போபால்: இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரைதான் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்கள் மதவாத கருத்துக்களை அதிகம் கூறி வருகின்றனர்.
தாஜ்மஹால் விவகாரத்திலும் பாஜகவினர் மத ரீதியிலான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்ச கிரிராஜ் சிங் இந்துக்களை முன்வைத்து கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்களால்தான் பாதுகாப்பு
அதாவது இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தெரிவித்துள்ளார். இந்துக்களால்தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதாவது இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தெரிவித்துள்ளார். இந்துக்களால்தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
குறைந்தால் ஆபத்து
இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்துக்கள் பெரும்பான்மை குறையத்தொடங்கும் நாளில் இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பெரும்பான்மை
உத்தர பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் இந்துக்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைய துவங்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த மாவட்டங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்ற அவர், இந்த மாற்றம் நாட்டின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு அச்சுறுத்தலாகும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் அதிகரிப்பு
இந்துக்களின் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ள இடங்களில் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ள வேளையில், பாகிஸ்தானில் பிரிவினைக்கு பிறகு இந்துக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.