பிரான்ஸ் ணியின் இளம் வீரர் எடுத்த முடிவு!

பிரான்ஸ் அணியின் இளம் வீரரான கைலன் மேபே உலகக்கோப்பை போட்டியில் தனக்கு வந்த முழு வருமானத்தையும் ஊனமுற்றோர் குழந்தைகளுக்காக வழங்கியுள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் பிரான்ஸ் அணியில் இளம் வீரர்களில் ஒருவராக Kylian Mbappé…

தொண்டு நிறுவனங்களுக்கு வாரன் பஃபெட் 340 கோடி டாலர்கள் நன்கொடை..

அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் எட்வர்ட் பஃபெட் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்கஷயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில்…

பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல…

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் பூமிக்கு அடியில் வைரங்கள் படிமங்களாக புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை மலைகள் போன்று, குன்றுகள் போன்றும் உள்ளன. பல லட்சம் டன் எடை உள்ள வைரங்கள் பாறை படிமங்களாக கிடக்கின்றன. ஆனால் அவற்றை…

அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..

மத்தியதரைக்கடலில் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 450 அகதிகளில் 50 பேரை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை இத்தாலி கோரியதற்கு இணங்க ஜேர்மனி இந்த முடிவை எடுத்துள்ளது. இத்தாலியப் பிரதமரான Giuseppe Conte, ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற…

‘பிசாசு நகரம்’: எச்சரிக்கும் அரசு, செல்ல துடிக்கும் மக்கள்

கல்நார் சுரங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நகரம் இது. இந்த நகரம் மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இதனை பிசாசு நகரம் என்று அழைக்கின்றனர். இந்த பிசாசு நகரத்திற்கு செல்ல வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், அதற்கு செவிமடுக்கதான் யாரும் தயாராக இல்லை. சுற்றுலா பயணிகள், திகிலில் ஆர்வம் கொண்ட…

டிரம்ப்-புதின் மாநாடு: ‘நல்ல தொடக்கம்’ என டிரம்ப் புகழாரம்

ரஷ்யாவுடன் இணைவது "நல்ல ஒரு விஷயம் என்றும், அது கெட்டது அல்ல" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடனான முதல் உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் அவர் இவ்வாறு கூறினார். ஃபின்லாந்து நாட்டின் ஹெல்ஸின்கி நகரத்தில் ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்ததை…

இரான் மீது தடை: ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்களிக்க அமெரிக்கா மறுப்பு

இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இரான் மீது அதிகபட்ச அழுத்தத்தை செலுத்த அமெரிக்கா விரும்புவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்தார். அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு…

சற்று முன் : இஸ்ரேல் 100 ராக்கெட்டுகளை ஏவி பெரும்…

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பகுதிமேல் சுமார் 100 ஏவுகணைகளை ஏவி பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் நிலைகள் மீது தாம் தாக்குதல் நடத்துவதாக கூறி, இஸ்ரேல் நடத்தியுள்ள இந்த தாக்குதல் மிக மிக கோரமானது எனவும். இது மக்கள் நிலைகள் மீதே விழுந்து வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும்…

ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்; 10 பேர் பலி

காபூல் : ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாயினர்; பலர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜலலாபாத்தில் கிராமப்புற மேம்பாடு அமைச்சக அலுவலகத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாயினர்; 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலுவலக நேரம் முடிந்து வீட்டிற்கு…

சௌதி அரேபியா: ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது

சௌதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீதேறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு நகரமான டைஃபில் நடைபெற்ற ஒரு விழாவில் மஜீத் அல் மொஹாண்டிஸ் என்ற அந்த பாடகர் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஓடிச்சென்ற அந்த பெண் அவரை…

8 வயதாகும் சிறுவன் சிறந்த இந்தியராக தேர்வு..

பிரிட்டனில் நடைபெற்ற யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது சிறுவன் இந்த ஆண்டுக்கான சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சிறுவன் ஈஸ்வர் சர்மா. 8 வயதான இவர் கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற 'உலக…

ஒரே நாளில் 162 பயங்கரவாதிகளை வீழ்த்திய பாதுகாப்பு படை..

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 162 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம், நாட்டின் சில…

மக்கள் போராட்டத்தை அடுத்து பதவி விலகிய பிரதமர்

ஹைதியில் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை போராட்டங்களை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் பதவி விலகியுள்ளார். ஹைதியில் அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டங்களை அடுத்து ஆளும் கட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த…

புற்று நோய் பாதிப்பு: ஜான்சன் & ஜான்சன் 4.7 பில்லியன்…

ஜான்சன்&ஜான்சன் டால்க் பொருள்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆரம்பத்தில் 550 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட அமெரிக்காவின் மிசெளரி மாகாண…

சிரியா எல்லைப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் ஆவேச தாக்குதல் –…

சிரியா நாட்டின் கிழக்குப்பகுதியில் ஈராக் எல்லையோரம் அமெரிக்க படைகள் ஐ.எஸ் பயங்கவாதிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் உள்நாட்டு போராளிகளுக்கு உதவுவதாக களம் இறங்கியது.…

பாகிஸ்தான்: நாடு திரும்பியவுடன் நவாஸ் ஷெரீஃப் கைது

ஊழல் குற்றச்சாட்டில் சமீபத்தில் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த அவரது மகள் மரியமும் கைது செய்யப்பட்டார். மரியமுக்கும் சமீபத்திய ஊழல் வழக்குத் தீர்ப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்த நவாஸ்…

பாகிஸ்தான்: தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு, 128 பேர்…

தென் மேற்கு பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் மாகாண சபை வேட்பாளர் ஒருவர் உள்பட 128 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த மாகாண சுகாதார அமைச்சர் ஃபைசல் காக்கத் தெரிவித்துள்ளார். பிபிசி செய்தியாளர் குடாய் நூர் நாசிரிடம் பேசிய…

பனிமனிதனின் கடைசி உணவு

சுமார் 5,300 ஆண்டுகளுக்கு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலியில் 1991ஆம் ஆண்டு பனிப்பாறைகளுக்கு நடுவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த நபரின் உடலை ஆய்வு செய்ததில், ஆட்டுக் கொழுப்பு, மான் கறி, பழங்கால கோதுமை மற்றும் புதர்களில் விளையும் சில தாவரங்கள் ஆகியவற்றை அவர்…

பாகிஸ்தானை விட பல துறைகளில் இந்தியா முன்னேறிவிட்டது : ஷெபாஸ்…

இஸ்லாமாபாத், லண்டன் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளை அவர் ஊழல் செய்த பணத்தில் வாங்கினார் எனும் வழக்கில் ஷெரிப் மீதான குற்றாச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது லண்டனில்…

மருந்தில் வி‌ஷத்தை கலந்து 20 நோயாளிகளை கொன்ற நர்சு..

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் பணியாற்றிய நர்சு மருந்தில் விஷத்தை கலந்து இதுவரை 20 நோயாளிகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31). இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த…

இந்த நகரத்தில் சம்பளமோ கோடிக்கணக்கில்.. ஆனாலும் போதவில்லை ஏன்?

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்றாலும், அரசின் கணிப்பின் படி அது 'குறைந்த வருமானமாக' கருதப்படும். அது எப்படி முடியும்? ஆறு இலக்க சம்பளம் பெறும் ஊழியர்களும் ஏழைகளாகக் கருதப்படுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வருமானம் மற்றும் வீட்டு வாடகை செலவை…

600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது..

ஆஸ்திரேலியாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்த 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலையை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர். ஆஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு உள்ளது. இங்கு மிகப்பெரிய அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை இருந்தது. சமீபத்தில் அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய…

சீனா: ஜனநாயகத்துக்கு ஆதரவாக செயல்பட்டவருக்கு 13 ஆண்டுகள் சிறை

சீனாவில் மாநில அதிகாரத்தை அகற்ற வேண்டும் என்று ஜனநாயகத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்த நபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 64 வயதான சின் யொங்மின், ஏற்கனவே 22 வருடங்களை சிறையில் கழித்துவிட்டார். சின், நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க மறுத்ததாகவும், விசாரணை முழுவதும் அவர் அமைதியாக இருந்ததாகவும் மனித…