மாண்புமிகு கமல நாதருக்கு ஒரு கடிதம்…!

kamalanathanஅன்புள்ள மாண்புமிகு துணை அமைச்சர் கமலா நாதரே வணக்கம். உடலும் உள்ளமும் நலமா கமலா? மூஞ்சியிலே குத்து வாங்கிய தழும்புகள் மறைந்துவிட்டதா கமலா? குத்தியவன் , இடம் பார்த்து குத்தியதாக தகவல் அறிந்த ஒற்றர்கள் கூறினார்கள்! வேளா வேலைக்கு மருந்தை மறக்காமல் சாப்பிடுமையா, சரியா?

அது சரி கமலா, வீட்டில் என்ன உப்பை குறைத்து போட்டு சமைக்கிறார்களா என்ன? கொஞ்ச நாட்களாகவே ரத்த சோகை வந்த மாதிரியே இருக்கிறீரே …அதற்காகத்தான் கேட்டேன்!

சரி, கமலா…என்ன இப்படி செய்து விட்டீர் ? மானத்தை வானத்தில் பறக்கவைத்து விட்டீரே ! மீண்டும் அடி வாங்கி விடுவோமோ… அடித்தவனே மீதும் மூஞ்சிலே குத்தாத இடத்தில் குத்திவிடுவானோ… என்ற பயத்தில் பின் வாங்கிவிட்டீரோ கமலா ? அல்லது உமது சொதப்பல் எஜமான் மொக்கை முகதீன் உம்மை மிரட்டி ‘அவன் மன்னிப்பு கேட்க மாட்டான்…நாங்கள் நாட்டின் மைந்தர்கள் …மன்னிப்பு கேட்காத பரம்பரை..நீயே அவனை மன்னித்துவிடு…அடுத்த தேர்தலிலும் உனக்கு சீட்டை தருகிறேன்” என்று கூறிய இனிப்பு வார்த்தைகளுக்கு அடிபணிந்து மீண்டும் அவனது கைகளை நீர் உமது பிரசித்திபெற்ற முத்த மழையால் கழுவி, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி அறிக்கையை நல்ல நேரம் பார்த்து வெளியிட்டீரோ கமலா?

kamalanatahanகமலா…கமலா…கமலா…என்ன இப்படி சொதப்பிவிட்டீர் கமலா? உம்மை என்ன விருமாண்டி கமால் மாதிரி அருவாளோடு உமது மூஞ்சிலே குத்தியவனை வெட்டிவருவீர் எனவா எதிர்பார்த்தோம்? எங்களை நீர் மீண்டும் முட்டாளாக்கிவிட்டு நன்றாக ஏமாற்றிவிட்டீர் கமலா! இவ்வளவு நடந்த பின்பும் உமக்கு ரோஷம் வந்திருக்கும், பய புள்ளே வீறுகொண்டு ” ஒரு மந்திரியாகிய என்னை , மக்கள் பிரதிநிதியான என்னை அடித்தது , மூஞ்சிலே எக்கசக்கமாக குத்தியது மக்களை குத்தியதற்கு சமம், எல்லா மந்திரிகளையும் குத்தியதற்கு சமம், இந்த பாவ பட்ட இந்திய சமுதாயத்தை குத்தியதற்கு சம்மம்” என்று பேசி… ” இந்த காவல் துறை தனது கடமையை செய்யும், இனியும் எவனும் இந்த மாதிரி நடந்துகொள்ளகூடாது” என்று புத்திசாலித்தனமாய் சொல்லுவீர் , செய்வீர் என்று எண்ணி , எதிர்பார்த்து ஏமார்ந்து போனோம் கமலா …ஏமார்ந்து போனோம்!

தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர் கமலா ! அடித்தவனை உடனே மன்னித்துவிட்டேன்’ன்னு நீர் அறிக்கை விட்டால் , கல்வி அமைச்சின் துணை அமைச்சர் என்ற பார்வையில் நீர் மாணவர்களுக்கு நல்லதோர் நெறிப் பண்பினையை வலியுறுத்த அற்புத சந்தர்ப்பமாக இருக்கும், இந்த நாடே உம்மை மெச்சும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியிலே நீர் ஒரு நாயகனாக உலாவருவீர் என்று தப்பு கணக்குபோட்டு ‘மூஞ்சியிலே குதியவனை மன்னித்துவிட்டேன்-ன்னு அறிக்கை விட்டீரோ கமலா? இந்த அறிக்கையின் வாயிலாக உம்மை பார்த்து சிரித்தது இந்த மாணவர் சமுதாயம்தான்! இனி நீர் பள்ளியிலே நடக்கும் நிகழ்வில் , மேடை ஏறி பேசும்போது அங்குள்ள ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் உம்மை பார்த்து ஒரு ஏலனசிரிப்பை வீசுவார்கள்… மூஞ்சியிலே குத்தி வாங்கிய நீர் அதையும் வாங்கி அதற்கும் நீர் மறு சிரிப்பை வழுங்குவீர் என்பதும் தெரியும் கமலா!

kamalanஏற்கனவே இந்த இந்திய சமுதாயம் உமது கையாலாகாதத் தன்மையை தமிழ் பள்ளிகளின் விசயத்திலும் , பிள்ளைகள் கக்கூசில் சாப்பிட்ட விசயத்திலும் இந்த உலகே உம்மை பார்த்து வியக்கும் வண்ணம் செய்துவிட்டீர் கமலா!! …அந்த விசயத்தில் உமக்கு ‘யு டியூபிலும்’ , ‘கூகல்சிலும்’ , ‘யாகூவிலும்’, FB – யிலும் இலவச இணைப்பு மாதிரி அபரீத விளாசல் கிடைத்ததே, மக்கள் உம்மை துவைத்து மின்சாரக் கம்பியிலே காயப் போட்டார்களே.. …அப்போதுகூடவா நீர் திருந்தவில்லை ! என்ன கமலா இது…நீர் பழனியைவிட ரொம்ப மோசமாக இருக்குரீரே ! உம்மை ரொம்ப ரோஷமுள்ள பய புள்ளேன்னு நினைத்தது ரொம்ப தப்பா போச்சே கமலா..!

மன்னிக்க தெரிந்த மனதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா-ன்னு எங்களுக்கும் பாடத் தெரியும் கமலா.! மன்னிப்பது மாந்தர் குலத்தின் மிகப் பெரிய தன்மை.ஆனால் பயத்தால்….. , பெயர், பதவி, புகழ் போய்விடுமே, கார் , பங்களா, சொத்து போய்விடுமே, சீக்கிரத்தில் கிடைக்கவிருக்கும் பட்டங்கள் பறி போய்விடுமே என்ற அச்சத்தில் உம்மை மூஞ்சிலே எக்கசக்கமாக குத்தியவனை…அவன் மன்னிப்பு கேட்காமலேயே..பிறர் வற்புறுத்துதலின் பேரிலும் ‘அவனை மன்னித்துவிட்டேன் ‘ என்று கூறியது உன்னை குத்தியவனே உம்மை பார்த்து சிரித்திருப்பான்…குத்தியவனின் சமுதாயம் நமது இனத்தின் கூஜா தூக்கும் வழக்கத்தை எண்ணி எண்ணி சிரித்து காறித் துப்பியிருப்பான்!

இனி என்ன…? இந்திய தலைவர்கள் குத்து வாங்கினால், அடி உதை வாங்கினால்…”குத்தியனை மன்னிப்பது எப்படி?’ – ன்னு வகுப்பு நடத் போறீரா கமலா? உம்மை இந்த நாட்டில் இனி வருங் காலங்களிலே, அரசியல் மேடையில் ஒரு ‘டம்மி’ பீசாகத்தான்’,… ; கஞ்சா கருப்பு- மாதிரி ஒரு ‘காமடி’ பீசாகத்தான் பலரும் பலர் இனி பார்க்கப் போகிறார்கள்!!

உனது தாய் கேட்டிருந்தாலும் ” உன்னை இதற்காகவே பெற்றேன் அட மட பய புள்ளையே…எண்டா இப்படி சொரனையே இல்லமே இருக்கே ” என்று அந்த நல்ல தாய் தனியாக அழுது புலம்பியிருப்பார்!
“என்னடா இப்படி ரோசம் கெட்டத் தனமாக ‘மன்னிச்சுட்டேன், விட்டுடுங்கோன்னு’ சொல்லிட்டு வந்திருக்கே, நீ என்ன மாங்கா மடையனா ‘-ன்னு உமது அன்புள்ள அப்பாவும் சொல்லி சுவற்றில் முட்டி மோதியிருப்பார்!!

கமலா… உமது மூஞ்சியிலே குத்தியவனை மன்னிக்க வேண்டாம் என்று இந்த சமுதாயம் ஒருபோதும் சொல்லவில்லை, பழிக்குப் பழி வாங்கவும் கூறவில்லை! ….அவன் உம்மிடம் பகிங்கிரமாக மன்னிப்பு கேட்டு , தகுந்த சட்ட எச்சரிக்கை நடவடிக்கைக்கு பிறகு நீர் மன்னித்திருந்தால் உம்மை இந்த இந்திய சமுதாயம் வாழ்த்தியிருக்கும், மதித்திருக்கும்! எச்சில்பட்ட சம்பவத்தை மறந்துகொண்டிருந்த வேலையில் மீண்டும் சொதப்பிவிட்டீரே கமலா !

உமக்கு தெரியுமா கமலா….
உமக்கு மூஞ்சியிலே குத்து விழுந்த போது இந்த இந்திய சமுதாயமே கொதித்து போனதே! அந்த குத்து இந்தியனுக்கு விழுந்த குத்து, இந்த சமுதாயத்திற்கு விழுந்த குத்து…இந்த சமுதாயத்தின் தலைவன் ஒருவனை , ஒரு மரியாதைக்குரிய மந்திரியை கை வைத்துவிட்டானே என்று வேதனையில் தூய எண்ணத்தோடு துடி துடித்துபோனதே இந்த பாலும் சமுதாயம்……உமக்கு ஒன்றுமே தோணவில்லையா…? அல்லது நீர் இப்படித்தானா ? சூடு சொரணை.. மானம் ஈனம்… கோபம் ரோஷம்… ஏதாவது…. ? கமலா…சொல்லுமையா.?!!!

இப்படிக்கு,
(மீண்டும்) வேதனையுடனும் ( மீண்டும்) ஏமாற்றத்துடனும் …..
-அண்ணா.