புதுடெல்லி:
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது
ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பெண் இனத்தின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு ‘டூடுல்’ வெளியிட்டது. பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதை குறிப்பிடும் வகையில் அது அமைந்திருந்தது.
மேலும், சிறப்பு அனிமேஷன் வீடியோவையும் கூகுள் வெளியிட்டது. மகளிர் தினத்தின் வரலாற்று பின்னணி, அதன் முக்கியத்துவம் ஆகியவை அதில் விளக்கப்பட்டு இருந்தன.
Malaimalar