பம்பை: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுடன் 50 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரை அனுமதித்தது சர்ச்சையாகி உள்ளது. கேரளா அமைச்சர் சைலஜா சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தார். அவருடன் 50 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரும் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது. கோவில் நடைமுறைகளை மீறி 50 வயதுக்குட்பட்ட பெண்ணை எப்படி திருவாங்கூர் தேவசம் போர்டு அனுமதிக்கலாம்? என இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
இது குறித்து இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பார்கவரம் கூறுகையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. ஆனால் கேரளா அரசோ அனுமதிக்க தொடங்கி இருக்கிறது. இதனை ஏற்கவே முடியாது என்றார்.
என்றுதான் இந்துக்கள் பெண்களை மதித்து சம உரிமை அளிப்பார்களோ– தங்களின் தாயும் பெண் தானே? அறிவியல் காலத்தில் இத்தகைய மூட நம்பிக்கை/எண்ணங்களை தூக்கி எரியாமல் தாலிபான் போல் குருட்டு வாக்குவாதம் தேவை தானா?