பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மஹிந்த காலத்தில் மெளனம்! இப்போது மட்டும் ஏன் தீவிரம்? –…
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் மௌனிகளாக இருந்தோர், இப்போது தீவிரத்தன்மையுடன் பேசுவது ஏன்? அப்படி தீவிரமாகப் பேசுபவர்களின் பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்…
இலங்கை – இந்திய பிரச்சினைக்கு புதிய முறையில் தீர்வினை தேட…
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதை தடுப்பதற்காக இந்தியா நீண்ட 'டோனா' தொழில்நுட்ப படகுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்து வந்த மீனவர் பிரச்சினைக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2000 படகுகளுடனான இந்த தொழில்நுட்பத்திற்காக 16,210 மில்லியன் இந்திய ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன. மூன்று வருடங்களுக்கு…
இயற்கையின் கோர தாண்டவம் – நூற்றுக்கு மேற்பட்டோர் பலி –…
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளை 230 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் , 53000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலம்
சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை பட்டிருப்பில் இருந்தும் சித்தாண்டியில் இருந்தும் இரு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலகங்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் பொது…
சிங்கள இளைஞர்கள் ஆவேசம்! எது வேண்டுமானாலும் நடக்கலாம் என எச்சரிக்கை
சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஆவேசமாக இருக்கின்றனர். இனிமேல் என்ன நடக்கும் என்பது தெரியாது என பொதுபல சேனாவின் ஜபுரேவல சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் நேற்று இடம் பெற்ற ஊர்வலத்தின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர்…
தமிழ் – முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளுக்கு தீ வைப்பு –…
கஹாவத்தை நகரில் அமைந்துள்ள இரு கடைகள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைத்தொகுதியே இவ்வாறு இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளது. கட்டட நிர்மாணிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் நான்கு மாடி கட்டடம் மற்றும் அதற்கு அருகில் இருந்த சில்லறை கடையுமே இவ்வாறு தீ…
நாட்டில் சமாதானமாக வாழமுடியுமா என்ற அச்சம் உருவாகியிருக்கிறது: சம்பந்தன்
இனவாதத்தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக தலைதூக்கியுள்ள அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும்…
100ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கான கலந்துரையாடல்
கிளிநொச்சியில் தீர்வின்றி தொடரும் காணாமற்போனவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 100ஆவது நாளை எட்டவுள்ளது. இந்த நிலையில், வவுனியாவிலுள்ள சங்கங்கள், பொது அமைப்புக்கள் தமது ஆதரவினை வழங்குவது தொடர்பான ஒரு கலந்துரையாடல் வாடி வீடு மண்டபத்தில் நாளை (24) மாலை 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இதில் வவுனியா மாவட்டத்திலுள்ள…
பளை துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி! களத்தில் இறக்கப்பட்ட இராணுவம், பொலிஸ்…
பளை சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் குழுக்களும், இராணுவமும் விசாரணைகளை நடத்தி வருகின்றது என்றும், விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று எம்.பிக்களின் மேலதிக கேள்வி நேரத்தில், "அண்மையில் முகமாலை, பளை…
வடபகுதியில் பாதுகாப்பு தீவிரம்! தயார் நிலையில் விசேட அதிரடி படையினர்
வட பகுதியின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் அதிகாரிகளை தயார் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய இராணுவ நிகழ்வின் போது, பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்…
மீண்டும் தயாராகி விட்டதாக கூறும் விடுதலைப்புலிகள்? புலனாய்வுத் துறையின் எச்சரிக்கை!!
நாம் மீண்டும் தயார் என்ற செய்தியினை விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் துணைத்தலைவர் ஜயன்த சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர், நாட்டில் தொடர்ந்தும் இராணுவ வீரர்களும், புலனாய்வுப் பிரிவினரும் கைது செய்யப்பட்டுக்…
புலிகள் ‘அப்பா’ என அழைத்தவர் டெல்லியில் முகாமிட்டார்!! விரைவில் மைத்திரி…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சிக்குள் ஸ்திரமான நிலை இருந்தாலும், வெளியில் ஸ்திரமற்ற நிலைமை காணப்படுவது தொடர்பிலும் இவ்வாரம் லங்காசியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், 1950களில் தமிழர்களின் எல்லைப்பகுதிகளில் காணிகளை வாங்கி குடியேற்றங்களை தடுப்பதற்கான முயற்சியில் தாமாகவே ஈடுபட்டிருந்த…
சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து எட்டு…
சிறிலங்காவில் நடந்து முடிந்த முடிந்த குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் எட்டாவது ஆண்டு கடந்த வெள்ளியன்று நிறைவடைந்தது. இந்த யுத்தத்தின் போது காணாமற் போன உறவுகளை இவர்களின் குடும்பத்தவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது,…
பிறந்தநாளில் கேக் வெட்ட மைத்திரியை அழைக்கும் தமிழ் தலைமைகள்! மக்களை…
கிளிநொச்சி-இரணைதீவு பூர்விக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று (21) அங்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, ஊடகங்களிற்கு…
நான் புலியல்ல விட்டு விடுங்கள் : அடக்கப்படும் தமிழர்களும் மறைக்கப்படும்…
“புலிகளுக்கும், எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, என்னை விட்டு விடுங்கள்... ” இந்த வார்த்தைகள், கதறல்களாகவே காணப்பட்டது அன்றொரு நாள். ஆனால் இன்றும் இந்தக் கதறல்கள் தொடரக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமாக காணப்படுகின்றது என்பதும் மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டு வரும் ஓர் செய்தி. காரணம்…
இராணுவத்தை பிரித்து 9 மாகாணங்களிலும் சமமாக நிறுத்துங்கள்! ஜனாதிபதியிடம் வடக்கு…
வடக்கிலுள்ள இராணுவத்தை எங்கே கொண்டு செல்வது என்பது தான் பிரச்சினையென்றால்முழு இராணுவத்தையும் ஒன்பதாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஒவ்வொருமாகாணத்திலும் நிறுத்துங்கள். எல்லா மாகாணத்திலும் சரிசமமாக இராணுவத்தைநிறுத்துவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்,வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன், வடமாகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த…
ROHYPNOL என்ற மாத்திரை மூலமாக தமிழ் சமூகத்தை அழிக்க புதிய…
வடக்கு கிழக்கின் தமிழ் பகுதிகளில் புதிதாக Rohypnol என்ற மாத்திரை அதிகமாக புழக்கத்தில் உள்ளதாம். இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. தென்பகுதியில் இருந்து பெருமளவு வடக்கு நோக்கி பெரும்பான்மை முகவர்கள் ஊடாக குறித்த மாத்திரை கொண்டு…
காணாமல் போனதாகக் கூறப்பட்ட முன்னாள் போராளிகள் கொல்லப்பட்டதாக தகவல்
காணாமல் போனதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் போரில் கொல்லப்பட்டமை நிரூபணமாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரச படையினரால் காணாமல் போகச் செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் போரில் உயிரிழந்துள்ளனர். எட்டு ஆண்டுகளின் பின்னர் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது என…
ஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும்:…
நாட்டின் ஆட்சி முறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நிரந்தர சமாதானமும் சமத்துவமும் ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் திடலில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…
பிரபாகரன் படை எங்கே போனது? காரணம் இன்றி யாழில் குவிக்கப்பட்ட…
நாட்டில் இனவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. நல்லிணக்க நாடாக இலங்கையை மாற்றுவோம் என்பதே இப்போதைய அரசின் குறிக்கோளாக காணப்படுகின்றது. என்றாலும் உண்மையில் இன்று இலங்கை நல்லிணக்கத்திற்காக பாடு படுகின்றதா? இனவாதமும் தமிழர் அடக்கு முறைகளும் முற்றாக ஒடுக்கப்பட்டு விட்டதா என்ற கேள்விகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆட்சி மாற்றம்…
சிங்கள இராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!
முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும் தமது கூர்மையான இராஜதந்திரத்தை, புத்தர் ஞானம் பெற்ற பெளர்ணமி தினத்திலும் சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தி இருக்கிறார்கள். சர்வதேச பெளத்த வெசாக் தின நிகழ்வுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட இலங்கைப் பயணத்தின்போது சிங்கள ஆட்சியாளர்கள் வடிவமைத்த காட்சிகள் ஒவ்வொன்றும் அரசியல் அர்த்தங்கள்…
மைத்திரி, ரணில் – சந்திரிகா அரசாங்கம் எல்லாமே இனவாத குட்டையில்…
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதும், சுயநிர்ண உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டிக் கொள்வது மட்டுமே அமைய முடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.…
பொறுப்புக் கூறும் செயல்முறையை இலங்கை அரசு உருவாக்க வேண்டும்! கனேடியப்…
நம்பகத்தன்மையும் வழங்கக்கூடிய பொறுப்புக்கூறும் செயல்முறை ஒன்றை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என கனேடியப் பிரதமர் ரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்…
