அதானி விவகாரத்தில் விசாரணை கோரி நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது. அதானி விவகாரம் நாடாளுமன்றத்திலும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த வாரம் பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு வியாழக்கிழமை நாடாளுமன்றம் கூடியபோது இந்த…

இந்தியாவில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை

உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. கடன் செயலிகள் மூலம் கடன்பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அதேபோல, சூதாட்டச் செயலிகளால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய செயலிகள் பெரும்பாலும் சீன…

இந்தியாவுக்கு வரும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கும் காலத்தை மீண்டும் 182…

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் தங்கும் காலத்தை பழையபடி 182 நாட்களாக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி வலியுறுத்தி உள்ளார். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் தேஷ்பாண்டே அறக்கட்டளை சார்பில், 14-வது மேம்பாட்டு பேச்சுவார்த்தை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியதாவது: கடந்த 2019…

சீனாவை சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டும் – நிதி ஆயோக்…

சில முக்கியமான பொருட்களுக்காக சீனாவை சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் துணைத்தலைவர் சுமன் பெரி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறைவாகவும், அங்கிருந்து இறக்குமதி செய்வது…

அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை, குழந்தை திருமணங்கள் நிறுத்தப்படவேண்டும் –…

ஒட்டுமொத்த இந்தியாவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவிகிதமாக உள்ள நிலையில் அசாமில் எச்சரிக்கை அளிக்கும் வகையில் 11.7 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகும். 18 வயதிற்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்வது தண்டனைக்குரிய…

அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் குறித்து ஒழுங்குமுறை அமைப்புகள்…

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இதனிடையே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பொய்யானது என்றும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க…

மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க காவல்துறை…

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட உள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு.…

1.75 லட்சம் இந்தியருக்கு ஹஜ் பயணம் செல்ல அனுமதி

கொரோனா பரவல் காரணமாக 2 வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய முஸ்லிம் யாத்ரீகர்கள் கடந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செல்ல முடிந்தது.எனினும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 79,000 பேருக்கு மட்டுமேசவுதி அனுமதி வழங்கியது. யாத்ரீ கர்களுக்கு கரோனா தொடர்பான வழிகாட்டுதல்களையும் சவுதி அதிகாரிகள் வழங்கினர். இந்நிலையில் நாடாளுமன்ற…

22 நாடுகளின் பிரபலமான தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி 78%…

உலகில் மிகச் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் பட்டியலில் 78% பேரின் ஆதரவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகின் முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்' நிறுவனம், அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் குறித்து…

அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு சிறுநீரக கோளாறு

முக கிரீம் பயன்படுத்த தொடங்கிய 4 மாதங்களில் 3 பெண்களுக்கும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெண்கள் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இளம்பெண்கள் உடல் பொலிவு பெறவும், முகத்தை அழகாக காட்டவும், கிரீம் பூசுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த…

28 மாத போராட்டத்துக்கு பின் உ.பி. சிறையில் இருந்து கேரள…

பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண் இறந்தது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பன், 28 மாத போராட்டத்துக்குப் பின் உ.பி. சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். உத்தர பிரதேசம் ஹாத்ரஸ் நகரில் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.…

குழந்தை திருமணம் செய்த ஆயிரக்கணக்கானோர் கைதாவர்- அசாம் முதல்வர்

குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் அடுத்த ஒரே வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அதிரடியாக அறிவித்துள்ளார். அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்திற்குச் சென்ற முதல்வர் இதனை தெரிவித்தார். அடுத்த ஒரு வாரத்தில் மாநிலம் முழுவதும் குழந்தைத் திருமணங்கள் செய்து கொண்ட…

முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து – அதானி விளக்கம்

இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என அதானி விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக…

மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு எந்தவித திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது…

2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு இல்லாத இந்தியா – ரூ.35…

வரும் 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தின்படி, வரும் 2070-ம்ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 100% தடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது புதைபடிவ எரிபொருளில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ‘பசுமை வளர்ச்சி’…

இந்தியப் பொருளியல் 7 விழுக்காடு வளர்ச்சி காணும் – வரவு…

இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கு முந்திய வரவு செலவுத்திட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதும் அதன் முக்கிய இலக்கு என்று திருவாட்டி நிர்மலா சீதாராமன் கூறினார். உலகின் ஆக வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளியல் என்ற இந்தியாவின் நிலையை…

இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்களின் சாதனைகளை…

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் அசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில், சாமியார் அசராம் பாபுவுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 1941-ம் ஆண்டு பிறந்தவர் அசுமல் சிறுமலானி ஹர்பலானி. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இவரது குடும்பம் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு குடிபெயர்ந்தது. சிறு வயதில் அசுமல் சைக்கிள் பழுது…

ஓட்டல் ஊழியர்களுக்கு தொற்றுநோய் இல்லை சான்றிதழ் கட்டாயம் – கேரள…

ஓட்டல் ஊழியர்கள் ‘தொற்றுநோய் இல்லை’ என்கிற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில், உணவில் நச்சுத்தன்மை காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதை கருத்தில்கொண்டு, கேரள அரசு இ்ன்று முதல் 'சுகாதார அட்டை' என்ற திட்டத்தை அமல்படுத்துகிறது. இதன்படி, கேரளாவில் உள்ள…

இந்தியாவில் விசாரணை நீதிமன்றங்களால் 2022-ல் 165 பேருக்கு மரண தண்டனை…

டெல்லியிலுள்ள தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் பிராஜக்ட் 39ஏஎன்ற பெயரில் `இந்தியாவில் மரணதண்டனை: ஆண்டு புள்ளிவிவரங் கள் 2022’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு 146 பேருக்கு மரண தடண்டனை வழங்கப்பட்டது. 2022-ல் 165 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2022-ல்அகமதாபாத் நீதிமன்றத்தில் மட்டும் 38 பேருக்கு…

ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, இந்தியாவுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் –…

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், “அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடி யிலும்ஈடுபட்டுள்ளனர்” என கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அதானி குழும…

மோடி குறித்த ஆவணப்படம்: பிபிசி தகவல் போர் நடத்துவதாக ரஷியா…

ஆவணப்படத்தை பகிர்வதை தடுக்கும்படி சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. சில குழுக்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புக்கு எதிரான கருவியாக பிபிசி செயல்பட்டது. குஜராத் கலவரத்தில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தியும், மத்திய அரசின் செயல்பாடுகளை மையப்படுத்தியும் பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு இந்தியா தடை…

ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள்…

ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள், இந்திய தேசிய கொடியை ஏந்தியிருந்த இந்தியர்களை தாக்கியதாக ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வைலதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை…