டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் டெங்கியால் ஏற்பட்ட இறப்புகள் கடந்த ஆண்டு பதிவான 111 உடன் ஒப்பிடும்போது 61.3 சதவீதம் குறைந்து 43 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 118,291 உடன்…
தமிழினத் துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது!
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 19-வது ஐ.நா மனித உரிமை மன்றத்தின் சந்திப்பில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்க வேண்டும் என சுங்கை சீப்புட் பொது இயங்கள் பிரதமரை கேட்டுக்கொண்டன. (படங்களை பார்வையிட அழுத்தவும்) "தமிழினத்துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது" என்ற கமுனிங் இளைஞர் மன்றத் தலைவரான…
பெர்சே ஆர்வலர் சரவாக் நுழையத் தடை(விரிவாக)
பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா சரவாக்கில் கால்வைக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை கூச்சிங் விமான நிலையம் சென்றடைந்தபோது குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். “அது மாநில அரசின் உத்தரவு என்றவர்கள் கூறினர்.சரவாக் செல்ல விரும்பினால் முதலமைச்சர் அலுவலகத்துக்கு எழுதி அனுமதி பெற வேண்டும்…
இலங்கை மீதான தீர்மானம்: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஹிண்ட்ராப் கடிதம்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாட்டு மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களின் நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு நா. கணேசன் அண்மையில் ஊடகங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.…
மாட் ஜைன் ஐஜிபி ஆகாததற்கு இதுதான் காரணம்
உங்கள் கருத்து: “போலீஸ் அதிகாரிகளின் உரிமைகள் பற்றி நடப்பு ஐஜிபி-யைவிட முன்னாள் குற்றப்புலன் விசாரணைத் துறை தலைவருக்கு நிறைய தெரிந்திருக்கிறது.இதை என்னவென்று சொல்ல? அல்டான்துயா கொலையில் புதிய புலனாய்வு தேவை:முன்னாள் போலீஸ் அதிகாரி பி.தேவ் ஆனந்த் பிள்ளை: கெட்டிக்காரர்களாகவும் திறமைசாலிகளாகவும் உள்ள அதிகாரிகளுக்குப் பணி உயர்வு கிடைக்காமல் போவதற்கு…
பெர்சே ஆர்வலர் சரவாக்கில் நுழையத் தடை
பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா சரவாக்கில் கால்வைக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை கூச்சிங் விமான நிலையம் சென்றடைந்தபோது குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். “அது மாநில அரசின் உத்தரவு என்றவர்கள் கூறினர்.சரவாக் செல்ல விரும்பினால் முதலமைச்சர் அலுவலகத்துக்கு எழுதி அனுமதி பெற வேண்டும்…
நூர்யானா விருந்துச் செலவுகளுக்குப் பணம் கொடுத்ததை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதல்வியின் திருமண நிச்சயதார்த்திற்கான செலவுகளுக்கு பிரதமர் அலுவலகம் பணம் கொடுத்ததாகக் கூறப்படுவதை அந்த அலுவலகம் மறுத்துள்ளது. அந்த நிகழ்வுகளுக்கான செலவுகளை பிரதமரும் அவரது குடும்பமும் ஏற்றுக் கொண்டதாக பிரதமருடைய பத்திரிக்கைச் செயலாளர் நேற்றிரவு விடுத்த இரண்டு பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "அந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக…
தமிழ்ப்பள்ளி நிலத்தை திருப்பிக் கொடுங்கள் என மஇகா-விடம் பவர் கோரிக்கை
சிலாங்கூர் பண்டார் உத்தாமாவில் உள்ள தமிழ் தொடக்கப் பள்ளி ஒன்றுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்குமாறு மஇகாவை கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை தமிழர் உரிமைப் போராட்ட அரசு சாரா அமைப்பு ஒன்று இன்று அந்தக் கட்சியிடம் வழங்கியுள்ளது. "நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக அந்த மூன்று…


