இந்தியப் பொருளியல் 7 விழுக்காடு வளர்ச்சி காணும் – வரவு செலவுத் திட்ட உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கு முந்திய வரவு செலவுத்திட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதும் அதன் முக்கிய இலக்கு என்று திருவாட்டி நிர்மலா சீதாராமன் கூறினார்.

உலகின் ஆக வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளியல் என்ற இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துவது திட்டம் என்றார் அவர்.

முதலீட்டை 33 விழுக்காடு அதிகரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. அதன்படி முதலீட்டுக்கான செலவு 122 பில்லியன் டாலரை எட்டும். இவ்வாண்டு இந்தியா சுமார் 7 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

-smc