இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
நாங்குநேரியில் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கட்சி தலைவர்கள் கண்டனம்
நாங்குநேரியில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பள்ளிகளில் சாதிவெறிக்கு இடமளிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னதுரையின் வீடுபுகுந்த சக மாணவர்கள், அவரைக் கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அவரைக்…
பழங்குடிகளே நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் – ராகுல் காந்தி
பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில் பேசியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தகுதி நீக்க அறிவிப்பை திரும்ப பெற்றதால், மீண்டும் எம்பி ஆக பொறுப்பேற்ற ராகுல் காந்தி , முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தடைந்தார். இன்று (ஞாயிறு)…
இந்திய மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி
பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏபி) வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: இறக்குமதி கொள்கை ஆணை 2022-ன் கீழ், இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை மருத்துவமனைகள் அல்லது பொதுமக்கள்…
திருப்பதி மலைப்பாதையில் 6 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை
திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று, அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் திருமலைக்கு நடைபாதை வழியாக இரவில் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை…
பொது சிவில் சட்டத்தால் இந்து – முஸ்லிம் பிளவு ஏற்படாது
பொது சிவில் சட்டத்தால் இந்து-முஸ்லிம் பிளவு ஏற்படாது என்றும், இந்த சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் மிகவும் வரவேற்பார்கள் என்றும் கூறுகிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன். மேலும், பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதுதான் வகுப்பு வாதமே தவிர, கொண்டு வர வேண்டும் என்பது அல்ல என்றும்…
கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? – திமுக மீது பிரதமர்…
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று திமுக தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ‘‘கச்சத்தீவை பிரதமர் நரேந்திர மோடி மீட்க வேண்டும்'’ என்று தமிழக…
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட நியமனத்தின் ரத்து உத்தரவுக்கு உயர்…
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் ஜெயபாலன், பிரபு…
தேச விரோத செய்திகளைப் பரப்ப சீனாவிடமிருந்து நிதி உதவி: நியூஸ்கிளிக்…
இந்திய செய்தி நிறுவனமான நியூஸ்கிளிக், சீனாவிடமிருந்து நிதி பெற்று செயல்பட்டதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் மீதான விசாரணையை அமலாக்கத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. நியூஸ்கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூஸ்கிளிக்…
கிராமங்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கும் ஹரியாணா பஞ்சாயத்து தலைவர்களின்…
ஹரியாணாவின் 3 மாவட்டங்களின் 50 கிராமங்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கும் பஞ்சாயத்து தலைவர்களின் கடிதங்களால் சர்ச்சை உருவாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹரியாணாவின் நூ பகுதியில் கடந்த ஜூலை 31-ம் தேதி உருவான மதக் கலவரம் முடிவுக்கு வந்து அங்கு அமைதி திரும்பி வருகிறது.…
கடந்த 6 மாதத்தில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்வு
இந்தியாவில் ஆண்டுக்கு 10.8 கோடி டன் கோதுமை பயன்பாடு உள்ளது. ஆனால் உற்பத்தியில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இந்த ஆண்டு எதிர்பார்ப்பைவிட அறுவடையில் 10 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதனால் கோதுமை வரத்து சந்தைகளில் குறையத்தொடங்கியுள்ளது. இனி வரும் மாதங்கள், பண்டிகைக்காலம் என்பதால் பதுக்கல்களும் தொடங்கி விட்டன.இதனால் சந்தையில்…
பெங்களூரு போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி இழப்பு
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு, இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகராக விளங்குகிறது. இங்கு 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். கோலார் தங்கவயல், மைசூரு, தும்கூர்…
மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகங்களுக்கு இடையே நடக்கும் கலவரத்தில் முரே பகுதியில் வசிக்கும் தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியாவின் அண்டை நாடான மியான்மர், ஆங்கிலேயரின் காலனி நாடாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது 1942-ல் ஜப்பானிய படை மியான்மருக்குள் நுழைந்தது. ஆங்கிலேய, ஜப்பானிய படைகளுக்கு இடையே கடுமையான போர் நீடித்தது.…
இந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ்…
இந்திய ஊடகத்துக்கு சீன தரப்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் 5 நிருபர்கள், சர்வதேச அரங்கில் சீனாவின் திரைமறைவு நடவடிக்கைகள் தொடர்பாக புலனாய்வு செய்து விரிவான செய்தியை தயார் செய்துள்ளனர். இந்த செய்தி கடந்த 5-ம் தேதி நியூயார்க்…
ஹரியாணாவில் 144 தடை உத்தரவை மீறி பஞ்சாயத்து, முஸ்லிம்களுக்கு எதிராக…
மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹரியாணாவில் 144 தடை உத்தரவை மீறி கூடிய மகா பஞ்சாயத்து கூட்டம் ஒன்றில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் கடந்த ஜுலை 31-ல் நடைபெற்ற விஎச்பியின் ஊர்வலம் மதக்கலவரமாக மாறி இருந்தது. நூவை சுற்றியுள்ள குருகிராம், பல்வல்,…
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் , விவாதத்தை தொடங்கி…
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று (ஆக.08) விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்றைய விவாதத்தை மக்களவையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தொடங்கி வைத்து முதல் பேச்சாளராக உரையாற்றுவார் எனத் தெரிகிறது. ராகுல் காந்தி, மனீஷ் திவாரி, கவுரவ் கோகோய்…
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும்: உச்ச நீதிமன்றம்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா…
மீண்டும் எம்பி ஆனார் ராகுல் காந்தி
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் தகுதி இழப்பை மக்களவை செயலகம் இன்று (திங்கள்கிழமை) ரத்துசெய்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் மக்களவை எம்பி ஆகிறார். இதுகுறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி," நீதித்துறையின் உத்தரவுக்கு உட்பட்டு தகுதி நீக்கம் நிறுத்திவைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் கடந்த…
கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தில் உயிரிழப்பு 6…
மணிப்பூரில் உள்ள விஷ்ணுபூர் -சூரசந்த்பூர் எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயம் அடைந்தனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இனத்தவர் பழங்குடியினர் அந்தஸ்து கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கில் அவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க உயர்…
இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்கிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர். அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் வாஷிங்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிவரும் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.…
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தற்காலிக அரசுப்…
கண்ணகி நகரில் போதை மீட்பு மறுவாழ்வு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள போதை மீட்பு மறுவாழ்வு முகாமை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.…
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில இணையதளம் தொடக்கம்
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வந்து படிப்பதை எளிதாக்கும் வகையில் இணையதளம் ஒன்றை மத்திய அரசு நேற்று தொடங்கியது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்திய பல்கலைக்கழங்களில் படிப்பதை எளிதாக்கும் வகையில் https://studyinindia.gov.in/ என்ற இணையதளத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர்…
பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் இந்திய மாணவர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய மாணவர் ஒருவரும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் உள்ள லாவோக் நகரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த விமானப்…
ரக்ஷா பந்தனை முஸ்லிம் சகோதரிகளை சந்தித்து கொண்டாடுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர்…
நாடு முழுவதும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சகோதரிகளை சந்தித்து, சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடுங்கள் என்று பாஜக எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எம்.பி.க்களைப் பிரதமர் மோடி கடந்த திங்கட்கிழமை…
























