பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழகத்தையே உலுக்கிய “அன்பானவர்கள்”.. இவர்கள் அசராதவர்கள்.. யாருக்கும் அடங்காதவர்கள்!
சென்னை: கட்டுக் கட்டான கரன்சிகளால் தமிழகத்தையே திணறடித்த இரு "அன்பு" உள்ளங்களாக உருவெடுத்துள்ளனர், கரூர் அன்புநாதனும், மதுரை அன்புச் செழியனும். மதுரையைச் சேர்ந்தவர் அன்புச் செழியன். இவர் சினிமா படங்களுக்கு கடனுதவி செய்து வருகிறார். இவரிடம் ஏராளமான தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர். சிலர் தற்கொலை செய்துள்ளனர்.…
“நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நித்தியானந்தா சாமியார் தான்” தடயவியல் ஆய்வில்…
பெங்களூரு, “நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளில் இருப்பது நித்தியானந்தா சாமியார் தான்” என்று டெல்லியில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் உறுதியாகி உள்ளது. நித்தியானந்தா சாமியார் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்தியானந்தா சாமியார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள்…
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேச்சு: பரூக் அப்துல்லாவின் நாக்கை துண்டித்தால் ரூ.21…
சண்டிகார், காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி பரூக் அப்துல்லா அண்மையில் பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் மூதாதையர் சொத்து அல்ல என்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து தேசிய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின்…
தொடர்ந்து 22 ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சி – எப்படி இருக்கிறது…
நான் ராகுல் காந்தியின் புகைப்படத்தை 18 வயது காஜலிடம் காட்டியபோது, அவர் புகைப்படத்தில் உள்ள நபர் ஹர்திக் பட்டேல் என்றார். காஜல், "எங்களுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நாங்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்குதான் வாக்களித்து வருகிறோம். எங்களுக்கு காங்கிரஸை தெரியாது". என்றார். காஜல் வசிக்கும் டெப்லி காத்வாடா…
பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மருத்துவம் செய்ய தடை விதிக்க கூடாது…
சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வரவேற்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், களைகளை அகற்றும்போது பயிர்களும் பிடுங்கப்படுவதைப் போன்று, போலி மருத்துவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் பாரம்பரிய சித்த…
3 நாள் போராட்டம் தொடங்கியது டெல்லியை உலுக்கிய விவசாயிகள் பேரணி
புதுடெல்லி, விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்குதல், அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பதிலாக ‘உத்தரவாத குறைந்தபட்ச விலை’ நிர்ணயித்தல், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய…
ஹிந்துப் பெண்களை காதலித்தால், இளைஞர்களுக்கு பணம்..! அதிர வைக்கும் பின்னணி..
ஹிந்துப் பெண்களை காதலித்து, அவர்களை மதமாற்றம் செய்வதற்கு, இளைஞர்களுக்கு பணம் தரப்படுகிறது' என, ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஹிந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து, மதமாற்றம் செய்து திருமணம் செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளதாக, பரவலாக…
சபரிமலையில் கேரளா அமைச்சருடன் பெண் சென்றதால் சர்ச்சை- இந்து அமைப்புகள்…
பம்பை: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுடன் 50 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரை அனுமதித்தது சர்ச்சையாகி உள்ளது. கேரளா அமைச்சர் சைலஜா சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தார். அவருடன் 50 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரும் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது.…
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே: நோபல் வென்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட்…
டெல்லி : மோடியின் உயர்மதிப்பு ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற வல்லுநர் ரிச்சர்ட் தாலர் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியால் அறிவிக்கப்பட்டு ஓர் ஆண்டு கடந்துவிட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்…
இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் பற்றிய தகவல்களை வழங்க சுவிட்சர்லாந்து…
பெர்ன், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுவிஸ் வங்கிகளில் பெருமளவு ரகசிய கணக்குகளில் கருப்பு பணம் பதுக்கப்பட்டு வந்துள்ளது. கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு, தாமாகவே இந்தியாவுடன் பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ற…
இலங்கை கடற்படை நடவடிக்கையை முடக்குவதே மீனவர்களுக்கான சரியான தீர்வாக இருக்கும்;…
தூத்துக்குடி, தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர் என கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகிறது. கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேர் இன்று இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது,…
காஷ்மீரில் முதல் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் அறிவிப்பு;…
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜக்குரா ஹஸ்ரத்பால் பகுதியில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் மற்றும் எஸ்பிஓ அதிகாரி என 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் இம்ரான் டாக் வீர மரணம் அடைந்தார்.…
கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்!…
ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும்கூட இது இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் கருநாடகத்தில் நிறைவேற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும். அதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் மட்டுமல்ல, மத்தியிலும் கட்டாயம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்படவும் வேண்டுமல்லவா? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி …
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார்…
சென்னை, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், டிசம்பர் மாதம் 5–ந் தேதி மரணம் அடைந்தார்.…
7 பேரையும் விடுவிக்க உதவுங்கள் – சோனியாவுக்கு நீதிபதி தோமஸ்…
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உட்பட 7 பேரும், மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என்று, இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தோமஸ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர்…
இந்தியாவின் முதலீட்டு தர மதிப்பீட்டை உயர்த்தியது மூடிஸ் நிறுவனம்
சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ், கடத்த 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவின் இறையாண்மை பத்திரத் தரமதிப்பீட்டை அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கோள் காட்டியுள்ள இந்நிறுவனம், நீண்ட கால அடிப்படையில் அவை பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளது.…
இந்துக்கள் பெரும்பான்மை குறைந்தால் நாடு அவ்வளவுதான்.. மத்திய அமைச்சர் பரபர!
போபால்: இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரைதான் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்கள்…
விவசாயிகளின் குரலுக்கு வலுசேருங்கள்… நடிகர் கமல் வேண்டுகோள்
சென்னை: விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சில தினங்களாக களத்துக்கே சென்று மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள கமல், கடந்த சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகப் பகுதிக்கு…
போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளது ஜம்மு…
ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி எஸ்.பி.வெய்ட் செய்தியார்களிடம் கூறியதாவது: போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளது. இந்த வருடம் போதைபொருள் கடத்தல் சட்டப்பிரிவின் கீழ் 667 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 542 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான்…
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு … விசாரணைக்கு உத்தரவிட்டது…
ராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடிக்க வலைகளை விரித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களின் படகுகளை நோக்கி இந்தியக் கடலோர காவல்…
மீனவர்கள் மீது கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர்…
சென்னை, பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 13-ம் தேதி கடலோர காவல்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க பாதுகாப்புத்துறைக்கு அறிவுரை வழங்க…
தனக்காக தனி நாடு உருவாக்கி ராஜாவாக பிரகடனப்படுத்திய தில் இந்தியர்..…
டெல்லி: இந்தியாவை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் தன்னை மனிதர்கள் இல்லாத பகுதி ஒன்றின் ராஜாவாக அறிவித்துக் கொண்டார். மேலும் அவர் ராஜாவாக இருக்க போகும் அந்த நாட்டிற்கு என்று கொடி ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த இடம் சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் இருக்கும் நிலம் ஆகும்.…
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலரின் பரிதாப நிலை? வெளிச்சத்திற்கு வந்த…
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், நாளைடைவில் உலகமே திரும்பி பார்க்க வைக்கும்…























