மைத்திரியை சந்தித்த விக்னேஸ்வரன்! பேசப்பட்ட விடயங்கள் இவை தான்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பு குறித்து வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 02.04.2017 அன்று மக்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமாக காணாமற் போனோர் பற்றியும் காணிகள் திரும்பவும் உரித்தாளர்களுக்குக் கையளிப்பது பற்றியும் வேலையற்ற பட்டதாரிகள் சம்பந்தமாகவும்…

பிரான்ஸ் செல்லும் நோக்கில் வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்…

ஆழ் கடலில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும், சீருடைகளையும் கொண்டு சேர்க்கும் பணிகளின் பிரதான நபராக செயற்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் அருமைநாயகம் பிருசோத்தனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் ட்ரோலர் பிரதானிகளில் ஒருவரான இம்ரான் பாண்டியன் சிறப்பு படையணியில் கடாபியிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படுகின்றது. இவர்…

ஆனது 8 ஆண்டுகள்… எங்கே பாலகுமாரன், யோகி, புதுவை ரத்தினதுரை……

சென்னை: ஈழத்தில் இன அழிப்புப் போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன... ஆனால் அன்று வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த மூத்த தலைவர்கள் பாலகுமாரன், பேபி சுப்பிரமணியம், யோகி, புதுவை ரத்தினதுரை ஆகியோரது கதிதான் என்னவென இதுவரை தெரியவில்லை... 8 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்…

நாடாண்ட தமிழர் ரத்தத்தில் செங்கடலாகிப் போன முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும்!

இப்படித்தான் நாளேடுகள் நாளை எழுதும்... எழுத வேண்டும் என தாயக விடுதலைக் கனவுடன் தம்மையே தாரைவார்த்துக் கொடுத்தவர்கள்தான் இலங்கை தீவின் வடக்கு கிழக்கு வாழ் பூர்வகுடி தமிழர்கள். தமிழர் பெருமையை இன்றும் பேசும் சங்கப்பாடல்கள் குறிப்பிடும் ஈழம்தான் அந்த வடக்கு கிழக்கு. ஈழத்தையும் சிங்களத்தையும் இணைத்துவிட்டுப் போனான் ஆங்கிலேயன். அன்றிலிருந்து ஆண்ட…

இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது

இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி நடைபெற்றவுள்ள நிலையில் தமிழ் மக்கள் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின்…

பிரபாகரனின் மைத்துனரை கைது செய்யுமாறு கோரிக்கை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மைத்துனரான வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், விடுதலைப் புலிகளுக்கான நினைவேந்தல் என்ற வார்த்தையை தடை செய்ய வேண்டும் என்றும் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில்…

முள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பெயர்கள்? பொலிஸாரின் விசாரணையில் அருட்தந்தை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை முல்லைத்தீவு பொலிஸார்விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அருட்தந்தை இன்று (08) இரவு எட்டு மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸாரினால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக நினைவு…

சிறிலங்காவின் கூட்டு ஆட்சி தொடர இந்தியா உதவ வேண்டும்- மோடியிடம்…

சிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தவதற்கு இந்தியாவின் உதவி தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், வெள்ளிக்கிழமை மாலை நடந்த சந்திப்புத்…

‘அரசாங்கத்தை மிரட்டிச் சாதியுங்கள்’; த.தே.கூ.வுக்கு சங்கரி ஆலோசனை!

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு, “கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை என்றால், பதவிகளை தூக்கி எறிவோம் அல்லது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்று மிரட்டி காரியங்களைக் சாதியுங்கள்” என்றும் அவர்…

யாழில் உருவாகும் மிகப் பெரிய புத்த விகாரை

யாழ். நாவற்குழி பகுதியில் பலகோடி ரூபா செலவில் மிகப் பெரிய புத்த விகாரை ஒன்று அமைப்பதற்கான பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த புத்த விகாரைக்கான அடிக்கல்லினை 523ஆவது படைப்பிரிவின் தளபதி நேற்று நாட்டி வைத்தார். இறுதி யுத்தத்தின் பின்னரான 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையில்…

குடும்பிமலை முருகன் ஆலயத்திற்குச் செல்ல தடை! தலையிட்ட பிரிகேடியர்

மட்டக்களப்பு கிரான் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குடும்பிமலை முருகன் ஆலயத்துக்குச் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதாக குறித்த பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாலயத்தில், வருடாந்தம் பிரதேச மக்களால் திருவிழா மேற்கொள்ளப்படுவது வழமை. இம்முறை அங்கு திருவிழா மேற்கொள்ளச் சென்ற மக்களுக்கு, குடும்பிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இராணுவ…

வடகிழக்கின் இனப்படுகொலை நாளாக மே 18 ஐ பிரகடணப்படுத்த வேண்டும்!

வடகிழக்கு தாயக பூமியின் இனப்படுகொலை நாளாக மே 18ம் திகதியை பிரகடணப்படுத்தி அன்றைய தினம் வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான துக்க தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டுமென சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றிலேயே…

மஹிந்தவை கடுமையாக எச்சரித்த மோடி!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி விசேட கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதற்கமைய கடந்த 11ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய பிரதமர் சந்தித்துப் பேசியிருந்தார். இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சிறிய நேர சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு,…

வடக்கு முதலமைச்சருடன் அமெரிக்க பிரதிநிதி விசேட சந்திப்பு

அமெரிக்க காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் வில் ஜோன்சன் மற்றும் வட மாகாண முதலமைச்சர சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. வட மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த சந்திப்பின்…

மோடியுடன் கூட்டமைப்பு என்ன பேசியது – சுமந்திரன் கூறுகிறார்

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டதாகவும் தாமதமானது குறித்து இந்திய பிரதமருடன் கலந்துரையாடியதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.…

கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் சம்பந்தன்! கட்டுநாயக்காவில் மோடி சொன்னது

உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச வெசாக் தின விழாவில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்வுகளிலும் கலந்து…

அதிகாரப் பகிர்வு விபரங்களை வெளியிடுமாறு ஐ.நா இலங்கை அரசிடம் கோரிக்கை

அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெளிவாக குறிப்பிட வேண்டுமெனஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி ஐக்கிய நாடுகள்…

மோடியின் வருகையில் வெளிவந்த உண்மையும்! போலி நாடக சுவாரசியமும்!

அரசுக்காக மக்களா? மக்களுக்காக அரசா? என்ற சந்தேகம் எப்போதும் மிகப்பெரிய கேள்வியாகவே இருந்து வருகின்றது. இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்திப் போனது மோடியின் வருகை. இந்தியப் பிரதமர் மோடியின் வருகை குறித்து தடபுடல் வரவேற்புகளும், விமர்சனங்களுமே தற்போதைய நிலையில் அதிகமாக காணப்பட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சர்வதேசத்தில்…

எப்பொழுதும் தமிழர் பக்கம் இந்தியா இருக்கும்! மோடி

நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று மாலை இடம் பெற்ற சந்திப்பின்…

நள்ளிரவில் மோடியை சந்தித்த மகிந்தவும் கோத்தபாயவும்! பேசிய விடயம் இது…

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமான வகையில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…

சீன நீர்முழ்கி கப்பலுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை: சிக்கலான விவகாரம்

சீனாவுக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சீன அரசு அதற்கு சொந்தமான நீர்முழ்கி கப்பலை அடுத்த வாரம் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரி…

யார் கொலையாளி? மகிந்தவா, மோடியா : நாமல் எம்.பி கேள்வி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலையாளி என கூறியவர்களே இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தயாராகிகொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து, நிரந்தர சமாதானத்தை கொண்டுவந்த மகிந்த ராஜபக்‌ச தமிழ் அப்பாவி மக்களை கொன்றதாக சர்வதேசம் சென்று சிலர்…

மோடியின் விஜயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாழ்வில் திருப்பு முனையாக…

கௌதம புத்தரினால் பரப்பப்பட்ட புத்த சமயத்தின் வெசாக்தினத்தையும் இந்தியாவின் பிரதமர் மோடியின் விஜயமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைய நல்லாட்சி அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஸ்கரா அறிக்கை…