்ற முடியாது

"தமக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பது அந்த பாசிர் மாஸ் எம்பி-க்கு நன்கு தெரியும். அவர் இனிமேல் தாவுவதற்குக் கட்சிகளே இல்லை." இப்ராஹிம் அலி தமது தொகுதியில் இராணுவத் தளம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார் ஜேம்ஸ்1067: மனிதர்கள் ஒரு போதும் பாடம் கற்றுக் கொள்ள மாட்டார்கள் எனச் சொல்வது…

நாடாளுமன்றத்தில் அவசர காலப் பிரகடனங்களை ரத்துச் செய்யும் மசோதா தாக்கல்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மூன்று அவசர காலப் பிரகடனங்களை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட அந்த மூன்று பிரகடனங்களும் இன்னும் அமலில் இருக்கின்றன. நீக்கப்படவிருக்கும் அவசர காலப் பிரகடனங்கள் வருமாறு: 1966ம் ஆண்டு சரவாக்கில் 'அரசியல் வேறுபாட்டை…

பட்ஜெட் 2012 ஏற்றுக்கொள்ளப்பட்டது

நாடாளுமன்றம் மலேசிய அரசின் 2012 ஆண்டிற்கான வரவுசெலவு முன்மொழிதலை ஏற்றுக்கொண்டது. நேற்றிரவு மணி 10.33 க்கு நாடாளுமன்றம் ரிம232.8 பில்லியன் பட்ஜெட்டை கிட்டத்தட்ட ஒரு மாத கால கடுமையான விவாதத்திற்குப் பின்னர் நிறைவேற்றியது. மூன்றாவது முறையாக பட்ஜெட் 2012 மசோதாவை இரண்டாவது நிதி அமைச்சர் அஹமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா…

சுங்கை பீசி விமானத்தளம்:மிகப் பெரிய சலுகைவிலையில் 1எம்டிபிக்கு விற்கப்பட்டது ஏன்?

பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா,  மிகப் பெரிய சலுகைவிலையில் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்துக்கு நிலம் விற்கப்பட்டது ஏன் என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புவா, சுங்கை பீசியில் 495 ஏக்கர் பரப்பளவுகொண்ட நிலம்…

மாணவர் உதவித்தொகை கொடுக்கப்படும் நிகழ்வுக்கு பக்காத்தான் பிரதிநிதிகளும் வரலாம்

மாணவர்களுக்கு ரிம100 உதவித் தொகை கொடுக்கப்படும் நிகழ்வுகளுக்குப் பக்காத்தான் ரக்யாட் பிரதிநிதிகள் வருவது தடுக்கப்படவில்லை என்று கல்வி துணை அமைச்சர் வீ கா சியோங் கூறுகிறார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை அமைச்சர், அமைச்சின் அறிக்கை உள்ளூர் தலைவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அழைக்க வேண்டும்…

பிஏசி: ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே என்எப்சி-க்கு கடன் கிடைத்து விட்டது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னரே அது குறைந்த வட்டியைக் கொண்ட கடனை பயன்படுத்த முடிந்துள்ளது. அந்தத் தகவலை பிஏசி என்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் அஸ்மி காலித் வெளியிட்டார். விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சின் பல அதிகாரிகளை…

அமைதியான கூட்ட மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என பக்காத்தான்…

மக்களவையில் முதல் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைதியான கூட்ட மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் இன்று கேட்டுக் கொண்டுள்ளது. அந்த மசோதா மீது நடைபெறும் விவாதத்தில் தாங்கள் அதனைக் கடுமையாக எதிர்க்கப் போவதாக பக்காத்தான் தலைவர்கள் அறிவித்தனர். அந்த மசோதாவில் காணப்படும் விதிமுறைகள் போலீஸ்…

என்எப்சி: தொடக்கநிலை விசாரணையிலேயே “எரிச்சல்” அடைந்தது பிஏசி

பொதுப்பணம் தவறாகக் கையாளப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைக் கண்டு நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு(பிஏசி) “எரிச்சல்” அடைந்திருப்பதாக அக்குழுத் தலைவர் அஸ்மி காலிட் கூறினார். இன்று, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்பிசி) தொடர்பில் விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் அஸ்மி இவ்வாறு கூறினார். “நிர்வாக முறைகளைத்…

ஐஎஸ்ஏ கைது மீதான தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

அண்மையில் 13 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரும் அவசரத் தீர்மானம், ‘பாதுகாப்பு’காரணங்களுக்காக அனுமதிக்கப்படவில்லை. “அதில் பாதுகாப்பு அம்சங்கள்” சம்பந்தப்பட்டிருப்பதால் “பொதுவில் விவாதிக்க இயலாது” என்று மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா குறிப்பிட்டார். “அது பற்றி மேல் விவரங்கள்…

பாசிர் மாஸில் இராணுவத் தளம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார் இப்ராஹிம்…

பாசிர் மாஸில் இராணுவத் தளம் அமைக்கப்பட வேண்டும் என பாசிர் மாஸ் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அலி கேட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வாறு கட்டப்படும் போது அங்கு "பிஎன் ஆதரவு" வாக்காளர் எண்ணிக்கை கூடும் என அவர் சொன்னார். "ஒரு பட்டாளம் அளவு துருப்புக்கள். அது நிறைய வாக்காளர்கள்.…

மலேசியாவில் ஊழலில் ஈடுபட்டதற்காக இன்னொரு பிரஞ்சு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது

மலேசியா உட்பட மூன்று நாடுகள் சம்பந்தப்பட்ட உலகளாவிய லஞ்ச ஊழல் குறித்து புலனாய்வு நடத்தப்பட்ட பின்னர் நிறுவன கவனக் குறைவுக்காக அல்ஸ்டோம் என்ற பிரஞ்சு மின்சார பொறியியல் குழுமத்துக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர் (124 மில்லியன் ரிங்கிட்) அபராதத்தை ஸ்விஸ் அதிகாரிகள் விதித்துள்ளனர். லாட்வியா, மலேசியா, துனிசியா…

டிஏபி: இசி தேர்தல் தேதி குறித்து கூட்டரசு, மாநில அரசுகளுடன்…

எப்போது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை சுமூகமாக முடிவு செய்வதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் கூட்டரசு, மாநில அரசுகளை ஒன்றிணைக்க வேண்டும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார். அது அவ்வாறு செய்யாவிட்டால் சிலாங்கூரிலும் பினாங்கிலும் மாநிலத் தேர்தல்களை நடத்துவது மீதான…

அமைதிப் பேரணி மசோதா, அம்னோ இனவாதத்தை அதிகரிக்கும்

அமைதிப் பேரணி மசோதா அம்னோவின் இனவாதத்தை மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டது எனவே அதை கவனமாக பரிசீலிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது முதலாவது வாசிப்புக்கு, பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி அமைதிப் பேரணி மசோதா 2011-யை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா…

அஜிஸ் பேரி-க்கு சிலாங்கூர் இஸ்லாமிய மன்றம் தடை விதிக்கிறது

சிலாங்கூர் சுல்தானைக் குறை கூறியதாகக் கண்டிக்கப்பட்ட சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி, சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகக் கல்லூரியில் (குய்ஸ்) நிகழும் கருத்தரங்கு ஒன்றில் பேசுவதற்கு சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம்(மாய்ஸ்) தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காஜாங்கில் அமைந்துள்ள குய்ஸ்,  மாய்ஸுக்கு முழுமையாகச் சொந்தமானதாகும். அது சிலாங்கூர்…

பெர்க்காசா: ஒன்று கூடுவதற்கான கட்டுப்பாடுகள் சிறிய தியாகம்

பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்கின்றவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், நாட்டின் பாதுகாப்புக்கும் பொது ஒழுங்கிற்கும் நாம் கொடுக்கும் சிறிய விலை என மலாய் உரிமைப் போராட்ட அமைப்பான பெர்க்காசா கூறுகிறது. "ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என விடுக்கப்பட்டுள்ள நடப்புக் கோரிக்கைகளை தன்னால் முடிந்த வரை பூர்த்தி செய்ய அரசாங்கம்…

நஜிப்பின் அரசியல் சீர்திருத்தங்கள் அவ்வளவுதானா?

"ஏமாற்றுவதும் பொய் வாக்குறுதிகளையும் வழங்குவதே அம்னோ ஆட்சியின் அடையாளங்கள் என்பது முன்னைக் காட்டிலும் இப்போது தெளிவாகி வருகிறது." அமைதியான கூட்ட மசோதா தெரு ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்கிறது விஜய்47:  ஏமாற்றுவதும் பொய் வாக்குறுதிகளை வழங்குவதும் அம்னோ ஆட்சியின் அடையாளங்கள் என்பது முன்னைக் காட்டிலும் இப்போது தெளிவாகி வருகிறது. அதில் உள்ள…

மாட் சாபு சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்த இடத்துக்கு சுஹாக்கம் வருகை…

பெர்சே 2.0 பேரணி குறித்து பொது விசாரணை நடத்தி வரும் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் இன்று தனது விசாரணையை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்த இடத்துக்குக் கொண்டு சென்றது. அது ஏற்கனவே சாட்சிகளை விசாரிப்பதற்கு மூன்று கூட்டங்களை நடத்தியுள்ளது.…

பிகேஆர்: “சாலை ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி இல்லை” என்பது நியாயமற்றது, அரசமைப்புக்கு…

அமைதியாக கூட்டம் நடத்துவதற்கு வகை செய்யும் மசோதாவில் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது நியாயமற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது என பிகேஆர் கூறுகிறது. அந்தக் கட்சி reformasi கால கட்டத்தில் சாலைகளில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் உதயமானது. அந்தக் கட்டுப்பாடு நேர்மையற்றது என பிகேஆர் உதவித் தலைவர்…

இயல்பான வாக்காளர் பதிவுக்கு அரசாங்கம் திட்டமிடவில்லை

மலேசியர்கள் 21 வயதை அடைந்ததும் இயல்பாகவே வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதற்கு வகை செய்யும் பொருட்டு அரசியலமைப்பைத் திருத்த அரசாங்கம் எண்ணவில்லை. இவ்வாறு பிரதமர் துறை துணை அமைச்சர் விகே லியூ இன்று மக்களவையில் தெரிவித்தார். அந்த முறையில் பலவீனங்கள் இருப்பதாகவும் அது அமலாக்கப்பட்டால் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் அவர்…

திருநங்கையாக இருப்பது “அரசியலமைப்புக்கு முரணானது” எனக் கூறுவதை முனைவர் நிராகரிக்கிறார்

கூட்டரசு அரசியலமைப்பின் 3(1)வது பிரிவின் அடிப்படையில் ஒரினச் சேர்க்கை 'அரசியலமைப்புக்கு முரணானது' என இரண்டு அம்னோ அமைச்சர்கள் அளித்துள்ள விளக்கம் குறித்து சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி கேள்வி எழுப்பியுள்ளார். தாம் ஒரினச் சேர்க்கையை ஆதரிக்கவில்லை எனக் கூறிய அப்துல் அஜிஸ், அந்த விதிமுறைக்கு பல வழிகளில்…

அது “சட்டவிரோத கூட்டம்” நடத்துவதற்கான மசோதா என்று பெயரிட வேண்டும்

அமைதியாகக் கூட்டம் நடத்த வகைசெய்யும் மசோதா,  அரசமைப்புப்படி கூட்டங்கள் நடத்தவுள்ள உரிமைகளைக் கட்டுப்படுத்த போலீசுக்குக் கூடுதல் அதிகாரம் அளிப்பதாக பக்காத்தான் ரக்யாட் அரசியல்வாதிகளும் சிவில் உரிமை போராட்டவாதிகளும் கொதிப்படைந்துள்ளனர்.  அம்மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அது எந்த இடத்தில் கூட்டம் நடத்தலாம் என்பதை முடிவுசெய்வதில் அரசாங்கத்துக்கும் போலீசுக்கும்…