நேற்று 28-12-2013 நடந்து முடிந்த இளையராவின் இசை நிகழிச்சியில் ஏற்றப்பாட்டு குழுவினர் ( MY EVENT INTERNATIONAL , MOJO) கலந்து கொண்ட ரசிகர்களை மிகவும் கேவலமாக நடத்தினர் ! வரிசையில் நின்று கொண்டு இருந்த ராசிகளை மரியாதை குறைவாகவும் பேசி, திட்டி அவர்களை வரிசையாக நிற்கும் படி செய்தனர்.
இந்த இளையராஜாவுக்காக அதிக விலை கொடுத்து வiஉமநவ வாங்கி வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியது!
உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்டு கழிக்க, அமர்வதற்கு போதுமான வசதிகளை இந்த ஏற்ர்ப்பாட்டாளர்கள் செய்து கொடுக்க வில்லை. திறந்த திடலில் ஒரு கூண்டு இரும்பு கம்பிக்குள் அடைத்து வத்து போல் ரசிகர்களை படு கேவல படுத்தி அகதி மாதிரி நடத்தினர்.
பணம் கொடுத்த இன்னும் சிலருக்கு அமர இடம் முழுழுனுயு கிடைக்க வில்லை! மிகவும் மலிவான வாடகை குறைவான மெர்டேகா அரங்கில் இந்த இளையராஜா நிகழ்ச்சியை நடத்தி மக்களிடம் அதிவிலையில் இந்த ( MY EVENT INTERNATIONAL , MOJO) ஏற்பாட்டாளர்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டனர்!
மழை வந்தால் மக்கள் மழையில் நனைவார்கள் என்று கூட கவலை படாமல், பணம் கைக்கு வந்தால் போதும் என்று கேட்ட எண்ணத்தில் மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர் இந்த கேடுகெட்ட ஏற்பாட்டாளர்கள். மக்கள் கொடுத்த பணத்துக்கு அழகான உள் அரங்கில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இவனுங்களோ ( MY EVENT INTERNATIONAL , MOJO ) மக்களை ஏமாற்றி, அவன் வரான் இவன் வரான் என்று சொல்லி, வருவான் ஆனால் வரமாட்டான் என்று சொல்லி மக்களுக்கு அல்வா கொடுத்ததுதான் மிச்சம் .
நிகழ்ச்சி எப்படி வழிநடத்தப்பட்டது? நல்ல வேலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் வந்தார், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று சொன்னால் டப்பா டான்சே ஆடி போயிருக்கும். எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி முடிந்தவுடன் கூத்தாடி பட்டாளத்தை யார் மேடைக்கு அழைத்தது? இசை கருவி வாசிப்பவர்களை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த நிகழ்ச்சியை வழி நடத்திய இந்த சுஹாசினி யார் நிகழ்ச்சியை வழி நடத்த சொன்னது? இந்த சுஹாசினியால் 1 மணி நேரம் வீனாகிவிட்டது! அறிமுகம் செய்வதிலும், இறந்தவர்களுக்கு இரங்கல் செய்தே நேரத்தை வீணடித்து விட்டார்கள்.
மொத்தத்தில் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றபட்டு விட்டனர். இது இன்று நேற்று நடக்க வில்லை கால காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏமாறுபவன் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவன் இருந்து கொண்டேதான் இருக்கிறான்.
நாமே பணம் கொடுத்து இது போன்ற கொள்ளையர்களை ( MY EVENT INTERNATIONAL , MOJO ) கொள்ளையடிக்கப் பழகி கொடுக்கிறோம்.
மலேசிய தமிழர்களே, இது போன்ற நிகழ்சிகளுக்கு போக ஆசையாக இருந்தால் போங்கள் தப்பில்லை, ஆனால் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த படி உங்களுக்கு போதுமான வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வில்லை என்றால் அந்த ஏற்பாட்டாளர்களை செருப்பால அடிங்க, பயப்பட வேண்டாம்.
இனி வரும் காலங்களில் இது போன்ற ஏமாற்று வேலை நடந்தால், ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
தமிழனடா…..
MOHAN mohan
ஐயா……மலேசியா கலைஞர் , மலேசியா மண்ணின் மைந்தர்கள் படைப்பை…..வளர …துணை நில்லுங்கள் ……….தமிழ் சார்ந்த படைப்பை வாங்கி அதரவு தரும் …………..தமிழ் பள்ளிக்கு ……தமிழ் நிகழ்வுக்கு…உள்ள நாட்டு சமூக- சமய இயக்கங்களுக்கு ……………உதவுங்கள்… …..
இளைய ராஜாவின் இசையில் நானும் மயக்கம் கொண்டவன்தான் .ஆனால் அவர் நோய் வாய் ஏற்பட்டவுடன் ,நம்ம ஏற்பட்டளர்கள் நிகழ்சியை தள்ளி வைத்து ,அவர் குணம் அடைந்தவுடன் நடத்தி இருக்கலாம்.என்ன என்றால் அங்கே சென்றவர்கள் இளையராஜாவின் குரலைதான் கேட்க விரும்பி பெரும் தொகைக்கு அனுமதி சீட்டு வங்கியுள்ளர்கள் .
நம் இனமான தமிழனுக்கு முதலில் ஒற்றுமை உணர்வும் புரிந்துணர்வும் மிக மிக அவசியம்….. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றமும் .தெளிவும் எர்ப்பட்டாலே போதும். இது மாதிரி சினிமா போன்றே சிற்றின்பத்தில் சிக்கி சீரழிவது விலகும் …………………………….. மாறுவோம் ! மாற்றுவோம் …..
திரு. D.பாண்டியன் அவர்கள் கூறிய கருத்து நம் அனைவருக்கும் மிக அவசியமான ஒன்று. முதலில் குடியிலிருந்து மீழ்வோம் .. முடியவில்லை என்றால், நம் குழந்தைகள்லாவது அதில் வீழாமல் இருக்க ஆவன செய்வோம் .. At least the future Indian Generation will be Alcohol Free
திரு மோகன் சொல்லுவோது அனைதும் உண்மை. அவர்கள் சொன்னபடி எந்த
தமிழ் பள்ளிக்கு அவர்களின் நன்குடை போய் சேர்ந்தது?
கலையை கலை கண்ணோடு பார்க்காமல் அதிலும் குறை சொல்ல முடியுமா என்று ஆராயும் புத்தி தேவையில்லை. இளையராஜா ஒரு இசையமைப்பாளர். அவரிடம் இருக்கும் இசையை பிடித்தால் ரசித்து மகிழுங்கள். இல்லையேல் கம்முன்னு உங்க வேலையைப்பாருங்கள்.
கலை, நான் என்ன சொல்ல வந்தேன் நீ என்ன சொல்லிகிட்டு இருக்கே?
ராசி கொஞ்சம் மூ………..
முரளி கூறியதை நானும் ஆதரிக்கிறேன். நான் கேளிக்கை நிகழ்சிகளில் நாட்டம் இல்லாதவன். பலர் கூறியது போல நமது சமூகம். சினிமாவில் கூறப்படும் கருத்துக்களில் நல்ல கருத்துக்களை விட்டு தேவையில்லாத, யாருக்கும் நன்மை பயக்காத கருத்துக்களை மட்டும் கையாளுகின்றனர். நான் ஒரு முறை சென்னை TTK REHABILITATION HOSPITAL TTK புனர்வாழ்வு மையத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக மது பழக்கத்தை தவிர்ப்பதற்கும், பழக்கத்தில் உள்ளோர் விட்டுவிடவும் உதவிசெயவதற்கான கருத்தரங்கு. தீவிர ஆய்விற்குப்பின் கூறப்பட்ட எனது மனதைவிட்டு நீங்காத கருத்து ‘நாம் இப்பொழுது பாலர் பள்ளி குழந்தைகளிடமிருந்து ஆரம்பித்தால், இன்றிலிருந்து இரண்டாவது தலைமுறையினரை நாம் மது பழக்கத்திலிருந்து முற்றாக மீட்க முடியும்’ என்பதாகும். பாருங்கள் நமக்கு எவ்வளவு காலம் தேவை என்று. நெல் வளர அதிகம் அக்கறை தேவை ஆனால் புல் தானாகவே வளரும். அதுபோல நன்மைகள் வளர அதிக ஈடுபாடு தேவையாதலால் நாம் எல்லோரும் இணைந்து செயல் பட்டு சமூதாயம் வளர தனி மனித வளர்ச்சியும் வேண்டுமென்று சிந்தித்து செயல்பட இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
இளையராஜா ரசிகர்களே ,,நான் இளையராஜா அவர்களை தப்பாக பேசி இருந்தால் நான் பகிங்கரமாக மன்னிப்பு கேட்டு கொல்கிறேன் ,,அவர் ஓஊ நல்ல மனிதர் ,அதுமட்டும் அல்லாமல் ,இந்தியர்த்களை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர் ,ராக்கமா கைதட்டு என்ற பாடலின் இசை உலகில் இன்று வரையிலும் நம்பர் 1 ,,,,,