மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது!

கி. சீலதாஸ், செம்பருத்தி.காம். சாபா  மக்களின்  இணையற்ற  தனிப்பண்பை  பிறர்  தெரிந்துகொண்டும்,  ஏற்றுக்  கொள்ளவேண்டும்  என்பது  மட்டுமல்ல  அவர்களின்  பெயர்  தங்களின்  சமயத்தை  வெளிப்படுத்தாது  என்கிறார்  சாபாவின்  துணை  முதலமைச்சர்  டத்தோ  யஹ்யா  ஹூசேன்.

முகம்மது  என்ற  பெயருடைய  அsiladassனைவரும்  முஸ்லிம்கள்  அல்ல,  அதுபோலவே  தாவீது (டேவிட்)  என்ற  பெயருடைய  அனைவரும்  கிறித்தவர்களும்  அல்ல.  தமக்கு  தெரிந்தவர்களில்  பலர்  முஸ்லிம்  பெயர்களைக்  கொண்டிருந்தபோதிலும்  அவர்கள்  உண்மையில்  கிறித்தவர்களே  என்கிறார் துணைமுதலமைச்சர்.  சாபா  மக்களின்  உடை   அணிவதில்கூட  வித்தியாசம்  இருப்பதைக்  காணலாம்.  அது      பழக்கம்  இல்லாதவர்களுக்கு  குழப்பத்தைத்  தரலாம்.  பெரும் தொலைவில்  இருக்கின்ற  கிராமங்களில்  வாழ்பவர்கள்  குல்லாய்  அணிவது வழக்கம் ஆனால்  அவர்கள்  முஸ்லிம்கள்  அல்ல.

மேலும்  இதைப்பற்றி  குறிப்பிடுகையில்: “சாபா  மக்கள்  மட்டும்தான்  இந்த  கலாச்சாரத்தைப்  புரிந்து  கொள்ள   முடியும். இது  எங்கள்  கலாச்சாரம்,  நாங்கள்  இனமத  பேதமின்றி  ஒருவரை  ஒருவர்  ஏற்றுக்கொள்கிறோம்.  இதனாலேயே  சாபா  மக்கள்   அன்னியோன்யமாக  வாழ முடிகிறது.  ஐம்பது  ஆண்டுகளுக்குப்  பிறகும்   சில   சமயங்களில்  ஒரே  இனமெனத்   தவறுதலாக  நினைக்கிறோம்.

sabah peopleவெளி  மாநிலங்களில்  வாழ்பவர்களுக்கு  இது  புரியாததால்  அவர்களின்  குழப்பமான  எண்ணங்களை  மன்னித்துவிட  வேண்டும்.  சாபாவின்  இணையற்ற  தனிப்பண்பை  அவர்கள்   ஏற்றுக்கொள்ளவேண்டும்  என்றார்  ஆரம்பத்தில்  இருந்து  இப்படித்தான்  இருந்தது.  இதனாலேயே  பிறரை  தூற்றாமல்  கவனமாக  இருக்கிறோம்– உன் முன்  நிற்கும்  எல்லாரும்  முஸ்லிம்கள்  அல்ல, அதுபோலவே  உன்  முன்  நிற்கும்   அனைவரும்  கிறித்தவர்களும்  அல்ல  என்கிறார்  துணை  முதலமைச்சர்

மலேசியாவின்  ஓர்  அங்கமான   சாபாவில்  இப்படிப்பட்டதொரு கலாச்சாரம்  காலம்காலமாக  வாழ்ந்து  வருவதை  உணர  வெகு நேரம்  பிடிக்காது.  இது  உலகறிந்த  உண்மை.  ஆனால்  இதை  எல்லாம்  மறந்து  செயல்படுவோரின்   நிலமையை  என்ன வென்பது.  இந்த  குல்லா   அணியும்  பண்பு  முஸ்லிம்  அல்லாதார்  மத்தியிலும்  பல  நாடுகளில் உண்டு.

ஐம்பது  ஆண்டுகளுக்கு  முன்பு,  மலாயாவில்  இருந்த  கலாச்சார  ஒற்றுமையை  பெரும்பான்மையினர்  மறந்திருக்கமாட்டார்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள்  எவ்வித  இனமத   வேறுபாடின்றி  பழகியதும்,  ஒற்றுமை  உணர்வை  வளர்த்ததையும்  நாம்  மறக்க  முடியாது.  அந்த  ஒற்றுமை  உணர்வு   தேய்ந்து  போனதற்கு  காரணம்  என்ன?

கம்யூனிஸ்டுகளை  எதிர்ப்பதில்  காட்டிய  ஆர்வம்  மேலோங்கி இருந்தபோது  சமய  வேறுபாடுகள்   அவ்வளவாகக்  கண்ணுக்குப்  படவில்லை.  இனசமய  வேறுபாடுகள்   வளர்க்கப்படவில்லை  எனலாம்.

ஆனால்  எண்பதாம்  ஆண்டுக்குப்  பிறகு  ஒரு  மாற்றத்தைக்  காணமுடிகிறது.  அதுதான்  மதத்தின்  மீது  வளர்க்கபட்ட  வேறுபட்ட  உணர்வுகள்.  “நாம்” ; “அவர்கள்”  என்ற  கலாச்சாரம்.  அதாவது  மலாய்க்காரர்கள்,  மலாய்க்காரர்  அல்லாதவர்கள்.  இந்த  வேறுபடுத்தும்  கலாச்சாரம்  பல்லின  மலேசியாவில்  வேற்றுமை  உணர்வை  வளர்த்ததே  அன்றி  மனித  நேயத்தை  மதிக்கும்  மலேசிய   சமுதாயமாக  மலர  வழிகேலத் தவறியதைத்தான்   காணமுடிகிறது.  அதை  இக்காலகட்டத்தில்   சிந்தித்துப்  பார்க்கும்  போது  மலேசிய   ஒற்றுமைக்குப்  பதிலாக   இனமத  வேறுபாட்டை   பெரிதுப்படுத்தும்  கலாச்சாரத்தைத்தான்   காண்கிறோம்.

சாபாவில்  காணப்படும்  முதிர்ந்த  கலாச்சார  ஒற்றுமை  தீபகற்ப  மலாயாவில்  ஒரு  காலகட்டத்தில்   தழைத்தோங்க  விளங்கிய தலைமுறைகளைச்  சார்ந்தவன்  என்ற  முறையில்  இன்று,  இந்த  வட்டாரத்தில்  காணப்படும்  அரசியல் நாகரிகமும், அரசியல்  கலாச்சாரமும்,  பிற  இனங்களயும்,  மதங்களையும்   கொச்சைப்படுத்தும்  கலாச்சாரம்  வளர்வதைக்  கண்டு  கவலையுறும்   பல்லாயிரக்கணக்கான   மலேசியர்களில்  நானும் ஒருவன்.

தீபகற்ப  மலேசியர்களான  நாம்,நம்  கலாச்சாரம்  பலமானது  என்று    நம்பியிருந்த நமக்கு  சாபா,  சரவாக்   மாநிலங்களைப்   பார்த்து  பழைய  நல்ல  நினைவுகளை  புதுப்பிக்கத்   தூண்டுகிறது.