சண்டிகார்,
காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி பரூக் அப்துல்லா அண்மையில் பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் மூதாதையர் சொத்து அல்ல என்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து தேசிய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின் தலைவர் விரேஷ் சாண்டில்யா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘பரூக் அப்துல்லா நமது நாட்டை அவமதிக்கும் விதத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார். இதேபோல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தாக்கி பேசியுள்ளார். எனவே அவருடைய நாக்கை துண்டிப்பவர்களுக்கு 21 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும். அவருக்கு அளித்து வரும் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு ரத்து செய்து உடனடியாக அவரை கைது செய்யவேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.
இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-dailythanthi.com