வைதீஸ்வரியின் குடியுரிமை போராட்டம், “குளொரக்ஸ்” வரை போக வேண்டுமா?

Vaithiswari1மாணவி . வைதீஸ்வரி இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில் அமருவது கேள்விக் குறியாகியுள்ளது. 1996-ல், ஜொகூர்பாரு சுல்தானா அமீனா அரசு மருத்துவமனையில் பிறந்த இவர் 18 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறார். இவரின் தந்தை கலைச்செல்வன் த/பெகுப்பன். இவர்மலேசியர். தாயார் சாந்தா த/பெரெங்கநாதன் ஒரு சிங்கபூர் பிரஜை.

இவர்களின் இரண்டாவது மகளான க.வைதீஸ்வரிக்கு முறையான பிறப்புப் பத்திரம் இருந்தும்,  குடியுரிமை அந்தஸ்து இல்லை எனும் காரணம் கூறித் தேசியப் பதிவிலாகா அவரின் அடையாள அட்டை விண்ணப்பத்தை நிராகரித்தது. வைதீஸ்வரியின் பெற்றோர் திருமணப் பதிவைத் தாமதமாக (வைதீஸ்வரி பிறந்த பிறகு) செய்ததால் அவருக்குக் குடியுரிமை தர இயலாது என்றும் தேசியப் பதிவிலாகாவைச் சார்ந்த அதிகாரிகள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து, வைதீஸ்வரியின் தந்தை செய்த குடியுரிமை விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளாக, மை-டப்தார் பதிவு மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்தல் என அவர்கள் நடத்திய போராட்டத்திற்குப் பலனேதும் இல்லாத பட்சத்தில், இவர்கள் மலேசியச் சோசலிசக் கட்சி, நூசாஜெயா கிளை பொறுப்பாளர்களை நாடினர். இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. அரசு அதிகாரிகளிடமிருந்து திருப்தியற்ற பதில்கள்தான் வந்தன, முடிவு பிறக்கவில்லை. எனவே, தகவல் சாதனங்களை அவர்கள் நாடினர்.

அதனைத் தொடர்ந்து, சிஜேமை வலைதளத்தில் இச்செய்தி ஒளிபரப்பானது. மேலும், பிப்ரவரி 5-ல், நாட்டின் சில முக்கிய நாளிதழ்களில் இப்பிரச்சனை தொடர்பான செய்தி வௌpயானது. அடுத்த நாள், நண்பன் நாளிதழில் தேசியப் பதிவு இலாகா , வைதீஸ்வரியின் குடியுரிமை விண்ணப்பம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15ஏ வழி மறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் முயற்சி செய்யவும் எனக் கூறியுள்ளது.

மலேசியாவில் பிறந்து, முறையான பிறப்பு பத்திரம் இருந்தும், ஏன் இவரின் அடையாள அட்டை விண்ணப்பம் மறுக்கப்பட்டது. பெற்றோர்களின் தாமதமான திருமணப் பதிவு என்பது ஏற்புடைய காரணம் அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தப் பிரிவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது? இதே நிலையில் உள்ளச் சிலருக்கு அடையாள அட்டை கிடைத்துள்ளதை நம்மால் காட்ட முடியும். அடையாள அட்டை இல்லாத காரணத்தினால், இவ்வாண்டு இவர் எஸ்.பி.எம். தேர்வுக்குப் பதிய இயலாது என்று பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது.

mydaftar ICமுறையான காரணம் ஏதும் இல்லாமல், ஒருவரின் குடியுரிமை மற்றும் அடையாள அட்டை விண்ணப்பம் மறுக்கப்பட்டு, எதிர்காலம் சூனியமாக்கப்படுவது தேசிய முன்னணி அரசாங்கத்தில் தொடர்கதையாகிவிட்டது. பிப்ரவரி 6-ல், தேசியப் பதிவு இலாகாவில் வைதீஸ்வரிக்கு குடியுரிமைக்கான விண்ணப்பம் மீண்டும் செய்யப்பட்டுள்ளது. இம்முறை என்னப் பதில் வருமோ? எப்போது வருமோ? எனப்் மகளின் எதிர்காலம் என்னவாகுமோ? என பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் திரு கலைச்செல்வன் கலங்கி நிற்கிறார். நான் இவ்வருடம் கண்டிப்பாகத் தேர்வு எழுத வேண்டும் எனும் வேட்கையில் மாணவி வைதீஸ்வரி ஆவலுடன் காத்திருக்கிறார்.

முடிவு காணாமல் தொடரும் இந்தப் பிரச்சனைக்கு, நிரந்தரத் தீர்வு என்ன? அன்றாடம் இந்தப் பிரச்சனையால், வயது வரம்பின்றிப் பல வழிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு என்ன பதில்? இந்நாட்டில் பிறந்த நாம், அடையாள அட்டை பெற நீண்ட நடை பயணம், மறியல் போராட்டம் என்று “குளொரக்ஸ்” மருந்து வரை சென்று போராட வேண்டுமா? அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்கள் கண்ணுக்கு நாம் தெரிவோமா?

இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கப் பொறுப்பில் உள்ளத் தலைவர்கள் முன்வர வேண்டும் என இந்த பிரச்சனையை முன்னெடுத்துள்ள ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.