மாட் சாபு வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நேற்றிரவு, ஷா ஆலம் செக்‌ஷன் 19-இல் உள்ள பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு வீட்டின்மீது பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டது.இதனால் வீட்டின் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்தது. நள்ளிரவைத் தாண்டி 12.30க்கு நிகந்த அச்சம்பத்தை அவரின் மகள் நூருல் ஹுடா உறுதிப்படுத்தினார்.குண்டு வெடிப்பால்  தீ மூண்டதாகவும் அதை அண்டைவீட்டார்கள்…

ஸாக்கி:நீதித்துறை நேர்மைக்கு அரசுக்கு எதிரான தீர்ப்புகளே சான்று

நீதிமன்றங்கள் பெரும்பாலும் அரசுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பளிக்கும் என்று அடிக்கடி கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல என்கிறார் அண்மையில் பணி ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி. கூட்டரசு அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் கணக்கெடுத்துப் பார்த்தால் பெரும்பாலான வழக்குகளில் அரசுக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டிருப்பதைக் காணலாம். மலேசியாகினியுடனான நேர்காணலில்…

புக்கிட் கெப்போங் உரை தொடர்பில் மாட் சாபு மீது குற்றம்…

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, புக்கிட் கெப்போங் சம்பவம் குறித்து ஆகஸ்ட் 21ம் தேதி பினாங்கில் ஆற்றிய உரைக்காக அவர் மீது நாளை காலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறது. புக்கிட் கெப்போங் சம்பவம் பற்றிய அதிகாரத்துவ விளக்கங்கள் மீது அவர் தமது உரையில் கேள்வி எழுப்பியிருந்தார். தவறான…

‘ஆளும் கட்சிக்கு’ வாக்களிக்குமாறு குடியுரிமை விண்ணப்பதாரர்களிடம் வெளிப்படையாகக் கூறப்பட்டது’

குடியுரிமை வழங்கப்பட்டால் 'ஆளும் கட்சிக்கு' வாக்களிப்பது தான் அவரது முக்கியக் கடமையாக இருக்க வேண்டும் என குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நிரந்தரவாசி ( permanent resident ) ஒருவர் கூறிக் கொண்டுள்ளார். குடியுரிமை விண்ணப்பத்தை பரிசீலிக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக அவர் பேட்டி…

அடைக்கலம் நாடுவோரை அந்நிய நாடுகளில் தடுத்து வைப்பதை ஆஸ்திரேலியா முடிவுக்குக்…

ஆஸ்திரேலியா, அடைக்கலம் நாடுவோரை அந்நிய நாடுகளில் பரிசீலிப்பதற்கான யோசனைகளை எதிர்க்கட்சிகள் நிராகரிப்பதாலும் சட்ட ரீதியான முட்டுக்கட்டைகளை எதிர்ந்நோக்குவதாலும் தலை நிலத்தில் அத்தகைய நபர்களை தங்க வைத்து பரிசீலிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அதன் பிரதமர் ஜுலியா கில்லார்ட் கூறியிருக்கிறார். மலேசியா அகதிகள் மீதான ஐநா ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதால் அடைக்கலம்…

தேர்தல் ஆணையம் ஊராட்சி மன்றங்களைச் சந்திக்கிறது ஆனால் திடீர்த் தேர்தலை…

விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணைய கண்காணிப்புக் குழுக்களில் அங்கம் பெறுவதற்காக ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் ஆயத்தம் செய்யப்படுவதாகக் கூறப்படுவதை ஊராட்சி மன்ற அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். "தேர்தல் செயலகத்தின் சாதாரணக் கூட்டம்தான் அது. அதில் கலந்து கொள்ளுமாறு ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலிருந்தும்…

பிகேஆர்: விசாரணை இல்லாத தடுப்புக் காவல் தொடரும்

கூட்டரசு அரசியலமைப்பின் 149வது பிரிவின் கீழ் தயாரிக்கப்படும் புதிய பாதுகாப்புச் சட்டங்கள் விசாரணை இல்லாமல் ஒருவரைத் தடுத்து வைப்பதற்கான அதிகாரங்களை அரசாங்கத்துக்கு வழங்கும். இவ்வாறு பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறுகிறார். இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை கை விட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்…

கோலாலம்பூரின் “குடியுரிமை இயக்கம்” பற்றி டாக்காவுக்கு ஏதும் தெரியாது

வங்காள தேசத் தொழிலாளர்கள், ஆளும் பிஎன்-னுக்கு வாக்களிக்க இணங்கினால் அவர்களுக்கு மலேசியா குடியுரிமை வழங்குகிறது என அந்த நாட்டின் பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்று தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுவதை இந்த நாட்டிலுள்ள வங்காள தேசத் தூதரகம் மறுத்துள்ளது அந்தக் கட்டுரை குறித்து வங்காள…

அன்வார் “புதிய” வீடியோ குறித்து கருத்துரைக்க மறுத்தார்

அம்னோ ஆதரவு வலைப்பதிவர் ஒருவர்  அன்வார் பாலியல் விவகாரமொன்றில் ஈடுபட்டது உண்மைதான் என நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறியிருப்பது குறித்து பிகேஆர் தலைவர் கருத்துக்கூற மறுத்து விட்டார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைதியான மறுமொழி கூறி வந்த அன்வார், இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாது என்றார்.…

“இசா-வுக்குப் பதில் இன்னும் கடுமையான சட்டங்கள் வரும்”

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தையும் (இசா) சிவில், சமூக உரிமைகளை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் மற்ற சட்டங்களையும்  ரத்து செய்யும் நோக்கத்தை அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்ய மாட்டார்கள் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கருத்துத் தெரிவித்துள்ளார். மலேசியர்கள் போதுமான அளவுக்கு மன முதிர்ச்சி அடைந்துள்ளதே அதற்குக் காரணம் என…

பிஎஸ்எம் ஆதரவாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது

அவசரகாலச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்ட அறுவர் உள்பட மலேசிய சோசலிஸ்ட் (பிஎஸ்எம்) கட்சியினர் 30 பேருக்கு எதிரான குற்றச்சாட்டைப் போலீசார் கைவிட்டனர். பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வன், அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டிலிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை என்றும் கூறினார். அந்த 30 பேரும் ஜூன் …

மஞ்சள் டி-சட்டைகளுக்குத் தடைவிதிப்பதுதான் சிறந்த ஜனநாயகமா?

"மலேசியாவாவது உலகின் “சிறந்த ஜனநாயக நாடாக” மாறுவதாவது.இங்கேதான் மஞ்சள் நிற டி-சட்டை அணிந்தால் பிடித்து குற்றம் சுமத்துகிறார்களே."   நஜிப்: மலேசியாவைச் சிறந்த ஜனநாயக நாடாக்க ஐஎஸ்ஏ ரத்துச் செய்யப்படுகிறது கலா: “மலேசியாவைச் சிறந்த ஜனநாயக நாடாக்க” விரும்புவதாக பிரதமர் நஜிப் கூறியுள்ளார். “நாட்டை மேம்படுத்துவதில் காணப்பட்ட வெற்றியும்…

புதிய வெளியீடுகளுக்கு உரிமம்:பாதுகாப்பு சம்பந்தப்பட்டது

அரசாங்கம் புதிய வெளியீடுகளுக்கு அனுமதி கொடுப்பதற்குமுன் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறுகிறார். “நான் பாதுகாப்பைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. எதுவும் பாதுகாப்பைப் பாதிக்குமா என்பதைப் பரிசீலீக்க வேண்டும்”, என்று இன்றுகாலை கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் ஹிஷாமுடின் குறிப்பிட்டார். அச்சக,…

முன்னாள் இசா கைதிகளிடம் அரசாங்கம் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை இழப்பீடும்…

1960ம் ஆண்டு இயற்றப்பட்ட இசா சட்டம் ரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசாங்கம் முன்னாள் இசா கைதிகளிடம் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை இழப்பீடும் கொடுக்கப் போவதில்லை. இவ்வாறு பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அவர் அது தொடர்பான வேண்டுகோட்கள் பற்றிக் கருத்துரைத்தார்.…

“Kisah Sebenar” பெர்சே நூல் வெளியிடப்பட்டது

பெர்சே 2.0 பேரணியை நேரில் கண்டவர்கள் அளித்த தகவல்கள் அடங்கிய நூல் ஒன்று இன்று வெளியிடப்பட்டது. அப்பேரணி குறித்து பாரிசான் கட்டுப்பாட்டிலுள்ள ஆதிக்க ஊடகங்கள் வெளியிட்ட எதிர்மறையான செய்திகளை மறுதலிக்கும் நோக்கத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது. 210 பக்கங்கள் கொண்ட "Kisah Sebenar 9 July 2011" (What Really…

பட்ஜெட் 2012, அதிரித்துவரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்கும்: நிதியமைச்சர்

2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது அரசாங்கம், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதை சமாளிப்பதற்கன பல நடவடிக்கைகளை கருத்தில் கொண்டுள்ளது. இவ்வாறு இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா கூறுகிறார். வாழ்க்கைச் செலவுகள் இப்போது அதிகரித்துள்ளதற்கு உலக நிலைத்தன்மை சீர்குலைந்திருப்பதே காரணம் எனக் குறிப்பிட்ட…

நஜிப்: மலேசியாவைச் சிறந்த ஜனநாயகமாக்குவதற்காக இசா ரத்துச் செய்யப்படுகிறது

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்படுவது,  உலகில் தலை சிறந்த ஜனநாயக நாடாக மலேசியாவைத் திகழச் செய்வதற்கான முயற்சி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியுள்ளார். நாட்டை மேம்படுத்துவதில் அடைந்துள்ள வெற்றி, மக்களுடைய மன முதிர்ச்சி அதிகரித்துள்ளது, சமூகத்தில் மனித உரிமைகள் பற்றிய…

ஒராங் அஸ்லி : “விலங்குகளை போல் எங்களை நடத்தவேண்டாம்”

பொதுத் தேர்தலுக்கான அறிகுறிகள் தென்படுவதால் அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல தரப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றன. இப்போது ஒராங் அஸ்லிக்களும் அந்தத் தரப்புக்களில் இணைந்துள்ளனர். தாங்களும் வாக்காளர்களே என்பதை அவர்கள் அரசாங்கத்துக்கு அல்லது எந்த ஒரு அரசியல்வாதிக்கும் நினைவுபடுத்தியுள்ளனர். "எங்கள் உரிமைகளை தொடர்ந்து நிராகரித்து வரும் காலத்திற்கு ஒவ்வாத…

வங்காள தேசிகளுக்கு குடியுரிமை எளிதாக வழங்கப்படுகிறது எனக் கூறப்படுவதை துணைப்…

இந்த நாட்டில் வாக்காளர்களாக மாறும் பொருட்டு வங்காள தேசத் தொழிலாளர்களுக்கு எளிதாக குடியுரிமை கொடுக்கப்படுகிறது எனக் கூறப்படுவதை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மறுத்துள்ளார்.   அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிசான் நேசனல் அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார் அவர். "அவ்வாறு சொல்லப்படுவது…

குதப்புணர்ச்சி வழக்கு II: நஜிப்பும் ரோஸ்மாவும் சாட்சி அளிப்பார்களா?

குதப்புணர்ச்சி வழக்கு IIல் அன்வாருடைய எதிர்வாதம் நாளை தொடருகிறது. அது வெள்ளிக்கிழமை வரையில் தொடரும். இவ்வாண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி ஒளிப்பதிவ் செய்யப்பட்டதாக கூறப்படும் இன்னொரு செக்ஸ் வீடியோவை வெளியிடப் போவதாக அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ மருட்டியுள்ள வேளையில் வழக்கு மீண்டும் தொடருகிறது. நாளை ஆஸ்திரேலிய…

நஜிப் எப்போதாவது இசா எதிர்ப்பு பிரச்சாரம் செய்துள்ளாரா?

"பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களை அறிவித்த பிரதமருடைய அறிக்கையில் ஒர் ஆணவத் தொனி காணப்படுவதாக எனக்குத் தெரிகிறது" இசா ரத்துச் செய்யப்படுவதற்கு பிஎன் மட்டுமே மார் தட்டிக் கொள்ள முடியும் 1எம்: "ஷா அலாமில் இன்று உரையாற்றிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மக்களுக்கு செவி சாய்த்ததற்காக பென் -ன்னுக்குத்…

நஜிப்: சுய-புகழ்பாடும் செய்திகள் சிலாங்கூரை வெற்றிகொள்ள உதவமாட்டா

சிலாங்கூர் பிஎன் தொடர்புக்குழு தலைவரான நஜிப் அப்துல் ரசாக், அம்மாநிலத்தில் பிஎன்னின் வாய்ப்புகள் பற்றித் திசைதிருப்பிவிடும் தகவல்கள் வெளியிடுவதைப்  பங்காளிக்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2008-இல் பிஎன் அம்மாநிலத்தில் தோற்றதற்கு அதுவே காரணம். இன்று ஷா ஆலமில், சிலாங்கூர் பிஎன் மாநாட்டில் உரையாற்றிய பிரதமருமான நஜிப், அப்படிப்பட்ட…

கான்பெரா-கோலாலம்பூர் அகதிகள் பரிவர்த்தனை உடன்பாடு தோல்வி காணுமா?

அடைக்கலம் தேடி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களை மலேசியாவுக்கு நாடு கடத்துவதற்கு ஆஸ்திரேலியா வகுத்துள்ள திட்டம் தோல்வி காணும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அந்த உடன்பாட்டுக்கு ஆதரவான சட்டத்தை கடுமையாக குறை கூறியிருப்பதால் அது தோல்வி அடையும் என கருதப்படுகிறது. மலேசியாவிலிருந்து 4000 அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு ஈடாக…