தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, மூளைத் திறன் அதிகமாகும்!

கா. ஆறுமுகம். பகுதி 1. என்ன தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, மூளைத் திறன்  அதிகமாகுமா, உண்மையா அல்லது சும்மா ஒரு கதைக்காவா? உண்மைதான். இதை நான் சொல்லவில்லை, ஆய்வுதான் சொல்கிறது. அதாவது பல மொழிகள் தெரிந்தவர்கள் ஒரே மொழியை மட்டும் அறிந்திருப்பவரை விட மேம்பட்டிருப்பது பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்குக்  குழந்தைகள் ஆரம்பத்திலேயே இரண்டு அல்லது மூன்று மொழிகளில் தங்களது கல்வியை தொடங்க வேண்டும்.

B 4aமூளைத் திறன் வளர்ச்சிக்கும் பல மொழிகளில் கல்வி பயில்வதற்கும் உள்ளத் தொடர்பை அறிவியல் சார்பில் ஆய்வு செய்து  ‘டைம்’ என்ற உலக பிரசித்தி பெற்ற வார இதழ் ஒரு கட்டுரையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அதனை ஜெப்ரி குலுகர் என்பவர் எழுதியிருந்தார். வாசகர்கள் நலன் கருதி செம்பருத்தி.காம் அதனை மொழியாக்கம் செய்துள்ளது. மொழியாக்கம் செய்ய உதவியவர் யுவராஜன் அவர்கள். அந்தக் கட்டுரையில் தமிழ்ப் பள்ளிகள் பற்றி எதுவும் எழுதப்படவில்லை ஆனால், ஆய்வின் அடிப்படையில் அந்தத் தன்மைகள் கண்டிப்பாக தமிழ்ப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு உண்டு என்பது அறிவியல் உண்மையாகும்.

சால்டு லேக் என்ற நகரில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியாசிரியையான ஹெலன்  சா பிலிப்பிப், அவரது முதலாம் ஆண்டு மாணவி ‘ நான் ஆசிரியை சாப்பிட்டுவிட்டேன்’ என்று கூறிய போது தனது வாழ்விலும் ஒரு சிறு அதிசயம் நடந்து விட்டதாகவே உணர்ந்தார். காரணம் அவளது வாயிலிருந்து வந்த சொற்கள் “je mange le professeur”  என்று பிரான்சு மொழியில் கூறினாள்.

சில மாதம் முன்புவரை அவளது தாய் மொழி அல்லாத வேற்று மொழியில் ஒரு வார்த்தைக் கூட பேச தெரியாத அந்த சிறுமி இன்று பிரான்சு மொழியில் நிறைய வார்த்தைகளைக் கற்று கொண்டுவிட்டாள். அந்த வார்த்தைகளைக் கோர்த்து முதல் முறையாக அவள் நகைச்சுவை செய்து சிரித்தது தன் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம் என்கிறார் அந்த ஆசிரியர்.

அமெரிக்காவின் ஆர்வம்

அமெரிக்காவில் உள்ள யூட்டா மாநிலம் முழுவதுமே ஆரம்பப் பள்ளி மாணவர்கள், தங்களுடைய தாய் மொழி அல்லாத, பிரான்சு, மன்டரீன்(சீன மொழி), ஸ்பானிஷ் மொழிகளில், சரளமாக பேசி, படித்து, பாடி மகிழ்கின்றனர். விரைவிலேயே இவர்களுக்கு போர்த்துகீசிய மொழியைக் கற்பிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது, இவையாவும் இதுவரை அமெரிக்காவில் அமலாக்கிய கல்வித்திட்டங்களிலேயே பெரிய லட்சியங்களைத் தாங்கி தூர நோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்பட்ட மொழி கற்பிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.

B1 B2இந்த திட்டம் 2009-ஆம் ஆண்டு 25 பள்ளிகளைச் சேர்ந்த 1400 மாணவர்களிடம் தொடங்கப்பட்டது. பிறகு இந்த எண்ணிக்கை 100 பள்ளிகளில் உள்ள 20,000 மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. அல்லது அம்மாநிலத்தில் உள்ள 20 % ஆரம்ப பள்ளிகளும், அவ்வாட்டாரத்திலுள்ள 95% பள்ளிகளும் 12-ஆம் வகுப்புக்கு மேல் இந்த இந்த திட்டத்தில் பங்கெடுத்தன. இந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்ப்பதற்கு அதிக அளவிலான போட்டி நிலவுகிறது.

குழந்தைகள் பாலர் பள்ளியிலோ அல்லது ஒன்றாம் வகுப்பிலோ சேரும் முன் குடும்ப உறுப்பினர்கள் இணையதளம் மூலம் இந்த இருமொழி கல்வித் திட்டத்தத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளியும் மாவட்டத்தையும் பொருத்தே இது முடிவு செய்யப்படும். இத்திட்டத்தில் இணையும் மாணவர்கள் தற்போக்காக தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மாணவர்கள், தினமும் தங்களுடைய பாடங்களில் பாதியை வேற்று மொழியிலும் மீதி பாதியை ஆங்கிலத்திலும் கற்பர்.

பொருளாதாரதிற்காக இரண்டு மொழிகள் கற்பது சிறு காரணம்தான்

B 8aஉலக மயமாக்குதல், மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் போட்டியுடன் ஆற்றலை முழுவதுமாக பெற அமெரிக்கா இருமொழிபேசும் மக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதெல்லாம் இத்திட்டத்திற்கான சிறு காரணங்கள் தான். இத்திட்டத்திற்கான முக்கிய காரணமே விரைவாக சிந்தித்து செயல்படும் ஆண்களையும் பெண்களையும் உருவாக்குவது தான். பல மொழிகள் தெரிந்தவர்கள் ஒரே மொழியை மட்டும் அறிந்திருப்பவரை விட மேம்பட்டிருப்பது பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருமொழி தெரிந்தவர்கள் பகுத்தறிதல், பல வேலைகளை ஒரே நேரத்தில் கையாளுதல், இலகுவாக ஒரு விசயத்தை புரிந்துக் கொள்ளுதல், கருத்துகளை ஏற்று சுலபமாக சமரசம் செய்துக் கொள்ளுதல் போன்ற திறம்களில் சிறந்து விளங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இருமொழியாளர்கள் விரைவாக வேலை செய்யக்கூடியவர்கள், ஆனால், அதற்காக அவர்கள் குறைவான சக்தியையே உபயோகிக்கின்றனர். வயதாகினாலும் அவர்களால் அவர்களுடைய புலனுணர்வை தன் வசம் வைத்திருக்க முடிகிறது, வயோதிகத்தால் வரும் ஞாபக மறதியையும் தள்ளிப் போட முடிகிறது அவர்களால். அதுமட்டுமல்லாமல் அல்சைமர் எனும் நோயின் தாக்கத்தையும் குறைக்கும் வல்லமை இந்த பன்மொழியாளர்களிடம் உள்ளது.

தொடரும்…