சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 9 பேர் பலி,…

பெய்ஜிங், சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் இருந்த போலீசார்…

சீனாவில் ஒருகுழந்தை திட்டம் விரைவில் முடிகிறது..

முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டை பெருக்க ஒருகுழந்தை திட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சீனா முடிவு செய்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கு வளர்ந்து வந்த மக்கள் தொகை…

மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்திய ரஷியா..

3 லட்சம் ராணுவ வீரர்கள், நவீன தளவாடங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக ரஷியா மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தியுள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் அதிபருக்கு ஆதரவாக போரிடும் ரஷியா கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகின்றது. போரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்கா, ஐரோப்பிய…

ரஷ்ய முன்னாள் உளவாளி, மகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்?…

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது நச்சு ரசாயன தாக்குல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ரஷ்யர்களும் சிவிலியன்கள் என்றும், கிரிமினல்கள் அல்ல என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகிறார். அந்த சந்தேக நபர்களின் பெயர்கள் அலெக்ஸாண்டர் பெட்ரோவ் மற்றும் ருஷ்லன் போஷிரோவ்…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்தல்

அமெரிக்கர்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்களை கொடுமை செய்தது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்களை விசாரிக்க நீதிமன்றம் யோசனை செய்து வருகிறது. இந்த நீதிமன்றம் "சட்டவிரோதமானது" என்றும் "எங்கள் குடிமக்களை பாதுகாக்க எதுவேண்டுமானலும்…

இன்னொரு அமெரிக்க – வட கொரிய உச்சி மாநாடு: கிம்…

வரலாற்று முக்கியத்துவமிக்க அமெரிக்க - வட கொரிய உச்சி மாநாட்டை தொடர்ந்து இன்னுமோர் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இன்னுமொரு சந்திப்புக்கு தாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டுவருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த "அன்பான" கடிதம்,…

குடியேறிகள் நெருக்கடி: பலருக்கும் கல்லறையாகும் லிபியாவின் கடல்

இந்த மாத தொடக்கத்தில் லிபிய கடலில் படகு உடைந்து மூழ்கியதில் 100க்கு மேலானோர் இறந்தனர் என உதவி முகமை ஒன்று தெரிவிக்கிறது. செப்டம்பர் முதல் நாள் பயணத்தை தொடங்கிய 2 ரப்பர் படகுகளில் ஒன்று பஞ்சராகி, முழ்கிவிட்டதாக 'மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டீர்ஸ்' (எம்எஸ்ஃஎப்) நிறுவனம் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பிய…

கிம் ஜாங் அன்னை பாராட்டி டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்

வாஷிங்டன் : வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ந் தேதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும். இந்த…

ஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் அலிபாபா தலைவர் ஜாக் மா

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஜாக் மா அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலக போவதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் எப்போது…

பாரிஸில் கத்தியை கொண்டு தாக்குதல்: 7 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கத்தி மற்றும் இரும்பு கம்பி கொண்டு ஒருவர் தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் அதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என பாரிஸ் நகர போலீஸார்தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டார். இது பயங்கரவாத நடவடிக்கை இல்லை…

ஏமன் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது..

ஜெனிவா நகரில் நடைபெற்ற ஏமன் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் மறுத்து விட்டதால் ஐ.நா.சபையின் இந்த முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது. ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர்…

ஏமன்: படையினருக்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் ஒரே நாளில் 84…

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் ஏமன் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் 84 பேர் உயிரிழந்தனர்.   ஏமன் நாட்டில் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி…

வட கொரியா: கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இல்லாத அணிவகுப்பு

தனது 70ஆவது ஆண்டை குறிக்கும் விதமாக வட கொரிய மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்த, அதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை காட்சியில் வைக்கப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. அதிபர் கிம் ஜாங்-உன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினாரா இல்லையா என்பதும் தெளிவாக தெரியவில்லை. வட கொரியாவின் ஆயுத கிடங்குகள் குறித்தும், கொரிய தீபகற்பத்தில்…

திருடப்பட்ட 2 சிலைகள் அருங்காட்சியகங்களில் மீட்பு, இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

வாஷிங்டன், தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமி சிலைகள் திருடப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. தமிழகத்தில் சிலை திருட்டு தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிலைகளும் மீட்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டு நாட்டிற்கு திரும்ப கொண்டுவர அரசு நடவடிக்கை…

இந்தோனேசியா: பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலி

பாண்டூங்,  இந்தோனேசியாவின் முக்கியமான தீவுகளில் ஒன்றான ஜாவா தீவில், சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஜாவா தீவில் சுகாபூமி மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்கு செல்வதற்காக, தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு…

எகிப்து: போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை

எகிப்தில் 2013ஆம் ஆண்டு அதிபராக இருந்த மொஹமத் மொர்ஸி நீக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் மீதான வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 75 பேருக்கு மரண தண்டனையும் 47 பேருக்கு ஆயுள் தண்டனையையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த…

எந்த நாட்டுடனும் பாகிஸ்தான் போரில் ஈடுபடாது – இம்ரான்கான்

ராவல்பிண்டி, பாகிஸ்தான்ராணுவ தலைமையகத்தில் நடந்த ராணுவ மற்றும் தியாகிகள் தின விழாவில் பேசிய இம்ரான் கான், என்னுடைய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் திறனையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவரும் என்று கூறியுள்ளார். போர் என்பது கூடாது என்பதே என்னுடைய வலியுறுத்தலாகும். எதிர்காலத்தில் பாகிஸ்தான் எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடாது. பாகிஸ்தானின் வெளிநாட்டு கொள்கை…

மெக்சிகோ: ஒரே இடத்தில் புதைத்த 166 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டது

மெக்சிகோ சிட்டி: ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது. இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தாக்குதல்களால் ஒருவரை மற்றவர் பழிதீர்த்து வருகின்றனர். இதுதவிர, அபினி செடிகளை வளர்ப்பதிலும், வெளிநாட்டு…

பாகிஸ்தான் 5-வது பெரிய அணுசக்தி நாடாக மாறிவிடும்!

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டில் ‘பாகிஸ்தானிய அணு ஆயுதங்கள் - 2018’ என்ற தலைப்பில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், ராபர்ட் நோரீஸ், ஜூலியா டயாமண்ட் ஆகிய 3 பேர் ஒரு அறிக்கை தயாரித்து உள்ளனர். இவர்களில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் இயக்குனர் ஆவார். அவர்கள் தயாரித்து உள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில்…

பிரான்ஸ் அரசால் புலம்பெயர் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

எப்படியாவது பிரித்தானியாவுக்கு சென்றுவிடவேண்டும் என்ற நோக்கத்தில் காத்திருந்த 500 அகதிகளை பிரான்ஸ் பொலிசார் முகாம் ஒன்றிலிருந்து அப்புறப்படுத்தினர். ஆங்கிலக் கால்வாய் ஓரமாக Dunkirk பகுதியில் எப்படியாவது லொறிகளிலோ அல்லது படகுகளிலோ ஏறி பிரித்தானியாவுக்கு சென்று விட வேண்டும் என்ற ஆசையில் காத்திருந்த சுமார் 500 அகதிகளை பொலிசார் அங்கிருந்து…

டிரம்பிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முயற்சி?

அதிபர் டிரம்பின் மோசமாக நாட்டங்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க அதிபரின் திட்டத்தில் இருக்கும் சில பகுதிகளை முடக்குவதற்கு நிர்வாக உறுப்பினர்கள் பணியாற்றி வருவதாக டிரம்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப்பின் "இரக்கமற்ற தன்மை" மற்றும் "தொலைநோக்கில்லாத செயல்பாடு" ஆகியவை தவறான தகவல்களுக்கும், பொறுப்பற்ற முடிவுகளுக்கும் வழிவகுத்தன…

ஆஃப்கன் குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலி

ஆஃப்கன் தலைநகர் காபூலில் உள்ள மல்யுத்த கிளப் ஒன்றில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலி ஆகியுள்ளனர் மற்றும் 70 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். முதலில் ஒரு தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்க செய்ததில் நான்கு பேர் பலியாகினர்.…

இட்லிப் மாகணத்தில் வான் தாக்குதல் நடத்தியதை ரஷ்யா ஒப்புக்கொண்டது

சிரியாவின் இட்லிப் பகுதியை இலக்கு வைத்து, செவ்வாயன்று தனது போர் விமானங்கள் குண்டுகளை வீசியதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது. சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத், பொறுப்பற்ற முறையில் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த எச்சரிக்கையை நிராகரித்த,…