பெர்சே “சட்ட விரோதமானது”: ஆட்சேபங்கள் செப்டம்பர் 19ம் தேதி செவிமடுக்கப்படும்

பெர்சே 2.0ஐ சட்ட விரோத அமைப்பு என உள்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியதை நீதித் துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சமர்பிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பான பூர்வாங்க ஆட்சேபங்களை செவிமடுப்பதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 19ம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது. Read More

அம்னோ வரலாற்றில் வெளிப்படையாக விலகிச் செல்லும் துணைப் பிரதமர்

"முஹைடின் நஜிப்பைக் காட்டிலும் வலுவானவராகத் தெரிகிறார். ஏனெனில் நஜிப் எதனைச் சொன்னாலும் அதற்கு முஹைடின் ஆதரவு அளிப்பதாகவே தோன்றவில்லை"       Read More

‘தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான சுஹாக்காம் யோசனைகளை அமல் செய்க

தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து மக்களுடைய கவனமும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு மீது பதிந்துள்ள வேளையில் 2007ம் ஆண்டு சுஹாக்காம் என்னும் மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்த சீர்திருத்தங்கள் குறித்து வழக்குரைஞர் மன்றம் அரசாங்கத்துக்கு நினைவுபடுத்தியுள்ளது. Read More

உங்கள் கருத்து: நஜிப் அவர்களே, முதலில் பெர்சே 2.0 இடம்…

"அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்பதை மெய்பிக்க நஜிப், பெர்சேயிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதே வேளையில் அம்பிகா தேர்வுக் குழுவில் இடம் பெறுவதற்கு அழைக்கப்பட வேண்டும்."     அன்வார்: தேர்தல் குழு "தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடியைத் தவிர்க்கும்" தந்திரம் பல இனம்: பிரதமர் நஜிப்…

குதப்புணர்ச்சி வழக்கு II: முன்னாள் ஐஜிபி நாளை பேட்டி காணப்படுவார்

முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானையும் மேலும் இரண்டு சாத்தியமான சாட்சிகளையும் நாளை அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் பேட்டி காண்பர். Read More

துணைப் பிரதமர்: சீர்திருத்தக் குழு அமைவது, நடப்பு தேர்தல் முறை…

தேர்தல் சீர்திருத்தங்களை விவாதிக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படுவது, இது வரை பின்பற்றப்பட்ட தேர்தல் நடைமுறை மோசமானது எனப் பொருள்படாது. மாறாக அதனை மேலும் சீர்படுத்தும் நோக்கத்தை கொண்டதாகும். இவ்வாறு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். Read More

ஜயிஸ் சோதனை பற்றிய வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்திய சோதனையின் வீடியோ ஒளிப்பதிவின் சுருக்கம் இணையத்தில் கசிந்துள்ளது. Read More

நாடாளுமன்ற சிறப்புக்குழு நாளை கூடாது, நஸ்ரி

தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் முதலாவது கூட்டம் நாளை நடைபெறாது என்று பிரதமர்துறை அமைச்சர்  முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் தெளிவுபடுத்தியுள்ளார். இதன்வழி நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாடாளுமன்றக் குழு அமைக்கப்படுவதாக செய்த அறிவிப்பை அடுத்து உருவான குழப்பத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. “நாளை நடப்பது…

சிறப்புக்குழு என்பது இசி-க்கு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் ஒரு தந்திரம்

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தேர்தல் ஆணைய (இசி)த்துக்குக் கொடுக்கப்படும் அழுத்தத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகத்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தல் சீரமைப்புக்காக நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைக்கப்படுவதாக நேற்றிரவு அறிவிப்புச் செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அக்குழு அமைக்கப்படுவதை பக்காத்தான் ரக்யாட் கொள்கையளவில் ஏற்றுக்கொள்கிறது என்றாலும் அரசாங்கம்…

பாஸ்- மெதடிஸ்ட் தேவாலயச் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

பாஸ் கட்சிக்கும் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்திற்கும் இடையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு இன்னும் முடிவு செய்யப்படாத பின்னொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. "நேற்று அந்தத் தேவாலயம் கடிதம் ஒன்றின் மூலம் சந்திப்பைத் தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது. அந்தப் பிரச்னை பொது மக்களிடையே தீவிரமாக விவாதிக்கப்படுவது குறித்து அவர்கள்…

தாஜுடின் விவகாரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் ஜிஎல்சி-க்கள்

செல்வந்தரான தாஜுடின் ராம்லிக்கும் ஜிஎல்சி என அழைக்கப்படும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான பல பில்லியன் ரிங்கிட் பெறும் வழக்குகளுக்கு உலகளாவிய தீர்வின் விவரங்கள் அவருக்கும் அம்னோ வழக்குரைஞரான முகமட் ஹாபாரிஷாம் ஹருனுக்கும் மட்டுமே தெரியும் எனத் தோன்றுகிறது. கடந்த அக்டோபர் மாதம் தாஜுடினுக்கு எதிரான வழக்குகள் முறையீட்டு…

அம்பிகா: நாடாளுமன்றக் குழுவில் பொது அமைப்புகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற சிறப்புக்குழு ஒன்றை அமைக்கப்போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்திருப்பது ஓர் “ஆக்கப்பூர்வமான நடவடிக்கை” என்று வருணித்துள்ள பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், அதில் பெர்சே 2.0-இன் எட்டுக் கோரிக்கைகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். தேர்தல்கள் சுயேச்சையாகவும்…

தான் 200 மில்லியன் அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்

இப்போது பிகேஆர் கட்சியில் இருக்கும் முன்னாள் துணை அமைச்சர் தான் கீ குவோங்கிற்கு எதிராக  பெல்டா என்ற கூட்டரசு நில மேம்பாட்டு வாரியம் சமர்பித்த 200 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்தக் கட்டுரை அவதூறானது என்பதை தாம் ஒப்புக் கொள்ளும்…

உங்கள் கருத்து: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிப்பு முறையை…

"எத்தகையச் சீர்திருத்தமும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஏதாவது அர்த்தம் இருக்கும். எந்தச் சீர்திருத்தத்திற்கும் முன்னதாக பொதுத் தேர்தல் நிகழ்ந்தால் எந்தப் பொருளும் இல்லை."        நஜிப்: தேர்தல் சீர்திருத்தம் பற்றி விவாதிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்படும் டேவிட் தாஸ்: 1969ம்…

தேர்தல் சீர்திருத்தம் பற்றி விவாதிக்க குழு அமைக்கப்படும், நஜிப்

அடுத்தப் பொதுத்தேர்தலுக்கு முன்பு தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசாங்கம் ஒரு நாடாளுமன்ற குழுவை அமைக்கும் என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார். "சமீபத்தில் தூய்மையான மற்றும் சுயேட்சையான தேர்தல்கள் வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கான அரசாங்கத்தின் பதில் அது விரைவில் ஒரு நாடாளுமன்ற குழு…

“பெர்சே ரிம50 இலஞ்சம்” கூற்றில் அம்னோவின் புத்தியைக் காணலாம்

கடந்த மாதம் நடைபெற்ற பெர்சே 2.0 பேரணியில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் ரிம50 கொடுக்கப்பட்டது என்ற அம்னோ அமைச்சரின் கூற்றை பாஸ் எள்ளிநகையாடியது. அம்னோ அமைச்சர் ரயிஸ் யாத்திம் வெளியிட்ட அந்த அறிக்கை மேலோட்டமானது என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் இன்று கோலாலம்பூரில் கூறினார். "அவர்களுடையத்…

“படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” முதல் “படியாக்கம் செய்யப்பட்ட அம்னோ உறுப்பினர்கள்”…

தனிநபர்கள் இரண்டு அடையாளக் கார்டுகளை வைத்துள்ள பிரச்னை, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலுடன் நிற்கவில்லை எனத் தோன்றுகிறது. "படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்" பலர் இரண்டு அடையாளக் கார்டுகளை மட்டும் வைத்திருக்கவில்லை. இரண்டு அம்னோ உறுப்பியங்களையும் வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனால் ஆளும் கூட்டணிக்குத் தலைமை தாங்கும்…

சிலாங்கூர் “மற்றொரு சாபா” ஆகலாம் என செனட்டர் அச்சம்

சிலாங்கூரில் புதிய வாக்காளர் எண்ணிக்கை திடீரென்று கூடியிருப்பது அம்மாநிலம் "இன்னொரு சாபாவாக" மாறலாம் என்று கவலைகொள்ள வைப்பதாக டிஏபி செனட்டர் பி.ராமக்கிருஷ்ணன் கூறுகிறார். சாபாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு நீலநிற அடையாளக் கார்ட் கொடுக்கப்பட்டு அவர்கள் ஆளும் கட்சி பலம் குன்றிய இடங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டார்கள்.இப்படி வந்து குடியேறியவர்…

இசி தலைவரின் “வெட்கம்கெட்ட” கூற்று:பாஸ் சாடல்

உலகில் தப்புதவறு இல்லாத தூய்மையான வாக்காளர் பட்டியல் எங்கும் இல்லை என்று கூறியதற்காக தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் “வெட்கப்பட வேண்டும்” என்றும் அவர் பிரச்னைக்கான காரணத்தை ஆராயவில்லை என்றும் பாஸ் உதவித் தலைவர் மாஃபுஸ் ஒமார் கூறினார். “அப்படிக் கூறியதற்காக வெட்கப்பட…

பெர்சே 2.0, இசி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி…

வாக்காளர் பட்டியலில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள முறைகேடுகளை இசி என்ற தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் முறை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள பெர்சே 2.0, இசி-யை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வது பற்றி சிந்திக்கிறது. தன்மூப்பாக வாக்காளர் விவரங்களை திருத்துவது அல்லது நீக்குவது பற்றி இசி அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது என பெர்சே…

சுல்தான் அறிவுரையின் பேரில் ஜயிஸ்,பாஸ் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது

பாஸ் கட்சிக்கும் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறைக்கும் இடையில் இன்று நிகழவிருந்த சந்திப்பு சுல்தானுடைய அறிவுரையைத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. "நாங்கள் இன்று சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் அந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருப்பதால், விசாரணை மூலம் கிடைக்கும் தகவல்கள் யாருக்கும்…

பிஎன்னில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை டிஎபி நிராகரித்தது

பிஎன் கூட்டணியில் இணையுமாறு கூட்டரசு அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் விடுத்த அழைப்பை டிஎபி நிராகரித்துள்ளது. தனது பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளான பாஸ், பிகேஆர் ஆகியவற்றுடன் தொடர்ந்து இணைந்திருக்கப் போவதாகவும் அது சூளுரைத்தது. நஸ்ரியின் கருத்துக்கள் "திடீரென முளைத்துள்ளன" எனக் குறிப்பிட்ட டிஎபி தலைமைச் செயலாளர்…

தேவாலயச் சோதனை: 12 முஸ்லிம்களிடம் ஜயிஸ் விசாரணை

இரண்டு வாரங்களுக்குமுன் பெட்டாலிங் ஜெயாவில் டமன்சாரா தேவாலயம் ஒன்றில் நடந்த விருந்துக்குச் சென்றிருந்த 12 முஸ்லிம்கள் இன்று சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறைக்கு (ஜயிஸ்)  சென்றனர். அந்த 12 பேரையும் நேர்காணல் செய்வதற்காக ஜயிஸ் அழைத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களில் 10 பேரைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் இதை உறுதிப்படுத்தினார். மற்ற இருவர்…