பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வடமாகாண முதலமைச்சரிடம் மன்னிப்புக் கேட்கும் வேலையற்ற பட்டதாரிகள்
வடமாகாண முதலமைச்சரின் மனம் உளைச்சலுக்குள்ளாகும் படி நாங்கள் செயற்பட்டிருந்தால் அவரிடம் மன்னிப்புக் கோருவதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். வடமாகாண சபையின் முன்பாக நேற்று வேலையற்ற பட்டதாரிகள், வடமாகாண முதலமைச்சரைச் சபை வளாகத்திற்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்திப் போராட்டம் மேற்கொண்டனர். இதன் போது வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சருடன்…
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் ஜனாதிபதி – பிரதமர் அலுவலகங்களின் முன்னால்…
“வேலையற்ற பட்டதாரிகளின் அரச வேலைக்கான போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி அலுகலகத்தின் முன்னரோ பிரதமர் அலுவலகத்தின் முன்னரோ தான் நடைபெற வேண்டும். வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் (மாகாண சபை) வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. வேலை பெற்றவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் போகும் மத்திய அரசாங்கமே அதைச் செய்யவேண்டும்.”…
அதட்டலாக உத்தரவாதம் தருமாறு கோரினார்கள்! வடக்கு முதலமைச்சர்
கிழக்கு மாகாணத்தில் 4000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வழங்கிவிட்டார். எமக்கு வேலை கிடைக்கவில்லை என்ற ரீதியில் வடமாகாண பட்டதாரிகள் என்னிடம் குறைபட்டுக் கொண்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று(09) வடமாகாண சபைக்கு முன்பாக மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது வடமாகாணசபை…
தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது! சர்வதேச நீதிபதிகள் தேவை: சந்திரிக்கா
யுத்த குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவற்றுக்கான காரியாலயத்தில் இன்று(9) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்…
கூட்டமைப்பில் வலுவடையும் கருத்து வேறுபாடுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்களை அடுத்து, கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் வலுவடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது பொதுமக்களால் தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பாக, கடந்தவாரம் நடந்த கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும்…
புலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியின் பின்னணியில் யார்?
ஆட்சிக் கவிழ்ப்பு கதைகளோடு சேர்த்து தற்போது அதிகமாக வெளிவரும் செய்திகள் விடுதலைப்புலிகள் தொடர்புபட்டவையே. இலங்கை இறுதியுத்தத்தின் போது தப்பிச் சென்ற முக்கியத் தலைவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தற்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பி வருவதாக சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதாவது இறந்து போனதாக கூறப்பட்ட…
வடக்கு முதலமைச்சர் ஒருபோதும் பிரிந்து சென்று செயற்பட எண்ணியதில்லை! சிறீதரன்…
வடக்கு முதலமைச்சர் ஒருபோதும் பிரிந்து சென்று செயற்பட எண்ணியதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் நேர்மையானவர். அவர் சத்தியம் தவறாதவர். இறை நம்பிக்கை கொண்டவர். நான் அவர் மீது அதீதமான நம்பிக்கை வைத்துள்ளேன். அதற்காக நான் பல விமர்சனங்களை எங்கள்…
தமிழ் மக்களை பொறுத்தவரை முன்னைய ஆட்சி நல்லாட்சி எனும் வேறுபாடில்லை…
தமிழ் மக்களை பொறுத்தவரை எல்லாம் ஒரே ஆட்சிதான் இங்கு முன்னைய ஆட்சி நல்லாட்சி என்ற வேறுபாடில்லை எல்லா ஆட்சியிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஒரே மாதிரியே அனுகப்படுகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்தும் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை இரணைமாதாநகரில் ஏழாவது…
முன்னாள் போராளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
மட்டக்களப்பு செங்கலடியில் முன்னாள் போராளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோகேந்திரன் ரமணி என்ற ஆறு வயது குழந்தையின் தாய் ஒருவரே நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்ளனர்.…
புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் முயற்சிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்கும் அபாயம்: சம்பந்தன்
புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணிகளில் அரசாங்கம் இழுத்தடிப்பினை செய்து வந்த நிலையில், இப்போது அந்தப் பணிகளிலிருந்தும் பின்வாங்கும் நிலை காணப்படுவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள்…
சிறிலங்காவில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளில் இந்தியாவுக்கு உள்ள கடப்பாடுகள் – ‘தி…
கடந்த வாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு தனது மூன்றாவது பயணத்தை மேற்கொண்ட போது, புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பானது ஜனவரி 2015ல் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பானது மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது என்பதற்கான…
வடபகுதி மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம்: அரசுக்கு…
இந்தியப் படகுகளால் நாசமாக்கப்பட்டுள்ள வடபகுதி மீனவர்களின் பல கோடி ரூபா பெறுமதியான கடற் தொழில் உபகரணங்களுக்கான இழப்பீடுகளை யார் வழங்குவது என்பது தொடர்பாக உரிய பதில் கூற வேண்டும் என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் மொகமட்ஆலம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (06) பிற்பகல்-02.30 மணி முதல்…
இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள்! அச்சத்தில் இந்தியா, இலங்கை
இறுதிக்கட்ட போரின் போது வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தற்போது இலங்கை வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் புலனாய்வு மற்றும் ஆயுத படை தலைவர்கள் உட்பட புலி உறுப்பினர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகை தருவதாக இந்திய உளவுத்துறை,…
அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து! சம்பந்தன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு…
“இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும்” – மனோ கணேசன்
இலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசும் ஒரு பங்குதாரராக உள்ளதால், அந்தக் கடப்பாட்டிலிருந்து நழுவிவிட முடியாது…
இளம்பருதி, ராஜா உள்ளிட்டவர்கள் படையினரிடமே சரணடைந்தார்கள்! சபையில் ஆதங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்பாளராக இருந்த ராஜா தனது மூன்று பிள்ளைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இளம்பருதியும் தமது பிள்ளைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த…
புலிகளுக்கு நரிகள் தலைமை தாங்குவதா? தமிழரசுக் கட்சியிடம் முன்னாள் போராளிகள்…
புலிகளுக்கு நரிகள் தலைமை தாங்க நினைப்பது வேடிக்கையானது என ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். தமிழர் அரசியல் அரங்கில் போராளிகளது அரசியல் பிரவேசம் தொடர்பில் நாம் கூட்டமைப்பை சந்தித்தபோது நாங்கள் உங்களுக்கு பயங்கரவாதிகளாக தெரிந்தோம். ஆனால் இன்று போராளிகளை தமிழரசு கட்சியின் ஊடாக அரசியல் மயப்படுத்துவதாக அறிவித்திருப்பது உங்களது…
இலங்கைக்கு அழுத்தம்? அமெரிக்கப் பிரதிநிதி இலங்கை செல்கிறார்!
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் பில் ஜோன்சன் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். வொஷிங்டனில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் பில் ஜோன்சனுக்கும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின் பின்னர் அமெரிக்காவிற்கான…
வவுனியாவில் நால்வர் மரணம் : அச்சத்தில் மக்கள்
வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தட்டான்குளம் கிராமத்தில் கடந்த 45 நாட்களுக்குள் சிறுநீரக நோயினால் நால்வர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே சிறுநீரக நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அந்த பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யுத்தம்…
சுவாமி விபுலானந்தர் தொடர்பில் மறைந்து கிடக்கும் உண்மைகள்!
சுவாமி விபுலானந்தர் தொடர்பிலான ஆய்வுகள், மறைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள், அவர் தொடர்பிலான யதார்த்த சிந்தனைகள் மீளமைக்கப்பட்டு இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் தெரிவித்துள்ளார். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு இன்று (03)…
தாயகத்தை மீட்டெடுக்க விரும்பும் கனேடிய தமிழர்கள்!
இலங்கையில் 30 வருடங்களாக நீடித்த போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், தாயகத்தை மறுசீரமைப்பு செய்வதில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக உள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொரான்டோவை தளமாக கொண்ட தமிழ் வர்த்தகர்கள், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை…
ஆனந்தபுரத்தில் தங்கப் புதையல் அகழ்வு பணிகள் ஆரம்பம்
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாகப் பிரிவினர் ஆனந்தபுரப் பகுதியில் புதைத்து வைத்ததாக கூறப்படும் தங்க நகைகளை அகழ்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று(3) பிற்பகல் குறித்த பகுதியில் பொலிஸார் அகழ்வு பணிகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்ற…
கேணல் ரமேஷை கொல்ல கட்டளை பிறப்பித்த நபர் யார் ?…
மே 18 முள்ளிவாய்க்கால் தினம் நெருங்கும் வேளையில், இன்னும் அவிழ்க்கப்படாத பல மர்ம முடிச்சுகள் இருக்கிறது. கிழக்கில் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த வேளைகளில் அவரோடு நின்று செயல்பட்ட ஒரு நபர். தற்போது அப்புரூவராக மாறியுள்ளார். அவர் தனது சாட்சியங்களை பதிவு செய்து வரும் நிலையில்,…
