சக பெண் பயணி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த…

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து விட்டதாக எழுந்த புகார், இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.…

குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சை, பிரதமர் மோடிக்கு ரிஷி சுனக்…

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது, குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே, லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி,…

அருணாச்சலப் பிரதேசத்தில் அணைகள் கட்டும் பணியை விரைவுபடுத்தும் இந்தியா

இடாநகர், அருணாசல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, எல்லையை ஒட்டிய பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகே உள்ள திபெத்தின் மேடாக் பகுதியில் பிரம்மபுத்ரா நதி மீது மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இதிலிருந்து 60 ஆயிரம் மெகாவாட்…

கேரளா மூணாறு மலை கிராமங்களில் உறைய வைக்கும் குளிர்

கேரளாவின் மலையோர கிராமங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. செடி, கொடிகள் அனைத்தும் பனிப்பொழிவு காரணமாக வெண்பனி போர்வை மூடிக்காணப்பட்டது. கேரளாவின் மலையோர கிராமங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறிலும் கடந்த சில நாட்களாக குளிர்வாட்டி வதைக்கிறது. நேற்று மூணாறின் பல பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி…

இந்தியாவின் மக்கள்தொகை ஏற்கனவே சீனாவை முந்திவிட்டது- ஆய்வாளர்கள் தகவல்

இந்தியா சீனாவை விட 50 லட்சம் மக்கள் தொகையை அதிகம் கொண்டு உள்லது என உலக மக்கள்தொகை ஆய்வு தெரிவித்து உள்ளது. உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் மதிப்பீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மக்கள்தொகை 141.7 கோடியாக இருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு மக்கள்தொகையில் கவனம் செலுத்தும்…

மத்திய அரசின் பணிகளில் தமிழர்கள் குறைவு: போட்டி தேர்வுக்கு தமிழ்நாடு…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடக்கி வைத்தார். விழாவில்…

20% ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஷேர்சாட்

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள ஷேர்சாட் நிறுவனங்களில் 20% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வீடியோ, புகைப்படம், குறுஞ்செய்திகளை பகிரக்கூடிய இந்தியாவில் சமூக ஊடகமாக ஷேர்சாட் அண்மையில் கூகுள் மற்றும் டெமாசெக் மூலம் 300 மில்லியன் டாலர் முதலீடு பெற்றது. இந்நிலையில் செலவினங்களைக் குறைக்கும் வகையிலும், முதலீட்டாளர்களிடமிருந்து வந்த அழுத்தத்தை…

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது: மத்திய…

இந்தியாவில் சட்டவிரோத கூட்டமைப்பு என கூறி சிமி இயக்கத்திற்கு உபா சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு…

மாடுகளை கொன்று எண்ணெய் தயாரித்த கும்பல்- சமையல் எண்ணெயில் கலந்து…

மாட்டுக்கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து பேரல்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் அங்கிருந்த கலப்பட எண்ணெய் மற்றும் மாட்டு தோல்களை பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி ராமகிருஷ்ணா நகரில் பசு மாடுகளை கொன்று அதன் கொழுப்பில் இருந்து எண்ணெய்…

கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம்

கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இன்று புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,119 பேர்…

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. தி.மு.க. தரப்பு…

குஜராத்தில் காற்றாடி நூல் கழுத்தை அறுத்து 3 குழந்தைகள் உள்பட…

குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தியையொட்டி உத்தராயண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது மக்கள் வண்ண வண்ண காற்றாடிகளை பறக்கவிட்டு குதூகலிப்பது பிரசித்தமான வழக்கம். ஆனால் இந்த வழக்கத்தால் சில அப்பாவிகளின் உயிர் அநியாயமாக பறிபோய்விடுவதுதான் துயரம். காற்றாடிகளின் மாஞ்சா நூல், சிலரின் கழுத்தை அறுத்து பலிவாங்கிவிடுகிறது. சிறுமிகள், சிறுவன்…

உழவர்களுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப் பொங்கல்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகெங்கும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்தில் உழவர்களுடன் சேர்ந்து மாடுகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. மாடுகளின் உழைப்பை காலப்போக்கில் மனிதம் மறந்து விட கூடாது,  உழைப்பை அங்கீகரித்து அவற்றை கவுரவிக்க…

இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டும்- பிரதமர் மோடி டுவீட்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை…

அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது – அமர்த்யா…

அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது என்று அமர்த்யா சென் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க, மாநில கட்சிகள் முக்கிய பங்காற்ற வேண்டும்.…

சர்வதேச அரங்கில் புதியதொரு விதி செய்வோம், ஐ.நா. சபையை மாற்றி…

சர்வதேச அரங்கில் புதியதொரு விதி செய்வோம். ஐ.நா. சபையை மாற்றி அமைப்போம் என்று தெற்கு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த சர்வதேச அமைப்பில் அமெரிக்கா தலைமையிலான அணியும் ரஷ்யா தலைமையிலான அணியும் அவ்வப்போது…

அயல்நாடுகளில் பணிக்கு சென்று இறக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு மாத ஓய்வூதிய…

தமிழ்நாடு அரசு வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2023 விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:- அயலக மண்ணில் வசிக்கும் நம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்குத் தேவை ஏற்படக்கூடிய நிலைகளில்…

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இனவெறி தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது இனவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி உள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் ஒன்று உள்ளது. இதன்மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில்…

விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.30 கோடியில் கண்ணாடி நடைபாலம்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.30 கோடியில் கண்ணாடி நடைபாலம் அமைப்பது குறித்து ஆய்வு நடந்தது. சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குசென்று ரசிப்பது வழக்கம். பின்னர் அங்கிருந்து 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு செல்வார்கள். கடலில் நீரோட்டம்…

ஒடிசாவில் கோலாகலமாக தொடங்கியது உலக கோப்பை ஹாக்கி தொடர்

ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. இன்று முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா…

முன்னாள் அதிபர்களுக்கு தடை – கனடா தூதருக்கு இலங்கை அரசு…

இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ரணில்…

2040-க்குள் உலக எரிபொருள் தேவையில் இந்தியா 25 சதவீத பங்களிப்பினை…

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று கூறியது: வரும் 2040-க்குள் உலகளாவிய எரிபொருள் தேவையில் இந்தியா 25 சதவீத பங்களிப்பினை வழங்கும். அதேபோன்று, 2025-க்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கும் எட்டப்படும். 2013-14-ல் 1.53% ஆக இருந்தபெட்ரோலில் எத்தனால் கலப்பு…

சாதிய கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்- முதலமைச்சர்…

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் ஆதி திராவிடர்கள் வசித்து வந்த பகுதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பேசினார்கள். அப்போது குடிநீர் தொட்டியில் மலம்…