திலீபனின் நினைவாலயத்தில் புனிதம் காப்போம் பதாகைகள் அறுக்கப்பட்டுள்ளன!

யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ‘புனிதம் காப்போம்’ என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை இனம் தெரியாத நபர்கள் அறுத்து சென்றுள்ளனர். நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கால பகுதியில் , நினைவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிகள் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால் அப்பகுதியில்…

மகன் உயிருடன் இருக்கிறாரா? தெரியாமலே தேடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள்

''மகனைத் தேடி, போகாத இடமில்லை. காணாமல் போனோர் குறித்து எங்கு கூப்பிட்டாலும் போவேன். எனக்கு எனது மகன் வேண்டும். எனது மகனின் உடல் கிடைக்கவில்லை. மகனுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யவில்லை. என் மகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். மகன் திரும்பி வருவான்'' என்று கூறியபோது…

அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விலை பேச மாட்டோம்: இரா.சம்பந்தன்

“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே மிகவும் முக்கியமானதாகும். எனவே, அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலைபேச மாட்டோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.…

போர் வெறிச்சின்னங்கள் தமிழர்களை வரலாறு முழும் அச்சுறுத்தவா? தீபச்செல்வன்

வடக்கு கிழக்கு நிலரப்பின் எத்தனையோ ஏக்கர் நிலப் பகுதிகளை சுதந்திர இலங்கையின் பின்னர் ஈழத் தமிழர்கள் இழந்துவிட்டனர். இலங்கைத் தீவு முழுவதுமுள்ள, ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு கிழக்கில் எஞ்சியிருந்த தொன்மங்களையும் அழித்து ஒழித்துவிட்டு, அங்கு பெரும்பான்மையின மக்களின் தொன்மங்களை நிறுவும் முயற்சிகளை…

இரகசிய முகாம் இருந்தது கருணாவிற்கு தெரியும்! உண்மையை போட்டுடைத்த சட்டதாரணி

கம்­பகா – படு­வத்­த­வில் இரா­ணு­வத்­தின் இர­க­சிய முகாம் இருந்­தது தமக்­குத் தெரி­யும் என்று இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வின் முன்­னாள் பணிப்­பா­ள­ரான மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­கர தெரி­வித்­துள்­ளார். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஊட­க­வி­ய­லா­ளர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்ட பின்­னர் விடு­விக்­கப்­பட்ட சம்­ப­வம் குறித்து நடத்­தப்­ப­டும்…

இலங்கையில் இரகசிய முகாம்; ஒப்புக்கொண்டார் இராணுவப் புலனாய்வு முன்னாள் பணிப்பாளர்!

படுவத்தை இரகசிய முகாம் – ஒப்புக்கொண்டார் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கம்பகா- படுவத்தவில் சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய முகாம் ஒன்று இருந்தது தமக்குத் தெரியும் என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஒப்புக் கொண்டுள்ளார். 2008ஆம் ஆண்டு மே…

மகா­வலி ‘எல்’ வல­யத்தில் திட்­ட­மிட்ட சிங்­கள குடி­யேற்­றங்கள்: ஆ­தா­ரங்கள் உண்டு!

வடக்கு முல்­லைத்­தீவில் மகா­வலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் திட்­ட­மிட்ட சிங்­கள குடி­யேற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன. இதற்­கான ஆதா­ரங்­கள்­ தன்­னிடம் இருக் கின்­றன என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­திரி பால சிறி­சேன தலை­மையில் நேற்று இடம்­பெற்ற வடக்கு கிழக்கு தொடர்­பான விசேட செய­லணி கூட்­டத்­தில்­க­ருத்து…

தமிழீழம்! மட்டக்களப்பில் ஒரு ஆட்டோவில் பொறிக்கப்பட்ட வாசகம்!

மட்டக்களப்பில் ஆட்டோவில் தமிழீழம் என்ற வாசகத்தை பொறித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர். ஆக்கிரமிப்பு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில், இராணுவப் புலனாய்வாளர்கள் மத்தியில் இவ்வாறு வாசகத்தை பொறித்து ஒரு ஆட்டோவை ஓட்டுவது அவ்வளவு சாதாரணமான விடயமல்ல. அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு உற்சாகத்தையும் பாதுகாப்பையும் அழிப்போம். நாமும் நம்முடைய அடையாளமாக நம்…

ஆக்கிரமிப்பில் நசிகிறது தமிழரின் தாய்வீட்டுச் சொத்துக்கள்!

வடக்கு கிழக்கிலே தமிழரின் பாரம்பரிய பூர்வீகச் சொத்துக்கள் காலம்காலமாக தென்னிலங்கையர்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தாக்கம் அண்மைக்காலத்தில் அதிகரித்த தன்மையினையே நாம் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தமிழரின் பூர்வீக நிலங்கள் சுவீகரிப்பு என்ற பேரில் சூறையாடப்படுவதும் கடல் வளங்கள் அத்துமீறிய ஆக்கிரமிப்பினால் கவரப்படுவதும் அன்றாடம் காணக்கூடிய பிரச்சினையாக…

மன்னாரில் இது வரை மீட்கப்பட்டது102 மனித எச்சங்கள்!

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் புதிய கட்டிடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமை(27) 58ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை மதியத்துடன் நிறுத்தி…

வடக்கு – கிழக்கில் பொது வாக்கெடுப்பு! ஐ.நாவை வலியுறுத்தும் வடக்கு…

இலங்­கை­யில் ஓர் நிலை­யான அர­சி­யல் தீர்­வைக் காண்­பதை நோக்­கா­கக் கொண்டு, தமிழ் மக்­க­ளின் வேண­வா­வைத் தீர்­மா­னிப்­ப­தற்கு, இலங்­கை­யில் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் ஐ.நா. சபை­யின் கண்­கா­ணிப்­பு­டன் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டும். ஐ.நா. சபை­யின் உறுப்பு நாடு­கள் அதற்கு உதவவேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண அரசு, ஐ.நா. சபை­யைக்…

இறப்பதற்கு ஒரு நாள் முன்னரும் புலிகளுக்கு உதவ துடித்த எம்ஜிஆர்.!…

எம்ஜிஆர் அதிமுகவின் நிறுவன தலைவர், கவர்ந்திழுக்கும் நடிகர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர், இலட்சோப லட்சம் ரத்தத்தின் ரத்தத்தங்களின் தலைவன் இவை எல்லாவற்றையும் கடந்து அவர் இன்னமும் எண்ணற்ற ஏழை ; எளியோர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்க காரணம் அவர் சிறந்த மாந்தநேயர். தான் சினிமாவின் மூலம் ஈட்டியதை எண்ணற்றோருக்கு…

தமிழர் இதயபூமியை காக்க அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!

தமிழர் தாயகத்தின் இதய பூமியைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அணிதிரளுமாறு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில், மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் நடைபெறும் நில அபகரிப்பு போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு…

21,000க்கும் மேற்பட்​டோருக்கு நடந்தது என்ன?; கண்டறிவோம் என்கிறார் சாலிய

21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரையில் காணாமலாக்கப்பட்டிருக்கலாம் என, காணாமல் போனோருக்கான அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையே இறுதியானது எனும் முடிவுக்கு வரமுடியாது எனவும் அந்த அலுவலகத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே…

கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தல்! பகிரங்கப்படும் வலையமைப்பு !!

கொழும்பில் வசித்த செல்வந்த தமிழ் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் குடும்பங்களிடம் கப்பம் கோரும் ஒரு வலையமைப்பு எவ்வாறு சிறிலங்கா கடற்படை தலைமையகத்தில் இயங்கியது என்ற அதிர்ச்சி தரவுகள் இப்போது வெளிவருகின்றன. 2008 - 2009 ஆண்டுகளில் கொழும்பு தமிழ் குடும்பங்களிடம் கப்பம் கோருவதை இந்த கடத்தல்…

வன்னிராச்சியத்தின் தலைசிறந்த மன்னன் பண்டாரவன்னியன்! நினைவுநாள் பகிர்வு!!

முல்லைத்தீவுக் கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 215 ஆம் ஆண்டு வெற்றி நாள் இன்று கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், மற்றும் கரைதுரைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன்…

ஈழத்தை ஆப்கானிஸ்தான் ஆக்கும் சிங்கள இராணுவம்!

மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சிங்கள இராணுவக் கரங்கள் கொண்டு எவ்வாறு அடக்கப்பட்டார்களோ அவ்வாறே இன்றும் அடக்கப்பட்ட நிலையில் உள்ளனர் தமிழீழ மக்கள். இன்றைய அரசாங்கம் நல்லிணக்க அரசாங்கம் என்று போலி வேடம் தரித்துக் கொண்டு இராணுவத்தின் கரம் கொண்டு தமிழீழ மக்களை நசித்து அழித்து வருகின்றது. பொதுமக்களின் வாழ்க்கையில்…

வடக்கு, கிழக்கின் மீது கண் வைக்கும் சீனா

சிறிலங்காவில் முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் மீது சீனா கண் வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது. பிராந்திய எரிபொருள் கேந்திரமாக சிறிலங்காவை மாற்றும் இலக்குடன் இந்தியா செயற்படுகிறது. முன்னர் போர் நடந்த பகுதிகளில் ஏற்கனவே முக்கியமான வீடமைப்புத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்திருந்தது. இந்த…

எந்தத் துறைமுகத்தையும் வெளிநாட்டுக்கு விற்கும் எண்ணம் இல்லை – மகிந்த…

சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும், எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கும் அல்லது கைமாற்றம் செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ”சிறிலங்காவில் உள்ள அனைத்து துறைமுகங்களும், துறைமுக அதிகார சபைக்கே சொந்தம். சில துறைமுகங்கள் வெளிநாட்டு முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதுபோல,…

‘தேசிய இனப் பிரச்சினைக்கு 2018க்குள் தீர்வு வேண்டும்’

இந்நாடு எதிர்நோக்கியுள்ள தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு, இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அவ்வாறில்லாவிடின், அபிவிருத்திகளால் எவ்விதப் பிரயோசனமும் இல்லையென்றார். மயிலிட்டித் துறைமுகப் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், மயிலிட்டித்…

வெடுக்குநாரி மலைக்கு வடக்கு அமைச்சர் அனந்தி விஜயம்!

வவுனியா, வெடுக்குநாரி மலைக்கு வடக்கு மாகாண வட மாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்தார். அங்குள்ள சிவன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார். வெடுக்குநாரி மலையில் உள்ள ஆதி…

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் கொடி மற்றும் குண்டுகளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி சாந்தபுரம் 8 ஆம் வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான்…

வடக்கு முதல்வரின் கருத்திற்கு முன்னாள் போராளிகள் கண்டனம்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிவகுமார் ரகுநாத் தெரிவித்துள்ளார். இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து முன்னாள் போராளிகள் தமிழர்களை காட்டிக்கொடுப்பதாக அண்மையில் ஊடகங்களிடம் பேசிய முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே…