மகா மாரியம்மன் தேவஸ்தான , பத்துமலை முருகன் ஆலய தலைவர் திருமிகு டான்ஸ்ரீ நடராஜா அவர்களே, வணக்கம்.
பல ஆண்டுகள் இந்த கோயில் குழுமத்திற்கு தலைவராக இருக்கின்ற நீங்கள், சில திருத்தல பணிகள் நிறைவாக செய்திருப்பதை உங்கள் உணர்ச்சி பொங்கும் தைபூச உரையில் கேட்கமுடிந்தது. அவை திருத்தல பணிகள்தான், திருட்டுத்தனமான பணிகள் அல்ல என்பதை அடிக்கடி எங்களுக்கு நினைவூட்டினீர்கள் , நன்றி. (நாங்கள் தான் எதையுமே சீக்கிரம் மறந்துவிடுவோம்னு தெரியுமே !!)
தைபூசத்திற்கு முன்பு இந்து சங்கம் தைபூச நெறியையும் , இந்து மத நெறியையும் காப்பதற்கு சில விதிமுறைகளை கொண்டுவந்த போது நீங்கள் ஆரம்பத்தில் கொதித்து எழுந்த கத்தி பேசினீர்கள். எனக்கு புத்திமதி சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பத்திரிக்கை வாயிலாக காறி துப்பினீர்கள்! இந்து சங்கம் எனக்கு புத்திமதி சொல்ல தேவையில்லை , தகுதியுமில்லை; நான் ஒரு டான்ஸ்ரீ, எனக்கு முருகனின் துணை இல்லையென்றாலும் நஜிப்பின் துணை இருக்கிறது, என்று இறுமாப்போடு கூறியபோது, இந்து சங்கத்தின் மேல் வெறுப்போடு இருந்தவர்களும் , உங்களின் வேஷ்டியை அழுக்கு படாமல் தூக்கிபிடிக்கும் கூஜாகளும் கூட உங்களின் நடவடிக்கையைப் பார்த்து ,சிரித்து, காறி உமிழ்ந்தார்கள் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்தீர்களா என்று தெரியவில்லை.
இந்து சங்க தலைவர் மோகன் ஷான் எப்படிபட்டவர் , அந்த தலைமைக்கு ஏற்றவரா என்று எனக்கு தெரியாது, இருப்பினும் இதுவரை கேலிகூத்தாக இருந்த தைபூச திருவிழாவின் மரியாதையையும் மாண்பையும் நிலைநிறுத்தும் பொருட்டு சில கட்டுபாடு விதிமுறைகளை கொண்டுவந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இப்படிபட்ட விதிமுறைகள் உங்களிடமிருந்து வரும் என்று யாரும் எதிர்பார்கவில்லை, அப்படி ஏதும் வரவே வராது என்றும் எங்களுக்கும் தெரியும் ! (சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!). நீங்கள் இப்படிபட்ட அறிவார்ந்த சிந்தனைக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே. நீங்கள் செய்ய இயலாத ஒன்றை, இதுகாறும் செய்ய தவறிய அறிய விஷயத்தை இந்து சங்கம் செய்ய எத்தனிக்கும் வேலை , வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு காரணமே புரியாமல் பொரிந்து தள்ளிய உங்கள் செயல் வெட்கக் கேடானது.
உங்களோடு இருந்த யாரோ ஒரு புத்திசாலி, நீங்கள் செய்த கூத்தாடி தனத்தை புரிந்து கொண்டு இந்து சங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவு தரசொல்லி, அவர்களோடு இணைந்து தைபூச கட்டுப்பாடுகளை நிறைவேற்ற தயார் என்று அறிக்கையும் விட்டு பெயரை அப்போது காப்பாற்றிக் கொண்டீர்கள் !
அதிரடி மாற்றங்க்கல் பெரிதாக இல்லையென்றாலும், பலர் முன்வைத்த கட்டுபாடுகளை பின் பற்றி அமைதியான முறையிலே கவடிகலயும் நெர்த்திகடன்கலயும் நிறைவேற்றினார்கள் என்பது உண்மை.
மாற்றம் என்பது உடனேயே வருவது கிடையாது, அதிலும் இந்தியர்கள் உடனே மாறக் கூடியவர்களும் இல்லை… அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும். இந்த விதிமுறைகளை தளர்த்தாமல், இந்து சமய நெறியையும் அதன் மாண்பையும் முதன்மையாக வைத்து , சமைய விழா தோற்றத்தை மீண்டும் கொண்டுவந்து தைபூச மாண்பை காக்க பாடுபடவேண்டும்.
இதில் வேதனை, வேடிக்கை என்னவெனில், ஆரம்பத்தில் ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறிவிட்டு , தைபூசத்தன்று நீங்கள் மேடை ஏறி பேசியபோது உங்கள் வார்த்தையில் நாணயம் இல்லை என்பதையும், அதோடு சேர்ந்து நெஞ்சில் நிறைய நஞ்சகமும் , வெறுப்புப் புழுதியும் நிறைந்து வழிந்ததை மக்கள் உணர்ந்தனர். மேடை ஏறிய நீங்கள் சொந்த புராணம் வாசித்த போது கீழே இருந்தவர்கள் உங்களை எப்படியெல்லாம் திட்டிதீர்தனர் தெரியுமா?
பத்து மலை கோயிலும் மாரியம்மன் கோயிலும் உங்கள் பரம்பரை சொத்து என்பது போல் பேசிய உங்கள் பேச்சு , இருமாப்ப்பு தோரணை உங்களை ஒரு வேற்று உலக மனிதனாக காட்டியது! நல்ல திட்டங்களை, தைபூச நன்நாளின் மாண்பை காக்க எனக்கே எல்லா உரிமையும் உண்டு, மற்றவர்களுக்கு அருகதை இல்லை என்பதை சொல்லாமல் சொன்ன உங்களின் இறுமாப்பு பேச்சு உங்களின் அழிவுகாலத்தின் மணி ஒலியாக மற்றவர்கள் காதில் விழுந்தது!
கட்டுப்பாடுகளுக்கு இந்துசங்கதொடு ஒத்துழைப்பு தருவதுபோல் தந்து, பின்பு , தைபூச கேலி கூத்தாடிகளின் கூத்தாடித்தனமான அடிவடித்தனமான காவடிகளை நீங்கள் மீண்டும் அனுமதிக்க மறைமுகமாக நீங்கள் விடுத்த அறைகூவலை பலரும் உணர்த்து ‘என்ன கேவலமான மனித பிறவிடா இவன்’ என்று உங்களை காரி உமிழ்ந்தார்கள் என்பதை இங்கே மிகவும் வருத்தமுடன் சொல்லிகொள்கிறேன்.
கேவலத்திலும் கேவலம் என்ன தெரியுமா ? தைபூச முதல்நாளில், பலத்த போலிஸ் , FRU புடை சூழ , பலத்த பாதுகாப்போடு இரத்த ஊர்வலத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு ‘அல்ப்ஹார்ட்’ காரில் இரதத்தின் முன் சென்றது…. முருகனைவிட உங்களுக்குதான் முதல் மரியாதையா? மக்கள் வரி பணத்தில் வாழும் போலிஸ் உங்களின் பாதுகாப்பு கூலிப்படையா? என்ன கேவலமையா இது?
வருடம் முழுதும் கோயிலில் வரும் கோடிக் கணக்கான மக்கள் பணத்தை என்னதான் செய்கிறீர்கள்? ஏதாவது புதிய தமிழ் பள்ளிகளை கட்டுகிறீர்களா ? அல்லது மிகசிறந்த UPSR, PMR, SPM, STPM , மாணவர்களுக்குத்தான் உபகாரசம்பலத்தை அள்ளி தருகின்றீர்கள? பத்து மலை மானவர்களுக்குமட்டும் கிள்ளிபோட்டால் போதுமா? தைபூசத்திற்கு நாடே திரண்டு வருகிறதே…எத்தனை தமிழ் பள்ளிகளை நீங்கள் வாழ வைத்தீர்கள்…சொல்லுமையா? எத்தனை பல்கலகழக மாணவர்களை நீங்கள் படிக்க வைத்தீர்கள்? எத்தனை மிகசிறந்த மாணவர்களுக்கு வெளி நாட்டுக்கு அனுப்பி மேற்கல்வி கற்க வழி காண்பித்திருபீர்கள் ? உங்களின் வாரியப் உறுப்பினர்களின் பிள்ளைகள் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா?
டான்ஸ்ரீ நடராஜா அவர்களே…தைப்பூசத்தில் நீங்கள் உளறிய ஒரு வார்த்தை…..நான் யார் தெரியுமா ..என் பவர் என்ன தெரிமா..? ஒரு டன்ஸ்ரீக்கு எவ்வளவு சக்தி இருக்குன்னு தெரியாம என்கூட … நெருப்போட விலயாடதீங்க்கன்னு நீங்கள் கத்திய விஜய காந்த் வசனம் ரொம்ப கேவலமாக இருந்தது! நீங்கள் யாராக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. கோயில்கள் உங்கள் சொந்த உடைமைகள் இல்லை என்பதை உணர்ந்து பேசுங்கள் , கொஞ்சமாவது சமுதாய உணர்வும் அதைவிட சமைய உணர்வும் நெஞ்சில் வைத்து, மூளையை சற்று யோசிக்கவைத்து இனி பேசுங்களேன் !, அப்போதுதான் உங்களை மதிக்க இயலாவிடாலும் உங்களின் பெயருக்கு முன்னாள் இருக்கும் அந்த டான்ஸ்ரீ-க்காவது கொஞ்சம் மரியாதை கிடைக்கும்.
நீங்கள் சில கோயிகளின் தலைவர் மட்டும்தான். அது பெரிய கோயில்களாக இருப்பதால் மலேசிய இந்து மக்களுக்கெல்லாம் நீங்கள்தான் தலைவர் என்று நினைப்பது, பேசுவது , பத்திரிகை அறிக்கைகளை விடுவது, மிரட்டல் விடுவது …. மிகவும் கேலியானது , கேவலமானது, முட்டாள்தனமானது.
இந்த நாட்டில் இந்து மக்களின் மாண்பையும் சமய நெறியையும் காக்க கொண்டுவரும் திட்டங்கள் யார் கொண்டுவந்தாலும் அதை அறிவார்ந்த சிந்தனையுடன் சீர்தூக்கி, அதனை நிலைநிறுத்த , நிறைவேற்ற , மற்றவர்களையும் மதித்து அவர்களோடு தோல் கொடுக்க உங்களை பழக்கிக் கொள்ளுங்கள் . இல்லையேல் கடைசி காலத்தில் எவனும் மதிக்க மாட்டான்!
நஜிப் தரும் பட்டங்களை சேகரிக்க, தைப்பூசத்தையும் பத்து மலையையும் சுற்றுலா அமைச்சிடம் நீங்கள் பாதி அடகு வைத்துவிட்டதை நாடே அறியும். இருக்கும் கொஞ்சத்தையும் கூறு போட்டு வித்துவிடதீர்கள். இத்தனை ஆண்டுகள் இந்த கோயில்களும் விழாக்களும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு அற்புத வியாபார மையங்களாக இருந்துள்ளன…இனியாவது அவை கோயில்களாக இருக்கட்டும்…நமது இளைய தலைமுறை சமய நாகரீகம் அறிந்தவர்களாக வளரட்டும், நமது சமய மாண்பு வாழட்டும் …..வழிவிடுங்கள் டான்ஸ்ரீ நடராஜா.
-அண்ணா
நல்ல கட்டுரை . சூடு சொரணை இருந்தால் உரைக்கட்டும்
போதும் போதும் அவரை விலக சொல்லுங்கள்
தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். முருகன் பத்துமலையில் நிற்கிறார் …. ஆனால் இன்னும் ………………………. !
ஐயா மடராசா அவர்களே, மிச்ச சொச்ச தன்மானம், மரியாதை, சூடு & சொரணை இருந்தால் தங்கள் தலைவர் பதவியை துறந்துவிட்டு இனிமேலாவது மற்றவர்களுக்கு வழி விட்டு ஓதுங்கி இருப்பதே சாலச்சிறந்தது. உங்களின் சுயநலத்தால் இந்த நாட்டின் இந்துக்கள் இழந்தது போதும்.
அருமையான கட்டுரை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு . இது மாடா அல்லது எருமையா என்று பாப்போம். செவிடன் காதுல உதுன சங்கு மாதிரி தான்.
அட நீங்கவேற சார்! அடுத்த தைபூசம்வரை இவன் தாங்கமாட்டான்!
இந்த அருமையான கட்டுரையின் முலமாக மலேசியா வாழ் அணைத்து மக்களின் உணர்வுகளை அறிந்து , புரிந்து , தெரிந்து தேவஸ்தானம் தனது மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம் . நமது சமுதாயம் வாழ . நமது சமுதாயம் மேலோங்க , நமது சமுதாயம் திளைத்திட , நமது சமுதாயம் ஒற்றுமையுடன் வாழ்த்திட அனைத்தையும் ஆவன செய்யும் என நம்புவோமாகுக. நன்றி . வணக்கம் ,
அப்பாடா, இந்த மடலைப் படித்தப் பிறகுதான் மனதில் இருந்த வலி கொஞ்சம் குறைந்திருக்கு. இந்நாட்டில் வாழும் இந்தியர்களில் 99.999% நிச்சயமாக இந்த ஆணவம், அகங்காரம் பிடித்த மதயானையை ஒரு போதும் மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்துக்கு தலைவராக இருக்க விரும்பவில்லை என்பது கண்கூடு. இவரே தலைவர் பதவியை கைவிட்டால் நல்லது. இல்லையேல், நாமே இவரை கை கழுவ வேண்டும். அதற்கு முதல் நடவடிக்கை இந்த மாரியம்மன் ஆலய அறக்கட்டளை இதுவரையில் முறையாக இந்நாட்டில் உள்ள எந்த ஒரு சட்டத்தின் கீழும் பதிவு செய்யப் படாமல் இருப்பதாக தெரியவருகின்றது. இந்த ஆலயங்களின் சொத்து நிலவரம் அறிய அந்த அறக்கட்டளையை ஆண்டு வரும் இன்னும் 2 அல்லது 3 அறவாரிய உறுப்பினர்களைக் கண்டுப் பிடித்து அவர்களையும் பதவியை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். நடராஜா ஒரு வழிக்கு வரவில்லையானால், கோலாலம்பூர் முருக பக்தர்கள் ஒன்று சேர்ந்து பொது நல வழக்குப் போட்டு இவரை அடிபணிய வைக்க வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது? யோசியுங்கள், முருகனை வேண்டுங்கள் வழி பிறக்கும்.
மிக்க நன்றிங்க நல்லாவே சொன்னிங்க கொட்டித் திர்க நினைத்ததை எங்கள் சார்பில் நறுக்கென்று எழுதி யிருத்திர்களே நன்றி .நிறையப் பேர் தலைவர் ஆகிவிட்டால் தனக்கு எல்லாமே தெரியும் என்ற இறுமாப்பும் குட வந்து விடுகிறதே என்ன பேசுகிறோம் என்பதைக் குட மறந்து விடுகிறார்கள் குமட்டிக்கொண்டு வருகுதைய அவர் பேசி யதைக் கேட்டு
உங்கள் கட்டுரைக்கு நன்றி ”மலேசியாவில்இன்னமும் சில ஆலயங்கள் மக்கள் பணத்தை வசுல் செய்து கொண்டு சொந்த குடும்ப சொத்துபோல் செயல்படுகிறார்கள் .தங்களை ஆலய குருஜி என்று சொல்லிக்கொண்டு ,சில மனைவிகளுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள் இதற்க்கு ஹிந்து சங்கத்திடம் எதாவது வழி உண்டா .
சமூக நலன் கருதிய நல்ல கட்டுரை. அநேகர் ஏங்கும் புதிய நிர்வாக மாற்றம் ஏற்பட நமது தமிழ்தினசரிகள் இந்த நிர்வாகத்தினருக்கு அடிவருடிகளாய் இல்லாமல், சமூக நலனையும் சமூக தன்மானத்தையும் மட்டும் கருத்தில் கொண்டு, அநேகர் ஏங்கும் இந்த நிர்வாகமாற்றம் காண உதவிட வேண்டும். நம் மக்களிடையே பல காரியங்களில் நல்மனமற்றம் ஏற்பட நமது தமிழ்தினசரிகளின் ஈடுபாடும் உதவியும் மிக2 அவசியம். இந்தக் கோவில் நிர்வாகத்தில் ஏதும் நடந்த, நடக்கின்ற உண்மையான ஊழல், தவறுகள், குறைகளை எடுத்து சொல்பவர்களுக்கு தினசரிகளில் நல்ல இடம் ஒதுக்க வேண்டும். அதபோல் நிர்வாகத்தினரின்மேல் கூறப்படும் குறைகூறல்கள் மறுப்பு செய்திகளுக்கும் அதே முக்கியத்துவம் அவசியம். இது நடந்தால் பொதுமக்கள் உண்மையில் என்னதான் அங்கு நடைபெறுகிறது என ஊகிக்க முடியும். இது நல்மாற்றம் ஏற்பட முதற்படியாகும். தமிழ் தினசரிகளே… உங்கள் சமூகநலன் காக்கும் ஈடுபாடு இன்னும் அதிகளவில் தேவை – அநேகர் ஏங்கும் இந்த மாற்றம் காண.
நல்ல கட்டுரை , உறைக்கட்டும் …… நாத்த ராசுக்கு !
10 வெள்ளலி பகிங் உனோட அழு வங்கி உனூட பர்கிட்ல சோறுத சொடுல உப்பு போடு சாப்ட நிட்சயம் நீ கோவிலுக்கு தலையவன இருக்க மாட்டன் முருகன் உன்னை கண்ணடிப துகிறுவன்
இதில் beema தான்,பிழை இல்லாமல் நல்ல கருத்துடன் எழுதி இருக்கிறார்
நல்ல கட்டுரை .தயவு செய்து புதிய வர்கள் வரவும் .40 ஆண்டுகள் போதாதா ?தமிழ் ப்பள்ளி மாணவர்களை உதவ முன் வரவும் .இது வரை உம்மை காப்பற்றியது முருகன் # நஜிப் இல்லை !ஹிந்து சங்கம் பனி படை எல்லாம் அருமை .முருகன் கோவிலை பிசினஸ் செய்யாதே.புதிய தலை முறை வந்தால் சிறப்பு .அறிவாளிகள் மற்றவர்கள் ஆலோசைகளை கேட்பார்கள் !!!!!!!!
[ம]நடராஜா நான் ம இ க உறுப்பினர் ,ம இ க வினர்களே என்னை மட்டரகமாக விமர்சித்தால் கட்சியிலிருந்து வெளியேறி விடுவேன் புதிய செய்தி,பழைய செய்தி[என்றாவது ஒரு நாள் என் அராஜகங்களும் கொள்ளைகளும் தெரிந்து விடும் என்பதால் தூர நோக்கு சிந்தனையுடன்]நான் இந்தியர் தொடர்பான ஒரு அமைப்பை உருவாக்கி தலைவனாக அரசாங்க மானியம் தங்கு தடை இல்லாமல் கிடைக் வழிவகைகளை அமைத்துக்கொண்டேன்,முடிந்தவரை வங்கி கணக்கை உயர்த்துவேன் கோவில் தலைவர் பதவியிலிருந்து என்னை வலுக்கட்டாயமாக விரட்டும் போது வங்கி கணக்கை பார்த்து பூரித்து போவன் நான் என்ன மடராஜாவா?பிரதமருடன் நேரடி தொடர்பில் இருக்கிறேன் !
இந்த தேங்கா டான்ஸ்ரீ பேசுவதை போல ஏற்கனவே வேர்கடலை டத்தோஸ்ரீ மண்டை குழம்பி ” எங்கே பராசக்தி , அந்த பராசக்தி வந்தாலும் இரண்டாக கிழித்து காட்டுவேன் ” என்று சவால் விட்டான் , அடுத்த வருடமே அதே பத்துமலையில் இவனும் குடும்பத்தோடு மேடை சரிந்து மண்ணை கவ்வினான் ! முருகன் பெயரை சொல்லி வயிர்களுவும் இவன் , அந்த முருகனையே பின்தள்ளி பேசுகிறான் , அடுத்து மண்ணை வாரி தலையில் போடா போகிறான் இந்த வடிகட்டின டான்ஸ்ரீ !!!!
அவனோட மூஞ்ச பாருங்க, பெரிய திருடன்னு எல்லோருக்கும் நல்லா தெரியும்.
நடராஜ நடக்க முடியாத ராஜாவாக வெகு காலம் இல்லை ,தான் என்ற மமதையில் வாழ்பவன் வெகு விரைவில் அழிவான் ,இந்த உண்மை வெகு விரைவில் தெரியும் ,இறைவன் இருக்கின்றார்
பல காலமாக பதவியில் இருக்கும் இவணனை முதலில் விரட்ட வேண்டும் பூனைக்கு யார் மணி கட்டுவது ,திரு குணராஜ் அவர்கள் ஆரம்பிக்கலாமே , திவிரம்மாக இறங்குங்கள் மக்கள் படை உங்கள் பக்கம்
உண்மையில் இந்த ஆளுக்கு மடரஜானு பெயரை மாத்தணும் ஏன்ன மடையன் மாதிரி பேசுரனுள்ள அதான்
முருகனுக்குப் பின்னால் பக்தர்கள்
நடராஜனுக்குப் பின்னால் காடையர்கள்
இதுதான் satu மலேசியா திருவிளையாடல்
இவரோட கதை இந்த வருடத்தோடு முடிந்தால் ,அடுத்த வருடம் எந்த முருகன் கோவிலில் ஆவது பால் கொடம் எடுக்கிறோம் சாமி
தலைவர் பதவியை தூக்குவதற்கு கௌண்டன் ஸ்டார்ட் ,,,,,,1 ,,,2 ,,,3,,,
சாமிநாதன் சொல் சாமி வந்து சொன்னதாக ஆகட்டும்.
மிக அருமையான கட்டுரை………. பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் இக்காலத்தில் இந்த நாற்றம் புடிச்ச naattharajavaana மட ராசா இதற்க்கெல்லாம் அசர மாட்டான்…… அவன் முகதத்தை பார்த்தாலே புரியலையா … பக்கா முள்ள மாறி என்று … பல சமயங்களில் அடி உதவுவது போல் உபதேசம் உதவாது… தூக்கி வீசணும் அய்யா இந்த திருடனை. … . .
நடக்க முடியாத நடரஜவெ , உன்னால் முடிந்தால் ரத ஊர்வலத்தில் நடந்து செல் , இல்லை என்றால் , விலகி நில் . உண்மையான தமிழனாக இருந்தால் , தமிழனே உன் காலனியை கழற்றி வைத்து பத்துமலையை ஏறு .
இந்த சமுதாயத்துக்கு தொண்டு செய்ய எவனும் வருவது இல்லை எவ்வாறு சொரண்டுவது என்று தான் வருகிறான்கள் ,இவன்களின் தூரநோக்கு
………சிந்தனை தெரியாமல் ஊட்டி வளர்த்துவிட்டு .அப்புறம் சாமிவேலு திருடி விட்டான் . நடராஜா திருடிவிட்டான் என்று கோசம் போட்டே முடி நறைத்து போய்விட்டது இந்த சமுதாயத்துக்கு ….
எல்லாம் வியாபார மாயம் ……தைப்பூசம் என்றாலே ஷூபிங் …..கடைகள் வியாபாரங்கள் …..இவர் கோயில் தலைவர் மட்டும் அல்லே ….பிசினஸ் மென் …..அதனால் இவர் இனிமேல் வியாபாரதில் முழு கவனதை செலுட்டதும்….கோவில் நிர்வாகத்தை சிறந்த ஒருவரிடம் கொடுபட்து நல்லது ..அதுவும் மகன் அல்லது அவரோட உறவினர் இல்லாமல் இருந்தால் சிறப்பு…………
………
பிமா எழுதிய கருத்து எந்த மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது? எவராவது விளக்கம் அளிக்கவும். நட ராசாவை நடக்க முடியாத ராசாவாக மாற்றுவதற்கு ஒரே வழி அவன் பணத் திமிரை ஒடுக்குவதுதான். சிந்திப்போம்! செயல்படுவோம்! கட்டுரை வரைந்த “அண்ணா” அவர்களுக்கு நன்றியும்,வாழ்த்துகளும்.வாழ்க வளமுடன்.
எவனெவனையோ போட்டு தள்ளறானுங்க.. யாராவது ஒரு நல்ல தெய்வம் இந்த நடநாயை போட்டு தள்ளக் கூடாதா முருகா.. எனக்கு இவனாலேயே நஜிப் மேல வெறுப்பு அதிகமாகுது.. மேடை மேலே ஏறி காண்டாமிருகம் மாதிரி கத்தின இவன்.. சமையம் தெரியாத மட்டி பலாக்கொட்டை.. பத்துமலைப் படியேறுபவர்களை சைத்தான்கள் என்றானே ஒரு குட்டிசாத்தான்.. அவனைப்பற்றி ஒரு வார்த்தைக் கூட அறிக்கை விட்டதாக தெரியலயே.. மலாய்க்காரன் லே.. அவன் செருப்பால் அடித்தால் கூட மன்னித்து மாலை போடும் மானம் இழந்த காங்கிரஸ் கரன்தானே இந்த மட்டிராஜா..
அருமையான கட்டுரை
பாராடுக்கள். பத்துமலை
முருகன் நாள் குறித்து விட்டான்.
நடராஜா மீது குறை சொல்வதற்கு முன் முதலில் ,உங்களை
நோக்கி குறை சொல்லிபாருங்கள் ,உங்களை போல உள்ள பக்தர்கள்
இருப்தால்தான் நடராஜா கம்பிரமாக நடைபோடுகிறார். இந்து மதத்தில் பத்து மலைக்கு தான் தை பூசத்தன்று செல்ல கூறப்பட்டுள்ளதா , ஏன் மற்ற முருகன் கோயிலுக்கு போக
கூடாதா ,அந்த கோயிலில் முருகன் இல்லையா ? ஒ மறந்து
விட்டேன் நைனா , வருவான் வடிவேலன் படத்தில் , பத்தினி
இரண்டை தவிக்க விட்டு அவன் பாய் மறக்கப்பலில் வந்துவிட்டான் , பத்து மலையில் குடி புகுந்து விட்டான்
என்ற பாடலை நைனா .
மிக தெளிவான கருத்தை யெடுத்ரைத அன்பருக்கு ஏன் முதல்கண் வணக்கம் உரித்தாகுக .முருக பெருமான் கையில் இருக்கும் வேல் நடராஜாவை குறி பர்துகொண்டிரிகரது ,என்பதை இப்போதாவது புரிந்திருகவேண்டும் ,நடராஜ !!! முடிந்தால் பணித்து போ இல்லை மடிந்து போ .
வணக்கம்,நடராஜ பணம் சுருடுணுது போதும்.தயவு செய்து அடம் பிடிக்கமா வெளியே போ போ போ போட.
இந்தக் கட்டுரை பொதுவாக பொறுப்பற்ற எல்லாக் கோயிற் றலைவர்களுக்கும் பொருந்தக் கூடிய நல்லக் கட்டுரை.இன்று இந்திய சமுதாயம் சமயம் கல்வி விவகாரத்தில் மட்டுமல்ல, பொருளாதாரத் துறையிலும் இவ்வளவுப் பாதிப்புக்களுக்கு ஆளானதற்கு இப்படிப்பட்ட பொறுப்பற்ற றலைவர்களும் முக்கியக் காரணம். இதில் பொறுப்பற்ற அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல. கடைசியில் பழி பாவம் எங்கே போய்ச் சேருகின்றது தெரியுமா? இன்று இந்திய சமுதாயம் இவ்வளவுப் பின் தங்கியதற்கு ஒருக் குற்றமும் செய்யாத நம் தாய் மொழி மீதும், தமிழ்ப் பள்ளிகள் மீதும் போட்டு விடுவார்கள்! இனி வரும் காலங்களிலாவது நம் மக்கள் விழித்துக் கொண்டு செயல் பட வேண்டும். கட்டுரையாளருக்கு மிக்க நன்றி.
“தைப்பூசத்தையும் பத்து மலையையும் சுற்றுலா அமைச்சிடம் நீங்கள் பாதி அடகு வைத்துவிட்டதை நாடே அறியும்”- மாண்புமிகு கோயிற் றலைவர் அவர்களே, தயவு செய்து இந்த குற்றச்சாட்டிற்கு மக்களிடம் பதில் சொல்லுங்கள். மக்களுக்கு விளக்கம் தேவை. கோயில் அரசியல் கூடாரமல்ல?
பழனிச்சாமி நைனா ,கோயில் அரசியல் கூடாரமாக இல்லையென்றால் அப்புறம் அரசியல் வாதி எங்கே போவான்
கோயில ,சுடுகாடு ,பள்ளிக்கூடம் இதில் எல்லாம் அரசியல்
புகுந்து விட்டது , தலைவனாக வர அவன் போட்ட காசை
வசூல் பண்ண கோயில் தலைவனாக வரும் அரசியல் வாதியை
அதிகம் ,என்ன செய்வது நைனா அரசியலில் எது எல்லாம் சாதாரணம் நைனா . ,
Nadarajah போல் தலைவன் இல்லையென்றால் நமது சமுதாயம் இன்னும் குடியில்லும் வெரியில்லும் தன முழுகி கிடக்கும்…பேசுவதும் புதிசொல்ல்வதும் சுலோபம் அண்ணல் காட்டி மேய்தல் தன தெரியும்.
நடராஜா போன்ற திருடன் களுக்கும் துரோகிகளுக்கும் புத்தி புகட்ட வேண்டும் என்றால் அவன்கள் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது–பத்து மலைக்கும் சேர்த்து தான் .
மகேந்திர புண்ணியவானே நீர் எங்கிருந்து பேசிக் கொண்டிருகின்ராய்? நடராசாதான் நம் சமூதாயத்தை “குடியிலும்” “வெறியிலும்” இருந்து காப்பாற்றினாரா? ஹிண்ட்ராப் தோழர்களை காட்டிக் கொடுத்து கண்ணீர் புகையில் கண்ணீர் விட வைத்ததை மறந்து விட்டீரோ? அண்ணாச்சி வாங்கிக் கொடுத்த “தாலி மேராவைப்” போட்டுக் கொண்டு நீர் மயக்கத்தில்தான் உம் கருத்தை எழுதி இருக்க வேண்டும். சும்மா இருந்த முருகன் தலத்தைக் குட்டிச் சுவராக்கி இன்று அது என்ன கோவில் என்று சொல்ல முடியாத அளவுக்கு கொண்டு சென்றது தான் அவரின் “மகாத்தான” செயல். இதுவா நீர் சொல்லும் கட்டிக் காத்தல் என்பது? அண்ணச்சி அங்கே பண்ண செலவுகளுக்கு அரசாங்க மானியமாக வந்த பணத்தை, மகனுக்கு ஒரு காண்ட்ராக், மச்சானுக்கு ஒரு காண்ட்ராக் என்று விட்டு சம்பாத்தித்து கட்டி மேய்க்க எங்களுக்கும் தெரியும். சிவன் சொத்து குல நாசம் என்பது அறியும் காலம் வந்து விட்டது அந்த ஊத்த ராசாவுக்கு. வேண்டிக் கொண்டிருகின்றேன்.
ரு தமிழன் நல்லயிருந்தால் எதற்குத்தான் இந்த வயதெருச்சல், நீங்களும் உழைத்து முன்னுக்கு வாருங்கள்..பொறமை படாதிர்கள்
மிகவும் அருமையான நினைவு மடல். தன்னலம் நீங்கி பொதுநலம் சேவை தொடரவேண்டும் . ொதுமகள் ஒற்றுமையுடன் சேர்ந்து இப்படிபட்ட கீழ்த்தனமா செயல்களை ஒலிதுகட்டவெண்டும்.
நடராஜா சமய அரசியல் நடத்துவதில் உமக்கு நிகர் நீரே என்று நிரூபித்து விட்டீர். இன்றைய தமிழ் பத்திரிக்கைச் செய்தி, திருமுறை விழாக்கள் பத்துமலையில் வருடா வருடம் நடக்கும். இது சாட்சாத் சமய அரசியல் நாடகம் என்று அறிந்து இருந்தும், சோ.சோ.மீ. போன்றவரும் சோரம் போகின்றனர். என்ன சொல்ல. இன்று சிவபெருமானை வைத்துப் பல கோவில்கள் பிரதோஷ பூஜை செய்து பணம் பறிக்கக் கற்றுக் கொண்டனர். இன்னும் பல, “three in one shampoo”, வெகு விரைவில் அறிமுகமாகும். ஆக மற்றக் கோவில்கள் பிரதோஷ பூஜை செய்து பறிக்கும் பணத்தில் நாமும் கொஞ்சம் சேர்ப்போம் என்று இப்பொழுதே முன்னோடியாக திருமுறை பெருவிழா வந்து விட்டது. வாழ்க உமது சிவ தொண்டு. ஏதோ ஒரு வகையில் சிவ பெருமானுக்கு இலவச அறிமுகம் கொடுப்பதில் எமக்கும் மகிழ்ச்சியே. அடுத்து சுயம்பு லிங்கத்துக்கு இலட்ச்ச அர்ச்சனை செய்து பணம் பறிக்க ஏதாவது ஒன்றை சீக்கிரமாக சிந்தித்து நிறைவேற்றவவும். இல்லையேல் மோகன் ஷான் முந்திக் கொள்வார்.
யானைக்கும் அடி சறுக்கும் …..மனதில் கொள் …..அடாத தடாஹ் மனிதாஹ் ….முருகன் உன்னை அடைக்கிருவண்ட மனித,,,,நேரம் வந்துகொண்டிருக்குதுட,,,,அடங்கு….மனித,,,,,பணம் நா பொனாம் குட வயதொரக்கும்மா…?
இரூகர வயசுல….மக்களக்கு நல்லதை நினை….நீ இறந்தாலும் உன் பேர் புகழட்டும்
காமராஜன் வாழ்ந்த வாழ்க்கைய….படித்து பார்……நீயும் இப்படித்த இறுக்க….உன் அண்ணா சாமிவேலு உம் இப்பிடித்தஹ …..நல்லதை நினை…நன்றக வருவாய்….மக்கள் பணத்தை…அழாதே ….
……
கோவில் தலைவர் திருநடராசா கடந்த 40 ஆண்டுகளாக பத்து மலை திருக்கோவில் நிருவாகத்தை வழிநடத்தி கட்டிக் காத்து வந்த, கட்டிக் காத்துக் கொண்டிருக்கிற ஒரு பச்சைத் தமிழர். அடுத்த தமிழர் தலைமுறைக்கு சைவ சமைய அறிவு ஏற்பட முனைப்பாய் தொண்டு செய்திடு. சிவ தொண்டாற்று. உன் பெயருட்க்கேற்ப! நீர் வீழ்ந்தாலும்
தமிழனிடமே வீழ்.வெற்றி நிச்சயம்.
திருட்டு திராவிடன்ஸ் ஆல் ரைபனுரங்கோ பத்துமலைய களோபரம் பண்ண ..
நடராச விளித்துகொள் .
தமிழர் தீ கருத்து படி வாளுபாறு நடராச
ருசி கண்ட பூனை, 41 வருடமானாலும் பால் இருக்கும் இடத்தை விட்டுப் போகாது. இது சேவையால் ஏற்பட்ட ஆர்வம் அல்ல, பசி தேவையால் ஏற்பட்ட ஆர்வம்
கோயில் நடராஜா மடையன் இல்லே நைனா ,ஒரு மடையனால் எப்படி மற்றவனை ஏமாற்ற முடியும் ,ஏமாந்தவன் தான் மடையன் , நீ ஏன் நைனா அவன்
கோயிலுக்கு தைபூசம் அன்று போகிற ,ஏன் மற்ற கோயிலில்
முருகன் இல்லையா .மற்ற முருகன் கோயிலுக்கு தைபூசம் கொண்டாடாமால் எல்லோரும் நடராஜா கோயிலுக்கு செல்வதால் தான் அவனுக்கு திமிரு தலைக்கு மேலே ஏறிவிட்டது , முருகன் பத்துமலையில் மட்டுமா குடிகொண்டு இருக்கிறான் நைனா ,