குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?

siladassகி.சீலதாஸ், செம்பருத்தி.காம்.

குண்டர்களுக்கு   எதிரான   காவல்துறையின்  நடவடிக்கையில்  சரியாக  இருக்கலாம்.  அணுகுமுறை   கேள்விகுறியாக   மாறிவிடலாம்.  சட்டத்தின்  மீது  நம்பிக்கை   உடையவர்கள்   சட்டத்தை   பேணும்படி   வலியுறுத்தியவர்கள்,  சட்டதைக்  கையில்   எடுத்துக்கொள்ளக்   கூடாது  என்ற  அபிப்பிராயத்தை  ஒதுக்கிவிட  முடியாதே.

குண்டர்களின்  அட்டகாசம்,  ராட்சஸ குணமும், செயல்களும்  நாட்டின்  சுபிட்சத்தை  கெடுக்கும்   அளவுக்கு  வளர்ந்துவிட்டது.  மக்கள்    அச்சமின்றி  நடமாடமுடியவில்லை;  மக்கள்  நிம்மதியாகத்   தூங்க  முடியவில்லை   என்றால்  எங்கோ   கோளாறு   இருப்பதைத்தான்   அது   குறிக்கும்.  அந்தக்  கோளாறான  நடவடிக்கைகளைத்  தடுக்க   மேற்கொள்ளப்பட்ட   அமலாக்கம்  நம்பிக்கை   பதிக்கின்ற  தரத்தை   கொண்டிருந்ததா   என்பன போன்ற   கேள்விகள்  வரும்போது,  அரசும்   அதை   வழி   நடத்துபவர்களும்   துணிந்து   காரணத்தை  அறிய   முற்படவேண்டுமே  ஒழிய  கூட்டுப்பொறுப்பைக் காட்டி   வக்காலத்து   தேடுவது   பொருத்தமானச்  செயலாக  கருத   இயலாது.

gangஇப்போது  ஏகப்பட்ட  குண்டர்  இயக்கங்கள்  இருப்பதாகக்   கூறும்  காவல்  துறையினர்,  இதுவரையில்  என்ன   செய்தார்கள்?என்ற  கேள்வியைமக்கள்  கேட்காமல்  இருப்பார்களா?  குண்டர்களைப்  பற்றிய  எல்லா  தகவல்களையும்  சேகரிக்கும்  ஆற்றலும்  வசதியும்  கொண்ட  காவல்துறை, குண்டர்  இயக்கங்கள்  வலுவடைவதைத்  தடுக்காமல்  இருந்தது   ஏன்  என்ற  கேள்வினைத்  தவிர்க்க  முடியுமா?  இதெல்லாம்  நியாமான   கேள்விகள்   எனும்போது  தெளிவான  பதில்கள்  தேவை  என்பதைச்  சொல்லவும்   வேண்டுமா?

police shooting 2எலியையப்  பிடிக்காத  பூனை,  பேசவிரும்பாத  மனிதன்  இருவரும்  பட்டினி  கிடப்பார்கள்  என்பது  பழமொழி.  தலைவர்  ஒழுங்காக  நடந்து கொண்டால்  சந்தேகக்  கேள்விகள்  எழ  வழி  இல்லை.  சட்ட  நடவடிக்கைகள்  என்ற  காரணத்தைக்   காட்டி  எடுக்கப்படும்  செயல்பாடுகள்  மக்களின்  மனதில்  சந்தேகத்தை  எழுப்பும்போது  ஆத்திரப்படாமல்  பதில்  அளிக்கும்  பொறுப்பு   அதிகாரிகளுக்கு  உண்டு.  இந்தப்  பொறுப்பில்  இருந்து  விடுபட  அரட்டி  மிரட்டி   எதையும்   சாதிக்க   முடியாது.

காவல்  துறை தங்கள்  அறிக்கையில்  குண்டர்களின்  இரகசிய  குழுமங்களில்  எழுபது   விழுக்காட்டினர்  இந்தியர்கள்  என்று  குறிப்படப்பட்டுள்ளது.  இது  வேதனை  தரும்  விஷயமாகும். இளம்  இந்தியர்கள்  ஏன்  இந்த  இரகசிய  குழுமங்களில்  சேருகிறார்கள்?  என்பதை  கண்டறிய  காவல்   துறையும்  அரசும்  எடுத்த   நடவடிக்கை   என்ன  என்பதை  மக்கள்  அறிந்து  கொள்ள  முற்படுவது  இயல்பே.

ஒருவகையில்  காவல்  துறையினர்  எந்த  பாரபட்சமின்றி  இனமத  வேறுபாடின்றி  சட்ட  அமலாக்கத்தை  கையாண்டிருந்தால்  தவறான  வழியில்  போகின்றவர்களுக்கு  எச்சரிக்கையாக  இருந்திருக்கும்.  ஆனால்  ஒருசில   நியாயமாக  நடத்தப்பட்ட  கருத்தரங்குகளை  நடத்த விடாமல்  செய்தது  சட்ட  விரோத  செயல்  என்பது  உலகறிந்த  உண்மை. இதன்றி,  நாளிதழ்  அலுவலகங்களில்  தாக்குதல்  நடத்தியவர்களும்  சட்டத்திற்குப்  புறம்பாகவே  நடந்து   கொண்ட  உண்மையான  சம்பவங்களை  மக்கள்  அறியாதது  அல்ல.

police shooting1இவைபோன்ற  பகிரங்கமாகக்  குற்றச் செயல்கள்  மீது  ஈடுபட்டவர்கள்  மீது காவல்  துறை   யாதொரு  சட்ட நடவடிக்கை  எடுக்காதது  குண்டர்  கும்பலுக்குத்  துணிச்சலை  கொடுத்திருக்கலாம்.  காரணம்  பட்ட  பகலிலேயே  நடத்தப்படும்  குற்றங்களைக்  கண்டு கொள்ளாதகாவல் துறை,  இரகசிய  கும்பல்களின்  சட்ட விரோத  நடவடிக்கைகளை  கண்டு  கொள்ளாது என்ற  அசட்டு  நம்பிக்கையை  கொடுத்திருக்கலாம்.  எனவே,  நாட்டில்  குண்டர்களின்  சட்டவிரோத   நடவடிக்கைகள்   பெருகிவிட்டன  என்றால்,  சட்ட  அமலாக்கத்தில்   ஏதோ  குறை  இருப்பதாகவே  நினைக்கத்  தோன்றும். இந்த  தப்பான  அபிப்பிராயத்தை  குண்டர்கள்  தங்களுக்கு  சாதகமாக  பயன்படுத்திக்  கொள்கிறார்கள்.இதைத்தான்   தவிர்க்க   வேண்டும்.

கடும்   தண்டனை,  கடுமையானச்   சட்டம்  போன்றவற்றால்  குற்றச்  செயல்களைத்   தடுக்க  முடியாது  என்பதை  வரலாறு  உறுதிபடுத்தியிருக்கும்   போது   சட்டத்தால்   மட்டும்   குண்டர்களை அழித்துவிட  முடியும்   என்று   நினைத்துச்  செயல்படுவது   நீண்டகால  அனுகூலத்தை   நல்கா,  எல்லா  இனங்களையும்   மதிக்கும்   மனோபாவத்தை  எல்லாரும்   கொண்டிருந்தால்  மட்டும்தான்   வன்செயல்களைக்   கட்டுப்படுத்த  முடியும்.

அதைவிடுத்து   வன்செயலுக்குப்   பதில் வன்செயல் என்ற  பழைய  கோட்பாடு  வன்முறை  கலாச்சாரத்தை   ஒழிக்கவோ,  அழிக்கவோ   உதவாது.  புது  அணுகுமுறை   தேவை.  அது  என்ன?  இந்நாட்டு எல்லா  குடிமக்களின்  குறையைப்  புரிந்து கொண்டு  செயல்படுவதோடு  இந்த  நாட்டின்   சுபிட்சத்தில்   எல்லாருக்கும்   பங்குஉண்டு   என்பதை வலியுறுத்துவதே!