டான்ஸ்ரீ நடராஜா அவர்களுக்கு ஒரு கடிதம்!

batu cavesமகா மாரியம்மன் தேவஸ்தான , பத்துமலை முருகன் ஆலய தலைவர் திருமிகு டான்ஸ்ரீ நடராஜா அவர்களே, வணக்கம்.

பல ஆண்டுகள் இந்த கோயில் குழுமத்திற்கு தலைவராக இருக்கின்ற நீங்கள், சில திருத்தல பணிகள் நிறைவாக செய்திருப்பதை உங்கள் உணர்ச்சி பொங்கும் தைபூச உரையில் கேட்கமுடிந்தது. அவை திருத்தல பணிகள்தான், திருட்டுத்தனமான பணிகள் அல்ல என்பதை அடிக்கடி எங்களுக்கு நினைவூட்டினீர்கள் , நன்றி. (நாங்கள் தான் எதையுமே சீக்கிரம் மறந்துவிடுவோம்னு தெரியுமே !!)

தைபூசத்திற்கு முன்பு இந்து சங்கம் தைபூச நெறியையும் , இந்து மத நெறியையும் காப்பதற்கு சில விதிமுறைகளை கொண்டுவந்த போது நீங்கள் ஆரம்பத்தில் கொதித்து எழுந்த கத்தி பேசினீர்கள். எனக்கு புத்திமதி சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பத்திரிக்கை வாயிலாக காறி துப்பினீர்கள்! இந்து சங்கம் எனக்கு புத்திமதி சொல்ல தேவையில்லை , தகுதியுமில்லை; நான் ஒரு டான்ஸ்ரீ, எனக்கு முருகனின் துணை இல்லையென்றாலும் நஜிப்பின் துணை இருக்கிறது, என்று இறுமாப்போடு கூறியபோது, இந்து சங்கத்தின் மேல் வெறுப்போடு இருந்தவர்களும் , உங்களின் வேஷ்டியை அழுக்கு படாமல் தூக்கிபிடிக்கும் கூஜாகளும் கூட உங்களின் நடவடிக்கையைப் பார்த்து ,சிரித்து, காறி உமிழ்ந்தார்கள் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்தீர்களா என்று தெரியவில்லை.

இந்து சங்க தலைவர் மோகன் ஷான் எப்படிபட்டவர் , அந்த தலைமைக்கு ஏற்றவரா என்று எனக்கு தெரியாது, இருப்பினும் இதுவரை கேலிகூத்தாக இருந்த தைபூச திருவிழாவின் மரியாதையையும் மாண்பையும் நிலைநிறுத்தும் பொருட்டு சில கட்டுபாடு விதிமுறைகளை கொண்டுவந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இப்படிபட்ட விதிமுறைகள் உங்களிடமிருந்து வரும் என்று யாரும் எதிர்பார்கவில்லை, அப்படி ஏதும் வரவே வராது என்றும் எங்களுக்கும் தெரியும் ! (சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!). நீங்கள் இப்படிபட்ட அறிவார்ந்த சிந்தனைக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே. நீங்கள் செய்ய இயலாத ஒன்றை, இதுகாறும் செய்ய தவறிய அறிய விஷயத்தை இந்து சங்கம் செய்ய எத்தனிக்கும் வேலை , வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு காரணமே புரியாமல் பொரிந்து தள்ளிய உங்கள் செயல் வெட்கக் கேடானது.

உங்களோடு இருந்த யாரோ ஒரு புத்திசாலி, நீங்கள் செய்த கூத்தாடி தனத்தை புரிந்து கொண்டு இந்து சங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவு தரசொல்லி, அவர்களோடு இணைந்து தைபூச கட்டுப்பாடுகளை நிறைவேற்ற தயார் என்று அறிக்கையும் விட்டு பெயரை அப்போது காப்பாற்றிக் கொண்டீர்கள் !

அதிரடி மாற்றங்க்கல் பெரிதாக இல்லையென்றாலும், பலர் முன்வைத்த கட்டுபாடுகளை பின் பற்றி அமைதியான முறையிலே கவடிகலயும் நெர்த்திகடன்கலயும் நிறைவேற்றினார்கள் என்பது உண்மை.

மாற்றம் என்பது உடனேயே வருவது கிடையாது, அதிலும் இந்தியர்கள் உடனே மாறக் கூடியவர்களும் இல்லை… அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும். இந்த விதிமுறைகளை தளர்த்தாமல், இந்து சமய நெறியையும் அதன் மாண்பையும் முதன்மையாக வைத்து , சமைய விழா தோற்றத்தை மீண்டும் கொண்டுவந்து தைபூச மாண்பை காக்க பாடுபடவேண்டும்.

இதில் வேதனை, வேடிக்கை என்னவெனில், ஆரம்பத்தில் ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறிவிட்டு , தைபூசத்தன்று நீங்கள் மேடை ஏறி பேசியபோது உங்கள் வார்த்தையில் நாணயம் இல்லை என்பதையும், அதோடு சேர்ந்து நெஞ்சில் நிறைய நஞ்சகமும் , வெறுப்புப் புழுதியும் நிறைந்து வழிந்ததை மக்கள் உணர்ந்தனர். மேடை ஏறிய நீங்கள் சொந்த புராணம் வாசித்த போது கீழே இருந்தவர்கள் உங்களை எப்படியெல்லாம் திட்டிதீர்தனர் தெரியுமா?

பத்து மலை கோயிலும் மாரியம்மன் கோயிலும் உங்கள் பரம்பரை சொத்து என்பது போல் பேசிய உங்கள் பேச்சு , இருமாப்ப்பு தோரணை உங்களை ஒரு வேற்று உலக மனிதனாக காட்டியது! நல்ல திட்டங்களை, தைபூச நன்நாளின் மாண்பை காக்க எனக்கே எல்லா உரிமையும் உண்டு, மற்றவர்களுக்கு அருகதை இல்லை என்பதை சொல்லாமல் சொன்ன உங்களின் இறுமாப்பு பேச்சு உங்களின் அழிவுகாலத்தின் மணி ஒலியாக மற்றவர்கள் காதில் விழுந்தது!

கட்டுப்பாடுகளுக்கு இந்துசங்கதொடு ஒத்துழைப்பு தருவதுபோல் தந்து, பின்பு , தைபூச கேலி கூத்தாடிகளின் கூத்தாடித்தனமான அடிவடித்தனமான காவடிகளை நீங்கள் மீண்டும் அனுமதிக்க மறைமுகமாக நீங்கள் விடுத்த அறைகூவலை பலரும் உணர்த்து ‘என்ன கேவலமான மனித பிறவிடா இவன்’ என்று உங்களை காரி உமிழ்ந்தார்கள் என்பதை இங்கே மிகவும் வருத்தமுடன் சொல்லிகொள்கிறேன்.

கேவலத்திலும் கேவலம் என்ன தெரியுமா ? தைபூச முதல்நாளில், பலத்த போலிஸ் , FRU புடை சூழ , பலத்த பாதுகாப்போடு இரத்த ஊர்வலத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு ‘அல்ப்ஹார்ட்’ காரில் இரதத்தின் முன் சென்றது…. முருகனைவிட உங்களுக்குதான் முதல் மரியாதையா? மக்கள் வரி பணத்தில் வாழும் போலிஸ் உங்களின் பாதுகாப்பு கூலிப்படையா? என்ன கேவலமையா இது?

வருடம் முழுதும் கோயிலில் வரும் கோடிக் கணக்கான மக்கள் பணத்தை என்னதான் செய்கிறீர்கள்? ஏதாவது புதிய தமிழ் பள்ளிகளை கட்டுகிறீர்களா ? அல்லது மிகசிறந்த UPSR, PMR, SPM, STPM , மாணவர்களுக்குத்தான் உபகாரசம்பலத்தை அள்ளி தருகின்றீர்கள? பத்து மலை மானவர்களுக்குமட்டும் கிள்ளிபோட்டால் போதுமா? தைபூசத்திற்கு நாடே திரண்டு வருகிறதே…எத்தனை தமிழ் பள்ளிகளை நீங்கள் வாழ வைத்தீர்கள்…சொல்லுமையா? எத்தனை பல்கலகழக மாணவர்களை நீங்கள் படிக்க வைத்தீர்கள்? எத்தனை மிகசிறந்த மாணவர்களுக்கு வெளி நாட்டுக்கு அனுப்பி மேற்கல்வி கற்க வழி காண்பித்திருபீர்கள் ? உங்களின் வாரியப் உறுப்பினர்களின் பிள்ளைகள் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா?

டான்ஸ்ரீ நடராஜா அவர்களே…தைப்பூசத்தில் நீங்கள் உளறிய ஒரு வார்த்தை…..நான் யார் தெரியுமா ..என் பவர் என்ன தெரிமா..? ஒரு டன்ஸ்ரீக்கு எவ்வளவு சக்தி இருக்குன்னு தெரியாம என்கூட … நெருப்போட விலயாடதீங்க்கன்னு நீங்கள் கத்திய விஜய காந்த் வசனம் ரொம்ப கேவலமாக இருந்தது! நீங்கள் யாராக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. கோயில்கள் உங்கள் சொந்த உடைமைகள் இல்லை என்பதை உணர்ந்து பேசுங்கள் , கொஞ்சமாவது சமுதாய உணர்வும் அதைவிட சமைய உணர்வும் நெஞ்சில் வைத்து, மூளையை சற்று யோசிக்கவைத்து இனி பேசுங்களேன் !, அப்போதுதான் உங்களை மதிக்க இயலாவிடாலும் உங்களின் பெயருக்கு முன்னாள் இருக்கும் அந்த டான்ஸ்ரீ-க்காவது கொஞ்சம் மரியாதை கிடைக்கும்.

நீங்கள் சில கோயிகளின் தலைவர் மட்டும்தான். அது பெரிய கோயில்களாக இருப்பதால் மலேசிய இந்து மக்களுக்கெல்லாம் நீங்கள்தான் தலைவர் என்று நினைப்பது, பேசுவது , பத்திரிகை அறிக்கைகளை விடுவது, மிரட்டல் விடுவது …. மிகவும் கேலியானது , கேவலமானது, முட்டாள்தனமானது.

இந்த நாட்டில் இந்து மக்களின் மாண்பையும் சமய நெறியையும் காக்க கொண்டுவரும் திட்டங்கள் யார் கொண்டுவந்தாலும் அதை அறிவார்ந்த சிந்தனையுடன் சீர்தூக்கி, அதனை நிலைநிறுத்த , நிறைவேற்ற , மற்றவர்களையும் மதித்து அவர்களோடு தோல் கொடுக்க உங்களை பழக்கிக் கொள்ளுங்கள் . இல்லையேல் கடைசி காலத்தில் எவனும் மதிக்க மாட்டான்!

நஜிப் தரும் பட்டங்களை சேகரிக்க, தைப்பூசத்தையும் பத்து மலையையும் சுற்றுலா அமைச்சிடம் நீங்கள் பாதி அடகு வைத்துவிட்டதை நாடே அறியும். இருக்கும் கொஞ்சத்தையும் கூறு போட்டு வித்துவிடதீர்கள். இத்தனை ஆண்டுகள் இந்த கோயில்களும் விழாக்களும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு அற்புத வியாபார மையங்களாக இருந்துள்ளன…இனியாவது அவை கோயில்களாக இருக்கட்டும்…நமது இளைய தலைமுறை சமய நாகரீகம் அறிந்தவர்களாக வளரட்டும், நமது சமய மாண்பு வாழட்டும் …..வழிவிடுங்கள் டான்ஸ்ரீ நடராஜா.

-அண்ணா