குடியேறிகளை ஏற்றுக்கொள்ள முடியாது – இத்தாலி

அரசு சார்பற்ற நிறுவனங்களால் இயக்கப்படும் படகுகளால் காப்பாற்றப்பட்ட குடியேறிகள் இத்தாலியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மட்டாயோ சல்வினி கூறுகிறார். குடியேறிகள் கடத்தப்படுவதை அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஊக்குவிப்பதாக சல்வினி அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், குடியேறிகள் விவகாரத்தில் இத்தாலியின் சுமையை குறைக்கும் என்ற நம்பிக்கையை…

ஜப்பானில் ஏவிய சில நொடிகளில் வெடித்து சிதறிய ராக்கெட்

ஜப்பானில் தனியார் நிறுவனம் ஒன்று விண்ணில் செலுத்திய 10 மீட்டர் நீளம் கொண்ட ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியது. ஜப்பானில் பிரபல லிவ் டோர்ஸ் இன்டர்நெட், விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறது. தகாபுமி ஹோரி அதன் நிறுவனர் ஆவார். இந்த தனியார் நிறுவனம்…

சிறையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிய கைதி..

திருட்டு வழக்கில் பிடிபட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளையில் தொடர்புடையவன் ரெடோயின் ஃபெய்ட்(46). அந்நாட்டின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்று பின்னர் கைதான இவனுக்கு…

அகதிகள் படகு மூழ்கியது: 3 குழந்தைகள் உயிரிழப்பு- 100 பேர்…

லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 3 குழந்தைகளின் உடல்கள் கரை ஒதுங்கின. மேலும், 100 பேரைக் காணவில்லை. படகு மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த மீனவர்கள் லிபியாவின் கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடலோர பாதுகாப்பு படையின் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று…

தென்கொரியாவில் செயல்பட்டு வந்த ராணுவ முகாமை காலி செய்தது அமெரிக்கா..

தென்கொரியாவின் சியோல் நகரில் இரண்டாம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் முகாம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டுள்ளது. #SouthKorea #Seoul #USmilitaryheadquarters #YongsanGarrison சியோல்: வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை, உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. தடையை மீறி, அணு ஆயுத சோதனை, ஹைட்ரஜன் குண்டு…

சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கும் நைஜீரியா

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 2017ல் இருமடங்காகியுள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை வைத்து இந்தியர்களின் கணக்கில் தலா ரூ.15 லட்சம் போடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாத நிலையில், ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்புத் தொகை அதிகரித்திருப்பதாக சமூக வலைத்தளப்…

12 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..

பாக்தாத்: ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முற்றிலுமாக தகர்க்கப்பட்ட பின்னர் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய சுமார் 20 ஆயிரம் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, கொலைவெறி தாக்குதல்களில் தொடர்புடையை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீதான வழக்குகளின் விசாரணையை விரைவுப்படுத்துமாறும்,…

சிரியாவில் வான் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டெர்ரா நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயன்படுத்தப்படுத்தப்பட்டது குண்டுவீசும் ரஷ்ய முசய்ஃபிரா விமானம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில்…

அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். வியாழக்கிழமையன்று மேரிலாண்டில் கேபிடல் கெசட் நாளிதழ் அலுவலகத்தில் ஒரு துப்பாக்கிதாரி ஐந்து பேரை சுட்டுக்கொன்ற நிலையில் அப்பத்திரிகையின் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர். அனாபோலிஸில் உள்ள கேபிடல் கேசட்…

குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு – ஐ.நா. அதிர்ச்சி தகவல்..

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், மோதல்களினால் குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் உள்நாட்டு போர்களும், பயங்கரவாத எதிர்ப்பு போர்களும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியாவில் மட்டுமன்றி, உலக நாடுகள் அனைத்திலும், சிறிய மோதல் ஏற்பட்டால் கூட பெண்களையும்…

ஜூலை 16 அன்று டிரம்ப் – புதின் உச்சி மாநாடு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இடையே நடைபெறவிருந்த நீண்டகால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. ஜூலை 16 அன்று ஃபின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் நடக்கவுள்ள அந்த சந்திப்பில், 'பல தேசிய பாதுகாப்பு விவகாரங்கள்' குறித்து விவாதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதிபர் புதின்…

தென் சீனக்கடல் விவகாரம்: “பிராந்தியத்தின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்”

சீனா அமைதிக்கு உறுதுணையாக இருக்கும், ஆனால் தன் பிராந்தியத்தின் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக்கொடுக்காது என அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிசுடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வர்த்தக போர் மற்றும் தென் சீன கடலின் நிலப்பகுதி…

விமானத்தின் இரைச்சலை 70 சதவீதம் குறைத்தது நாசா..

விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். வாஷிங்டன்: விமானங்கள் இயக்கப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்தில் இருந்து வரும் ஒளியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில் விமான…

ரகசியமாக அணு ஆயுத உற்பத்தியில் வடகொரியா; அதிர்சியில் ​அமெரிக்கா..

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. சியோல்: சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது.…

அமெரிக்க பொருளாதார தடையால் சரிந்தது ஈரான்..

யுரேனியம் செறிவூட்டும் விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு நாடுகள் தடை விதித்துள்ளதால் ஈரானின் பணமதிப்பு (ரியால்) வீழ்ச்சி அடைந்துள்ளது. தெக்ரான்: ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.…

விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் செயற்கை கோளை அனுப்பிய இங்கிலாந்து..

லண்டன்: பலநாடுகள் அனுப்பிய செயற்கைகோள்கள், உடைந்த செயற்கைகோள்கள், விமான பாகங்கள் என விண்வெளி முழுக்க நிறைந்துள்ளது. அதனால் இன்னும் சில வருடங்களில் விண்வெளி மிகப்பெரிய குப்பை கூளமாக மாறும் என ‘நாசா’ தெரிவித்துள்ளது. இதை அகற்ற பல நாட்களாக ‘நாசா’ மையம் யோசித்து வருகிறது. ஆனால் முதன்முறையாக இங்கிலாந்து களமிறங்கி…

அமெரிக்க எல்லையில் குடியேறிகளின் மீது வழக்கு பதியப்படுவது நிறுத்தம்

குழந்தைகளுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேறிகள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ளார். குடியேறிகளின் குடும்பங்களை பிரிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அதிபர் டிரம்ப் அளித்த உத்தரவினையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையர்…

டிரம்ப் நிர்வாகத்தின் பயணத்தடையை உறுதிசெய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்

முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத்தடைக்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்கள் இந்த பயணத் தடையை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியிருந்த நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு வந்த வழக்கில் ஐந்தில் நான்கு நீதிபதிகள்…

விசாரணை கிடையாது- சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற டிரம்ப் அதிரடி திட்டம்..

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வழக்கு விசாரணை இன்றி அவர்களின் சொந்த நாட்டிற்கே உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என கூறி வரும் அதிபர் டொனால்டு டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருவோரின் விசா…

​உலக கால்பந்து போட்டி – மகிழ்ச்சியை கொண்டாடிய ரசிகர்கள் 16…

மெக்சிகோ: ரஷ்யாவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது, தென்கொரிய அணியை 2-1 என்று கணக்கில் மெக்சிகோ அணி வீழ்த்தியது. போட்டியில் பெற்ற வெற்றியை மெக்சிகோ நாட்டில் ரசிகர்கள் பலரும் வீதிகளில் கொண்டாடியுள்ளனர். அதேபோல், டெக்சாஸ் எல்லை பகுதியில் உள்ள ஒரு கார் செட்டில் 6 பேர் கால்பந்தாட்ட போட்டியை…

செளதியை குறிவைத்து ஏவப்படும் தொடர் ஏவுகணைகள்

செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நோக்கி வந்த ஏவுகணையை, செளதி ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. சத்தமான குண்டுவெடிப்புகளும், வானில் புகையும் தோன்றியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அண்டை நாடான ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களால், இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக செளதி கூறுகிறது.…

`எல்லா அதிகாரமும் எனக்கே’: பெரும் பலத்துடன் மீண்டும் துருக்கி அதிபராகிறார்…

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிசெப் தயிப் எர்துவான் புதிய நிர்வாக அதிகாரங்களை தன் கையிலெடுத்துக்கொள்ள உள்ளார். இதனால், பிரதமர் பதவி ஒழிக்கப்படுவதுடன், நாடாளுமன்றத்தின் அதிகாரமும் பலவீனமாகும். துருக்கியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு கருத்து வாக்கெடுப்பில் பிரதமர் பதவியை ஒழிப்பதற்கும்,…

துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்

துருக்கி அதிபர் தேர்தலின், நீண்ட காலமாக துருக்கியின் தலைவராக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. "முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்" என்று கூறிய தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. 99%…