ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி எஸ்.பி.வெய்ட் செய்தியார்களிடம் கூறியதாவது:
போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளது. இந்த வருடம் போதைபொருள் கடத்தல் சட்டப்பிரிவின் கீழ் 667 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 542 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நான் பணியில் சேர்ந்த போது போதைபொருளுக்கு எதிராக போரை அறிவித்தேன். மருந்துகள் மூலம் போதைப்பொருட்கள் செலுத்தபடுகின்றன. போலீஸ் மட்டும் இதனை தனியாக எதிர்த்து போராட முடியாது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் மருந்துகள் மூலம் போதைபொருட்கள் செலுத்தப்படுகின்றன.
அதனை இயக்குவது யார் யார் என்று தெளிவாக தெரியவந்துள்ளது. போதை பொருள் அச்சுறுத்தலில் இருந்து எல்லோரும் இணைந்து இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-dailythanthi.com