மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
பதற்றத்தை உருவாக்கி வரும் வடகொரியா மீது புதிய திட்டம் தீட்டும்…
தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது ஏதாவது செய்ய வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை இன்றைய தினம் சந்தித்து பேசியுள்ளார். இதன்போதே…
டிரம்பும், புதினும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தொடங்கியுள்ள ஜி 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் அவர்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிகொண்டனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம் பாதிப்படைந்துள்ள…
கட்டார் பிடிவாதம்! எச்சரிக்கும் சவுதி கூட்டணி
கட்டாருக்கு எதிரான புறக்கணிப்பு ஒன்றிற்கு தலைமை வகிக்கும் நான்கு அரபு நாடுகளும், கட்டார் மீதான தடையை விலக்க முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அந்நாடு நிராகரித்துள்ளதை பிராந்திய பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தல் என வர்ணித்துள்ளன. அறிக்கை ஒன்றில், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள்,…
இரண்டாம் உலகப்போரில் நடந்த அட்டூழியம்: வீடியோவை வெளியிட்ட சியோல் நகர…
தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டாம் உலகப்போர் நடந்த போது, ஜப்பான் இராணுவத்தினர் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கடந்த 50-ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே புதிய உறவுகளுக்கான வாய்ப்புக்கள் எழவில்லை. இந்த விடயத்தில் தென்கொரியா அரசு சமாதானமாகப் போனாலும்,…
பிரான்சில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை: அரசு அறிவிப்பு
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு வரும் 2040 ஆம் ஆண்டிற்குள் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகள் சுற்றுச்சுழலுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால், பிரான்ஸ் அரசு…
அபு சய்யாப் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்ட வியட்நாம் மாலுமிகள் தலையில்லாத…
அபு சய்யாப் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்ட இரு வியட்நாம் மாலுமிகளின் தலையில்லாத சடலம் பிலிப்பைன்ஸ் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அபு சய்யாப் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்ட வியட்நாம் மாலுமிகள் தலையில்லாத சடலமாக மணிலா: பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாத இயக்கமான அபு சய்யாப் குழுவினர், அங்கு…
வடகொரியா மீது போர் தொடுப்போம்! மிரட்டும் அமெரிக்கா
வடகொரியா மீது இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளை மீறி, வடகொரியாவின் செயற்பாடு அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் எச்சரிக்கை வெளியாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்தது. இது பிராந்தியம் மற்றும் உலக நாடுகள்…
உலகிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தீவிரமடைந்துள்ளது: அமெரிக்கா
வடகொரியா நேற்று ஜப்பான் கடல் மீது மேற்கொண்ட ஐ சி பி எம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை தொடர்ந்து அடுத்ததாக அலாஸ்காவிற்குகூட ஏவுகணை ஒன்றை ஏவ முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். எனினும், இந்த ஏவுகணையால் அதன் இலக்கை துல்லியமாக…
பிரித்தானியாவில் தீவிரவாதத்தை வளர்க்கும் முக்கிய நாடு இதுதான்: வெளியான தகவல்
பிரித்தானியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்க்க அதிக நிதி உதவி அளிக்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சவுதி அரேபியா என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலானவை அறிந்துகொண்டே இஸ்லாமிய பயங்கரவாதத்தை பிரித்தானியாவில் வளர்ப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதில் சவுதி அரேபியா அதிக…
நடைமுறை சாத்தியமற்றவை: மீண்டும் அடம்பிடிக்கும் கட்டார்
கட்டாருக்கு விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக கட்டார் கடுமையான போக்கை எப்போதும் எடுத்து வந்திருக்கிறது என குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் ஷேக் மொகமது பின் அப்துல்ரகுமான் அல்-தானி, தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் தேச பாதுகாப்பு என்பது கட்டாருக்கு…
அடங்காத வடகொரியா! மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியிருப்பதாக சரவ்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஏவுகணை சோதனை அந்நாட்டின் மேற்குப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜப்பான் கடலில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அந்த ஏவுகணை விழுந்திருக்கலாம்…
உலகளவில் முதன் முதலாக கனடாவில் நிகழ்ந்த அரிய சம்பவம்
கனடா நாட்டில் பிறந்த ஒரு குழந்தைக்கு ஆண் அல்லது பெண் என எதுவும் குறிக்கப்படாமல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது உலகளவில் நிகழ்ந்த முதல் சம்பவமாக பார்க்கப்படுகிறது. பெற்றோருக்கு குழந்தை பிறந்தவுடன் அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என தீர்மானிக்கப்பட்டு உடனடியாக பிறப்பு சான்றிதழில் குறிக்கப்படும். குழந்தை…
மண்டை ஓடுகளால் கோபுரம்: அதிர வைக்கும் காட்சி
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான மனித மண்டை ஓடுகளால் வட்ட வடிவ கோபுரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெக்சிகோ தலைநகரில் பழங்கால Aztec கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட தேடுதலில் 676 மனித மண்டை ஓடுகளாலான கோபுரம் ஒன்றை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மாயன் வம்ச காலகட்டத்தில் நரபலி…
கட்டாருக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவு!
கட்டார் மீதான தடையை நீக்குவதற்கு வளைகுடா நாடுகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவுடன் குறித்த கால அவகாசம் முடிவடைவதாக குறிப்பிடப்படுகின்றது. அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார்…
சுவிஸ் வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள நாடுகள்: டாப் 10…
சுவிற்சர்லாந்து வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகளை சேர்ந்த பல மக்கள் சுவிஸ் வங்கிகளின் கணக்கில் பணம் வைத்துள்ளனர். அப்படி, 2016 இறுதி வரை சுவிஸ் வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள நாடுகளில் பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள பணத்தில்…
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுதந்திரம் கோரி போராட்டம், பாக். ராணுவம், நவாஸ்…
புதுடெல்லி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அடக்கு முறைக்கு எதிராகவும், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டியும் அங்கு போராட்டமும் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையை நீடிக்க செய்ய…
ஒபாமாவின் திட்டத்தை முடக்கும் ட்ரம்ப் : சோகத்தில் மூழ்கியுள்ள திருநங்கைகள்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்களை முடக்கும் முயற்சியில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஈடுப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டம் பராக் ஒபாமாவால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஆறு மாதகாலத்திற்கு ஒத்திவைக்குமாறு டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை…
இனி பொறுமை காக்க முடியாது: வடகொரியா குறித்து டிரம்ப்
வட கொரியா விவகாரத்தில் இனியும் பொறுமையாக இருக்கப் போவதில்லை என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். பின்னர் டிரம்பும், மூன் ஜேவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.…
ஐ.எஸ் பிறப்பிடம் வீழ்ந்தது: ஈராக் அறிவிப்பு
ஈராக்கின் மொசூல் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த புகழ்பெற்ற மசூதியை ராணுவப் படைகள் கைப்பற்றியுள்ளன. 850 ஆண்டுகள் பழமையான க்ராண்ட் அல் நூரி மசூதியிலேயே காலிபேட்களின் தேசம் அமைக்கப்பட்டதாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் பயங்கரவாதிகள் அறிவித்தனர். இந்த மசூதியைக் கைப்பற்றியதன் மூலம் காலிபேட்களின் தேசம் என்ற…
ரசாயன தாக்குதல்: அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டு
சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் மீது பழிசுமத்த அமெரிக்கா முயல்கிறது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனை ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா தெரிவித்துள்ளார். நேற்று மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த மரியா, சிரியாவின் கான் ஷேகுன் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் சிரிய ராணுவம்…
நீருக்குள் மூழ்கிய அமெரிக்க நகரம்! காரணம் என்ன?
TopIsle de Jean Charles என்ற அந்தச் சிறிய தீவு வட அமெரிக்காவின் தென்கிழக்கு லூசியானாவில் உள்ள டெரிபோன் (Terribonne) என்ற இடத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 170 வருடங்களாக Band of Biloxi-Chitimacha-Choctaw Indians எனப்படும் மாநில அங்கீகாரம் பெற்ற பழங்குடி மக்களுக்கு இதுதான் அன்னைபூமி. ஆனால் அவர்களே…
அவர்கள் என்னைச் சுடலாம்! கொலை செய்யலாம் : 8 ஆண்டுகளின்…
இசைத்துறையில் புதுப் புரட்சியை ஏற்படுத்திய மைக்கல் ஜாக்சன் 2009 யூன் 25ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஆனாலும் இன்றுவரை பல்வேறுபட்ட முரண்பாடுகளும், சர்ச்சைகளும் இவரது மரணத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. இவர் மீது பல்வேறு விதமான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு இருந்தாலும் அவை போலியானவை என நிரூபிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், அவருடைய…
வீரமரணமடையும் போராளிகளுக்கு சொர்க்கத்திற்கான பாஸ்போர்ட் வழங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்
சிரியாவின் ரக்கா பகுதியில் போரிட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லாத சொர்க்கத்திற்கான பாஸ்போர்ட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 28, 2017, 10:22 AM ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தலைநகர் என அறிவிக்கப்பட்ட பகுதியாகும் ரக்கா. .ரக்கா பகுதியில் ஆசாத் மற்றும் ரஷ்யா கூட்டுப்படைகளுக்கு எதிராக…


