ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: கிராம பஞ்சாயத்து தலைவர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அடோரா பகுதியை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர் ஷபீர் அகமது மிர். இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதிய போலீசார் அவரை ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்பு விடுதியில் தங்க வைத்திருந்தனர். ஆனால் போலீசாருக்கு தெரிவிக்காமல் அவர் அங்கிருந்து வெளியேறி தனது…

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 112 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரம் 129-ஆக பதிவாகி இருந்தது. இதன்மூலம், தமிழகத்தில்…

இமாச்சலப் பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி: மறுவாழ்வு…

மார்ச் 3 ஆம் தேதியன்று இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியைச் சேர்ந்த நய்னா தாக்கூர் என்ற 11 வயது சிறுமி சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மார்ச் 7 ஆம் தேதி அச்சிறுமி மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.…

4 மாநில தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி ஒரு வரலாற்று சாதனை…

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 4 மாநில தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் தொண்டர்கள் மத்தியில்…

அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் மாதம் தொடக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான  அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத்…

பேரறிவாளனுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் தற்போது பரோலில் இருக்கிறார். பரோல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட்…

5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின –…

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தல் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. மேலும் நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தீர்மானிப்பதிலும் இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் முக்கிய பங்காற்று உள்ளன. நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில்…

இந்தியர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் – பிரதமர் மோடிக்கு…

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு வாரங்களாகிறது. இதனால் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை அண்டை நாடுகளின் உதவிகளுடன் மத்திய அரசு மீட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.…

கொரோனாவால் முடங்கிய சர்வதேச விமான சேவை: மார்ச் 27-ந் தேதி…

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு நுழைந்தபோது, பாதுகாப்பு நலன் கருதி வெளிநாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்தது. முதல் அலையைத் தொடர்ந்து இரண்டாவது அலையும் தொடர்ந்ததால் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை நீடித்தது. இந்திய அளவில் கடந்த சில நாட்களாக கொரோனா…

லடாக் மோதல் விவகாரம் – இந்திய, சீன ராணுவ அதிகாரிகள்…

புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர் என ரஷ்யா ஊடகமான…

ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி: கிடுகிடு உயரும் சமையல் எண்ணெய் விலை…

சென்னை: உலக அளவில் சமையலுக்கு பயன்படுத் தக்கூடிய சூரியகாந்தி எண்ணெயை உக்ரைன் நாடு அதிகளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது. 80 சதவீதம் எண்ணெய் அந்த நாட்டில் இருந்து இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம் வினியோகிக்கப்படுகிறது. ரஷியா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் தடை…

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக கண்டுகளிக்கலாம்- தொல்லியல் துறை…

மாமல்லபுரம் மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு…

விமானியின் சாதுர்யத்தால்தான் உயிர் பிழைத்தேன்- மம்தா பானர்ஜி பேட்டி

கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் செய்துவிட்டு, கொல்கத்தாவுக்கு திரும்பியபோது அவர் பயணம் செய்த விமானம் திடீரென கடுமையாக குலுங்கியது. இதில், மம்தாவுக்கு உள்காயம் ஏற்பட்டது. எனினும், விமானி சாமர்த்தியமாக விமானத்தை செலுத்தி, கொல்கத்தா நேதாஜி…

மகளிர் தினத்தை கவுரவிக்க ‘டூடுல்’ வெளியிட்டது கூகுள்

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பெண் இனத்தின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு ‘டூடுல்’ வெளியிட்டது. பெண்கள்…

5 சதவீதத்தில் இருந்து ஜி.எஸ்.டி. குறைந்தபட்ச வரி 8 சதவீதமாக…

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்வதற்காக 2022-ம் ஆண்டு வரை இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28…

ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள்…

புதுடெல்லி: 15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்…

மர்மங்கள் நிறைந்த பர்வதமலை.. கடினமான கடப்பாரை நெட்டு பகுதி.. துணைக்கு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் உள்ள பர்வதமலையின் சிறப்புகள் என்ன? திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தென்மகாதேவமங்கலத்தை ஒட்டியுள்ளது பர்வதமலை. இது ஒரு மலை பகுதியாகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளை போன்றே பர்வதமலையும்…

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க 100 பேருந்துகளை வழங்கியது ரஷியா

புதுடெல்லி: உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 10வது நாளாக நீடிக்கும் நிலையில், போர் நடைபெறும் பகுதியில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் 13…

5 மாநில தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெல்லும் – அமித்ஷா…

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் பொது விடுமுறை விடப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் வாரணாசிக்கு உட்பட்ட வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கன்டோன்மெண்ட் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. …

தொடர்ந்து சரியும் கொரோனா தொற்று- தமிழகத்தில் பாதிப்பு 300க்கும் கீழ்…

சென்னை: சென்னையில் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 29 பேருக்கும், செங்கல்பட்டில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த…

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு இனி தாராள அனுமதி- தனிமைப்படுத்தல் இல்லை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அனைத்து இந்திய நகரங்களில் இருந்து செல்வோருக்கும் தாராள அனுமதி வழங்கப்படுகிறது. தனிமைப்படுத்தவும் அவசியம் இல்லை. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலும், கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன. இதனால் பல நாடுகளும் பயண தடைகளை நீக்கி வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை: சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் , குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது…

கடைசி இந்தியரை மீட்கும் வரை ஆபரேஷன் கங்கா திட்டம் தொடரும்…

புதுடெல்லி: ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்து உள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின்…