“இணையத்தில் ரொட்டி அரசியலாக்கப்படுவதாக குற்றச்சாட்டு”

கார்டெனியா ரொட்டிக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக இணையம் வழியாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ரொட்டியை சேவகர் நிறுவனம் ஒன்று தயாரிப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் சந்தையில் நுழைந்த மாஸிமோ என்னும் போட்டி ரொட்டி நிறுவனத்துக்கு ஆதரவளிக்குமாறு அந்த பிரச்சார இயக்கம் பயனீட்டளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.…

“என்ன ஊடக இருட்டடிப்பு?”, என வினவுகிறார் நஜிப்

தகவல்களை இருட்டடிப்புச் செய்வதை விட மக்களுக்குத் தகவல்களை அரசாங்கம் வழங்குவது மிக முக்கியமானது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். காரணம் அவ்வாறு இருட்டடிப்புச் செய்தால் மக்கள் மாற்று தகவல் வட்டாரங்களை நாடுவதற்கு அது வழி வகுத்து விடும் என்றார் அவர். "முன்பு தேவைப்படும் போது மக்கள்…

“டாக்டர் மகாதீர் நிர்வாகம் 38 உலக வங்கிக் கடன்களை பெற்றது”

மலேசியா 1982ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதிக்கும் 1999ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி வரை ( உலக நிதி நெருக்கடிக்கு பிந்திய காலம்) உலக வங்கியிடமிருந்து 38 கடன்களை பெற்றுள்ளதை அந்த உலக நிதி நிறுவனத்தின் பதிவேடுகள் காட்டுகின்றன. அதில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்…

இண்டர்லோக் மீட்பு அம்னோவின் பலவீனத்திற்கு அடையாளமல்ல; தேர்தலின் அறிக்குறி!

இண்டர்லோக் இலக்கிய நாவல் மீட்புக்கு பாடுப்பட்ட அனைத்து இந்திய இயக்கங்களுக்கும், குறிப்பாக தஸ்லிம்மின் நியாட் இயக்கத்திற்கும், பல மாணவர்கள் இயக்கத்திற்கும் பாராட்டுகள் தெரிவித்தார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார். இந்த நாவலை அகற்றவேண்டி பாக்காத்தானின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  முதல் சாதாரண உறுப்பினர்கள் வரை பல போராட்டங்களில்…

SAMY VELLU-வின் ம.இ.கா கோட்டை விழுந்தது!

"இந்த அரங்கம் சாமிவேலுவின் காலத்தில்தான் நிரம்பி வழிந்தது. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் இந்த அளவிற்கு இங்குள்ள மக்கள் திரண்டுள்ளதை பார்க்கிறேன்" என்கிறார் மணியம். சுங்கை சிப்புட் ம.இ.கா கிளைகள் ஒன்றில் பொறுப்பு வகிக்கும் இவர், இனி சுங்கை சிப்புட் ம.இ.கா-வின் கோட்டையாக திகழும் சகாப்தம் முடிந்துவிட்டதாக கருத்துரைத்தார். நேற்று…

முஹைடினுக்கு வெளிச்சத்தைக் காண ஒராண்டு பிடித்தது

"முதலில் நீங்கள் பகிரங்கமாக அவமதிக்கப்படுகின்றீர்கள். பின்னர் உங்களிடம் மெதுவாகச் சொல்கிறார்- அதனை ஒராண்டுக்கு இழுத்துப் பறிக்கிறார். அடுத்து அவர் மீட்டுக் கொள்கிறார்." இண்டர்லாக் இடைநிலைப் பள்ளிக்கூடப் பாடத் திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்படுகிறது மலேசியாவில் பிறந்தவன்: "இண்டர்லாக்" நாவல் வெகு காலத்துக்கு முன்பே மீட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தாமதம் செய்ததற்குக்…

லிம்: கள்ளத்தனமாக பணம் வெளியேறுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன

மலேசியாவிலிருந்து 2009ம் ஆண்டு 150 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமா வெளியேறியதாகக் கூறப்படுவது புதிய விஷயமல்ல. அத்தகையக் கசிவுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம் கூறுகிறார். வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஜிஎப்ஐ உலக நிதி நேர்மை அமைப்பு வெளியிட்ட விவரங்களை அரசாங்கம் அறியும் என்றும்…

‘அந்த மசோதாவைக் கொல்லுங்கள்’ பிக்னிக்-கிற்கு கேஎல்சிசி தோட்ட ஊழியர்கள் இடையூறு…

கேஎல்சிசி பூங்காவில் அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்கும் போராளிகள் தொடர்ந்து நான்காவது வாரமாக இன்றும் எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தினர். அந்த முறை அவர்கள் பிக்னிக் நடத்தி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது தோட்டத்தில் விழுந்து கிடக்கும் இலைகளை ஒன்று சேர்ப்பதற்கான கருவிகள் இயக்கப்பட்டதால் ஏற்பட்ட சப்தம் காதைச்…

கள்ளத்தனமாக மூலதனம் வெளியேறுவதைத் தடுக்கத் தவறிவிட்டது மலேசியா

உலகளாவிய நிதி அறிக்கை ஒன்று நாட்டிலிருந்து கள்ளத்தனமாக மூலதனம் வெளியேறுவதைக் கவனப்படுத்தியுள்ளது குறித்துக் கருத்துரைத்த டிஏபி எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, அது மலேசியா “ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்துவருவதைத்  தெளிவாகக் காட்டுகிறது”, என்றார். Read More

மலேசியாவில் பிஎன்-னுக்கு பிந்திய கால கட்டத்தில் ஊடகங்கள்

எதிர்க்கட்சிகள் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அது பொறுப்பேற்ற முதல் நொடியிலிருந்து வலுவான, அச்சமில்லாத, உண்மையான பத்திரிக்கைகளுக்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு மலேசியாகினி கட்டுரையாளர் டீன் ஜோன்ஸ் கூறுகிறார். "மலேசியா எல்லா வகையான செய்தி பத்திரிக்கைகளுடன் மிகப் பெரிய ஊடக அமைப்பைக் கொண்டுள்ளது. அவை பிஎன்-னுக்கு பிந்திய…

அமைச்சர் தொகுதியில் 74 குடியானவர்களுக்காக 500,000 ரிங்கிட்

கூட்டரசு அரசாங்கம் இவ்வாண்டு தாசெக் குளுகோரில் உள்ள 74 குடியானவர்கள் தங்களது விளைச்சலை அதிகரித்துக் கொள்ள உதவும் பொருட்டு 500,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. நாடாளுமன்ற விவசாய மேம்பாட்டு மன்றத்தின் வழியாக அந்த நிதி உதவி கொடுக்கப்படுகிறது. அந்த விவரங்களை பிரதமர் துறை அமைச்சர் நோர் முகமட் யாக்கோப் வெளியிட்டார்.…

இண்டர்லாக் மீட்டுக் கொள்ளப்பட்டது அரசாங்கம் பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது: பெர்க்காசா

சர்ச்சைக்குரிய இண்டர்லாக் நாவல் பள்ளிக் கூடப் பாடத் திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, சிறுபான்மை பிரிவு ஒன்றின் நெருக்குதலுக்கு அடி பணிந்த பலவீனமான அரசாங்கத்தையே காட்டுகிறது என மலாய் வலச்சாரி நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா கூறுகிறது. இடைநிலைப்பள்ளிகளில் ஐந்தாம் படிவத்துக்கான இலக்கியப் புத்தகமாக இருந்த அது மீட்டுக் கொள்ளப்பட்டது மீது…

ம.இ.கா திருந்தி விட்டதா?

சுசிலா: கோமாளி, 2008-ம் ஆண்டு பட்ட அடியிலே, மஇகா தன்னை சுயவிமர்சனத்தோடு மறுசீரமைப்புக்குள்ளாக்கி ஒரு புதிய பொலியுடன் பவனி வருகிறதா? கோமாளி: மஇகா என்பது அம்னோ இந்தியர்களுக்கு கொடுத்துள்ள வாகனம். அதற்கு எண்ணெய் ஊத்துவது, எப்படி ஓட்டுவது, யார் ஓட்டுவது, எங்கே ஓட்டுவது, எப்போ பிரேக் போடுவது, பழுது…

“பிஎன் ஊடகங்களின் இருட்டடிப்பு” மீது டிஏபி ஆத்திரமடைந்துள்ளது

பிஎன் கட்டுக்குள் இருக்கும் ஊடகங்கள் கடந்த சில நாட்களில் நாட்டில் வெளியான பல முக்கியமான தகவல்களை குறிப்பாக ஊழல் மீதான செய்திகளை வெளியிடத் தவறி விட்டதாக டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் சாடியுள்ளார். ஊழல் குற்றங்களுக்காக சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டும் அவரது…

தாயிப்புக்கும் தியோவுக்கும் உள்ள வேறுபாடு

"தியோ பெங் ஹாக் சாதாரண 2,500 ரிங்கிட்டுக்காக உயிரை இழந்தார். பல பில்லியன் ரிங்கிட் பெறும் ஊழல் விவகாரத்தில் எத்தனை பேர் சாக வேண்டும்?" எம்ஏசிசி தாயிப் ஊழல் வழக்கு மீது மௌனம் சாதிக்கிறது மிலோசெவிக்: அப்துல் தாயிப் மாஹ்முட் என்ற அந்த மனிதருடன் விளையாட வேண்டாம். "போமோக்கள்…

இண்டர்லோக் இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படும்

கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகாலமாக சர்சைக்குள்ளாகியிருந்த இண்டர்லோக் பாடநூல் இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் அந்த சர்ச்சைக்குள்ளான இண்டர்லோக் நாவலை மீட்டுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக மஇகா தலைவர் ஜி. பழனிவேல் இன்று கூறினார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது. கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அது குறித்த…

வருமான வரி வாரியம் BR1M பாரத்தின் போட்டோ பிரதிகளை ஏற்றுக்…

BR1M என்ற ஒரே மலேசியா மக்கள் உதவி விண்ணப்ப பாரத்தின் போட்டோ பிரதிகளை வருமான வரி வாரியம் ஏற்றுக் கொள்ளாது. அந்தத் தகவலை நிதித் துணை அமைச்சர் டாக்டர் அவாங் அடெக் ஹுசேன் இன்று வெளியிட்டார். இந்த மாதத் தொடக்கத்திலிருந்து விநியோகம் செய்யப்பட்டு வரும் அசல் பாரத்தைத் தாங்கள்…

பாஸ் “பிரச்னையை உண்டாக்கும்” இருவருக்கு எதிராக பாஸ் மனோவியல் போர்ப்…

பாஸ் கட்சியை பற்றி தவறாகப் பேசி வருவதாகக் கூறப்படும் 'அதிருப்தி அடைந்த' இரண்டு கட்சித் தலைவர்களுக்கு எதிராக முழு அளவில் மனோவியல் போரைத் தொடங்குவதற்கு அந்தக் கட்சியின் அனைத்து அமைப்புக்களும் தயாராகி வருகின்றன. முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி, முன்னாள் துணைத் தலைவர் நஷாருதின் முகமட்…

தேர்தலுக்குப் பின்னர் புரட்சி நிகழாதிருப்பதை உறுதி செய்யுமாறு பிஎஸ்சி-யிடம் கூறப்பட்டது

தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் ஒருவர் தமது கட்சியிலிருந்து விலகினால் அந்த இடம் இயல்பாகவே காலியாகி விட்டதாக அறிவிக்கப்பட வேண்டும் என பினாங்கு கெரக்கான் பரிந்துரை செய்துள்ளது. அவ்வாறு செய்வதின் மூலம் ஒர் அரசாங்கத்தை தெரிவு செய்யும் உரிமை வாக்காளரிடம் இருப்பது உறுதி செய்யப்படும் என அந்த கட்சியின் மாநில சட்ட,…

அன்வார்: உலக வங்கியிடம் உதவி கேட்டார் மகாதிர்

1999 நிதி நெருக்கடியின்போது அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உலக வங்கியிடம் பண உதவி கேட்டுக் கடிதம் எழுதினார் என்ற திடுக்கிடும் தகவலை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வெளியிட்டுள்ளார். நேற்றிரவு வெளிநாட்டுத் தூதர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்து நிகழ்வில் உரையாற்றிய அன்வார், தம்மை “அமெரிக்காவின்…

நான் பாஸ் போராட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன் என்கிறார் ஹசான்

பாஸ் "கட்சியின் போராட்டத்துக்கான" தமது பற்று உறுதியை முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி தெரிவித்துக் கொண்டுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் தாம் வேட்பாளராக நியமிக்கப்படும் விஷயத்தை "பெரிதுபடுத்துவதை" நிறுத்திக் கொள்ளுமாறு அவர் எல்லாத் தரப்புக்களையும் வேண்டிக் கொண்டார். "பாஸ் தலைவர்களுடைய பதில்களினால் என் கோட்பாடுகள் மருட்டலுக்கு…

ரசாக் பகிந்தாவிடம் நீர்மூழ்கி கொள்முதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

மங்கோலியரான அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு விசாரணைக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து காணாமல் போன அப்துல் ரசாக் பகிந்தா, நேற்றிரவு கோலாலம்பூரில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் காணப்பட்டார். அந்த வழக்கில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மேல் படிப்புக்காக லண்டனுக்குச் சென்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற அப்துல் ரசாக்,…