ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
பிரதமர்: பெர்சே ஊடக விளம்பரத்துக்காக அரங்கத்தை நிராகரித்தது
அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பெயர் குறிப்பிடாமல் தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 3.0ஐ சாடியிருக்கிறார். பெர்சே 3.0 பங்கேற்பாளர்கள் டாத்தாரான் மெர்தேகாவில் போடப்பட்டிருந்த தடைகளை தாக்கி அதன் விளைவாக அனைத்துலக ஊடகங்களில் விளம்பரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக பெர்சே 3.0 ஏற்பாட்டாளர்கள் மாற்று இடங்கள்…
மலேசிய அரசியலை அம்னோ படு பாதாளத்துக்குள் தள்ளி விட்டது: கிட்…
அம்னோ பாரு 1988ம் ஆண்டு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டதால் அதற்கு இப்போது வயது 24 தான். ஆனால் அது தனது 66வது ஆண்டு நிறைவை இப்போது கொண்டாடுகிறது. மூல அம்னோ கட்சியின் பதிவு அதிகாரப்பூர்வமாக திட்டமிடப்பட்டு ரத்துச் செய்யப்பட்டது. அந்தக் காரணத்தின் அடிப்படையில் அம்னோ பாருவில் உறுப்பினர்களாக இருப்பதற்கு…
‘நல்ல கம்யூனிஸ்ட்கள் மட்டுமே பெர்சே-யை ஆதரிக்கின்றனர்’
பெர்சே 2.0 பேரணியில் கம்யூனிஸ்ட் அனுதாபிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் கூறியுள்ளதை பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான ஹிஷாமுடின் ராயிஸ் நிராகரித்துள்ளார். ஹனீப் சொல்வது போல ஏப்ரல் 28 பேரணியில் கம்யூனிஸ்ட்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் 'நல்ல கம்யூனிஸ்ட்களாக' இருக்க வேண்டும். ஏனெனில்…
ஐரின் பெர்னாண்டெஸ் எம்ஏசிசி-யிடம் வாக்குமூலம் கொடுத்தார்
தெனாகானித்தா நிர்வாக இயக்குநர் ஐரின் பெர்னாண்டெஸ், கடந்த திங்கட்கிழமையன்று இந்தோனிசிய நாளேடு ஒன்றுக்கு தாம் அளித்த பேட்டியில் மலேசியாவுக்குப் பாதகமான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுவது மீது புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்புஆணையத் தலைமையகத்தில் இன்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஐரின் பெர்னாண்டெஸ் தமது வாக்குமூலத்தை பதிவு…
பெர்சே ‘அதிகாரம் இல்லாத’ ஹனீப் குழுவை நிராகரிக்கிறது
ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள "சுயேச்சையானது எனக் கூறப்படும்" குழுவை "அதிகாரம் இல்லாதது" எனக் கூறி பெர்சே நடவடிக்கைக் குழு நிராகரித்துள்ளது. அந்தக் குழு அமைக்கப்படுவதற்கும் அதன் பணிகளை நிர்ணயிப்பதற்கும் எந்தச் சட்டங்கள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதற்கு எந்த…
உங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் காரணமா ? யார்…
"பிஎன், எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புக்கள் ஆகியவை உட்பட நாங்களும் அதில் சம்பந்தப்பட்டுள்ளோம். ஏன் அது குறித்து அனைவருடனும் அல்லது யாருடனும் முன் கூட்டியே ஆலோசனை நடத்தப்படவில்லை?" இசி: எங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு பெர்சே-யும் எதிர்க்கட்சிகளுமே காரணம் பீரங்கி: தேர்தல் ஆணையம் தனது சொந்த நன்மைக்காக மிகவும் கெட்டிக்காரத்தனமாகப்…
பெர்சே 3.0ன் தாக்கம் நான்கு மாதங்களுக்கு நீடிக்கலாம்
பெர்சே 3.0ன் தாக்கம் நான்கு மாதங்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். இவ்வாறு Cense என்று அழைக்கப்படும் வியூக ஆய்வு மய்யத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பூய் கே சூங் கூறியிருக்கிறார். "13வது பொதுத் தேர்தலில் அரசியலும் வாக்காளர்களுடைய எண்ணமும்" என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் பேசிய போது பூய் அவ்வாறு…
அம்பிகா: அது எனது தனிமையை ஆக்கிரமிப்பதாகும்
ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியால் தங்களுடைய வருமானம் பாதிக்கப்பட்டு விட்டது என்று கூறிக்கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இக்லாஸ் என்ற அமைப்பு பர்ஹர் கடையை பெர்சே அமைப்பின் இணைத் தலைவரான அம்பிகாவின் வீட்டிற்கு வெளியில் போட்டதை அவர் கண்டித்தார். இச்சம்பவம் தமது தனிமையையும் இல்லத்தையும்…
இசி தலைவர் இன்னும் அம்னோ உறுப்பினர்தான், பிகேஆர்
சட்ட அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் இசி (தேர்தல் ஆணையம்) தலைவர் அப்துல் அசிஸ் யுசுப் அம்னோ உறுப்பினராக இல்லை ஏனென்றால் ஆண்டு சந்தாவைக் கட்டாததால் அவருடைய உறுப்பினர் தகுதி காலாவதியாகி விட்டது என்று நேற்று கூறினார். அவ்விளக்கத்தை இன்று பிகேஆர் நிராகரித்து விட்டது. "அம்னோ இளைஞர் பிரிவின்…
இசி: எங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு பெர்சேயும் எதிர்க்கட்சிகளுமே காரணம்
பெர்சேயும் எதிர்க்கட்சிகளும் திரித்த கதைகளுக்கும் பொய்களுக்கும் அரசாங்கம் செவி சாய்த்ததின் விளைவாகவே தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறுகிறார். "அவை அந்தத் திருத்தம் பற்றிய கதைகளை ஜோடித்தன. அபத்தமான கதைகளை உருவாக்கின. அதனால் அந்த…
வணிகர்கள் அம்பிகா வீட்டுக்கு முன்பு ‘கடை’ போட்டனர்
Ikhlas என்ற சிறு வணிகர்கள் அமைப்பு பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு வெளியில் இன்று காலை பேர்கர் கடை போட்டது. இரண்டு சனிக் கிழமைகளுக்கு முன்பு பெர்சே பேரணி நடந்த போது தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அது அங்கு கடை…
போலீஸ் வன்முறை எனத் தமது புதல்வி கூறுவதை டாக்டர் மகாதீர்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பெர்சே 3.0 பங்கேற்பாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக தமது புதல்வி மரினா தி ஸ்டார் நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் கூறியிருப்பதை மறுத்து அந்த நாளேட்டுக்குக் கடிதம் எழுதியுள்ளார். போலீசார் அளவுக்கு அதிகமாக வன்முறையைப் பயன்படுத்தியதற்கு உத்தரவு காரணமாக இருக்கலாம் என்று…
தேர்தல் பார்வையாளர்களாக ‘கட்சிச் சார்பற்ற’ அரசு சாரா அமைப்புக்கள் தேவை
இசி என்ற தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்காத 'கட்சிச் சார்பற்ற' அரசு சாரா அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை தேர்தல் பார்வையாளர்களாக அந்த ஆணையம் நியமிக்கும். தங்கள் நாடுகளில் தேர்தல் பார்வையாளர்களாக இசியை அழைத்துள்ள நாடுகளில் உள்ள தேர்தல் ஆணையங்களும் அனைத்துலகப் பார்வையாளர்களாக அழைக்கப்படும். அந்த நாடுகளில்…
மேலும் நான்கு பெர்சே ஆதரவாளர்கள் கைது
ஏப்ரல் 28ம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நால்வரையும் சேர்த்து இது வரை மொத்தம் 16 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய படங்கள் ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்டிருந்தன. 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட…
இசி பெர்சே-யின் மஞ்சள் நிறத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள விரும்புகிறது
அடுத்த பொதுத் தேர்தலுக்கு இசி என்ற தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்துவ நிறமான மஞ்சளை மாற்றிக் கொள்ளும். அதே நிறத்தை ஏற்றுக் கொண்டுள்ள பெர்சே-யிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் பொருட்டு அது அவ்வாறு செய்கிறது. அந்தத் தகவலை இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் இன்று…
நுருல் இஸ்ஸாவின் முதலாவது podcast ஒலிபரப்பு
மிடில் மலேசியா என்னும் podcast ஒலிபரப்பு தனது 11வது நிகழ்ச்சியில் ஊடக ஆலோசகரான ஊன் இயோ, லெம்பா பந்தாய் எம்பி-யான நுருல் இஸ்ஸா அன்வாருடன் உரையாடினார். நுருல் தொகுதியில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதால் அடுத்த பொதுத் தேர்தலில் பெரும் தடையை அவர் எதிர்நோக்கியுள்ளார். அவரை…
‘தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை அரசாங்கம் மீட்டுக் கொண்டது பெரிய…
கடந்த மாதம் தேவான் ராக்யாட் கூட்டத்தின் கடைசி நாளன்று அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை அரசாங்கம் திடீரென மீட்டுக் கொண்டது குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கவலை தெரிவித்துள்ளார். அரசாங்கம் அந்த மசோதாவை மீட்டுக் கொண்டால் ," எதுவும் நடக்கலாம். நாம்…
‘அது’ ரத்த சேமிப்பு மய்யத்தை தணிக்கை செய்ய டிராகுலாவைத் தேர்வு…
உங்கள் கருத்து: "பெர்சே 3.0ல் கம்யூனிஸ்ட்கள் இருப்பதாக ஹனீப் ஒமார் எண்ணுகிறார். அந்தப் பேரணி புரட்சி முயற்சி என்றும் அவர் கருதுகிறார். அவர் முன்னாள் போலீஸ்காரரும் ஆவார். ஆகவே அந்தக் குழு எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயல்பட முடியும் ? பெர்சே 3.0 விசாரணைக் குழுவுக்கு முன்னாள் ஐஜிபி…
பெர்சே 3.0 விசாரணைக் குழுவுக்கு ஹனீப் ஒமார் தலைமை தாங்குகிறார்
பெர்சே 3.0 பேரணியின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை விசாரிக்கும் சுயேச்சைக் குழுவுக்கு முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அறுவர் கொண்ட அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற ஐவரில் கல்வியாளர்களும் முன்னாள் நீதிபதிகளும் ஊடகப் பேராளர்களும் அடங்குவர். ஹனீப் இந்த…


