பொதுப்பிரச்சனையா…….? பொறுப்போடு நாம் நடந்து கொள்ள வேண்டும்.
நாம் எல்லாப் பிரச்சனைகளிலும் ஒன்று படாமல் பிரிந்து கொண்டிருக்கிறோம். ஒரு பொறுப்பற்ற சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நாமே சிறந்த எடுத்துக்காட்டு!
இப்படிப் பொறுப்பற்ற ஒரு சமூகமாக எப்படி வளர்ந்தோம், எப்போது வளர்ந்தோம் என்பது ஆராய்ச்சிக்குரியது!
இந்த இனம் ஒர் ஒற்றுமையில்லாத, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்னும் நிலைக்கு எப்படி வந்தது என்பது புரியாத புதிர்!
எடுத்ததற்கெல்லாம் சண்டை, எடுத்ததற்கெல்லாம் விதண்டாவாதம், தலைக்கனமானப் பேச்சு, அடாவடித்தனம், ஒன்றுமே தெரியாமல் எல்லாமே தெரிந்தது போல் பேசுவது, கையில் கால்காசுக் கூட இல்லை ஆனால் பேசுவதோ இந்த நாட்டையே வாங்கிவிடுவது போன்ற பேச்சு, நல்லது நடக்கும் போது மூக்கை நுழைத்துக் குட்டையைக் குழப்புவது இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் கொண்டவர்கள் தாம் நாம்; நமது இனம்!
நல்லது நடக்கும் போது நாலு நாசக்காரர்கள் உள்ளே புகுந்து விடுகின்றனர். குட்டையைக் குழப்புகின்றனர். இப்போது நல்லதும் நடக்கவில்லை. நடக்கவிருந்ததையும் நாசமாக்கி விட்டனர்.
எடுத்துக்காட்டு: ஒரு பள்ளிக்கூடம். மாணவர் நலன் கருதி புதிய, பெரிய பள்ளிக்கூடம் கட்டப்படுகிறது. இப்போது இருக்கும் இடத்தைவிட கொஞ்சம் தூரம். ஆபத்து ஆரம்பாமாகி விட்டது! இந்தத் தூரத்தை வைத்து ஒரு நாடகம் அரங்கேறுகிறது! தலைமை ஆசிரியர் தனது தலைமைப் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்னும் பயம். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவரைக் கலந்து ஆலோசிக்கிறார்; தூண்டி விடுகிறார். புதிய பள்ளிக்கூடத்தைக் குறை சொல்ல முடியாது. கல்வி அமைச்சைக் குறை சொல்ல முடியாது. தூரம் ஒன்று மட்டுமே அவருக்குக் கிடைத்த ஆயுதம். தன் மேல் எந்தக் குற்றமும் வரக்கூடாது. அதே சமயத்தில் காயைச் சாமர்த்தியமாக நகர்த்த வேண்டும்.
பள்ளிகூடம் தூரம் என்பதால் மாணவர்கள் பள்ளி போவது பாதிக்கப்படும். குறைவான மாணவர்களே அங்கு போவார்கள்.
(பெற்றோர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று சொல்லவில்லை).
புதிய பள்ளிக்குக் போக போக்குவரத்து செலவு ஆகும். பிள்ளைகளுக்குப் போகவர ஏதாவது காசு கொடுக்க வேண்டும். பாவம்! எல்லாம் ஏழைகள்! எப்படி அவர்களாள் சமாளிக்க முடியும்?
(தலைமை ஆசிரியர், தமிழ்ப்பள்ளி என்றால் ஏழை தான் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவான் என்று முத்திரைக்குத்தி விட்டார்!)
ஒர் ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி ‘எதற்கும் அவரைப் போய்ப் பாருங்கள். உதவினாலும் உதவுவார். அவரால் முடியாததா! இல்லைன்னா எதீர்க்கட்சிக்காரன போய்ப் பாருங்க! நீங்க வாயைப் பொத்திக்கொண்டு இருந்தீங்கனா உங்கத் தலைக்கு மேல ஏறுவானுங்க! எல்லாம் உங்கக் கையிலத்தான் இருக்கு!’ என்று பெற்றோர்களை உசுப்பி விடச் சொல்லுவார்!
ஆக, அதை ஓர் அரசியல் பிரச்சனையாக்கி, பெற்றோர்களைக் கொடிப்பிடிக்க வைத்து, இங்கும் இல்லே! அங்கும் இல்லே! என்று ஒரு நிலையை உருவாக்கி, மாணவர்களைக் காட்சிப் பொருளாக்கி, பத்திரிக்கைகளில் போட்டு வதம் பண்ணியாகி விட்டது.
இது ஒரு பொதுப்பிரச்சனை. கல்விப்பிரச்சனை. நமது மொழி சார்ந்தப் பிரச்சனை. தமிழ் மாணவர்களின் எதிர்காலப் பிரச்சனை. பெற்றவர்களின் குழந்தைகளின் பிரச்சனை.
இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவில்லை அந்தத் தலைமை ஆசிரியர். தனது சுயநலத்தின் முன்னே எந்தத் தடையையும் உடைக்க அவர் தயார். அவர் தனது தலைமை ஆசிரியர் பதவியைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். அவர் வீட்டிற்கும் இப்போது இருக்கும் பள்ளிக்கும் சிறிதளவே தூரம். பள்ளிவிட்டுப் போகும் போது தேசியப்பள்ளியில் படிக்கும் தனது பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போக முடியும். அப்படியே தனது மனைவி பணி புரியும் பள்ளியிலிருந்து அவரையும் அழைத்துக் கொண்டு போக முடியும். ஒரு மாற்றம் என்று வரும் போது அனைத்தும் அடிப்பட்டுப் போகும். அவருடைய செலவுகள் அதிகரிக்கும்.
‘எனக்கு எனது வாழ்க்கை தான் முக்கியம். இதையெல்லாம் பார்த்தா ஒன்றும் நடக்காது. இவன்களை எல்லாம் நம்பினா நாம நாலுக்காசு பார்க்க முடியாது” என்பது தலமையாசிரியரின் நிலை.
இன்னொரு எடுத்துக்காட்டு: பெண்மணி ஒருவர் தனது மகளை வெளிநாடு ஒன்றுக்கு மருத்துவம் படிக்க அனுப்பிவைத்தார். வெற்றியும் பெற்றார். பாராட்டப்பட வேண்டியவர். நல்ல முயற்சி.
அவரின் நண்பர் ஒருவர் தனது மகளை மருத்துவம் படிக்க வெளிநாடு அனுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார். வழிமுறை தெரியவில்லை. ஏற்கனவே அனுபவமுள்ள அந்தப் பெண்மணியை நாடினார். ஆச்சரியம்! அந்தப் பெண்மணியிடமிருந்து ஒரு பதிலும் கிடைக்கவில்லை. எந்த ஒரு சிறிய தகவல் கூட அவரிடமிருந்து வரவில்லை. உண்மையைச் சொன்னால் அவர் வாயைத் திறக்கவில்லை! இத்தனைக்கும் அவர் கொஞ்சம் விவரமானப் பெண்மணி. கடைசியில் அந்த நண்பர் பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அவர்களின் உதவியை நாடினார்.
இது தான் நமது பிரச்சனை. நமது இனம் தமிழ்ப் பத்திரிக்கைகளில் வருகின்ற விளம்பரத்தைப் பார்த்து ஏன் ஏமாறுகிறது என்பது இப்போது புரிகிறது அல்லவா!
நாம் பேச்சில் வல்லவர்கள். ஒருவருக்கொருவர் உதவுவதில், செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுவதில் வில்லன்மார்கள்! ஒருவர் மேற்கல்விப் பயில நாம் உக்குவிக்க வேண்டும். அது நமது கடமை. நமது நண்பர்களுக்கு, நமது உறவுகளுக்கு, நமக்கு அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் கூட, அவர்களின் முன்னேற்றத்திற்கு, நாம் உதவத்தான் வேண்டும்.
எதற்கெடுத்தாலும் போட்டி, பொறாமை! அதுவும் நமது இனத்திற்குள்ளேயே! நமது இனத்தவன் டாக்டாரவது, வழக்கறிஞராவது, தொழில்அதிபராவது, கோடிஸ்வரனாவது நமது இனத்திற்குப் பெருமைதானே! அது அவன் சொந்த உழைப்பல்லவா?
நமது இனத்தவன் நல்ல நிலையிலிருந்தால் அவன் நாலு பேருக்கு உதவ முடியுமே. அந்தக் கண்ணோட்டத்தில் அனைத்தையும் பாருங்கள். ஒரு தமிழன் கெட்டுப்போனால் அதனால் யாருக்கு என்ன நன்மை?
அனைத்தையும் ஒரு சமூக கண்ணோட்டத்தோடு பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை நாலு பேருக்குத் தெரியப் படுத்துங்கள்.
நமது மக்கள் முன்னேற வேண்டும். அது தான் நமக்குத் தேவை. நமது இளைஞர்களைப் பற்றி மிகவும் கோபப்படுகிறோம். அவர்களுக்கு நாம் வழி காட்ட வேண்டும். அரசாங்கம் கொடுக்கின்ற வாய்ப்புக்களை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.
ம.இ.கா. தான் செய்ய வேண்டும் என்று நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. அவர்கள் கண்ணோட்டம் வேறு.
நமக்கு நாமே உதவி என்பார்கள். நமது குடும்பத்திற்கு மட்டும் அல்ல நமது சமூகத்திற்கும் நாம் தான் உதவி.
நமது சமூகத்தின் முன்னேற்றம் நமது கையில். அந்தப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது. அந்தப் பொறுப்பு யாருக்கும் குத்தைகைக்கு விடப்படவில்லை.
இன்று இந்த சமூகம் தலைக் குனிந்து நிற்பதற்கு நாம் அனைவருமே பொறுப்பு. காரணம் நாம் பெரும்பாலும் சுயநலவாதிகள்; பொறுப்பற்றவர்கள்; பொதுநலத்தைச் சிந்திக்காதவர்கள். ஏழைகளை ஏப்பம் விடுபவர்கள்.
நாம் மாறத்தான் வேண்டும். இழி மகன் என்று பெயர் எடுக்க வேண்டாம். பொறுப்போடு நடந்து கொள்ளுவோம்.
(கோடிசுவரன்)
நன்றி கோடிசுவரன் அவர்களே.
கட்டுரை நல்ல படைப்பு, இந்த நாட்டில் நம் இனத்தவர் முன்னேற தங்களிடம் ஏதும் திட்ட உண்டா? அல்லது மற்றவர்கள் போல் இம்மாதிரியான கட்டுரை மட்டுமா?
இந்த நாட்டில் முன்பும், இப்போதும் ஏன்? எப்போதும் பிரச்சனைகளை முன் வைப்போர் பிறப்பார்கள், வாழ்வார்கள், இறப்பார்கள்.
தங்கள் கட்டுரையில் எமது பல கருத்துகளை தெரிவிக்க விரும்புவதால் தங்கள் கட்டுரையினை முழுமையாக எடுத்து, எமது கருத்துகளை {….} குறியிட்டுக்குள் எழுதியள்ளளேன்.
பொதுப்பிரச்சனையா…….? பொறுப்போடு நாம் நடந்து கொள்ள வேண்டும்.
நாம் எல்லாப் பிரச்சனைகளிலும் ஒன்று படாமல் பிரிந்து கொண்டிருக்கிறோம். ஒரு பொறுப்பற்ற சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நாமே சிறந்த எடுத்துக்காட்டு!
இப்படிப் பொறுப்பற்ற ஒரு சமூகமாக எப்படி வளர்ந்தோம், எப்போது வளர்ந்தோம் என்பது ஆராய்ச்சிக்குரியது!
இந்த இனம் ஒர் ஒற்றுமையில்லாத, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்னும் நிலைக்கு எப்படி வந்தது என்பது புரியாத புதிர்!
எடுத்ததற்கெல்லாம் சண்டை, எடுத்ததற்கெல்லாம் விதண்டாவாதம், தலைக்கனமானப் பேச்சு, அடாவடித்தனம், ஒன்றுமே தெரியாமல் எல்லாமே தெரிந்தது போல் பேசுவது, கையில் கால்காசுக் கூட இல்லை ஆனால் பேசுவதோ இந்த நாட்டையே வாங்கிவிடுவது போன்ற பேச்சு, நல்லது நடக்கும் போது மூக்கை நுழைத்துக் குட்டையைக் குழப்புவது இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் கொண்டவர்கள் தாம் நாம்; நமது இனம்! {முற்றிலும் ஏற்புடையதே}
நல்லது நடக்கும் போது நாலு நாசக்காரர்கள் உள்ளே புகுந்து விடுகின்றனர். குட்டையைக் குழப்புகின்றனர். இப்போது நல்லதும் நடக்கவில்லை. நடக்கவிருந்ததையும் நாசமாக்கி விட்டனர்.
{ இது நமது பொது அமைப்புகளில் (ஆலய நிருவாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், இளைஞர் அமைப்புகள் போன்றவை) நடைப்பெறுவது இயல்பு}
எடுத்துக்காட்டு: ஒரு பள்ளிக்கூடம். மாணவர் நலன் கருதி புதிய, பெரிய பள்ளிக்கூடம் கட்டப்படுகிறது. இப்போது இருக்கும் இடத்தைவிட கொஞ்சம் தூரம். ஆபத்து ஆரம்பாமாகி விட்டது! இந்தத் தூரத்தை வைத்து ஒரு நாடகம் அரங்கேறுகிறது! தலைமை ஆசிரியர் தனது தலைமைப் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்னும் பயம். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவரைக் கலந்து ஆலோசிக்கிறார்; தூண்டி விடுகிறார். புதிய பள்ளிக்கூடத்தைக் குறை சொல்ல முடியாது. கல்வி அமைச்சைக் குறை சொல்ல முடியாது. தூரம் ஒன்று மட்டுமே அவருக்குக் கிடைத்த ஆயுதம். தன் மேல் எந்தக் குற்றமும் வரக்கூடாது. அதே சமயத்தில் காயைச் சாமர்த்தியமாக நகர்த்த வேண்டும்.
பள்ளிகூடம் தூரம் என்பதால் மாணவர்கள் பள்ளி போவது பாதிக்கப்படும். குறைவான மாணவர்களே அங்கு போவார்கள்.
(பெற்றோர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று சொல்லவில்லை).
புதிய பள்ளிக்குக் போக போக்குவரத்து செலவு ஆகும்.
பிள்ளைகளுக்குப் போகவர ஏதாவது காசு கொடுக்க வேண்டும். பாவம்! எல்லாம் ஏழைகள்! எப்படி அவர்களாள் சமாளிக்க முடியும்?
(தலைமை ஆசிரியர், தமிழ்ப்பள்ளி என்றால் ஏழை தான் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவான் என்று முத்திரைக்குத்தி விட்டார்!)
ஒர் ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி ‘எதற்கும் அவரைப் போய்ப் பாருங்கள். உதவினாலும் உதவுவார். அவரால் முடியாததா! இல்லைன்னா எதீர்க்கட்சிக்காரன போய்ப் பாருங்க! நீங்க வாயைப் பொத்திக்கொண்டு இருந்தீங்கனா உங்கத் தலைக்கு மேல ஏறுவானுங்க! எல்லாம் உங்கக் கையிலத்தான் இருக்கு!’ என்று பெற்றோர்களை உசுப்பி விடச் சொல்லுவார்!
ஆக, அதை ஓர் அரசியல் பிரச்சனையாக்கி, பெற்றோர்களைக் கொடிப்பிடிக்க வைத்து, இங்கும் இல்லே! அங்கும் இல்லே! என்று ஒரு நிலையை உருவாக்கி, மாணவர்களைக் காட்சிப் பொருளாக்கி, பத்திரிக்கைகளில் போட்டு வதம் பண்ணியாகி விட்டது.
இது ஒரு பொதுப்பிரச்சனை. கல்விப்பிரச்சனை. நமது மொழி சார்ந்தப் பிரச்சனை. தமிழ் மாணவர்களின் எதிர்காலப் பிரச்சனை. பெற்றவர்களின் குழந்தைகளின் பிரச்சனை.
இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவில்லை அந்தத் தலைமை ஆசிரியர். தனது சுயநலத்தின் முன்னே எந்தத் தடையையும் உடைக்க அவர் தயார். அவர் தனது தலைமை ஆசிரியர் பதவியைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். அவர் வீட்டிற்கும் இப்போது இருக்கும் பள்ளிக்கும் சிறிதளவே தூரம். பள்ளிவிட்டுப் போகும் போது தேசியப்பள்ளியில் படிக்கும் தனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போக முடியும். அப்படியே தனது மனைவி பணி புரியும் பள்ளியிலிருந்து அவரையும் அழைத்துக் கொண்டு போக முடியும். ஒரு மாற்றம் என்று வரும் போது அனைத்தும் அடிப்பட்டுப் போகும். அவருடைய செலவுகள் அதிகரிக்கும்.
‘எனக்கு எனது வாழ்க்கை தான் முக்கியம். இதையெல்லாம் பார்த்தா ஒன்றும் நடக்காது. இவன்களை எல்லாம் நம்பினா நாம நாலுக்காசு பார்க்க முடியாது” என்பது தலமையாசிரியரின் நிலை. { பெற்றோருக்கு உதவும்/வழிகாட்ட கட்டுரையாளர் ஒரு மாற்று திட்டத்தை முன்மொழிதிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்}
இன்னொரு எடுத்துக்காட்டு: பெண்மணி ஒருவர் தனது மகளை வெளிநாடு ஒன்றுக்கு மருத்துவம் படிக்க அனுப்பிவைத்தார். வெற்றியும் பெற்றார். பாராட்டப்பட வேண்டியவர். நல்ல முயற்சி.
அவரின் நண்பர் ஒருவர் தனது மகளை மருத்துவம் படிக்க வெளிநாடு அனுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார். வழிமுறை தெரியவில்லை. ஏற்கனவே அனுபவமுள்ள அந்தப் பெண்மணியை நாடினார். ஆச்சரியம்! அந்தப் பெண்மணியிடமிருந்து ஒரு பதிலும் கிடைக்கவில்லை. எந்த ஒரு சிறிய தகவல் கூட அவரிடமிருந்து வரவில்லை. உண்மையைச் சொன்னால் அவர் வாயைத் திறக்கவில்லை! இத்தனைக்கும் அவர் கொஞ்சம் விவரமானப் பெண்மணி. கடைசியில் அந்த நண்பர் பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அவர்களின் உதவியை நாடினார்.
{ எனது கருத்து – அந்தப் பெண்மணி செய்தது நடமுறைக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் மனோவியல் படிப்பார்த்தால் முற்றிலும் சரியே. எமது மூன்று கருத்துகள் – 1. தனது மகளை மருத்துவராக்க அவர் பயணித்த வழியினை (கரடுமுடான வழியாக இருந்திருக்கலாம், வந்தவரும் அவரது மகளும் அதனை கடந்துச் செல்ல முடியாது என்று நினைத்திருக்கலாம்) வந்தவரிடம் கூறினால். அவர் சொல்லுவார் எனது மகள் மருத்துவராவது இவருக்கு பிடிக்கவில்லை அதன் இப்படி கூறுகிறார் என்று கூறுவார்.
கருத்துகள் – 2. அந்தப் பெண்மணி தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை குறைத்து/மறைத்து வந்தவரிடம் வழி சொல்லி இருந்தால், எதிர்காலத்தில் வந்தவரும் அவர் மகளும், உங்களுக்குதான் முன்பே தெரியுமே ஏன் எங்களிடம் கூறவில்லை என்று குறை சொல்லுவார்கள்.
கருத்துகள் – 3. கீழே பார்கவும்}
இது தான் நமது பிரச்சனை. நமது இனம் தமிழ்ப் பத்திரிக்கைகளில் வருகின்ற விளம்பரத்தைப் பார்த்து ஏன் ஏமாறுகிறது என்பது இப்போது புரிகிறது அல்லவா! {எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – குறள் 423 }
நாம் பேச்சில் வல்லவர்கள். ஒருவருக்கொருவர் உதவுவதில், செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுவதில் வில்லன்மார்கள்! ஒருவர் மேற்கல்விப் பயில நாம் உக்குவிக்க வேண்டும். அது நமது கடமை. நமது நண்பர்களுக்கு, நமது உறவுகளுக்கு, நமக்கு அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் கூட, அவர்களின் முன்னேற்றத்திற்கு, நாம் உதவத்தான் வேண்டும்.
{கருத்துகள் – 3. தங்கள் பிள்ளைகளை மேற்படிப்பு அனுப்ப விரும்புவோர்கள் தயவுச் செய்து உங்கள் இருப்பிடதில் உள்ள அரசியல் காட்சி (ஆளுங்கட்சியும் எதிர்கட்சி என்று பகுபாடு வேண்டாம்) தலைவர்களிடம் செல்லுங்கள் அவர்கள் உங்களுக்கு வேண்டிய தகவலை அல்லது தகவல் கிடைக்கும் இடத்தை தெரிவித்து உதவ வேண்டும்.}
எதற்கெடுத்தாலும் போட்டி, பொறாமை! அதுவும் நமது இனத்திற்குள்ளேயே! நமது இனத்தவன் டாக்டாரவது, வழக்கறிஞராவது, தொழில்அதிபராவது, கோடிஸ்வரனாவது நமது இனத்திற்குப் பெருமைதானே! அது அவன் சொந்த உழைப்பல்லவா?
நமது இனத்தவன் நல்ல நிலையிலிருந்தால் அவன் நாலு பேருக்கு உதவ முடியுமே. அந்தக் கண்ணோட்டத்தில் அனைத்தையும் பாருங்கள். ஒரு தமிழன் கெட்டுப்போனால் அதனால் யாருக்கு என்ன நன்மை?
அனைத்தையும் ஒரு சமூக கண்ணோட்டத்தோடு பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை நாலு பேருக்குத் தெரியப் படுத்துங்கள்.{ எமது படைப்புகள் இந்த நோக்கத்திற்கே – ஹூ முவ் மை சீஸ்? (யார் எனது சீஸை நகர்த்தியது?) , இன்னும் சராசரியாக இந்தியர்களும் மற்றும் மலாய்காரர்களும் ஆரோக்கியமான உணவு பற்றி குறைவாகவே புரிந்துள்ளனர் – டாக்டர் சுப்ரமணியம், சமூக தொழில் முனைவோர் என்றால் யார்? }
நமது மக்கள் முன்னேற வேண்டும். அது தான் நமக்குத் தேவை. நமது இளைஞர்களைப் பற்றி மிகவும் கோபப்படுகிறோம். அவர்களுக்கு நாம் வழி காட்ட வேண்டும். அரசாங்கம் கொடுக்கின்ற வாய்ப்புக்களை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.
ம.இ.கா. தான் செய்ய வேண்டும் என்று நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. அவர்கள் கண்ணோட்டம் வேறு.
நமக்கு நாமே உதவி என்பார்கள். நமது குடும்பத்திற்கு மட்டும் அல்ல நமது சமூகத்திற்கும் நாம் தான் உதவி.
நமது சமூகத்தின் முன்னேற்றம் நமது கையில். அந்தப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது. அந்தப் பொறுப்பு யாருக்கும் குத்தைகைக்கு விடப்படவில்லை. { தயவுச்செய்து எனது படைப்பு > சமூக தொழில் முனைவோர் என்றால் யார்? 21/10/2013 (8 கருத்துகள் (கமேன்ஸ்) -3 என்னுடையது – எமது முயற்சியால் பல நம்மின இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறினால் (அந்தப் பொறுப்பு எனக்கு குத்தைகைக்கு விடப்படவில்லை என்று கூறவார்களா?}
இன்று இந்த சமூகம் தலைக் குனிந்து நிற்பதற்கு நாம் அனைவருமே பொறுப்பு. காரணம் நாம் பெரும்பாலும் சுயநலவாதிகள்; பொறுப்பற்றவர்கள்; பொதுநலத்தைச் சிந்திக்காதவர்கள். ஏழைகளை ஏப்பம் விடுபவர்கள். – {சமூக தொழில் முனைவோர் என்றால் யார்? 21/10/2013 (8 கருத்துகள் (கமேன்ஸ்) திரு. பொன்ரங்கன் ஐயா அவர்கள் கமேன்ஸ் செய்துள்ளார் வாசிக்கவும்}
நாம் மாறத்தான் வேண்டும். இழி மகன் என்று பெயர் எடுக்க வேண்டாம். பொறுப்போடு நடந்து கொள்ளுவோம். . ( எனது படைப்பு >ஹூ முவ் மை சீஸ்? (யார் எனது சீஸை நகர்த்தியது? 15/1/2014 வாசித்தீர்களா? 3 கருத்துகள்)
நன்றி.
மனம் கசிகிறது ……..!
அற்புதமான கட்டுரை;அற்புதமான பார்வை. இவரையும் இவர் எழுத்தையும் இளமைகாலம்தொட்டே அறிவேன். இவருடைய படைப்புகளை நானே வாசித்துப் பார்த்து பிரசுரத்திற்கு அனுப்பிய அன்றைய பத்திரிகை வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன். எத்துனை அழகாக எழுதுகிறார்; என்னே… வளர்ச்சி. இருடைய சமுகப்பார்வையும், உணர்வும் , யதார்த்தமும் கட்டுரையில் அழகாக வெளிப்பட்டுள்ளன. ஒழுக்கத்தை உயிரைவிட மேலானதாக மதிக்கத் தெரியாத ஒரு சமூகம் , எதற்கும் அடங்காமல்,தற்குறிகளாய்,தான்தோன்றித்தனமாய்,எல்லா பாவங்களையும் செய்யத்துனிபு கொள்பவர்களாய் இருப்பதில் ஒன்றும் வியப்பில்லையே. பெரியவர்களைப் பெற்றோரைக் கற்றோரை மதிக்கத் தெரியாத ஒரு தலைமுறையைக் காண்கிறோம்.குறைந்தபட்சம் திருக்குறளின்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்று நம்பி கெட்டுப்போனவர்கள் எவரும் உண்டா? நம்மவர்களுக்கு குறளின்மீது கொஞ்சம்கூட நம்பிக்கையும் இல்லை; நம்பி வாழ முயற்சிப்பதுமில்லை. காந்தியார் வாழ்கையில் சத்தியத்தைச் சோதித்துப் பார்த்தார்; வென்றார். அதுபோல திருக்குறளின் ஓளியில் தட்டுத்தடுமாறாமல் வாழ பயந்து இந்த சமூகம் ஏன் இருளை விரும்பி ஓடுகிறது? ஏன் படித்தவனிலிருந்து படிக்காதவன்வரை குறுக்குவழியில் ஏய்த்து பிழைக்கும் நம்பிக்கை துரோகத்தைப் பிழைப்பாக வைத்திருக்கிறான்? இப்படி இருந்தால்… இந்த சூழலில்… யார் யாரை நம்புவார்கள்..?எவரை நம்பி பணத்தை முதலீடு செய்யமுடியும்? எவரை நம்பி ஒன்றுபடமுடியும்? எவரை நம்பி அரசியலில் ஒன்றுபட்டுச் செயல்படமுடிய்யும்? எப்படி நல்ல முயற்சி என்று கைகோர்க்க ; ஆதரவுதர முடியும்? குடும்பத்திற்கு விசுவாசமில்லாத பிள்ளைகள், மக்களைப் பந்தாட நிணைக்கும் துரோகிகளாய் சமுதாயத் தலைவர்கள்,நல்லதைப் படித்து தங்களை மேம்படுத்திக்கொள்ளும் பொறுப்பே இல்லாத சமூகம். பண்பாட்டுச் சீரழிவின் உச்சத்தில் நாமும் நமது சமூகமும் இருக்கிறோம் .என்ன செய்வது?நல்லொழுக்கத்தின்பால் அசைக்கமுடியாத நம்பிக்கையும், திருக்குறள் போதனையும், தங்களையும் தங்கள் சமூகத்தையும் மேம்படுத்திக்கொள்வதற்கு ஏதுவான பயிற்சியும் படிப்புமே இன்றையக் கட்டாயத் தேவை ! ஒருவரை ஒருவர் நம்பும் நம்பிக்கையின்மை நம் சமூகமெங்கிலும் பரந்து விரிந்துகிடக்கும் சூழலில், ஒழுக்கமும் கட்டுப்பாட்டோடுகூடிய தன்னம்பிக்கையுமே இந்தச் சமுதாயத்தை ஒரு படி மேலே உயர்த்த முடியும். நன்றி கோடீஸ்வரன். உங்கள் எழுத்து தொடரட்டும்!
Pon Rangan wrote on 19 January, 2014, 15:08
அன்புள்ள தோழர் போக ராஜா அவர்களுக்கு !
நீங்கள் என் கட்டுரைக்கு விளக்கம் எழுதிய நாள் 22/12 ரில் நான் IJN மருந்தகத்தில் BY பாசில் இருந்தேன்.இன்று நலமுடன் கொஞ்சம் வலி சுமையுடன் தங்களின் விளக்க படிவத்தை கண்டேன்,மகிழ்ச்சி.
உங்களின் இந்த சமூக அக்கரையில் வெகுவாக பங்குள்ளவன் என்பதால்,உங்கள் காரணங்களை ஏற்றாலும். என்பார்வையில் ஒரு பொருளாதார ஆய்வன் எனும் தரத்தில் மலேசிய தமிழர்களின் (முறையே) கல்வி, பொருளாதாரம், அரசியல் மீது தனி அக்கறை கொண்டவன் என்பதால் இதுவரை ஏமாந்த தமிழர்கள் தோல்வியின் விரக்தியில் ஏழ்மையின் எல்லைக்கே தள்ளப்பட்டுவிட்டனர்.
அரசியலில் கடிவாளங்களை பிடித்துகொண்டு எண்ணங்களில் தூய்மை இல்லாதவர்கள் இந்த ஏழை சமுதாயத்தை திட்டமிட்டே ஏமாற்றிவிட்டனர். ஒருவரின் ஏழ்மை நிலைமையை சாதகமாக்கி கசக்கி பிழியும் கேவலமான அரசியில் வியாபாரிகளால் இந்த தமிழ் சமுதாயம் இன்று நட்டத்தில் நிலைகுலைந்து நிற்கிறது. இது மீண்டு வர இன்னும் 30 ஆண்டுகள் பிடிக்கும்.
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வர …என்பது எனது ஆதங்கம்.நாட்டில் இப்போது அதிகமாக ஊனமாய் போன ஆழ்மனதை
சரி செய்ய SALES மூளை சவரம் செய்பவர்கள்தான் அதிகம் உள்ளனர் இதுபோன்ற காக்காய் கூட்டத்தை நம்பி மோசம் போய் விடகூடாது என்பதை என் தமிழர்களுக்கு சொல்வதை கடமையாக கொண்டுள்ளேன்.
“மக்களே போல்வர் கயவர்……” என்றார் வள்ளுவர்.? காரியம் ஆற்ற தயாராக இருங்கள் ஆனால் யார் யாருடன் என்பதை கவனமாக தேர்வு செய்யுங்கள் என்று சொல்லவருகிறேன். சிந்திப்போம்.
ஒரு குடுமபத்துக்கு எப்படி அறிவார்ந்த, திறமைமிக்க, ஒழுக்கமான தைரியமான, செயலாக்கம் மிக்க etc தலைவன் தேவையோ. அதேபோல்தான் நமக்கு சமூதாய நலன் கொண்ட தலைவர்கள் தேவை. இது இல்லாமால் சுயலாபம் தேடும் தலைவர்களே இன்று நம்மைச் சுற்றி நிற்கின்றனர். அப்புறம் எப்படி நாம் பலனடைவது? இப்பொழுது நமக்குத் தேவையான தலைவர்கள் பஞ்சம் என்பதால், நாமும் நாம் தேர்ந்தெடுத்த நண்பர் உற்றார் உறவினருடன் சேர்ந்து கூட்டுப் பயணம் செய்யக் கற்றுக் கொள்வோம். பொருளாதாரத்தில் முன்னேற முதலில் உறவினர் நண்பர்கள் சேர்ந்து ஒரு கூட்டுறவை ஆரம்பியுங்கள். பொருளாதாரத்தில் படிப்படியாக முன்னேறுங்கள். அங்கே உங்களுடைய பிள்ளைகளுக்கு மேற்படிப்பு வசதிகள் பற்றி தெரிந்துக் கொள்ளவும், பணவசதிகள் செய்து தரவும் வழிப் பிறக்கும். தன் பிள்ளையை மருத்துவ படிப்பிற்கோ அல்லது மற்ற நிபுணத்துவ படிப்பிற்கோ வழி காட்டத் தெரியாத பெற்றோர் இருப்பின், இன்றைய நிலையில் எவ்வளவோ தனிநபர்கள் இயக்கங்கள் வழிகாட்ட தயாராக இருகின்றனர். “திருவேங்கடம்” என்னும் தனிநபர் யார் தயவு இன்றியும் இதனை நமது இந்திய மக்களுக்காக செய்து வருகின்றார். அவரின் “facebook” -கில் சேர்ந்து தக்க வழிகாட்டுதலுடன் பயனடையலாம்.இவ்வாறு முயற்சி உடையோர் முன்னேறியதை நாம் பலரிடம் காண்கின்றோம். அதில் நானும் ஒருவன். தொடரும்.
சீபீல்ட் தமிழ்ப் பள்ளி பிரச்னையை கண்ணுற்ற நான் முதலில் சாடியது அதன் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அப்பள்ளிப் பிள்ளைகளின் பெற்றோரையே ஆகும். கோடீஸ்வரன் தகவலறிந்து கொடுத்த விளக்கத்தைப் பார்க்கும் போது யாம் எண்ணியது உண்மையெனத் தோன்றுகின்றது. இங்கே சுயநலவாதிகளின் கையில் அகப்பட்டு அல்லல்படும் மாணவர்களை கரையேற்ற அப்பகுதியில் இருக்கும் பொதுநலம் கொண்ட நல்லன்பர்கள், மாணவர்களின் பெற்றோரை அணுகி பிரச்னையை தீர்க்க வழி நல்குமாறு வேண்டுகின்றேன். சுயநலம் பேணும் அரசியல்வாதிகளை நம்பாதீர். இதை நாம் பினாங்கு கம்போங் புவா பாலாவிலையே கண்டு கொண்டோம். எல்லோரும் நலம் பெற எம்பெருமான் வழி காட்டட்டும்.
வணக்கம்,
திரு. மலையாலதான் அவர்களே திரு. பொன் ரெங்கன் அவர்களின் கருத்துக்களை இங்கு பதித்து எமக்கு உதவியமைக்கு நன்றி ஐயா.
திரு. பொன் ரெங்கன் அவர்களே, தங்களின் 19/1/2014 தேதியிட்ட கருத்தினை நான் திரு. மலையாலதான் பதித்த பின்பே வாசித்தேன். நீங்கள் உடல் நலம் குன்றி (மறுபிறப்பு என்றும் கூறலாம்) மீண்டு நலமாக இருப்பதில் மகிழ்ச்சி.
ஐயா திரு. பொன் ரெங்கன் அவர்களே, உங்களின் 19/1/2014 கருத்திலிருந்து (உங்களின் இந்த சமூக அக்கரையில் வெகுவாக பங்குள்ளவன் என்பதால், உங்கள் காரணங்களை ஏற்றாலும். என்பார்வையில் ஒரு பொருளாதார ஆய்வன் எனும் தரத்தில் மலேசிய தமிழர்களின் (முறையே) கல்வி, பொருளாதாரம், அரசியல் மீது தனி அக்கறை கொண்டவன் என்பதால் இதுவரை ஏமாந்த தமிழர்கள் தோல்வியின் விரக்தியில் ஏழ்மையின் எல்லைக்கே தள்ளப்பட்டுவிட்டனர்.)
உங்களின் மேற் கருத்தினை வரவேற்கிறேன் நன்றி. நீங்கள் உலகத தமிழர் பாதுகாப்பு மையத்தின் துணை இயக்குநர் என்று நான் அறிவேன். முன்பே எனது கருத்து படைப்பில் 5/11/2013 ( ஒருவர் தனது கருத்தை தெரிவிக்கிறார். அது குறித்து உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் சம்பந்தபட்டவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அதுதான் நாகரிகம்) என்று எழுதியிருந்தேன். உலகத தமிழர் பாதுகாப்பு மையத்தின் துணை இயக்குநர் அவர்களே உங்களுக்கு எதும் விளக்கம் வேண்டுமாயின் என்னை தொடர்புக் கொண்டிருக்கலாம்.
உங்களை இந்த மின் ஊடக வழி தொடர்பு கொள்வதைவிட எமக்கு வேறு வழியில்லை. அதே நேரத்தில் நான் திறந்த மனதுடன் செயல் படுகிறேன். எனது தந்தை கொடுத்த பெயரை இந்த மின் ஊடகத்தில் பயன்படுத்துகிறேன். உலக தமிழர்கள் மேல் அக்கறை கொண்டுள்ள தாங்கள் நினைத்திருந்தால் என்னை எனது கைப்பேசி (எனது முதல் கட்டுரையில் இருக்கிறது. மேலும் 22/12/2013ல் எமது கருத்துரையில் கைப்பேசி எண், மின் அஞ்சலும் எழுதியிருந்தேன்) வழி தொடர்பு கொண்டிருக்கலாம் (குறைந்து ஒரு எஸ்எம்எஸ் அல்லது ஒரு மிஸ் கால் கொடுத்திருக்கலாம் நானே உங்களை அழைத்து பேசியிருப்பேன்.
பேசி தீர்க்க வேண்டியதை மின் ஊடக வழி கருத்துகள் பறிமாறிக் கொள்வதில் யாருக்கும் பயன் இல்லை என்பதை நீங்கள் ஒப்புகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆகவே ஐயா திரு. பொன் ரெங்கன் அவர்களுக்கும், தங்களின் உலகத தமிழர் பாதுகாப்பு மையத்தின் நிர்வாகத்தினருக்கும் எமது சமூக தொழில் முனைவோர் பற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். உங்களுக்கும் எனக்கும் எற்ற தேதியில், இடத்தில் இந்த விளக்க அளிப்பு சந்திப்பை வைத்துக்கொள்வோம். எம்மை கைப்பேசி 0176728689 அல்லது மின்அஞ்சல் [email protected] வழி தொடர்புக் கொள்ளவும். நன்றி.
கட்டுரையை விட கருத்துகள் மிகவும் நீளமாக இருக்கிறது..!! ….வரவேற்க வேண்டிய கட்டுரை …..நானும் இனி பொது நலமகவே செயல் பட முயற்சிப்பேன் …..ஆனால் கட்டுரையில் கருமாந்திரம் புடிச்ச அரசியலை திணிக்காமல் இருந்திருந்தால் கட்டுரை மிகவும் நன்றாக இருந்திருக்கும் …..
அய்யா நீர் சரியாகத்தான் சொல்கிறீர் ஆனால் MIC ந……கலுக்கு ுடியாது அப்பா அவனுங்க மற்றவனை I MEAN தமிழனை நசபடுட்டிதான் வால்ழ்வனுங்க்க நம்பலையா உன்னையே கொன்று போட்டு தமிழனை அழிப்பனுங்க்க
போகராஜா குமாரசாமி தயவு செய்து இறுமாப்போடு பதில் உரைக்காதிர்கள்.
இது செமபரித்தியில் வந்த கோடீஸ்வரன் கற்பனை …
“நமது சமூகத்தின் முன்னேற்றம் நமது கையில். அந்தப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது. அந்தப் பொறுப்பு யாருக்கும் குத்தைகைக்கு விடப்படவில்லை.”
கோடீஸ்வரா ! (இது வெறும் கற்பனை, படிக்க நல்லா இருக்கு ஆனால்; அரசியல் கட்சிகள் கட்டுப்பாடு என்பது குத்தகை தான் !? ) இல்லை என்று சொல்ல வரீங்களா ?
இதையும் நீங்கள் தான் சொன்னீர்கள் “இன்று இந்த சமூகம் தலைக் குனிந்து நிற்பதற்கு நாம் அனைவருமே பொறுப்பு. காரணம் நாம் பெரும்பாலும் சுயநலவாதிகள்; பொறுப்பற்றவர்கள்; பொதுநலத்தைச் சிந்திக்காதவர்கள். ஏழைகளை ஏப்பம் விடுபவர்கள்.
நாம் மாறத்தான் வேண்டும். இழி மகன் என்று பெயர் எடுக்க வேண்டாம். பொறுப்போடு நடந்து கொள்ளுவோம்.”
இதையும் ஒப்பீடு செய்யுங்கள்….இப்படீனா எப்படி ? சமூகம் என்பது ஒரு
கூட்டு முயற்சி அங்கே தலைமைத்துவம் ,தலைவன் இப்படி பல ..இதில்
கட்சி தலைவனின் கயமையை எப்படி கையாள்வது ? இந்த உண்மையை ஆராய்வோம்.! ஒரு கேஸ் சட்டி. ஒரு சோறு பதம் !!!!
இநநாட்டில் ஜ நாய் ம இ கட்சி என்று ஒரு காட்டி கொடுக்கும் தலைவன்
ஒருத்தன் இருக்கான் . அதன் தலைவன் அந்த கட்சியை கோவிந்தசா என்ற சாமியின் நண்பரிடம் காசு கொடுத்து வாங்கி தனது துப்பாக்கி குண்டு வைத்திருந்த ஜெயில் வாழ்க்கையில் இருந்து தப்பிக்க அன்வாரை காட்டி கொடுத்து விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று டதோவாகி இப்போ டான்ஸ்ரீயாகி இன்று பனாமா செய்தியில் அன்வார் ஒரு நடிகன் என்று குற்றம் சாட்டுகிறான்.
ஜனநாயக நாட்டில் ஒரு சட்ட மன்றத்தில் இடை தேர்தல் வருது அதில் பாகாதான் கட்சியின் அலோசகர் எனும் தகுதியில் அன்வார் போட்டி இட தயாரகி விட்டார். நாடே எதிர்ப்பார்க்கும் அரசியல் திருப்பம் சிலாங்கூர் மாநிலத்தில் நடக்க போவுது ..இது ஜனநாயக சமத்துவம் அல்லது ஒரு தேசிய எதிர்கட்சியின் தலைவன் செய்த முடிவு.
கடந்த பொது தேர்தலில் எதிர்க்கட்சி மொத்த வாக்கில் 52% வாக்குகளை பெற்ற தலைவன் தன் திறைமைக்கு குறைந்த பதவியால் ஏதும் செய்ய முடியவில்லை என்று மக்களை காப்பாற்ற அடுத்த கட்ட அரசியல் சீரம்மைபுக்கு போட்டி போட தயாராகி உள்ளது காலத்தின் தேவை என்று உணர்த்து அரசியல் நகர்வை செய்ய உள்ளார்.
நாட்டின் மரியாதை இல்லாத ஒரு இண்டியன் கட்சிக்கு தலைவன் என்று ஆளும் கட்சி மூடர்களை ஏமாத்தி பட்டம் பதவி அந்தஸ்து என காட்டிகொடுத்த எட்டப்பன் நல்லப்பன் வேஷம் போட்டு நடமாடும் கேவலம் நமக்கு குறிப்பா மலேசியா இந்தியர்களுக்கு அவமானமாகும்.
கட்சியில் ஒரு கூட்டம் கிடையாது ..ஒரு கிளை கூட்டம் இல்லை மாநில
கூட்டம் இல்லை தேசிய மாநாடு இல்லை தலைவனை தவிர மற்றவனுங்க்க யார் என்றே தெரியவில்லை ..இப்படி ஒரு அசூர பேய்
கட்சி .மேலவை உறுப்பியம்…அன்வார் கொடுத்த சொகுசான வாழ்வாதாரம்.வழி.பத்தரிக்கை கூஜாகளை கையில் வைத்துக்கொண்டு உருப்ப்டடாத சப்பிகள் செய்தியும் அடுத்த மேலவை புதுப்பித்தலுக்கு ஊடக பித்தலாட்ட ஒப்பனை நாடகம் இவை யாவும் இவனால் மட்டுமே முடியும்.
இது பொது பிரச்சினையா? சமுதாயத்த ஆப்பு அடிச்சி தேசிய பல்லின மக்கள் மத்தியில் அனக் கில்லிங் எல்லாம் இப்படிதான் என்ற அவமானம் இதற்கு நாமெல்லாம் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டுமா?
கையில்….. வைத்திருந்த தேச துரோகி ஒரு துணை பிரதமரை உள்ளே தள்ளி வெளியே வந்து நரி வேஷம் போடும் அவமான சின்னம்!
இது பொது பிரச்சனையா ?சமுதாய சிக்கலா ? தனி மனித மண்டை கோளாறா? அந்நியன் பட்டியலில் எங்கு வைத்து இவனை வாங்குவது? அல்லது இந்தியன் கமல் ஆசானிடம் விஸ்வரூப சாபகேட்டில் எந்த லிஸ்டில் வைப்பதா? சொல்லுங்க அண்ணா சொல்லுங்க !
அதர்மங்கள் அரசியல் தலைகளால் தொடங்கி மனித தர்மங்கள் கேடு கெட்டு சுய நல பிணிகளால் சமுக மரியாதை குப்பையில் வீசப் படுகிறது.இது என்ன பொது பிரச்சனையா?….எல்லா பொது பிரச்சனைகளும் கடைசியில் சமுதாய மரியாதையை அழித்துவிடும்.
மூவினம் வாழும் நம் நாட்டில்,,,, தலைகள் செய்யும் சேட்டைகளால் சமுதாயம் கேவலமாக சித்தரிக்கப படுவதை உங்கள் சமாதானம் ஈடு செய்ய முடியாது. காரணம் அரசியல் சக்தி வழி இந்த சமுதாய உயர்வை எந்த கட்சியாலும் தனி மனிதனாலும் கும்பிடு கூட்டத்தாலும் காப்பாற்ற முடியாது. அரசு பட்டங்களை பெற்ற ஒரு சிலரை தவிர மீதமுள்ளவன் இறங்கி வந்து ஒரு செங்கல் அளவாவது தேசிய சமூக சிக்கலை தீர்த்து இருப்பானா சொல்லுங்க ?
சகோதரா …இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.மற்றவர்களும் எழுதட்டும் என்று சுபம் சொல்லி விட்டு விடுகிறேன் .
நாம் மாறத்தான் வேண்டும். இழி மகன் என்று பெயர் எடுக்க வேண்டாம். பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும் பொன் ரங்கன் .”
இப்படி உலக பாத்து காப்பு பெயரில் அடித்த நிதி …..1980 களில்….finance …..கம்பெனி கதை பற்றி விளக்கும்……தங்கள் நண்பர்….இப்பொழுது தமிழ் நாட்டில் அடைகளமம்….
இந்த உண்மையை ஆராய்வோம்.! ஒரு கேஸ் சட்டி. ஒரு சோறு பதம் !!!!
சுய நல பிணிகல் சமுக மரியாதை பற்றி உதறல் கதறல்
பொன் ரங்கன்அண்ணாச்சி! நீங்கள் ரொம்பவும் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்! பஞ்சாபிக்காரன் எந்தத் தலைவனை நம்பி முன்னுக்கு வந்தான்? பால் வியாபாரம் செய்தே இன்று முன்னணியில் நிற்கிறானே! குஜாராத்தி பட்டேல்கள் எந்தக் கட்சியை நம்பி ‘கார்பெட்’ வியாபாரத்தில் ஈடுபட்டார்கள்? நம்ம தமிழ் முஸ்லிம்கள் எந்த அரசியல்வாதிகளை நம்பி வியாபாரத்தில் வெற்றி நடைப் போடுகிறார்கள்? முன்னேற வேண்டும் என்னும் எண்ணம் இல்லை என்றால் நாம் எல்லாக் காலங்களிலும் முனகிக் கொண்டே இருக்க வேண்டியது தான்! நீங்களும் எழுதிக்கொண்டே காலத்தைத் தள்ள வேண்டியது தான்! நமது தலைமை சரியெல்லை என்றால் ஒப்பாரி வைத்திக் கொண்டா இருக்க முடியும்!
சக்கரவர்த்திக்கு ஜே. நம்ம் ஓம்ஸ் எப்படி முன்னேறினார். தஸ்லீம், ரகுமூர்த்தி, அம்மா இப்படியாக ஆயிரக்கணக்கான நம் இளம் டத்தோக்கள் எல்லாம் எப்படி உழைத்து முன்னேறினார்கள்? பொன் ரங்கன் போன்ற வெத்து வே….க்கள் அவ்வப்போது உணர்ச்சிப் பொங்க இனத்துவேசம் பேசி பேசியே இந்தியனை உருப்படாமல் செய்து விடுகிறார்கள்.
அமரன் நான் இந்தியன் அல்ல தமிழன் …இந்தியனுக்கும் தமிழனுக்கும் வித்தியாசம் தெரியாத கபோதிகள் என்னை இழுக்க வேண்டாம்.நீங்கள் குறிப்பிட்டவர்கள நமது வாழ்த்துக்கு உரியவர்கள். நீர் தமிழனா ? இந்தியனா ? என்று உங்கள் அம்மாவிடம் கேட்டு பாருங்கள்.இந்த வெட்டு வேட்டுகளும் உணர்ச்சியோடுதான் தமிழன் பிள்ளைகளை பெற்றோம்.ஆகா நாங்கள் தமிழனை பற்றி மட்டும் எழுதுவோம், பேசுவோம். இந்தியன் தமிழனை ஏசசது போதும்.
இது எனது அனுபவம். அதிகமாக யார் தன்னைத் தமிழன், தமிழன் என்று சொல்லுகிறார்களோ இவர்கள் ஆபத்துக்குரியவர்கள். பெரும்பாலும் ஏமாற்றுக்காரர்கள். சாமிவேலுவை நினைவிற்குக் கொண்டு வந்தாலே போதும்! எல்லாம் பட்டு அனுபவித்தாகி விட்டது. நான் சொல்லுவதெல்லாம் இதுதான். நம்மைச் சுற்ற்றியுல்ல தமிழர்களைப் பாருங்கள். உதவி தேவைப் படுகிறவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்வோம். தமிழர் அல்லாதாருக்கும் செய்வோம். ஒரு இந்தியன் கெட்டுப்போனாலும் அது நமக்குப் பாதகம் தான்!
தமிழ் தமிழ் என்று ஏமாற்றுபவர்கள் அதிகம். ஏமாறுபவர்களும் அதிகம். இன உணர்ச்சியைத் தூண்டிவிட்டு உருப்படாமல் போனவர்கள் அதிகம். 20 லட்சம் இந்தியரில் எத்தனைப் பேர் உண்மைத் த்மிழர்கள்? பிரித்தாள வேண்டாம். இந்தியனுக்கே தனி பெரும்பன்மை இல்லை. இதில் தமிழன் என்ற இருமாப்பபு வேறு.
நீங்கள் எதற்காக இப்படிப்பட்ட கருத்துகளை எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்து உங்களை அடையாளம் படுத்திவிட்டது. என்பதை மறந்து விடாதீர்கள். இப்பகுதியில் நீங்கள் அனைவரும் இனதுவேசத்துடன் எழுதுவதாக நினைக்கின்றேன். யார் பெரியவன் என்பதை அடையாளம் காட்ட இப்பகுதியைப் பயன்படுத்த விரும்புகின்றீர்கள். உங்கள் நால்வரின் எழுத்துகளைச் சுற்றிச் சுற்றி கருத்து எழுதுவது எத்தனைப்பேர்கள். விரல் விட்டு எண்ணிப்பாருங்கள். ………… பல உண்மைகளை அடிகோடிட்டுக் காட்டிய குமாரசாமிக்கு வாழ்த்துகள்.
சசி, நீங்கள் சந்தோஷப்படலாம். ஆனால் எங்கள் நிலை அப்படியல்ல. மலாயாப் பல்கலைக்கழத்தில் உங்கள் ஆள் தமிழ் மொழியையே அழித்துவிட்டான். நிலாய் தமிழ்ப்பள்ளியில் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறா வண்ணம் தடையாய் இருந்தவன் உங்கள் ஆசாமி தான். இன்னும் மலேசிய ரீதியில் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழனுக்கு ஆப்பு வைப்பவன் உங்கள் ஆசாமிகள் தான். ஒரே வருத்தம். உங்களில் பெரும்பாலோர் தமிழால் வளர்ந்தவர்கள். வளர்ந்த பிறகு தமிழுக்குத் தீங்கு வருவிக்கிறீர்கள். இது தாயைப் பழிப்பதற்குச் சமம்.
சபாஸ் 2,தமிழர் இந்தியர் ஒன்றே.இணைந்து வோட்ருமையாய் வாழ்வோம்.அரசியல் /வுயர்வு,தனி மனிதன் முயற்சி சிறப்போ சிறப்பு.
“என் தமிழினத்தின் எதிரியாக இருந்துபாருங்கள் அப்போ தெரியும் என் கோபம்.” – மாவீரன் வேலுபிள்ளை பிரபாகரன்.
“அரசியல்வாதிகளின், மதவாதிகளின், செல்வந்தர்களின் ஆயுதம் ஒன்றிருக்கிறது. அதைக்கொண்டுதான் மக்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள்;;ஏய்க்கிறார்கள் ; சுரண்டுகிறார்கள். அதை அவர்களிடமிருந்து முதலில் பிடுங்கவேண்டும். அந்த ஆயுதம்தான் கடவுள்.” – தந்தை ஈ.வெ.ரா. பெரியார்
கல்யாணம் அவளுக்கு நம்பிக்கை இல்லையாம் அவள் என்ன செய்ய போகிறாள்?.சமுதயம் காசு கொடுத்து வேடிக்கை பார்க்கிறது.!?
சமீப காலமாக ASTROVIL ஒரு விளம்பரம். ஒரு தமிழ் /இந்தியன் பொண்ணு தமிழில் சொல்றா “கல்யாணம் எனும் பந்ததில்” கல்யாணம் எனும் INSTITUTIONIL அவளுக்கு நம்பிக்கை இல்லையாம்.
இந்த விளம்பரம் ஒரு காலசாரா சீர்கேடு செய்தி. காரணம் இல்லாத விளம்பரம் என்ன கருத்து என்றே புரியவில்லை ஆனால் நமது மற்றும் நாட்டில் இன்னும் சொல்லப்போனால் உலக திருமண பந்தங்களின் உரிமைக்கு மலேசியாவில் இப்படி ஒரு தேவடியா தன விளம்பரம்.
நாகரீக நாடுகளில் SON OF BASTARDS என்று அப்பன் யாரு என்றே தெரியாத பிள்ளைகளை பெத்துக்கொள்ளும் கேவலம் ஒன்று உண்டு.
மக்கள் தொலைகாட்சியில் வள்ளல் பெருமான் கதை சொல்லும் அதே அஸ்ட்ரோ இந்த விபச்சாரத்தையும் மக்கள் குறிப்பா தமிழர்கள் மத்தியில் விக்குது ? கவனிங்கப்ப?
இத்தகையக் கருத்து மோதல்தான் நான் எதிர்ப்பார்க்கின்றேன். கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். நாகரீக எழுத்தும் கவிதை போல் நனமாடிருக்கின்றது, சில இடங்களில். தொடந்து இனிய நண்பர்களே. ஒவ்வொரு நாளும் வாசகர் கடிதம் போல் படித்துமகிழ்கின்றேன்.
பொறுப்பாக, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கோடு எழுதப்பட்ட கட்டுரைக்கே, இத்தனை ‘வேறுபட்ட’ கருத்துக்கள். அப்புரமெங்க்கெ நாம் ‘ஒற்றுமையாய்’ வாழ்வது! இது, நாம் கொண்ட ‘தலை எழுத்து’ போல!! இப்படியே பொய் கொண்டு இருந்தால்… என்ன்ன நிலைக்கு தள்ள பட போகிறோமோ? நம்மை, நம் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.
உலகம் உள்ளளவும் இந்துக்களும், இந்தியர்களும் குறிப்பாக தமிழர்கள் என்றுமே ஒன்றுமையாக வாழ்மாட்டார்கள் என்ற, உண்மையை முதலில் அனைவரும் கொஞ்சம் உணரவேண்டும். விதிவிலக்காக மற்ற இன சகோதர்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மக்கள் ஒருகால் வாழ்ந்து கொண்டுருக்கலாம்.
ஆனால், தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா எனப் பாடினானே நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஏன்தெரியுமா? இந்தத் தமிழ்ச்சாதியான் என்றுமே நிற்கமாட்டான் எனத் தெரிந்துதான் அந்தக் கவிஞன் பாடிவைத்தான். தமிழனே தமிழனைப்பார்த்து நீங்கள் தமிழ்ப்படித்தால் தட்டேந்தி திரிவீர்கள் என ஏளனம் படுத்தியவனை நாக்கை அறுக்காமல் பத்திரிக்கையில் அறிக்கைவிடும் விளம்பர பொருக்கி கூட்டத்தினர் யார். தமிழன் மொழி உணர்வும் இன உணர்வம் இல்லாத ஒரு விதமான மழுங்கை கூட்டம் என்பது உலகிற்குத் தெரியும். இருந்தாலும், தமிழைத் தெய்வமாக நினைக்கும் சில ஜீவன்கள் இருப்பதி னால்தான் இந்த நாட்டில் இன்னும் சில தமிழ்ப்பள்ளிகள் உயிர் வாழ்கின்றன. நாளை வெளிநாட்டுக்கலப்பினத்தினால் எதுவும் நடக்கலாம். இது எச்சரிக்கை அல்ல; அபாய அறிவிப்பு. இதுமட்டுமா திருமணத்திற்கு பிறகுதானே அவன் இவன் என்ன சாதியான் எனத்தெரிகின்றது. தாலி ஆசீர்வாதத்தின் போதுதானே சாதி பிரகடனம் படுத்தப்படுகின்றது. சாதிகேற்ற தாலி உண்டு. இதைத் தடுத்து தமிழ்குடும்பத்தினர் ஒரே விதமான முத்திரைப் பதித்தத் தாலி கட்ட முடியுமா? முதலில் திருமணத்திற்கு தாலி எடுத்துவரச் சென்றாலே பொற்கொள்ளன் கேட்கும் முதல் கேள்வி எதுவாக இருக்கிறது? மேல் சாதிக்காரன் என்று சொல்லிக்கொள்ளும் அவர்களுக்கு வேண்டுமானால், இதில் பெருமையாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு?
ஏன் தெரியுமா? தமிழன் சிந்தனைச் சோம்பேறிகளாக இருப்பதினால்தான். அதனால்தான், தொல்காப்பியமும்,திருக்குறளும் தந்த தமிழினத்திற்கு இன்று எவனெல்லாமோ தலைமை ஏற்கின்றான். தமிழன் புத்தியை மழுங்கடித்து வாழ்வதற்கு தமிழ் ஊடகங்கள் பெரும் துணையிருந்து பங்காற்றுகின்றது. இதனால்தான் இன்றைய தமிழறிஞர்கள் தமிழனுக்கு சிந்தனை மழுங்கடிக்கப் படுகின்றது என குறைகளைக் கூறினால் தமிழ்ப்படித்த மாற்றான் அணிதிரண்டு அடடா இவன் இனவாதம் பேசுகின்றான் இவன் நாக்கை அறுப்போம்;செருப்பால் அடிப்போம் என்பார்கள். உடனே சில தமிழர்கள் உலையில் இட்ட அரிசியாக கொதித்து அடங்கிவிடுவார்கள். தமிழன் மீதுள்ள குறைகளைச் சொல்லி அழுக்கு வார்த்தைகளை அள்ளி இறைக்கவில்லை; கர்வ வார்த்தைகளில் எவரையும் காயப்படுத்தவில்லை. எனக்கு தெரிந்த உண்மையைச் சொல்கின்றேன். உங்கள் நண்பர்களுடன், தெய்வத்தின் மீது சத்தியமாக சாதிமதம் பாராமல், பெண் எடுத்து; பெண் கொடுத்து வாழமுடியுமா? நாம் திருந்தவே முடியாத எழுதா சட்டங்கள் பல நூறு சடங்குகள் சடுகுடு ஆடிக்கொண்டு தமிழனிடம் உலாவுகின்றதே எதை நாம் இதுவரை மாற்றியுள்ளோம் இனி ஒற்றுமையாக வாழ்வதற்கு? இந்த தமிழன் செத்தப்பின்னும் சாதி சடங்குதானே செய்கின்றான்? இந்த இனமா ஒற்றுமையாக வாழ்ப்போகிறது? வேண்டுமானால், ஒற்றுமையாக வாழ்வோம்; உயர்வோம் என ஏட்டில் எழுதி விற்பனைக்கு வைத்துக்கொள்வோம். இது வேதனையின் விலாசம். அடுத்து தமிழன் தரம் தாழ்ந்து போனதற்கு எதுவெல்லாம் காரணம் என்பதை இந்த தலைமுறையினர் எண்ணிப்பார்த்தால் சில மாற்றம் நிகழலாம். வேதனையின் விழும்பில் நின்று சொல்கின்றேன். மீண்டும் சந்திப்போம் முடிந்தால் சிந்திப்போம். இப்படிக்கு, அண்ணாமலை எல்லப்பன்.
சமீபப காலங்களாக திரு A அண்ணாமலை அவர்கள் இங்கு பல கருத்துகளை பதிவு செய்வது கண்டு மகிழ்கிறேன். உங்கள் தமிழ், தமிழன் உணர்வுகள் 10 பேரை திருத்தினால் சந்தோசம் .சேர்ந்தே திருத்துவோம்..இனிய நினைவில்.
சிந்தனையைத் தூண்டிய அண்ணாமலை அவர்களுக்கு நன்றி.
காயீ என்கிற ஒருவர் சா ஆலம் பத்து தீகா ஈபோர் தமிழ்ப் பள்ளியில், நீலாயில் ஒரு பள்ளியில் நடந்த சம்பவம் போன்று இங்கு ஈபோர் பள்ளியிலும் நடந்ததாக ஒரு அபாண்டமான குற்ற சாற்றை எழுதி உள்ளார். அது உண்மைதான் என்பதை அவர் நிருபிக்க தயாராக இருந்தால் சம்பந்தப் பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகம் , பள்ளி வாரியம் , பெற்றொர் சங்கம் எல்லாம் தயாராக உள்ளோம். இந்த பள்ளியில் யாரும் நானே ராஜா , நானே மந்திரி என்ற நிலை எல்லாம் கிடையாது. வருகிற 22-2-2014 தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பெட்றோர்களுடன் சந்திப்பு கூட்டம் பள்ளியில் நடக்கிறது. வாருங்கள் உங்களது குற்ற சாட்டை சொல்லுங்கள். துணிவு இருக்கா ..?
தி மு கா வேட்பாளர்களை குஸ்பு அறிவிப்பாராம். தமிழக மாநிலவை தேர்தல் பெட்டியின் விலை 1000 கோடியை தாண்டி விட்டது. குஷ்பூவூம் இனி கொடீச்வரிதான். விஜயகாந்த 500 கோடி கேக்கிறாராம்.
தமிழக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை எனினும், திமுக சார்பில் தேர்தலில் நிற்கப்போகும் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்துவிட்டார் கருணாநிதி. திருச்சி திமுக மாநாட்டிற்கு பின்னர் வேட்பாளர்களின் நேர்காணல் நடக்கின்றது. அதன்பின்னர் இரண்டொரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்திருக்கிறார் கருணாநிதி.
ஒவ்வொரு தொகுதியில் நிற்கபோகும் இரண்டு வேட்பாளரகளை ஸ்டாலினும், கருணாநிதியும் சேர்ந்து முடிவு செய்துவிட்டதாகவும், அந்த இரண்டு பேரில் ஒருவரை மட்டுமே நேர்காணலின் மூலம் தேர்வு செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த பட்டியலின்படி, தென்சென்னையில் குஷ்பு, வடசென்னையில் சேகர்பாபு, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், நீலகிரியில் ஆ.ராசா, மதுரையில் பொன்முத்துராமலிங்கம், தேனியில் சேடப்பட்டி முத்தையா, தஞ்சையில் டி.ஆர்.பாலு ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக இருக்கின்றனர். மேலும் விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், புதிய தமிழகத்திற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் திமுக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சி புறப்பட்ட கருணாநிதி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் நாளை விஜயகாந்த் பிரதமரை சந்திப்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, காங்கிரஸ்-தேமுதிக கூட்டணி அமைந்தாலும் அந்த கூட்டணியில் திமுக கண்டிப்பாக இருக்காது என்று கூறியுள்ளார்.
அண்ணாச்சி, நீங்கள் உலகத் தமிழர் இயக்கத் தலைவர் என்பதற்காக தி.மு.க. செய்திகளைப் போட்டு எங்களைக் குடைந்து எடுக்கிறீர்களே! தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் இந்த செய்திகளை எல்லாம் யார் படிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. நீங்களும் இப்போது ஆரம்பித்து விட்டீர்கள். நேரம் இருக்கிறது என்பதற்காக இப்படியா…?
பிரபாகரன் தமிழன் அல்லர் ஆனால் கருணா தமிழர் பச்சை தமிழன்.வீராதி வீரரே.கோபம் குடியை கெடுக்கும்.நிதானம் வேணும்.
நாம் அதிகமாக பேசிக்கொண்டுதான் இரூக்கிறோம். இன்னும் திட்ட
வடிவில்தான் உள்ளன . செயல் எங்கே ?
இலங்கையில் அவன் தமிழன் ,,,,,,,,,,,,மலேசியாவில் ,,,,,,,,,,,அவன் யார் ????? அன்று…. ஆங்கிலேயருக்கும் யால்பனத்னுகும் நாம் அடிமை பிறகு “
சங்கர், அவன் பார்வையில் நாம் அப்படியேதான் இருக்கிறோம். நமது பொருளாதாரம், கல்வி மேம்பாட்டில் உயர்வு இருந்தால் மட்டுமே நம்மைப்பற்றிய அவனின் பார்வை மாறுபடும்! இப்போது வேறு வழி இல்லாமல் நம்மோடு கை கோர்க்கும் ஒரு சூழ்நிலை!
மலயவிட்கு கொண்டுவரப்பட்ட நாம் அன்று ,,,,,,,,Ceylon தமிழர்களுக்கு அடிமைகளாக வாழ்தோம் ,,,,,,,,,எழுத படாத வரலாறு ……….
இன்று நாம் அவர்களுக்காக அழுவதும் ,,,,,அவர்கள் வீரம் பேசுவதும் ,,,,,,,ஒரு வேலையாக ,,,,,,,,,,,,,,,,யாழ்ப்பாணத்தான் நமது முதல் எதிரி ,,,,,,,,,,,,,,,
பிரபாகரன் நமக்கு என்ன சகோதரான ,,,,,,,,,,,,,அவனுக்காக மலேசியாவில் வாழும் கொடிஷ்வரர்கள் யால்பந்தான்கல் அஹ்வில்லை நீர் எதற்க்கு கதரூகிராய் ,,,,,,,,,, ஓலம்இடுகிறாய் ,,,,வரலாறு மறந்த Malaya தமிழா ,,,,,,,,,,,,,என்னிப்பார் உன் அவல நிலைக்கு ,,,,,,யார் யார் காரணம் என்று ,,,,,,,,,பிரிடிஷ்காரன் அவனது கை ஆட்கள் யாழ்ப்பாணத்தான் ,,,,,,ஜப்பான்காரன் ,,,,,,அஹ ம்னோ ,,,,மாஈக
பிரபகரன் கருணா யார் இவர்கள் ?????????? நண்பர் காய் அவர்களே ,,,
மலேசியா தமிழர்களின் அவலநிலைக்கு காரணம் மலேசியா இந்திய காங்கிரஸ் …..வேறு எவரும் ..தமிழர்கள் மத்தியில் குண்டர்களை உருவாக்கவில்லை ..தமிழ் பள்ளிகளை மூட அதரவு போகவில்லை கேவலம் இன்னும் நீங்கள் இவங்களை நம்புகின்றீர்கள் …..சுயமாக ஒவொரு தமிழர்களும் உழையுங்கள் …பத்தே வருடத்தில் நீங்கள் முன்னுக்கு வரலாம் ….
்திரு சங்கர் அவர்களே.. அனாவசிய பேச்சு வேண்டாம்.. நம் மலேசியா தமிழனத்தின் அவலத்திற்கு மாற்றானை குறை சொல்ல வேண்டாம்.. நம் தலைவர்களின் குள்ளநரி சூழ்ச்சியும், நம் மக்களின் மெத்தன தன்மையுமே நம் அவல நிலைக்கு காரணம்.. சகோதரன் என்றால் தான் நீங்கள் அழுவீரோ? நம் இனம் வேரோடு சாய்ந்ததே… நம் ரத்தம் அங்கே கணக்கில்லாமல் சிந்தியதே…. இங்கு வாழும் கோடிஸ்வர இலங்கைகாரர்கள் அழவில்லை என்றால் அவர்கள் மனித தன்மை அற்றவர்கள் என்றே பொருள்படும்.. உணர்ச்சியை கொன்று புதைத்தவர்களாய் இருப்பார்கள் அவர்கள்..அவர்கள் மனம் பாலைவனமாய் இருக்கலாம்.. எது எப்படியோ.. ்தலைவர் பிரபாகரன் ஒரு சகாப்தம்.. வல்லரசுகளை அதிர வைத்த ஒரு தமிழன்..
நம் தலைவனின் இனமாய் நீங்கள் இருப்பதை நினைத்து பெருமை படுங்கள்…
மலாயா விற்கு பிரிட்டிஷ் காரன் கொண்டு வந்த இலங்கை தமிழர்கள் எல்லோரும் படித்தவர்கள் ஆக இவர்கள் நிர்வாகத்திற்கு பயன்படுத்த பட்டார்கள் இந்திய தமிழர்கள் தோட்ட வேலை செய்தார்கள் …..மலேசியா இந்திய காங்கிரஸ் கட்சியில் அன்றும் இன்றும் இலங்கை தமிழர்கள் பதவியில் இல்லை ..ஆக இந்த கட்சிதான் இன் நாட்டில் தமிழர்களின் கேவல நிலைக்கு காரணம் –பணத்திற்காக தன இனத்தையே விலை பேசிய இந்த கட்சிக்கு இன்னும் ஆதரவு கொடுக்க வெட்கமாக இல்லை ????முதலில் சுயமாக உழைக்க முயலுங்கள் வெற்றி உங்களை தேடி வரும்
மலேசியாவில் தமிழ் பாடசாலைகள் இருந்தும் ..மலாய் ..சீன பாடசாலைகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் கேவலம் இன்னும் விளங்க வில்லை யா ??? இன் நாட்டில் உள்ள இரண்டு தமிழ் கோடீஸ்வரர்களும் …தமிழ் பாடசாலையில் கல்வி பயின்றவர்கள் தானே …ஆசியாவில் பல நாடுகளில் உள்ள சீன செல்வந்தர்களுக்கு ..சீன மொழி தவிர வேறு எந்த மொழியும் தெரியாது ..தாய் மொழியில் வர்த்தகம் செய்து தான் இவர்கள் வெற்றி கண்டார்கள் …
நீ பெருமை படு
எது வீண் பேச்சு
வரலாறு புரியாத சோழ
நான் உன் போல் மாஈக வை நம்பி வாழ்பவன் அல்ல
Ceylon கா ரன் ரொம்ப நல்லவன் ,சோழ நீ என்ன பெறிய அறவழிய
மலாய் பாடசாலைக்கு தம் பிள்ளைகளை அனுப்பும் மலேசியா தங்க தமிழர்கள் நாளை வசதி கிடைக்கும் என்றால் இஸ்லாம் மதத்திற்கு பிள்ளைகளை மாற சொல்வார்கள் …..மலாய் பாடசாலையில் படிக்கும் தமிழா பிள்ளைகளுக்கு சிவில் சர்வீஸ் வேலை காத்து இருக்கின்றதா ?சொந்த தாய் மொழியை எழுத ,படிக்கச் தெரியாதவன் எல்லாம் வெறும் ஜடம் .. இவைகள் இன் நாட்டில் பெருகிக்கொண்டு இருக்கின்றன பெற்றோரே இதற்கு வழி காட்டியாக இருப்பது கேவலம் வெட்கம் தமிழ் குறைவாக பேசபட்டும் ிஜி ,மொரிசியஸ் நாடுகளில் கூட தமிழ் பாடசாலைகளில் கற்பிக்க படுகின்றது ,,ிரான்ஸ் நாட்டில் secondary education level பரிட்சைக்கு தமிழ் ஒரு பாடமாக உண்டு மலேசிa தமிழர்களுக்கு தமிழ் புளிகின்றதாm வெட்கம் இல்லையா உங்கள் பிள்ளைகளை சீன , மலாய் பாடசாலைக்கு அனுப்பி செருப்பு அடிவாங்க வைக்க
யாழ்ப்பாணம் சொன்ன எதற்கு ராஜா ராஜா சோழன் , சுகுணா ,,,,,,கோபம் வருது ,,,,,,,,,,அவர்களால் பாதிக்க பட்டவன் நான் ,,,,,,,,,,,,,,என் குடும்பம் ,,,,,,,,,
ஆரம்பக் கல்வி, தமிழ் மொழி கல்வியைப்பெறாமல் தமிழர்கள் சீனப்பள்ளிக்கும் வேறு பள்ளிக்கும் அனுப்புகின்றவர்ளைத் திட்டாதீர்கள். தமிழர்களின் தாய்மொழி தமிழ் மீது மற்றவனுக்கு என்ன அக்கறையுள்ளது? அன்று எல்லா மக்களும் முடிந்த வரையிலும் தமிழனையும்; தமிழ்மொழியையும் போற்றி வாழ்ந்தனர். ஒருதாய் மக்கள் நாம் என்போம் எனும் பாடல் பிறந்த காலம் அன்று. இன்று மொழி வழி வெறி வளர்ந்து விட்டகாலம். இந்த நாட்டில் ஆங்காங்குன் சாதி சங்கம் வளர்ந்து விட்ட அளவுக்கு தமிழுணர்வு வளரவில்லை என்பது சத்தியமான உண்மையாகும்.. அதற்கு முக்கிய காரணகர்த்த திரைப்படமும்; அன்று ம.இ.கா அரசியலில் வாழும் சாதி தலைவர்களும் தான் முகாமை. இன்றும் அது தொடர்கின்றது. ஒரு படி மேலாக சொன்னால், செஞ்சோற்று கடன் மறந்த தமிழாசிரியன். முதலில் அவனை நையாண்டி செய்யுங்கள். அதன் பிறகு சாதி சங்கத்தின் செய்திகளை பணத்திற்காக வெளியிடும் ஆசிரியர் கூட்டம். தமிழ்ப்பத்திரிகை ஆசிரியன் பிள்ளைகள் எந்த பள்ளீயில் படிக்கிறது? இவன் எழுதுவான் தமிழ்ப்பள்ளிக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்புங்களென்று. அவன் தான் மொழி பற்றில்லாமல், பிற மொழி பள்ளியில் பிள்ளைகளை சேர்த்து வாழ்வைத்தவன். இருந்தாலும் ஒரு உண்மையை உறக்கச் சொல்கின்றேன் குறித்துக் கொள்ளுங்கள். தமிழ்ப்பள்ளி பெண் ஆசிரியைகள் பெரும்பாலும் தமிழச்சிகள் இல்லையே. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு போவாருங்கள் பல உண்மைகள் விளங்கும் அவர்களின் மொழிப்பற்றில். இது கைகால் முளைத்த கதை இல்லை. எனது சந்தேகம் உறைபனியாய் இறுகுவதற்கு எத்தனையோ காரணங்கள். கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக தமிழனோடு பிற இன சகோதரனும் தமிழனை வானொலி ஊடக வாயிலாக கேலியும் கிண்டலும் செய்து வாழ துவங்கிவிட்டான். இனிவரும் இளைய தலைமுறை தமிழ்க்கல்வியில் கவனம் செழுத்தினால்தான் விடிவுகாலம் பிறக்கும்.