அரசாங்கக் கடன்கள், பணம் கறக்கும் பசுக்களாக மாறும் போது….

"அது சிக்கனமாக நடந்து கொள்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல. மக்கள் கொடுக்கும் வரிப் பணம் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதே கேள்வியாகும். இந்த விவகாரத்தில் அது நடக்கவில்லை என்பது நிச்சயம்."         பிகேஆர்: என் எப் சி ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஆதாயத்தைத்…

“அன்வார் செக்ஸ் வீடியோ பிரதிகள்” பினாங்கு பள்ளிவாசல்களில் விநியோகம்

பினாங்கு செபெராங் பிராயில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு செல்லும் முக்கியமான இடங்களில் கடந்த வாரம் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் செக்ஸ் வீடியோவின் பிரதிகள் வைக்கப்பட்டிருந்ததைத் கண்டு வெள்ளிக்கிழமைத் தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலைநிலத்தில் எட்டுப் பள்ளிவாசல்களில் அந்த செக்ஸ் வீடியோவின்…

ஷாரிஸாட் பதவி விலக வேண்டும் என பாங் மொக்தார் விருப்பம்

என்எப்சி என அழைக்கப்படும் தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பதவி துறக்க வேண்டும் என பிஎன் பின்னிருக்கை உறுப்பினர்கள் மன்றத் துணைத் தலைவர் பாங் மொக்தார் இன்று மக்களவையில் கேட்டுக் கொண்டிருக்கிறார். போக்குவரத்து அமைச்சர் கொங் சோர் ஹா 2012ம் ஆண்டுக்கான விநியோக மசோதாவில் தமது…

மைடின், கெடாய் ராக்யாட் பற்றிய கருத்துக்களை நிராகரிக்கிறது

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் வைக்கப்பட்டுள்ள ஒரே மலேசியாப் பொருட்கள் விலை அதிகமானவை தரம் குறைந்தவை என டிஏபி-யின் டோனி புவா கூறியுள்ளதை அந்தக் கடைகளை நடத்தும் மைடின் நிறுவனம் மறுத்துள்ளது. கிளானா ஜெயா கடையில் இன்று பிற்பகல் நடத்திய 90 நிமிட நிருபர்கள் சந்திப்பில் மைடின்…

வாதமிடத் தயரா?: இஸ்மாயில் சப்ரிக்கு டோனி புவா சவால்

டிஏபி தேசிய விளம்பரப் பிரிவுத் தலைவர் டோனி புவா, கெடாய் ரக்யாட் 1மலேசியா (கேஆர்1எம்)மீது தம்முடன் வாதமிடத் தயரா என்று உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சபரிக்குச் சவால் விடுத்துள்ளார். இஸ்மாயில் சப்ரி தம்முடன் வாதமிட முன்வந்தால் ஒரு தொலைக்காட்சி நிலையம் ஏற்பாடு செய்யும்…

போலீசின் அநியாயத்துக்கு ஒரு முடிவில்லை

“இதில் முரண்நகை என்னவென்றால், இந்தியர்கள் விடாமல் பிஎன் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருப்பதுதான். பிஎன்னின் வலுவான ஆதரவாளர்கள் அல்லவா அதனால், அதன் விளைவுகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.” வன்கொடுமைகளுக்கு ஆளானவர்கள் போலீசுக்கு எதிராக புகார் சத்து மலேசியா: அம்னோ-பிஎன் நிர்வாகத்தில் போலீசில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் இதுதான் நடக்கிறது. இந்தியர்கள் ஒரே…

பாலிக் பூலா, பிஜேஎஸ்,செலாயாங்கில் மும்முனைப் போட்டியா?

பார்டி ரக்யாட் மலேசியா (பிஆர்எம்), எதிர்வரும் பொதுத் தேர்தலில் இப்போது பிகேஆர் வசமுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. பிஆர்எம், இன்று வெளியிட்ட அறிக்கையொன்று  பினாங்கில் பூலாவ் பினாங்கிலும் சிலாங்கூரில் பெட்டாலிங் ஜெயா செலாத்தான், செலாயாங் ஆகிய தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதன்…

அரசாங்கம் ஒரே மலேசியா பொருட்களை பெட்ரோல் நிலையங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகிறது

ஒரே மலேசியா பொருட்களுக்கு அதிகமாக விலை வைக்கப்பட்டுள்ளது.  தரமும் குறைவாக உள்ளது என எதிர்த்தரப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. என்றாலும் அரசாங்கம் அத்தகைய பொருட்களை விற்பனை செய்யும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போது பெட்ரோல் நிலையங்களில் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் பாரம்பரிய மளிகைக் கடை வியாபாரத்துக்கு மேலும்…

வெளிநாட்டிலுள்ள 6 வாக்காளர்கள் இசிமீது வழக்கு தொடரலாம், நீதிமன்றம் தீர்ப்பு

வெளிநாட்டில் வசிக்கும் ஆறு வாக்காளர்கள், தேர்தல் ஆணையம்  தங்களைத்  தொலைவில்-உள்ள வாக்காளர்கள் என்று பதிவுசெய்ய வேண்டும் என்று வழக்காட கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவ்விவகாரத்தில் இசியின் முடிவை நீதிமன்ற மேலாய்வுக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கேட்டு அவர்கள் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று நீதிபதி ரொஹானா யூசுப் தீர்ப்பளித்தார். இசி-யைப் பிரதிநிதித்த…

மலேசியாகினி vs தாயிப் விவகாரத்துக்குத் தீர்வு இல்லை; விசாரணை நிகழும்

செய்தி இணையத் தளமான மலேசியாகினிக்கு எதிராக சரவாக் முதலைமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் இரண்டு தரப்புக்களுக்கும் தீர்வு காணத் தவறியதைத் தொடர்ந்து விசாரணை நிகழும். அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடக்கம் 12ம் தேதி வரை விசாரணை நடைபெறும் என நீதித் துறை…

“தூதரகங்களும் தேர்தல் ஆணையமும் ‘குழப்பம் அடைந்துள்ளனவா’ அல்லது வேண்டுமென்றே தெரியாது…

"தேர்தல் ஆணையமும் தூதரகங்களும் நேற்றுதான் பிறந்தவை அல்ல. அத்தகைய விஷயங்களில் அவற்றுக்கு எப்படித் திடீரென அனுபவமில்லாமல் போனது?" எனக்கு அஞ்சல் வாக்கு மறுக்கப்பட்டது என முன்னாள் வெளிநாட்டு மாணவர் ஒருவர் சாட்சியமளிக்கிறார் பெண்டர்: மசீச அண்மையி தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கும் போது (வெளிநாடுகளில் வாழ்கின்ற மலேசியர்களுக்கு நாட்டின் நடப்பு…

நம்புங்கள் என்று கூறி ஏமாற்றலாமா?, சேவியர் ஜெயக்குமார்

நவம்பர் 10 ஆம் தேதி மலேசிய பிரதமர் நஜிப் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்றத் தொகுதியில் இவ்வாண்டு தீபாவளியைக் கொண்டாட இங்கு வருகை புரிந்ததை வரவேற்றோம். ஆனால், பிரதமர் நம்புங்கள் என்று கூறிக்கொண்டே இந்தியர்களை  ஏமாற்ற முற்படக் கூடாது.  பிரதமர் நடத்தும்  தீபாவளி…

கர்பால்: நஜிப் ஆட்சியில் தொடர்வதற்கு ஜனவரியில் தேர்தல் நடத்துவார்

மக்களுக்காக அல்ல; தமது சொந்த அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக ஜனவரியில் தீடீர் தேர்தல் நடத்துவதைத் தவிர நஜிப்பிற்கு வேறு வழியில்லை என்று டிஎபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறினார். நஜிப்பை முடிப்பதற்கு கத்திகள் தயாராகி விட்டன. அதற்கான அறிகுறி அவரது கட்சிக்குள் இருப்பவர்களே அவரைக் குறைகூறி எழுதி…

கிட் சியாங்: என்எப்சி கடனை நஜிப் திரும்பப் பெற வேண்டும்

தேசிய விலங்கு வளர்ப்பு நிறுவனம் (என்எப்சி) தவறான நடவடிக்கைகளின் வழி பெரும் ஊழல்களில் உட்பட்டுள்ளதால் அரசாங்கம் அளித்த ரிம181 மில்லியன் கடனை திரும்பப் பெறுவதற்கு நஜிப் ரசாக் தலையிட வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டுள்ளார். "ரிம10 மில்லியன் 'கால்நடைக்கு கொண்டோமினியம்' ஊழல்…

கொடூரமான தாக்குதலுக்கு இலக்கானவர்கள் போலீசாருக்கு எதிராக மனு கொடுக்கத் தயாராகின்றனர்

மலாய்க்காரர்களை கொண்ட கும்பல் ஒன்றினால் தாங்கள் தாக்கப்பட்டதாக போலீஸில் புகார் செய்யச் சென்ற போது கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட நான்கு இந்திய இளைஞர்கள், போலீஸ் தங்களைத் தாக்கியவர்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரி மனு கொடுக்கத் தயராகி வருகின்றனர். போலீஸ் நிலையத்தில் ஏஎஸ்பி ஒருவர், சண்டையைத்…

பிஎஸ்சி அழிக்க முடியாத மை மீது பெர்சே-யுடன் ‘இணக்கம்’

ஒருவர் பல முறை வாக்களிப்பதைத் தடுப்பதற்கு அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தும் யோசனையை ஏறத்தாழ தான் ஒப்புக் கொள்வதாக இன்று பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. பெர்சே 2. 0 இன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனிடம் பேசிய அந்தக் குழுத் தலைவர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி, அழிக்க…

நஜிப் ஏப்பெக் உச்ச நிலைக் கூட்டத்துக்காக ஹாவாயி சென்று சேர்ந்தார்

ஏப்பெக் என்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஹாவாயி தீவில் உள்ள ஹானாலுலு போய்ச் சேர்ந்திருக்கிறார். தனியார் விமானம் ஒன்றில் தமது துணைவியார் ரோஸ்மா மான்சோருடன் சென்றுள்ள பிரதமர் பேர்ள் துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஹிக்காம்…

உங்கள் கருத்து: மேயப் போன மாடுகள் திரும்பும் வரை கைரி…

"கைரி முக்கியமான விஷயத்தை மறந்து விட்டதாகத் தெரிகிறது. சும்மா கிடக்கும் நிதியை இன்னொரு இடத்தில் முதலீடு செய்து வருமானம் தேடும் விவகாரம் மட்டுமல்ல அது." கைரி: என்எப்சி தாமதத்தினால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட ஆடம்பர அடுக்குமாடி வீடு வாங்கப்பட்டது நியாயமான மூளை: என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட…

ஆங்கிலத்தில் கற்பிக்கக் கோரி மலாக்காவில் பேரணி

இன்று காலை  மலாக்காவில், அறிவியல்,கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில்  கற்பிக்கும் கொள்கை (பிபிஎஸ்எம்ஐ) தொடர வேண்டும் என்பதை வலியுறுத்த சுமார் ஆயிரம் பெற்றோர் அமைதிப்பேரணி ஒன்றை நடத்தினர். பல இனத்தவரும் கலந்துகொண்ட அப்பேரணி புக்கிட் செரிண்டிட்டில் உள்ள துன் ஃபாத்திமா அரங்கில் காலை எட்டு மணிக்குத் தொடங்கியது. அரசாங்கம்…

வாக்களிக்கும் உரிமை மீதான மசீச கருத்தை அம்பிகா சாடுகிறார்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்ற மசீச யோசனைக்கு எதிரான நிலையை பெர்சே 2.0 என்ற தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான கூட்டமைப்பு எடுத்துள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு முன்பு கருத்துக்களைத் தெரிவிக்க சென்றுள்ள அவர், மலேசியாகினியிடம் பேசினார். போக்குவரத்துச் சிரமங்கள் என்னும்…

பெட்ரோனாஸ்: எம்ஏசிசி சோதனைகளை நடத்தவில்லை

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெட்ரோனாஸ் என அழைக்கப்படும் பெட்ரோலியம் நேசனல் பெர்ஹாட்டில் சோதனை ஏதும் நடத்தவில்லை. அங்கிருந்து கோப்புக்கள் அல்லது ஆவணங்கள் எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை. இவ்வாறு பெட்ரோனாஸ் நேற்று விடுத்த அறிக்கை கூறியது. புகார்கள் கிடைத்த பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறையின் ஒரு…

கர்பால்: சைபுல்-ஃபாரா உறவு பற்றி ஏஜி விசாரிப்பது முறையல்ல

முகம்மட் சைபுல் புகாரி அஸ்லானுக்கும் டிபிபி ஃபாரா அஸாலினா லத்திப்புக்குமிடையில் கள்ளத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை விசாரிப்பதில் சட்டத்துறை அலுவலகம் (ஏஜி) சுயேச்சையாக செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஃபாரா, ஏஜி அலுவலகத்தைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணையைச் சுயேச்சையான அமைப்பு ஒன்றுதான் நடத்த வேண்டும் என மூத்த வழக்குரைஞரும்…

உங்கள் கருத்து: போலீஸுக்கு வேறு வேலையே இல்லையா?

"மலேசியாவில் ஒரே ஒரு வகையான குற்றச்செயல்கள் மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது-அதாவது செக்ஸ் விவகாரம். அத்துடன் ஒரே ஒரு கிரிமினல் மட்டுமே உள்ளார். அவர் அன்வார் இப்ராஹிம்." செக்ஸ் ஒளிநாடா: 'தவறான தகவலைத் தந்ததற்காக அன்வார் மீது போலீஸ் விசாரணை அர்ச்சன்: குற்றம் நிகழ்ந்துள்ளதோ இல்லையோ பிஎன் குறிப்பாக அம்னோ…