தேர்தலில் தொடர் வெற்றிகள் தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்-…

தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டின் பேரில், மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக ஆனையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஷ்…

ஏழைகளை நசுக்கும் விலைவாசி உயர்வு- ராகுல் காந்தி வேதனை

நாட்டில் விலைவாசி உயர்ந்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- விலைவாசி உயர்வு என்பது அனைத்து இந்தியர்கள் மீதான வரியாக அமைந்துள்ளது. உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாகவே வரலாறு காணாத விலைவாசி உயர்வு,…

‘ஒரு அணி- ஒரு திட்டம்’: இந்தியா- ஜப்பான் உச்சி மாநாட்டில்…

டெல்லியில் இன்று 14-வது இந்தியா- ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று மதியம் 3.40 மணியளவில் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த ஜப்பான்…

உக்ரைனில் இருந்து வரும் கர்நாடகா மாணவரின் உடல், மருத்துவ படிப்புக்கு…

உக்ரைனின் கார்கிவ் நகரில் நடைபெற்ற சண்டையின்போது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர் நவீனில் உடல் உக்ரைனில் இருந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெங்களூரு விமான நிலையத்துக்கு…

ஜப்பான் பிரதமர் இன்று இந்தியா வருகை- பிரதமர் மோடியுடன் பேச்சு…

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் போர் 24 வது நாளாக தொடரும் நிலையில், மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை, போர் மூலம் ரஷியா இணைத்துக் கொண்டதன் எட்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த பொதுக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.…

தமிழகத்தில் 101 டிகிரியை தாண்டி கொளுத்தும் வெயில்- பொதுமக்கள் கடும்…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.   பெரும்பாலான நகரங்களில் நேற்று வெயிலின் தாக்கம் 101.3 டிகிரியாக கொளுத்தியது. இதனால் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. சாலையில்…

மார்ச் 21ல் உச்சி மாநாடு: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்…

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு வரும் மார்ச் 21ஆம் தேதி நடைபெறுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார். இதையடுத்து வரும் 21-ம் தேதி நடைப்பெறவுள்ள இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும்,…

கொரோனா அலையை திறம்பட கட்டுப்படுத்தியது இந்தியா- மத்திய அரசு பெருமிதம்

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் தூண்டலாம் உலகமெங்கும் கொரோனா அலை பேரலையாக வீசியது. இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டது. ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா எழுச்சியை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து, எந்தவொரு நெருக்கடியும் வராமல் பார்த்துக்கொண்டது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.…

23 மாதங்களுக்கு பிறகு அனுமதி: திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய…

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம்…

சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது பெரிய வெற்றி – முதலமைச்சர்…

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புறங்களிலும், சிரமமான மலைப்பகுதிகளிலும், கடினமான இடங்களிலும் மற்றும் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு இந்த ஆண்டே செய்யலாம்…

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடம்

2022-ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம் மற்றும் எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டன. இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானி சுமார் ரூ.7.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 9-ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர்…

37 சதவீதத்துக்கு அதிகமான குழந்தைகள் தூங்கும்முன் செல்போன் பயன்படுத்துகின்றனர் –…

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்குழந்தைகள் அதிக அளவில் செல்போன்களை பயன்படுத்தத் தொடங்கினர். இதற்கிடையே, குழந்தைகளிடம் செல்போன் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து மத்திய அரசு கணக்கெடுப்பு எதுவும் நடத்தியுள்ளதா? என மாநிலங்களவையில் வைகோ எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய குழந்தைகள்…

2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு காங்கிரஸ் சிறந்த சவாலாக இருக்கும்…

ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக,…

படுதோல்வி எதிரொலி: 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய…

இந்தியாவில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதன் எதிரொலியால், காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், உத்தர…

2022 சர்வதேச சதுரங்க போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு-…

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2022 சர்வதேச சதுரங்க போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன்…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மேலும் 3 வழக்குப்பதிவு செய்தது…

கோவையில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வேலுமணியுடன் கூட்டு…

மத்திய அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என புகார் – மீண்டும்…

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் புதுடெல்லி எல்லைப் பகுதிகளில் கடந்த ஒரு வருடம் சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைமையிலான விவசாய சங்கங்கள் டிராக்டர்களுடன் வந்து போராட்டம் நடத்தின. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. மேலும் விளை…

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு – உடுப்பி, தட்சிண கன்னடாவில்…

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர்.…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததற்கு மக்கள் ஒத்துழைப்பே காரணம்- மருத்துவம்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்…

உத்தர பிரதேசத்தை யோகி ஆதித்யநாத் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார்…

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள யோகி ஆதித்யநாத் டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.…

கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுடன் சேலத்தில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா தொடக்கம்

75-வது சுதந்திர தின பவளவிழாவினையொட்டி, தீரத் தியாகிகளின் வீரப் பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ‘சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா‘ நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில்  ‘சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா‘ நேற்று தொடங்கியது. தொடர்ந்து  19-ந்தேதி வரை ஒரு வாரம் விழா நடைபெறவுள்ளது.…

தேர்தல் வெற்றிக்கு பாஜக அரசு கொடுத்த பரிசு இது… பி.எஃப்.…

2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டுள்ளது. 1977-78-ம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் இப்போது…

மருந்து கடைகளுக்கு தீ வைத்த மருத்துவ மாணவர்கள்- பீகாரில் பதற்றம்

பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்துகள் கடை விற்பனையாளர்களுக்கும்,  மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. இதையடுத்து அங்கிருந்த 4 கடைகள் மீது, மருத்துவ மாணவர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். மருத்துவ கடை ஊழியர்…