இடாநகர், அருணாசல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, எல்லையை ஒட்டிய பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகே உள்ள திபெத்தின் மேடாக் பகுதியில் பிரம்மபுத்ரா நதி மீது மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
இதிலிருந்து 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியாவிற்கு கவலை அளிக்கக் கூடியதாக பார்க்கப்படுகிறது. சீனா அணை கட்டுவவதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் அருணாச்சலப் பிரதேசத்தின் மேல் சபன்சிரி மாவட்டத்தில் 11 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் வகையில் பிரம்மபுத்ரா நதி மீது மிகப் பெரும் அணை கட்டும் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என்று சொல்லப்படுகிறது.
-dt