கிளந்தான் துணை மந்திரி பெசார் பட்ஸ்லி ஹாசன் கூறுகையில், LGBTQ+ எதிர்ப்பு சைன்போர்டுகள் ஒரு நல்ல அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. "இது நல்ல பலனைத் தந்தால், கிளந்தான் அத்தகைய நடவடிக்கையைச் செயல்படுத்தக்கூடும், ஏனெனில் அது உண்மையில் நல்லது மற்றும் சாத்தியமானது," என்று அவர் கூறியதாக ஹராக்கா மேற்கோள் காட்டியது. LGBTQ+…
பாங்கி “மைகார்டு மோசடியில்” சம்பந்தம் இல்லை என்கிறது தேசியப் பதிவுத்துறை
பாங்கியில் நேற்று அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்ட நடவடிக்கையில் தான் சம்பந்தப்பட்டுள்ளதாக பாஸ் கூறுவதை தேசியப் பதிவுத் துறை மறுத்துள்ளது. "கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் எந்த நடவடிக்கை குறித்த தகவலும் இது வரையில் இல்லை," என அந்தத் துறையின் பொது உறவு அதிகாரி ஜாய்னிஷா முகமட்…
இசி பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துகிறது
நாடு முழுவதும் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்படுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களுக்கு அவை அமைந்துள்ள தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனால் திடீர் தேர்தல்கள் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்னும் ஊகங்கள் வலுவடைந்துள்ளன. அதற்கான கடிதங்கள் இந்த மாதத் தொடக்கத்தில் அனுப்பப்பட்டுள்ளன. வாக்களிப்பு மைய தலைவர்களாகவும் தேர்தல்…
பாஸ்: வாக்குகளுக்காக குடியுரிமை என்று கூறப்படுவதற்கு அமைச்சு விளக்கமளிக்க வேண்டும்
வாக்குகளுக்கு பரிவர்த்தனையாக அந்நியர்களுக்குக் குடியுரிமையை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் அடங்கிய குழு பற்றி உள்துறை அமைச்சிடமிருந்து விரைவான விளக்கத்தை பாஸ் கோரியுள்ளது அத்தகைய நடவடிக்கைகளுக்கு கட்சியிடம் "வலுவான ஆதாரம்" இருப்பதாக அதன் குபாங் கெரியான் எம்பி சலாஹுடின் அயூப் வலியுறுத்தினார். மிக அண்மையில் புத்ராஜெயாவில் அது…
அமைதியான பாஸ் “செராமா”வில் ஆணிகள் கண்டுபிடிப்பால் பரபரப்பு
பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு உரையாற்றிக்கொண்டிருந்த பினாங்கு பாயான் லெப்பாஸ் செராமா அமைதியாக நடந்து முடிந்திருக்கும். ஆனால், செராமா நடைபெற்ற இடத்துக்கு அருகில் பெரிய ஆணிகள் கொத்தாகக் கண்டெடுக்கப்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு வாக்கில் செராமாவின் முடிவில் கட்சியின் பாதுகாப்பு அணியினர் (யூனிட் அமால்) ஓர்…
பட்ஜெட் போனசுக்கு மகாதிர் பாராட்டு
2012 பட்ஜெட் ஒரு நல்ல பட்ஜெட் என்று வரவேற்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அதில் உள்ள ரொக்க போனஸ் வழங்கும் திட்டத்தைப் பாராட்டினார். அது “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் திட்டம்”, என்றவர் வருணித்தார். “அது தேர்தலைக் கருத்தில் கொண்டுள்ளது. வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் கருத்தில்…
வாக்காளர் பட்டியலில் உள்ள 40,000 பெயர்கள் “ஐயத்துக்குரியவை”, இசி
இசி என்ற தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள 40,000 பேர்களின் பெயர்களை வெளியிடவிருக்கிறது. அந்த பெயர்களுடைய உண்மை நிலை குறித்து தான் உறுதி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அது கூறியது. பொது மக்கள் ஆழமாக ஆய்வு செய்வதற்காக அந்த பெயர்கள் அனைத்தும் இசி இணையத் தளத்தில்…
புவா: கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆறு நெடுஞ்சாலைகள் எங்கே?
மக்களவையில் அண்மையில் சமர்பிக்கப்பட்ட 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் "அதிக தாக்கத்தைக் " கொண்டுள்ள ஐந்து புதிய நெடுஞ்சாலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்ற ஒர் எதிர்க்கட்சி எம்பி, கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட ஆறு நெடுஞ்சாலைகள் எங்கே போயின என வினவினார். நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிருபர்களிடம்…
எம்ஆர்டி: ஜாலான் சுல்தான் கட்டிடங்கள் உடைபடமாட்டா
கோலாலம்பூரில் 10 கிலோமீட்டர் நீளத்துக்குத் தரையடி எம்ஆர்டி சுரங்கப்பாதைக் கட்டும் பணிக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாலான் சுல்தானில் உள்ள எந்தவொரு கட்டிடமும் உடைக்கப்படாது. இந்த உத்தரவாதத்தை பிரதமர்துறை துணைஅமைச்சர் அஹ்மட் மஸ்லான் இன்று நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தின்போது அளித்தார். அவ்வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர் குழுக்கள் எம்ஆர்டி-க்கு மாற்றுப் பாதை ஒன்றையும்…
தவணைக்காலம் முடியும்வரை காத்திருக்கவும்: நஜிப்புக்கு மகாதிர் அறிவுரை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொதுத் தேர்தலை நடத்த அவசரம் காட்டாமல் 2013 மார்ச்வரை பொறுத்திருக்க வேண்டும் என்று டாக்டர் மகாதிர் முகம்மட் அறிவுறுத்தியுள்ளார். அப்போது நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது பக்காத்தான் ரக்யாட் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அவற்றின் சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டியிருக்கும் என இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் மகாதிர் …
மலேசியாவில் தமிழுக்கு உழைத்தவர்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்: வழக்கறிஞர் சி.பசுபதி
அண்மையில் (03.10.2011) கோலாலும்பூர் சீன அசெம்பெளி அரங்கில் ‘லிம் லியன் கியோக்: தாய்மொழி கல்வியின் தந்தை’ எனும் மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. தாய்மொழி போராட்ட இயக்கமான தமிழ் அறவாரியமும் லிம் லியன் கியோக் கலாச்சார பண்பாட்டு மையமும் இணைந்து இந்நூலை வெளியிட்டன. ஆங்கிலத்தில் முனைவர் குவா கியா சூங்…
நகைச்சுவை நடிகரைக் கைது செய்வதற்கான ஆணைக்கு ஜயிஸ் விண்ணப்பிக்கும்
ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறையின் முன்பு ஆஜராகத் தவறியதற்காக நகைச் சுவை நடிகரும் பாடலாசிரியருமான போப் லோக்மானைக் கைது செய்வதற்கான ஆணைக்கு அந்தத் துறை விண்ணப்பித்துக் கொள்ளும். "அவர் நேற்று காலை ஜயிஸ் தலைமையகத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அவர் பிடிவாதமாக…
ஜுலை 9 மரணம்: விசாரணைக்கான விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது தமது கணவர் பஹாருடின் அகமட் திடீரென மரணமடைந்தது குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கு மாஜிஸ்திரேட் ஒருவருக்கு உத்தரவிடுமாறு ரோஸ்னி மாலான் தாக்கல் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ரோஸ்னி மாலானின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்த நீதிபதி சு…
ஆட்சியாளர்களின் ஆணைகளை விமர்சிக்கலாம், நெகிரி இளவரசர்
எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாத வரை ஆட்சியாளர்கள் விடுக்கும் ஆணைகளைக் கல்வியாளர்களும் ஊடகங்களும் விவாதிப்பதில் தவறில்லை என்கிறார் நெகிரி செம்பிலான் அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவர். பேச்சுரிமை இதற்கு இடமளிக்கிறது. மலேசியாகினி மின் அஞ்சல்வழி நடத்திய நேர்காணலில் துங்கு ஜைன் அல்’அபிடின் இவ்வாறு கூறினார். “நான் பேச்சுரிமையையும் ஒன்றுகூடும் சுதந்திரத்தையும்…
உத்துசான், 1993ம் ஆண்டு அம்னோ, அரசர் அமைப்பு முறை குறித்து…
"எஸாம் முகமட் நூர் மற்றும் அவரது கும்பலுக்கு, அம்னோ கூட அரசர் அமைப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. தவறு செய்வது மனித இயல்பு." அரசர் அமைப்பு முறையை கீழறுப்புச் செய்வதாக மலேசியாகினி மீது குற்றச்சாட்டு ஜனநாயகம்53: நாம் கற்காலத்தில் வாழவில்லை. சுல்தானுடைய அறிக்கையை முஸ்லிம் அல்லாத சமூகம் ஏற்றுக்…
கர்பால் குற்றச்சாட்டு: நீதிபதி மாலிக் வழக்கை செவிமடுப்பதிலிருந்து விலகிக் கொண்டார்
சிங்கப்பூர் நீதிபதியின் தீர்ப்பை திருடி விட்ட ஒரு மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு ஒரு விசாரணை மன்றம் அமைக்கக் கோரும் மனு ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தாக்கல் செய்த கர்பால் சிங் இன்று அந்த நீதிபதியை நேருக்கு நேர் சந்தித்தார். நீதிபதி…
ஹுடுட், பக்காத்தான் அதிகாரப் பூர்வமான கொள்கை அல்ல
ஹுடுட் சட்ட அமலாக்கம் பக்காத்தான் கூட்டணியின் அதிகாரப் பூர்வமான கொள்கை அல்ல என்பதை கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த அந்தக் கூட்டணியின் உயர் நிலைக் கூட்டம் உறுதிப்படுத்தியது. டிஏபி தலைமையகத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஹுடுட் சட்டத்தை அமலாக்க பாஸ் எண்ணியிருப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான்…
முனைவர்: அரண்மனையும் விமர்சனத்துக்கு உட்பட்டதே
மற்ற பொது அமைப்புக்களைப் போன்று மலாய் ஆட்சியாளர்களும் பொது மக்களுடைய ஆழமான ஆய்வுக்கு உட்பட்டவர்களே என அரசியலமைப்பு நிபுணர் அப்துல் அஜிஸ் பேரி கூறுகிறார். அது எந்த வகையிலும் ஆட்சியாளர்களுக்கும் மரியாதை அளிக்கவில்லை எனக் கருதப்படக் கூடாது என்றார் அவர். ஆட்சியாளர்களுடைய அடைவு நிலையையும் அவர்கள் தங்களது அரசியலமைப்பு…
“அந்நிய” வாக்காளர்கள் எனக் கூறப்பட்ட 200 பேரை குடியிருப்பாளர்கள் சூழ்ந்து…
மலேசிய அடையாளக் கார்டுகளையும் வாக்களிக்கும் உரிமையையும் பெறவிருப்பதாக கூறப்பட்ட- அந்நியர்கள் என தாங்கள் சந்தேகிக்கும் 200 பேர் கொண்ட குழு ஒன்றை புத்ராஜெயாவில் உள்ள தேசா ஸ்ரீ புத்ராவைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் சூழ்ந்து கொண்டனர். கூட்டரசு நிர்வாகத் தலைநகருக்கு அருகில் உள்ள ஒய்வுத் தலம் ஒன்றில் குடியிருப்பாளர்கள் அந்தக்…
பிஎன், பக்காத்தான் பட்ஜெட்டுகளில் தேர்தல் காலக் கவர்ச்சிதான் அதிகம்
மாற்றரசுக் கட்சி, அரசாங்கம் இரண்டுமே பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தன. இரண்டிலும் தேர்தல்கால கவர்ச்சி அம்சங்கள் நிறைய இருந்தனவே தவிர கொள்கைரீதியான பரிசீலனைகளுக்குக் குறைந்த இடமே கொடுக்கப்பட்டிருந்தது என்கிறார் துங்கு ஜைன் அல் அபிடின் முக்ரிஸ். ஜனநாயக பொருளாதார விவகாரக் கழகத்தின் நிறுவனரான அவர், கூடுதல் பொருளாதாரத் தாராளமயத்துக்குப் பாதை…
குதப்புணர்ச்சி வழக்கு ll: மூசா, ரோட்வான் ஆகியோரை பிரதிவாதித் தரப்பு…
குதப்புணர்ச்சி வழக்கில் சாட்சியமளிக்க வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் அனுப்பப்பட்ட அன்வார் இப்ராஹிமின் அழைப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து மேலும் இரண்டு சாட்சிகளை அழைப்பதில்லை என பிரதிவாதித் தரப்பு இன்று முடிவு செய்துள்ளது. முன்னாள் தேசிய போலீஸ்…
காணாமல் போன முக்கிய பத்திரங்களுக்கு இனிமேல் போலீஸ் புகார் தேவை…
காணாமல் போன அல்லது சேதமடைந்த பிறப்பு, திருமண, கல்வி, வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், மலேசிய பாஸ்போர்ட், வாகனமோட்டுவதற்கான அனுமதி, நில உரிமைப் பத்திரம் ஆகியவை குறித்து பொது மக்கள் இனிமேல் போலீஸில் புகார் செய்ய வேண்டியதில்லை. பிரதமர் துறை செப்டம்பர் 29ம் தேதி வெளியிட்ட 2011ம் ஆண்டுக்கான மூன்றாவது…
அரசர் அமைப்பு முறையை கீழறுப்புச் செய்வதாக மலேசியாகினி மீது குற்றச்சாட்டு
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா இன்று தனது முதல் பக்கச் செய்தியில் செய்தி இணையத் தளமான மலேசியாகினி அரசர் அமைப்பு முறையைக் கீழறுப்புச் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. "சுல்தான் ஆணை குறித்து கேள்வி எழுப்புவது கண்டிக்கப்பட வேண்டும்" என்னும் தலைப்பிலான அந்தச் செய்தி, மலேசியாகினியை கண்டிக்கும் இரண்டு உட்பக்கக்…
கெராக்கான் மாநாட்டுக்கு முன்னதாக பதில்களை எதிர்பார்க்கிறார்கள் பேராளர்கள்
கெராக்கான் தேசியப் பேராளர் மாநாடு, இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வேளையில் பேராளர்கள் பலரும்- அரசியல் பார்வையாளர்களும்கூட -ஐந்து முக்கிய கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றனர்.கட்சி தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்க இந்தக் கேள்விகளுக்குத் தெள்ளத்தெளிவான பதில்கள் கிடைப்பது அவசியம் என்பது அவர்களின் நினைப்பு. கட்சியின் முதல்-தவணை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கோ…