மு. குலசேகரன், நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் பத்திரிகை கடந்த 19ந் தேதி, காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து பெர்னாமாவை மேற்கோள்காட்டி செய்தி ஒன்றை எழுதியிருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் காட்டுமிராண்டித் தனமாகவும், அடாவடித்தனமாகவும் நடந்துகொண்டாதாகக் கூறியுள்ளது.
அதையே வாசகர்கள் கடிதம் அங்கத்தில் 24 ஆம் தேதி அன்று ஒரு வாசகர் அங்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் என பொருள்பட சாடியிருந்தார்.
இந்தியர்கள் ஒன்றுகூடி தங்கள் உரிமையை இந்த நாட்டில் நிலைநாட்ட தெருவுக்கு வந்தால் அது அடாவடித்தனம், காட்டுமிராண்டித்தனம். ஆனால், எத்தனையோ முறை பெர்காசா போன்ற அமைப்புகள் தெரிவில் கூடி ஆர்ப்பாட்டம் செய்திருந்தும் அதனை பற்றி நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் பத்திரிகை எழுதுவதில்லை. அப்படியே எழுதினாலும், அதனை பாராட்டியே எழுதுகிறது. முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் வீட்டின் முன், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பிட்டத்தை காட்டி அசிங்கமாக நடந்து கொண்டதை நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் ஏன் கண்டித்து எழுதவில்லை ?
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து நடுநிலையாக செய்தி வெளியிடுவது நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் போன்ற பழம் பெரும் பத்திரிக்கைகளின் தருமமாக இருந்திருக்கவேண்டும.
அப்பள்ளிவளாகத்தில்அப்படிஒருபோராட்டம்நடத்தவேண்டியகட்டாயத்தில்இந்தியர்கள்இருந்தார்கள்என்பதனைபெர்னாமாவும்அதனைசெய்தியாகவெளியிட்டநியூஸ்ட்ரேட்ஸ்டைம்ஸும்ஏன்உணரமறுக்கின்றன?
ஒருதமிழ்ப்பள்ளியின்நிலம்மேம்பாடுஎன்றபெயரில்சுரண்டப்படும்போதுதமிழ்உணர்வுள்ளவர்கள்யாரும்பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். அதோடு, மாற்றுநிலம்கொடுத்துவிட்டோம்என்றுவாய்வழிகூறிநிலத்தைஅபகரிக்கபெரியஇயந்திரங்களைக் கொண்டுவந்துமிரட்டுவதுதான்அநாகரிகம், அடாவடித்தனம்.
ரிம20 மில்லியனுக்குமாற்றுநிலத்தோடுகட்டடத்தையும்கட்டித்தருகிறோம்என்றுசொன்னபிராசாரனஇலகுரயில்கம்பெனிஅதைமுன்பேஎழுத்துவடிவில்கொடுத்திருந்தால்இந்தபிரச்சனைபற்றிநியூஸ்ட்ரேட்ஸ்டைம்ஸ்பத்திரிக்கைஎழுதவேண்டியஅவசியம்இருந்திருக்காது. இதுகுறித்துபெர்னாமாவோ, நியூஸ்ட்ரேட்ஸ்டைம்ஸ் பத்திரிகையோஒன்றும்குறிப்பிடாததுஅவர்களின்ஒருதலைபட்சாமானகொள்கையைப்பிரதிபலிக்கிறது.
அன்றுஅப்படிம.இ.கா. இளைஞர்பகுதிமுன்னாள் தலைவர்டிமோகன்தலைமையில்போராட்டம்நடத்தப்படவில்லையென்றால், அந்தகாசல்பீல்டுபள்ளிதனது ¼ ஏக்கர்நிலத்தைஅந்தபிராசாரானகம்பெனிக்குதாரைவார்க்கவேண்டிவந்திருக்கும். அதோடு, வாக்குறுதிகொடுக்கப்பட்டநிலமும்இன்னனும்இழுபறியில்தான்இருந்துகொண்டிருக்கும்.
அதோடுமாணவர்களும்நிம்மதியற்ற, 10 நிமிடத்திற்கொருமுறைஓடிக்கொண்டேஇருக்கும்ரயில்சத்தத்திற்கிடையில்பாடங்களைபயிலவேண்டியிருக்கும். இதுஎவ்வளவுபெரியநீண்டகாலஉளரீதியானபாதிப்புகளைஅங்குபயிலும்மாணவர்களுக்கும், கற்றுக்கொடுக்கும்ஆசிரியர்களுக்கும்ஏற்படுத்தியிருக்கும்என்பதனை, அந்தஆர்பாட்டத்தினைகண்டித்துஎழுதியநியூஸ்ட்ரேட்ஸ்டைம்ஸ்பத்திரிக்கையும்அந்தவாசகரும்உணர்ந்திருப்பார்களா?
டிமோகன்தலைமையில்அப்படிஒருபெரியஆர்ப்பாட்டம்நடந்ததால்தான்மறுநாளேம.இ.காஉதவித்தலைவர்டாக்டர்சுப்ரமணியம்புதியபள்ளிகட்டிடத்திற்கானஒப்பந்தத்தில்கையிடுமாறுபிராசரானா நிறுவனத்திற்குகட்டளையிட்டார். அந்தவகையில்டி.மோகனைநான்பாராட்டித்தான்ஆகவேண்டும். நான்எதிர்க்கட்சிக்காரனாகஇருந்தபோதும், தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழிஎன்றுவரும்பொழுதுநான்எப்பொழுதும்கட்சியின்கண்ணாடிகொண்டுபார்ப்பதில்லை. ஒருதமிழன் காப்பாற்றமுன்வருகிறார்என்றால்,அவருக்குஎன்ஆதரவுஎன்றும்உண்டு.
நியூஸ்ட்ரேட்ஸ்டைம்ஸ்பத்திரிகைதனதுநடுநிலைமையானபோக்கைவிட்டுவிட்டுஅம்னோவுக்கும்ஆளும்கட்சிக்கும்ஜால்ராஅடிப்பதுஇப்பொழுதெல்லாம்வாடிக்கையாகிவிட்டது. அப்பத்திரிகையின்செயல்வன்மையாககண்டிக்கத்தக்கது.
இந்தியர்கள்என்றுவரும்பொழுதுநாம்எல்லாவற்றையும்போராடித்தான்பெறவேண்டியிருகிறதுஎன்பதற்குகாசல்பீல்டுதமிழ்ப்பள்ளிஒரு நல்லஉதாரணம்.
தமிழர்களும் தமிழ்ப்பள்ளிகளும் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு ஆதரவாக நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் எழுதாவிட்டாலும் அவற்றை சீண்டிப்பார்க்காமல் இருப்பது அவற்றுக்கு நல்லது.
நீங்களாவது மா.இ.கா காரனை கட்சி பேதம் இல்லாமல் பாரடுகிரிர்கல்.அஹ்னால் அந்த மரமண்டைகலகு இது எல்லாம் தெரியுமா ?
தமிழ் பள்ளியும், மலேசியா இந்திய அரசியலும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிகொண்டுள்ளது…. தீர்வு என்னவென்றால் ….இந்தியர்கள் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் …ஒரு குடும்பத்தில் குறைந்த பட்சம் 4 குழந்தைகள் குறையாமல் இருப்பது நல்லது ….அந்த 4 குழந்தைகளும் தமிழ் பள்ளியில் சேர்ந்து படிப்பதை பெற்றோர்கள் உறுதி படுத்தவேண்டும் ……மலேசியா இந்திய அரசியல் கட்சிகள் அரசியல் வேறுபாடு இன்றி ஒன்றிணைந்து ஊக்குவிக்கவேண்டும் …..
மஇக திரு டி,மோகன் தனது மூர்க்க குணத்தை தீயிட்டு விட்டு நல்லதையே பேசி நல்லதையே செய்வார் என்று எதிபார்த்து என் அன்பான நல் வாழ்த்துக்களை கூறுகிறேன் !
இது ம இ காவில் நடக்கும் போராட்டத்தை சித்தரிக்கும் action comedy திரைபடம் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிகர் பழனிவேல் மற்றும் அவர்தம் குழுவினர்,திரை கதை வசனம் ச mee & the gang!
காசல்ட்பீல்ட் தமிழ் பள்ளியின் முன் நடந்த மறியல் அமைதியான முறையில்தான் நடந்தது. அந்த அமைதி மறியலில் நானும் இருந்தேன் என்பதால் இதை இங்கே எழுதுகிறேன். ஆரம்பத்தில் பதட்ட நிலை இருந்தது என்பது ஓரளவு உண்மைதான். அந்த பதட்ட நிலையை வேண்டுமென்றே அதிகபட்ச நிலையில் காட்ட வேண்டும் என்பதற்காகவே போலீஸ்காரர்களும் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும் குவிக்கப் பட்டார்கள் என்பதே எனது கண்ணோட்டம். இப்படி போலீசையும் சிறப்பு பாதுகாப்பு படையையும் முன்கூட்டியே அங்கு குவிப்பது மற்றவர்களுக்கு உள்ளூர பயதத்திணை ஏற்படுத்தவும், அங்கு வர எத்தனிப்பவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வராமல் தடுப்பதற்கும் எடுக்கபட்ட நடவடிக்கை , இது இவர்களுக்கு கைவந்த கலை!
நியூஸ் ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ், தி ஸ்டார், உத்துசான் போன்ற அரசாங்க கூஜா பத்திரிக்கைகளில் நியாயமான , நடுநிலை , உண்மை செய்திகள் வரும் என்று எதிர்பார்ப்பது நடக்காத ஒன்று! குலா சொல்வது போல் பெர்காசா, அம்னோ இளைஞர் பிரிவினர் ஆர்பாட்டம் செய்தால் அது தேசத்திற்காக போராடும் அங்கமாக சித்தரிக்கப் படுகிறது!
குலா அவர்களே, எதிகட்சியில் இருந்தாலும் தமிழ் பள்ளிக்காக குரல் கொடுத்து, பள்ளி வாரியத்தோடு தக்க நடவடிக்கையை எடுக்க உதவியாக இருந்த டத்தோ T . மோகனை வெளிப்படையாக பாராட்டியிருப்பது உங்களின் மாண்பை காடுகிறது. அதே நேரத்தில் அன்றைய போராட்டத்தில் , திரு . ஆறுமுகம் அவர்களும் வழக்குரைஞர் மனோ அவர்களும் சட்ட விஷயங்களை எடுத்துக்கூறி அங்குள்ள போலீஸ்காரர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் உண்மை நிலவரத்தை விளக்கி சொன்னபோது அந்த மறியல் நியாயமான ஒன்றாக மாறியது. உடன் இருந்த டத்தோ T . மோகனும் ஆதரவாளர்களும் தமிழ் மொழிக்காக இணைந்து போராடிய காட்சி இருந்தவர்களின் மனதில் ஒரு நம்பிக்கையை தந்தது. அதே நேரத்தில் டத்தோ T . மோகன் தமிழுக்காக ஒன்று சேர்ந்து போராடும் எதிகட்சி தலைவர்களான அந்த இருவரையும் பாராட்டி பேசியது வரவேற்கத்தக்கது.
‘இருள்..இருள் என்று இருளை சாடுவதை விட…ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்போம்!”
ஒய்.பி. குலா அவர்களே..! ஸ்டெட் டைம் பத்திரிக்கையை தமிழர்கள் வாங்க கூடாது என ஒரு போராட்டத்தை தொடங்கலாமே..?
இப்போ ஆன்லைன் செய்தி மக்கள் படிக்கிறார்கள்,
பத்திரிகையாளர் ஞாபகம் கொள்லட்டும்!
அம்னோ பத்திரிகை வேறு என்னதான் செய்யும்!!!! சிறுபான்மை குடிமக்களை அம்னோ எப்போதே தனது ஏட்டிலிருந்து எரித்துவிட்டது…
மானமுள்ள இந்தியன் இப்பத்திரிகையை புறக்கணிக்க வேண்டும்..!!!
அம்னோ பேப்பர் …அப்படித்தான் எழுதுவான்….உண்மை நிலவரத்தை ஆன்லைன் படிச்சி தெரிஞ்சுக் கொள்ளுங்க…!!!!!
இந்தியனை மதிக்காத இப்பத்திரிகையை புறக்கணிக்க வேண்டும்..!!! முதலில் இதை படித்தவர்கள் செய்வார்களா? ஒற்றுமை குறைந்த சமுதாயமாக விளங்கும் நம்மவர்கள் தயவு செய்து சற்று யோசியுங்களேன். படித்த பலர் இதையெல்லாம் எங்கே கவனிக்கின்றனர்.