பெர்சேயின் கோரிக்கைக்கு 88 விழுக்காட்டினர் ஆதரவு

மெர்தேக்கா கருத்து ஆய்வு மையம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் தேர்தல் சீர்திருத்தத்திற்கான குழு பெர்சே 2.0  இன் கோரிக்கைகளை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 11க்கும் 27 க்கும் இடையில் 1,207 பேர்களுடன் நடத்திய ஆய்வில் பெரும்பான்மையான மலேசியர்கள் - 88 விழுக்காட்டினர்…

புக்கிட் கெப்போங்:மலாய் நாளேடுகள் மாட் சாபுவை வருத்தெடுக்கின்றன

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, புக்கிட் கெப்போங் சம்பவத்தில் கம்முனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை வீரர்களாகக் காண்பிக்கப் பார்க்கிறார் என்று சொல்லி  மலாய் நாளேடுகள் அவரை வன்மையாகக் கண்டித்துள்ளன. மாட் சாபு என்ற பெயரில்  பிரபலமாக விளங்கும் முகம்மட் சாபு, ஆகஸ்ட் 21-இல் பினாங்கு தாசேக் குளுகோரில் ஆற்றிய உரைதான்…

செபுத்தே எம்பி-யின் எதிர்வாதத்தை தள்ளுபடி செய்யும் முயற்சியில் உத்துசான் தோல்வி…

செபுத்தே எம்பி தெரெசா கோக், 2008ம் ஆண்டு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தமக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து தெரிவித்த கருத்து மீது அவருக்கு எதிராக தான் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருடைய எதிர்வாதத்தை தள்ளுபடி செய்யுமாறு உத்துசான் மிலாயு (எம்) பெர்ஹாட் கோலாலம்பூர்…

“கம்யூனிஸ்ட் வீரர்கள்” செய்திக்காக மாட்ச் சாபு உத்துசான்மீது வழக்கு

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, 1950 ஆம் ஆண்டு நிகழ்ந்த புக்கிட் கெப்போங் சம்பவத்தில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்கார்களைத் தாம் புகழ்ந்து பேசியதாக செய்தி வெளியிட்ட உத்துசான் மலேசியாவைக் கடுமையாகச் சாடினார். ஆகஸ்ட் 21-இல், பூலாவ் பினாங், தாசெக் குளுகோரில் தாம் ஆற்றிய உரையை அம்னோவுக்குச் சொந்தமான அந்நாளேடு …

நஜிப்பின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்துள்ளன (விரிவாக)

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியுள்ளது. சுயேச்சையாக கருத்துக் கணிப்புக்களை நடத்தும் மெர்தேகா மய்யம் அதனைத் தெரிவித்துள்ளது. Read More

சிலாங்கூர் மந்திரி புசார்: முஸ்லிம் அல்லாதார் எதிரிகள் அல்லர்

முஸ்லிம் அல்லாதார் தங்களுக்கு எதிரிகள் என்னும் தங்கள் எண்ணத்தை திருத்திக் கொள்ளுமாறு முஸ்லிம்களை சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். "நோன்புப் பெருநாள் முஸ்லிம்களுக்கு உரித்தானது என்ற போதிலும் இஸ்லாம் தன்னைப் பின்பற்றுகின்றவர்களிடமிருந்து எதனை விரும்புகிறது என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் இந்த…

நஜிப்பின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்துள்ளன

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியுள்ளது. சுயேச்சையாக கருத்துக் கணிப்புக்களை நடத்தும் மெர்தேகா மையம் அதனைத் தெரிவித்துள்ளது. அண்மையில் எரிபொருள், மின்சார விலைகள் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதும் அதனால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளது பற்றி மக்கள் கவலை…

விக்கிலீக்ஸ்:சீனர்கள் ஓரங்கட்டிருப்பதாக மசீசவால் ஒப்புக்கொள்ள முடியாது

"மசீசவினர் அமெரிக்க அரசதந்திரிகளைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தபோது மலேசியாவில் சீனர்கள் ஓரங்கட்டப்படுவதை ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும்,  அரசாங்கத்தையும் அதன் காரணமாக அம்னோவையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமுடியாது என்றார்கள். இத்தகவல் அமெரிக்காவுக்கு  கோலாலம்பூரில் உள்ள அதன் தூதரகம் அனுப்பிவைத்த இரகசிய ஆவணமொன்றில் அடங்கியிருந்தததாக  அரசாங்கங்களின்…

டாக்டர் மகாதீர்: உண்மையான மனிதராக நடந்து கொள்ளுங்கள்

 "மகாதீர் அவர்களே, பிரச்னையைத் தொடக்கி வைத்ததே நீங்கள்தான். நீங்கள் துணிச்சலாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர் மீது பழி போடக் கூடாது."         டாக்டர் மகாதீர்: முறையைக் குறை சொல்ல வேண்டாம். தலைவர்கள் மீது பழி போடுங்கள் டாக்ஸ்: தலைவர்கள் செய்த தவறு.…

அனைத்தையும் அழித்து விடும் கொள்கையை அம்னோ பின்பற்றுகிறது

"தங்களது சமயத்தைத் 'தற்காக்க' ஒன்றுபடுமாறு மலாய்க்காரர்களைத் தூண்டுவதே அதுவாகும். அரசியலைப் பொறுத்த வரையில் இது ஆபத்தான விளையாட்டு."         டிஏபி: ஆர்டிஎம்-மின் 'முர்தாட்' அறிக்கைப் பொறுப்பானவர்களை நீக்குங்கள் அடையாளம் இல்லாதவன்: நாட்டின் முக்கிய தொலைக்காட்சி நிலையத்தில் அது போன்ற குப்பை ஒளியேற்றப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது வெறுப்பைத்…

உலகத் தமிழர் பேரவையின் கருணை முறையீடு

இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாடீல் அவர்கள் முன்னாள் இந்திய தலைமையமைச்சர் இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள திரு.பேரறிவாளன், திரு.முருகன், திரு.சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை நிராகரித்துள்ளார். முன்னாள் தலைமையமைச்சர் இராஜிவ் காந்தியின் இழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல இந்திய பெருங்கண்டத்திற்கே ஒரு பேரிழப்பு ஆகும்.…

பினாங்கு வாக்காளர் பட்டியலில் மேலும் “தவறுகள்”

பினாங்கு டிஎபி ஒரே மாதிரியான அடையாளக் கார்டு எண்களைக் கொண்ட பல வாக்காளர்களைக் கண்டு பிடித்துள்ளது. அவர்கள் ஆவி வாக்காளர்களாக இருக்கலாம் என அது அஞ்சுகிறது. 90 வயதுக்கும் மேற்பட்ட பலர் இன்னும் உயிருடன் இருந்தும் அவர்களுடைய பெயர்கள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளதையும் அந்தக் கட்சி கண்டு பிடித்துள்ளது. பத்து…

பிகேஆர்: டிஎபி “அம்னோவைப் போன்று தலைக்கனம்” கொண்டிருக்கக் கூடாது

டிஎபி சார்பில் மலாய் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு உதவியாக தனது தோழமைக் கட்சியான பிகேஆர்-டமிருந்து அதிகமான இடங்களை டிஎபி கோரியுள்ளது. அதனை பினாங்கு பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஜொஹாரி ஹஷிம் கண்டித்துள்ளார். 13வது பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படாலும் என்னும் ஊகங்கள் அதிகரித்துள்ள வேளையில் டிஎபி மலாய் தலைவர்…

டோனி டான் சிங்கப்பூரின் புதிய அதிபர்

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் டோனி டான் இன்று சிங்கப்பூரின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். வாக்குகள் இரண்டாவது முறையாக எண்ணப்பட்டப் பின்னர் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சியைப் பிரதிநிதிப்பவர் என்று கருதப்படும் 71 வயதான டோனி…

நாம் இழந்ததை ஓர் அந்நியர் நினைவுபடுத்த வேண்டியுள்ளது!

 "பிஎன் மூத்த அரசியல்வாதிகளுக்கு பல அம்சங்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தோல்வி கண்டால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள். அதில் அவர்களுடைய சுதந்திரமும் அடக்கம்."     தேர்தல் சீர்திருத்தம்: மலேசியாவின் நிலை என்ன? நிக் வி: நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன் வைத்துள்ள வாதங்களுக்காக மலேசியாவுக்கான முன்னாள்…

டிவி 3 பற்றி ஹிஷாம் ஒன்றும் செய்யமாட்டார் என எதிர்பார்க்கலாம்

 "பொய்யான செய்தியை வெளியிட்டதற்காகவும் கிறிஸ்துவ சமூகத்துக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டி விட்டதற்காகவும் டிவி 3ஐ அழைத்து அதனை உள்துறை அமைச்சர் கண்டிப்பாரா?         டிவி 3 மதம் மாற்றச் செய்தி பொய் என்கிறது ஒர் என்ஜிஒ அப்டூயூ:  தகராற்றை உருவாக்குகின்றவர்கள் மீது அதிகாரிகள் கடும்…

மதம் மாற்றம் தொடர்பான டிவி 3 செய்தி பொய்

கோலாலம்பூர் ஜாலான் கிள்ளானில் உள்ள டியூசன் மையம் ஒன்று முஸ்லிம்களைக் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்ற முயற்சி செய்வதாக  டிவி 3 வெளியிட்ட செய்தி ஜோடிக்கப்பட்டது என குற்றம் சாட்டி அரசு சாரா அமைப்பு ஒன்று போலீசில் புகார் செய்தது. அந்த மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அது வெளியிட்ட செய்தியில்…

பிகேஆர் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும், மலாய் டிஏபி தலைவர்

பினாங்கு டிஏபி தலைவர் ஒருவர் டிஏபியில் உள்ள மலாய் வேட்பாளர்களுக்காக பிகேஆர் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். பினாங்கில் குறைந்தது ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையுமாவது பிகேஆர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று  டிஏபி மத்திய செயல்குழு உறுப்பினர் சுல்கிப்ளி முகம்மட் நூர் வேண்டிக்கொண்டார்.…

தாய்மொழிக்கல்வி மேம்பாட்டிற்கு தமிழ் அறவாரியமும் எல்எல்ஜியும் கைகோர்க்கின்றன

பல்லின நாடான மலேசியாவில் தாய்மொழிக் கல்வி நிலைத்திருப்பதையும் மேம்பாடு காணுவதையும் உறுதி செய்வதற்கு மலேசிய தமிழ் அறவாரியமும் லிம் லியன் கியோக் கலாசார மேம்பாட்டு மையமும் ( எல்எல்ஜி ) கூட்டாகச் செயல்பட இணக்கம் தெரிவித்தன. அவ்விரு அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று இரவு கோலாலம்பூரில் தமிழ் அறவாரியத்தின் அலுவலகத்தில்…

பெர்சே: உங்கள் வாக்காளர் தகுதியைச் சரி பாருங்கள்

வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் அண்மைய காலமாக அம்பலமாகி வருவதைக் கருத்தில் கொண்டு தங்களது நோன்புப் பெருநாள், தேசிய நாள் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாக்காளர் தகுதியைச் சரி பார்த்துக்  கொள்ள வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பு மலேசியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது. பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும்…

வாக்காளர் பதிவு: ஒரே ஒரு புள்ளிவிவரக் களஞ்சியம் மட்டும் இருக்கட்டும்

"அடுத்தடுத்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது எப்போது நிற்கும்? அதற்கான தீர்வு மிக எளிது. ஆனால் அது ஏன் அமலாக்கப்படவில்லை என்பது எனக்கு வியப்பைத் தரவில்லை."         வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைக் கண்டு பதிவு செய்யாதவர்கள் அதிர்ச்சி கோமாளி: இசி என்ற தேர்தல் ஆணையம்…

பழனிவேல் தமது அமைச்சரவைக் கடமைகளை தெரிவித்துள்ளார்

மலேசிய நிர்வாக நவீன மய, நிர்வாகத் திட்டப் பிரிவு (மாம்பு) தேசியப் பொது நிர்வாகப் பயிற்சிக் கழகம் (இந்தான்) பொதுப் புகார்ப் பிரிவு (பிசிபி) ஆகியவை தமது பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் ஜி பழனிவேல் தெரிவித்துள்ளார். "நான் சிறப்புப் பணிகளையும் கவனித்துக் கொள்வேன். செப்டம்பர்…