20% ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஷேர்சாட்

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள ஷேர்சாட் நிறுவனங்களில் 20% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோ, புகைப்படம், குறுஞ்செய்திகளை பகிரக்கூடிய இந்தியாவில் சமூக ஊடகமாக ஷேர்சாட் அண்மையில் கூகுள் மற்றும் டெமாசெக் மூலம் 300 மில்லியன் டாலர் முதலீடு பெற்றது. இந்நிலையில் செலவினங்களைக் குறைக்கும் வகையிலும், முதலீட்டாளர்களிடமிருந்து வந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில், ஷேர்சாட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 20% ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது.

20% ஊழியர்களை பணி நீக்கம் செய்த பின்னர் ஷேர்சாட் தலைமை நிர்வாகி அங்குஷ் சச்தேவா தெரிவித்த செய்தி குறிப்பில், “தற்போதைய உலக பொருளாதார சரிவு காரணமாக, இந்த துரதிர்ஷ்டவசமான முடிவு எடுக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் செலவை குறைக்க முடியும் என நம்புகிறேன். என தெரிவித்துள்ளார். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஷேர்சாட் 5 பில்லியன் டாலர் மதிப்புடையது. இங்கு சுமார் 2,200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-dt