கி.சீலதாஸ். பகுதி 1. இன்றைய மலேசியாவில் தமிழர்களின் அல்லது பொதுவாக இந்தியர்களின் நிலை என்ன? எதிர்காலத்தில் அது எப்படி இருக்கும்? என்ற கேள்விகளை எழுப்புவது நியாயமானதாகவும் காலத்துக்கேற்ற கேள்விகளாகவும் இருக்கும். இன்றைய இந்தியர் சமூகம் அதன் நாளைய சந்ததியின் நலனைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். எனவே, பழங்காலத்து வீரக்கதைகளைப் பேசிப்பேசிப் பெருமிதம் கொள்வதைத் தவிர்த்து இனி என்ன செய்ய வேண்டும் என்ற செயலில் இறங்குவதே சரியாகப்படுகிறது.
பழம் பெருமைகளுக்குத் இந்தியர்கள் சொந்தக்காரர்கள் என்று கூறுவதால் பலன் இல்லை. உதாரணத்துக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனாரின் வாய்மொழி எவ்வளவு உயர்வானது, அர்த்தமுள்ளது என்பது நமக்குத் தெரியும். காணும் இடமெல்லாம் நமது ஊரே. அங்கு காண்பவர்கள் அனைவரும் நம்மவர்களே- நண்பர்களே- என்ற உயரிய நோக்கு பண்டைத் தமிழனிடம் இருந்திருக்கிறது. அதற்கான காரணத்தை தேடி அலைந்தால் நமக்குக் கிடைப்பது என்ன? தமிழன் ஏழ்கடல் தாண்டிச் சென்று வாணிபத்தில் வெற்றிக் கண்டவன். எனவே போன இடமெல்லாம் அவன் மனதில் தமது இடமாகப் பட்டிருக்கலாம். அங்கே பார்த்தவர்களை எல்லாம் தமது நண்பர்கள் போலவும் உடன்பிறப்புப் போலவும் ஏற்று நடந்துகொண்டிருக்கலாம்.
அதில் பரந்த மனப்பான்மை இருக்க வழியுண்டு. அதே சமயத்தில் மற்றொரு கோணத்திலிருந்து பார்ப்போமேயானால் இந்த உலகம் மாயம். நடப்பதெல்லாம் மாயம். வாழ்வும் மாயம் என்ற எண்ணம் உயர்ந்திருந்த மனோபாவத்தையும் மறந்துவிடக்கூடாது. அதையும் கணக்கில் சேர்த்துக்கொண்டால் காணும் எல்லா இடங்களும் சமமே. காணப்படும் மனிதனும் – நம்மவரே என்ற மனோபாவம் வலுவடைந்திருக்கலாம்.
அடுத்து, சமய வளர்ச்சி மனிதனின் இயற்கையான சுபாவங்களை மாற்றிடும் தன்மையைக் கொண்டிருந்தது. சமயங்களிடையே போட்டி, விரோத மனப்பான்மை போன்றவை வளர்ந்துவிட்ட நிலையில் திருமூலர் சொன்னார் “எம்மதமும் சம்மதமே”.
இந்த இரண்டு அற்புதமான வாய்மொழியை எடுத்துகொண்டு ஆராய்ந்து பார்த்தால் பிறர் தமிழனைப் பத்தாம்பசலி என்று தீர்மானித்துவிடுவார்கள். காரணம் தமிழனிடமிருந்தப் பரந்த மனப்பான்மை பிறரிடம் காணமுடியவில்லை. சமயத்தை ஏற்றுக்கொண்டாலும் அதே கதிதான். கடவுளையே மதமாற்றம் செய்யும் காலம் இது.
நான் சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவைச் சிகிச்சைக்காகப் போயிருந்தேன். அதற்குமுன், தாதி தமது கடமையைச் செய்துகொண்டு “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டார். “உண்டு” என்றேன். “எந்தக் கடவுள்” என்று மறுபடியும் கேட்டார். நான் புரியாமல் அவரைப் பார்த்தேன். “இந்துக் கடவுளா?, கிறிஸ்தவக் கடவுளா…?” என்று அடுக்கிக்கொண்டே போனார். அவரை இடைமறித்து “நான் கேட்கவில்லை…! கடவுளிடம் நீ எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கேட்கவில்லை!” என்றேன்.
மதத்தை எடுத்துக்கொண்டால் கடவுளை குழப்புவதில், தமிழனை அல்லது பொதுவாக இந்தியர்களை விஞ்சிவிட்டனர் மற்றவர்கள். அந்த வகையில் அவன் சிறுபான்மையே.
பல நன்னெறிகளைத் தந்தவன் தமிழன். ஆனால் அவை பிறருக்குப் போய் சேரவில்லை என்பது ஒரு புறமிருக்க தமிழனே அந்த நன்னெறிகளை மறந்து வாழ்கிறான் என்றால் அதுவும் உண்மையே. இன்னும் சொல்லப்போனால் தமிழில் எப்படிப்பட்ட நன்னெறிகள் உள்ளன என்பதை அறியாதவனாக வளர்ந்து வருகிறான் இந்த நாட்டில்.
சோ. விருத்தாசலாம் – சோவி- என்று அழைக்கப்பட்டவர், சிறுகைதைகள் எழுதி நல்ல புகழ் கண்டவர். புதுமைப்பித்தன் என்றப் பெயரில் இலக்கிய உலகில் பீடு நடைபோட்டவர். மண்தோன்றி கல் தோன்றா காலத்தே பிறந்த மூத்தக்குடி தமிழ்குடி என்பதைப் பற்றி சொல்லும்போது, தமிழன்தான் முதல் குரங்கு என்றால்கூட திருப்திபடமாட்டான் என்றார். தமிழனின் பரிதாப நிலையைத் தெளிவாகச் சொல்ல வேறு என்ன வேண்டும்.
(தொடரும்)
***இன்றைய இந்தியர் சமூகம் அதன் நாளைய சந்ததியின் நலனைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்***
இந்த உண்மையை…, குறிப்பாக மலேசிய இந்திய சமூகம் மிக மிக
தீவிரமாக சிந்தித்து தடம் மாறி …வளர …வாழ தங்கள் கட்டுரை
பதிவாக வேண்டுகிறேன் .
தமிழனுக்கு கடவுள் தானே முதல் எதிரி,அதை தாங்கள்
கண்டதில்லையா? கோடி கணக்கில் கோயில் கட்டி ,குடமுழுக்கு
செய்த பின் பிரதமரிடம் அதை கொடு,இதை கொடு என்று கையெந்து
கொண்டிருக்கிறோமே ஏன், ஒரு சீனன் என்னிடம் சொல்கிறான்,
நீங்கள் கோயில் கட்டுவதைவிட தமிழ் பள்ளி கட்டலாமே என்று.
தமிழ் அரசியல் தலைவர்கள் ,சமய தலைவர்கள்,இயக்க தலைவர்கள் , படித்த வழக்கறிஞர்கள்,மருத்துவர்கள் யாரும்
சொல்லாததால் ,டாக்சி ஓட்டுனர் நான் சொல்ல வேண்டி இருக்கிறது.
காலத்திற்கேற்ற சிந்தனை வேண்டும் என தங்களின் கருத்து மிகச் சரியானது.மாய உலகில் பற்பல மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை.
சித்தாந்தம்,வேதாந்தம் எல்லாம் பேசியே நேரம் போகுது சார்!
அடுத்து என்ன செய்தால் நம் சமுதாயத்தை காப்பாற்ற முடியும்ன்னு கூறுங்கள்! ஒரு அதிரடி செயல்திட்டத்தை வரையுங்கள் நாம் இழந்ததை மீண்டும் கொள்ளையர்களிடமிருந்து எப்படி மீட்பது? அடுத்த தலைமுறை இலக்குகள்? இனியும் ஏமாறாமல் இருக்க எதை கடைபிடிக்க வேண்டும்? குரங்கு கதையை இன்னொரு நாளைக்கு வச்சிகிலாம்! ப்ளிஸ்!
ஆலயம் கட்டி பெருந்துகான் கேக்குரரோம்,ஆனால் அரசாங்கம் நிலம் தரனும்,பணம் தரனும்,கட்டித்தரனும்,ஆசிரியா் தரணும்,எல்லாம் தரனும் ஓசியில் வரனும்.ஆலயம் மேலா தமிழ் பள்ளி மேலா.ஓரிரன்டு பிள்ளைகளை வைத்துகொண்டு ஆசிரியா் பற்றாகுரை தமிழ்பள்ளில் படிச்சவா்கலே முன் வருவதில்லை,எனக்கு தொிந்தவரை பெற்றோா் உண்மையில் கொடுமைகாரா்கல் ஏன் என்றால் தமிழ்பள்ளிக்காக தான் சுமந்து பெற்ற பிள்ளைகளின் எதிா்காலத்தை நரபலி செய்கின்றனா்.எவ்வளவோ வசதியான பள்ளிகள் வாவாசான் பள்ளிகள் இருந்தும் ஓரு வசதியும் இல்லா கொட்டகையில் படிக்க அனுப்பும் பெற்றோரை நினைதால் வேதனையாக உள்ளது.சில அரசியல்வாதிகள் அரசியலுக்காக ஏழை மாணவா்களுக்காக அரசாங்கம் ஓதுக்கும் வசதிகளை அனுபவிக்கவிடாது வீனடிக்கின்றனா்.இந்த பிள்ளைகளை காப்பாத்த தன் தாய் நினைத்தால் தான் முடியும்.அரசியல் வேறு பிள்ளைகளின் எதிா்காலம் வேறு.கண்முன்னே கிடந்தாலும் கண்மூடிதனமா போகும் பெற்ரோரை பிள்ளைகளும் சற்று முயற்சி செய்து திருத்துங்கள்,வசந்த காற்றை சுவாசிப்பது எப்போது.நாராயண சமா்பணம்.
தமிழனின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் எனில் தமிழர்கள் யாவரும் செயலாலும் சொல்லாலும் ஒன்றுபட வேண்டும். பல்லாயிரக்கணக்கான நம்மவர்கள் கூடுகின்ற பெருநாட்கள் ஒவ்வொன்றிலும் நம்மில் வறியவர்கள் குடும்பங்கள் சிலவற்றிற்கு உதவி அவர்கள் வாழ்க்கை தரம் உயர கூட்டாக செயல்பட வேண்டும் .அங்கு அரசியல் சாயமோ
தலைவன் என்ற சாயமோ இருக்கக்கூடாது.
ஐயா இந்த கட்டுரையும அதை நோக்கிய பழமை சிந்தனையின் அடிசுவர்தான். தமிழன் மட்டுமா குரங்கன் மனித இனமே குரங்கீனம்.நீங்கள் உங்கள் தொடரை வேறு கோணத்தில் இலக்கில் நிமித்தி காட்டவும். “அறிவர்கள்” இலக்கியம் இன்னும் தமிழனக்கு பயன் பட வில்லை என்பது எனது வருத்தமும் கூட.
சுருக்கமா 10 தமிழனை பொருள் படைத்த குழுவாக கூட்டு சேர வையுங்கள்.அதுபோதும்!பாமர தமிழர்கள் அறமும் வீரமும் வெல்ல வேண்டும் என்று வீர வசனமும் எழுத்தும் நம்மை இலியாச்சன்களாக இதுவரை வைத்துள்ளது.
தமிழர்களுக்கு உலகம் முழுதும் எதிர்ப்பு,அழிவு. நாம் வெற்றி பெற உள்ளம் எனும் உறவுகள் நெறுக்கம்பட பட வேண்டும்.பண பலம்.அரசியல் விவேகம் அரசு பலமின்றி எந்த இனமும் வெற்றிபெற முடியாது என்று மட்டும் சொல்லுங்கள்.
நீங்களும் பழமை உதாரணங்கள் பேசி சிந்தனையை ரணமாக்க வேண்டாம். பழமையும் இலக்கணமும் இலக்கிய நோக்கும் தனி மனித உயர்வுக்கே பயனிலை அதை வைத்து படிப்பவன் மனதை மட்டும் தூய்மை செய்துகொள்ளாம மனிதனை தமிழனை நேர்செய்வது இன்றைய அவசர பொருளியல் உலகில் முடியாது.
இனத்தை வைத்து சாங்கியம் /வாஸ்த்து பேசியவன் வாழ்த்து காட்டியதாக வரலாறு இல்லை.உழைப்பின் தாரக உயர்வே தமிழனின்
பாதுகாப்பு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றான் அது தமிழுக்கு ,தமிழ் அறிவர்கள் அதை பாவித்து பீஸ் பேசி பாமரர்களை ஏமாற்றினார்கள் ஆனால் தமிழன் இன்னும் உரிமை சங்கருந்து கேளி பார்க்கும் பார்வையாளனாக உணர்வு பார்வை இழந்து பரிதவிக்கிறான்.
அஸ்ட்ரோ வின் சிந்திப்போம் சிந்திப்போம் கூட இன்னும் வாழ்வியல் குப்பைகளை கிளருகிரதே தவிர 10 பேருக்கு பொருளியல் முதலீட்டை சொல்லவில்லை. கூரையில் ஓட்டை பேசுவதோ தமிழ் வீர சார வசனங்கள் …தமிழனை குந்த வைத்து வேடிக்கை காட்டும் கூட்டம் திருந்த வேண்டும்.
எப்படி எப்படி பேசினாலும் …சிந்தித்தாலும் நம் பிரச்னைகளை
முன்னெடுக்க காந்தி போல் …,நேத்தாஜி போல் சுயநலம் கருதா தலைமை இல்லையேல் எதுவும் அசையாது !!!
ஆனால் நமக்கு வருபவன் எல்லாம் …ஒன்று இடையில் அவனோடு
கூடும் தளபதிகளால் …,அவர்களே அவனுடைய செயல் திட்டங்களை
முடக்கும் எட்டப்பர்களாக விலை போகும் நிலையில் …அவனையும்
தடுமாறச்செய்து இயக்கமே காணாமல் போகச்செய்கிற அவலம் …,
இன்று அல்ல …வ .உ .சி .கப்பல் கம்பெனி தொட்டே …இன்னும் பின்னுக்கும் போகலாம்… … இப்படி எத்தனை காலம் நம்மவன்
பேடித்தனமும் வேசித்தனமும் செய்து அவன் வாழ நம் மக்களை
பாழ் குழியில் தள்ளிக்கொண்டே போகிறான் .???
அவனையும் ஆதரிக்கும் நம் இன விலை போகும் வேசி கூட்டம் …
இந்த நிலை தொடர் கதையானபின் இனி …,
யாரை நம்பி நான் பொறந்தேன் …என அவர் அவர் … தன் வழி தேடி
போகும் நிலை நமக்கு என்றாகி விட்டது !
கடந்த தேர்தலில் *** மாற்றம் *** என்ற மந்திர சொல் கேட்டு எத்தனை லட்சம் பேர் (நம் மக்களும் தான் ) வெளி நாடுகளில் நிம்மதியாக தொழில் புரிபவர்கள் எல்லாம் பணத்தைகொட்டி விமானத்தில்வாக்களிக்க வந்தார்கள் …இந்த சமூகம் அறியுமா ???
அப்போதும் நம் இனத்தினர் தானே அதிகமாக விலை போனார்கள்
என்று பரவலாக பேசப்பட்டது !!!
நம் இனத்திற்கு இனி எவன் தலைவன் என வந்தாலும் கற்றோர்
கூட்டம்…, நல்ல சூடு சொரணை உள்ளவன் துணை போக பல முறை
சிந்திப்பான் …,பணம் காசுக்கு விலை போபவன் வேறு !!!
நம் தலை விதி …அவன் அவன் சுயமாக முன்னேறினால் தானோ ???
யாம் இடைநிலைப் பள்ளியில் படித்த காலத்தில், மலாய் ஆசிரியர் ஒருவர் யார் ” Albert Einstein” – ன் மனித பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஏற்றுக் கொள்கின்றீர் என்று கேள்வி தொடுத்தார். பலர் பெருமையாக கையை உயிர்த்தினோம். அடுத்தக் கேள்வி, அப்படியானால் உங்களயுடைய முன்னோர்கள் அனைவரும் குரங்குகள் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்களா என்று வினவினார்? பல மாணவர்களின் முகத்தில் அசடு வழிந்தது. என்னையும் சேர்த்து. அன்று மனிதர்களின் உயிர்பிற்கு சைவ சமயம் தரும் விளக்கத்தை அறிந்து இராதிருந்தனால் அந்த ஆசிரியரின் கேள்விக்கு சரியான பதில் கொடுத்து அவரின் தலையில் ஒரு கொட்டு போட முடியாமல் போய் விட்டது. இன்று “தமிழன்தான் முதல் குரங்கு என்றால்” அவர் தலையுலும் ஒரு கொட்டு போட என்னால் முடியும். தொடரும்.
முதலில் நம்மவர்கள் குடிப்பதை நிறுத்த வேண்டும். குடியே நம்மை கெடுத்து கொண்டிருக்கின்றது. எங்கு பாத்தாலும் குடிகாரன்கள் – குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.குடும்பம் முன்னேறினால் இனம் முன்னேற சாத்தியமிருக்கின்றது
இன்று நகரில் அமைந்துலுள்ள பல ஆலயங்களில் விசாலமான கல்யான மண்டபமும், பொது மண்டபமும் இருக்கிறது. அவைகளில் பல, என்றாவது ஒரு நாள் திருமண நிகழ்ச்சிக்கும், வாரத்தில் சில நாள் புப்பந்து விளையாடுவதற்கும் பயன்படுகிறது. மற்ற நாட்களில் மேஜையும் நாற்காளியும் கேட்பாரற்று மூலையில் கிடக்கும். அதையே நம்மவர்களான கோவில் நிர்வாகமும், பொது அமைப்பும் சேர்ந்து இந்தியர்களுக்கு பாலர் பள்ளி நடத்தி கண்காணிக்கலாம். இடமிருந்தால் பாலர் பள்ளி பக்கத்திலேயே, வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்காக குழந்தைகள் காப்பகம் (ஆயா கொட்டாய்) நடத்தலாம். பள்ளி பேருந்து நிர்வாகமே நடத்தலாம். இப்படி நடத்துவதால் சிலருக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். இழம்பிஞ்சுகள் தமிழ் கற்க ஏதுவாய் இருக்கும். நாளை அவர்கள் பள்ளி செல்லும் வயதை எட்டியவுடன், எங்கே எனது தமிழ் பள்ளி? என்றே கேட்பார்கள். அப்போழுது தமிழ் பள்ளியின் மாணவர் வருகை கூடுமோ தவிர குறையாது. வரப்பு உயர நீர் உயரும் என்பது போல் தமிழும் வளர்ச்சி பெறும். இதனால் நம் இனம் அடையும் நன்மைகள், பிள்ளைகளை கண்காணிப்பதற்காக வேலைக்கு செல்லாமல் இருக்கும் தாய்மார்கள் வேலைக்கு செல்வர். அங்கே தமிழர்களின் பொருளாதாரம் உயரும். பாலர் பள்ளியில் ஆரம்பத்திலேயே சமய பாடம், நன்நெறி கல்வி, திருக்குறள் இம்மூன்றையும் கதை வடிவில் உணர்த்தலாம். அவர்கள் மனதில் தன்னம்பிக்கை முளை விட்டு வளரும். ஒழுக்கமுடைய வளரும் இளைஞர்களை எதிர் காலத்தில் காணலாம். பாலர் பள்ளியில் காலையில் கல்வியும் மதியம் போக பின்னேரத்தில் கதையும், விளையாட்டுகளும் கற்றுக் கொடுக்கலாம். இப்பள்ளி நடத்தவதற்கான செலவீனத்தை பெற்றோர்கள், கோவில், அரசாங்க மானியத்தில் வாழும் பொது அமைப்புக்கள் ஏற்று நடத்தலாம். சொல்வது சுலபம் செஞ்சி பாரு தெரியும் என்று முனுமுனுப்பதும் என் காதில் விழுகிறது. இழம் வயதில் தோட்டத்தில் வேலை செய்யும் போழுது, இது போன்ற ஒரு பாலர் பள்ளி உருவாக்கி. அமைத்து, எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும், என்னை மீறி நீ செய்து விடுவாயா? என்று, ஆள் பலமும், அதிகார பலமும் உள்ள கூட்ட தலைவனிடம் நானாகவே சென்று, அய்யா இதை தொடர்ந்து நடத்துவதற்கு தங்களால்தான் முடியும் என்று சொல்லி ஒப்படைத்து விட்டு வெளியேறிவன் நான். தோட்டம் மூடு விழா காணும் வரை தோட்ட நிர்வாகத்தின் கீழ் அப்பள்ளி செயல் பட்டது. தோட்டம் என்பது தனி நிர்வாகம் எப்படி வேண்டும் என்றாலும் செயல் படலாம். நகரின் மத்தியில் கோயில் இடம் என்பது அரசாங்க பார்வையின் கீழ் வரும். அரசாங்க சட்ட திட்டங்கள் தெர்ந்தவர்கள் விவரிக்கலாம். மற்றவர்களுக்கு பயனுல்லதாய் அமையும். நன்றி.
1. //திருமூலர் சொன்னார் “எம்மதமும் சம்மதமே”.//இதற்கு ஆதாரம் உண்டா? திருமூலர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் கூறினார். கவனிக்கவும்
2. தேனி யின் கருத்து //மலாய் ஆசிரியர் ஒருவர் யார் ” Albert Einstein” – ன் மனித பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை// இந்த கோட்பாட்டை கூறியவர் Albert ஐன்ஸ்டீன் அல்ல. அவர் Charles Robert டார்வின். இனி கொஞ்சம் கவனமாக எழுதுங்கள்.
அற்புதம் உழவன் சார், வரப்பையும் நீரையும் உயர்த்திக்காண ஆவல்! தமிழ் மொழி ஆர்வாளர்கள்,கல்விமான்கள் தொடர் செயலாக்கத்தை விரைவில் உறுதி படுத்த ஒரு மனதாய் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிப்பது அவசியம்!
மன்னிக்கவும். டார்வின் கோட்பாடுதான். அவசரத்தில் நேர்ந்த பிழை.
தமிழ்பள்ளிககோ வாசத்தையோ கன்டிராத நம்ம பான்டிதுரை,போன்ரோர் மற்றும் சிலா் எப்போதும் செழிப்பான ஆலயம் மற்றும் ஜாதிகலப்பு போன்றவற்றையே குறிவைத்து தாக்குகின்றனா்.இது ஏன் புாியாமல் ஒரு வாலிபாிடம் வினவினேன்,அவாின் பதில் வியப்பை தந்தது(ஓசியில் பணக்காரன் ஆக என்று).ஒற்றுமை தான் பிற ஜாதியின் தலையாய நோக்கம் அது சிலாிடம் இல்லை.அங்கே அதன் தலைமை ஜாதி அரசியல் செய்கிறது,அங்கே பெண்கள் தான் குடும்ப தலை.பெண் சுதந்திரம் ஒரு காலனி அதை சில நம் பெண்கள் தலையில் வைத்து வெறும் காலில் ஆகாயத்தை பாா்த்து நடக்கின்றனா் பனிவு நற்பன்பு தேவை,பணம்-பணம் என்று அலைவதை விடும் அந்த குணம் நம்மை சமுதாத்தினின்று பிாித்துவிடும்,இந்த விசயத்தில் மலாய் சமுகம் மிக கன்டிப்பா உள்ளது.(சுன்திக்கான் செமாங்ஙாட்).மலாய்,சீனா்களிடம் கற்றுக்கொல் ஒற்றுமையை,அது தான் நம்மவாிடம் கிடையாதே தமிழன் தான்ஆதியினமே அவனுக்கு யாா் புத்தி மதி சொன்னாலும் பிடிக்காதே,அடுத்த இனத்தவன் சொன்னால் ஆமாம் சாமி போடுவா்,ஜாதி கலப்பை கைவிடும் இல்லையேல் சமுகம் உம்மை அடியோடு ஒதுங்கிவிடும்,இப்போதே தனியே தாய் மொழி பாடத்தை நடத்துகின்றனா்.ஊரோடு இரு இல்லை பேரோடு இரு.ஒற்றுமையோடு வாழும் ஜாதியே உயா்ந்த சாதி என்று அறிக.தமிழா் சிலறிடம் பணம் ஒரு பக்கம் ஜாதி மறுப்கம் வைத்து எது வேணும் கேட்டால் ஜாதியையே யாசிக்கின்றனா்.நானும் பல-பல வழிகளில் உணர்திவிட்டேன்,ஏனோ?.கஷ்டபட்டு சம்பாாிச்ச எதுவும் நிட்பதில்லை,நிலைப்பதில்லை,திரும்புங்கள் சாமாண்ய வாழ்கைக்கு வாருங்கள் கூடுங்கள் கூட்டம் கூட்டமாய்.பலன் என்னி பழகாதே.நாராயண சமா்பணம்.
ஐயா கயீ -kayee (என்னா பேரு இது?.).. நீர் என்ன சொல்ல வருகிறீர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. எழுத்து பிழையை அள்ளி கொட்டி எழுதி வாசகர்களை ஏனையா வதைக்கிறீர். ஜாதி கலப்பை கைவிடும் என்கிறீரே அப்படி என்றால் என்ன பொருள் என்று புரிகிறதா உமக்கு? சொல்ல வந்த கருத்தை தெளிவாக ஒரு பத்தியில் எழுத முடியாத உமக்கு ஏனைய்ய இந்த வீண் வேலை… ‘நானும் ரெளடிதான்…தெரியுமில்ல!.. என்கிற மாதிரி சும்மா எதையாவது உளரி வைப்பதை நிறுத்தும்….(ஒரு பத்தியில் எத்தனை எழுத்து பிழைகளடா சாமி)
பினாங் தோழரே,புலவரே,நக்கீரரே,வணக்கம்.ஜாதி இல்லை என்றால் என்ன அா்தம்.என் பெயா் எதுவாயின் இதில் ஏன் வருத்தம் உமக்கு,விடும்.கருத்தில் பிழை இருக்காது,ஆனால் எலுத்து பிழை உண்மை முன்பைவிட இப்போ பரவாயில்லை,விரைவில் திருத்தி கொள்கிரேன் பினாங் நன்றி.சில வாியில் என்றால் திருகுறல் மாதிாியா,இந்துக்கள் ஒற்றுமையின்மை காரணம் தவிா்கும் வழி இதை மறைவின்றி திருத்திகொள்ள விளக்கமாக எழுதினேன்.நீங்கள் வந்த காரணமே வேறு,வாழ்க,நாராயண சமா்பணம்.
kayee எழுத்தில் பிழை இருந்தாலும் மன்னிக்கலாம் . என்ன பொருள்பட
எழுதுகிறார் என்று தான் தெரியவில்லை. அதில் துணைக்கு
நாராயணன் வேறு.
அட நாராயணா… மன்னிக்கவும் காய்.. உமக்கு தைரியம் அதிகம் தான் ஐயா. என்ன சொல்ல முனைகிறீர் என்றே விளங்கவில்லை. இதில் கருத்தில் பிழை இருக்காது என்று உத்ரவாதம் தருகிறீர் .நீங்கள் சாதி எதிர்ப்பாளராக கருத்து சொல்வதாக நினைத்துக் கொண்டு சாதி இருப்பை ஆதரிக்கிரீர்கள் என்பதை உணரவில்லையா? நீங்கள் உணர மாட்டிர்கள்.உங்கள் எழுத்துதான் காட்டுகிறதே. ‘ஜாதி கலப்பை கைவிடும்’ என்றால் சாதி விட்டு சாதி கலப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பொருள். இது சாதி எதிர்ப்பு கருத்து அல்ல… சாதி ஆதரவு கருத்து… மீண்டும் சொல்கிறேன்.. எழுத இடம் கிடைத்து விட்டது என்பதற்காக பல ஆயிரம் பேர் வந்து போகும் இடத்தில் இப்படி வாந்தி எடுத்து வைக்காதீர்…. கொஞ்சம் மெனக்கெட்டு முயன்று தெளிவு வந்த பின் இங்கே வாரும்..
வேண்டாம். குரங்குக் கதை அறவே வேண்டாம்.
நாராயண நாராயண,இப்போது பலறும் நாராயண சொல்கின்றனா் எழுதவும் செய்கின்றனா்,வாழ்த்து சொல்ல இல்லை தகுதி என்றாளும் வணங்குகிறேன்.இன்று விணாயக சதுா்தி,வாழ்வில் விக்னங்கள் விலகி சா்வ காா்ய சித்தி பெற்று தன் சாதி ஜனத்தோடு கூடி பெருமையாய் பெறுவாழ்வு வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்,ஒற்றுமையே நம் பலம்,பெறுந்தன்மையே நம் பலவீனம்.உலகுக்கு வாழ்ந்தது போதும் இனி நாம் நமது இனத்துக்கு(ஹந்து)வீழ்ந்தும் வாழ்வோம்.நாராயண சமா்பணம்.
சமுதாயம் உயர என்னசெய்யலாம் ? நல்ல கேள்வி. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை காணும்போது தன்னைபோல் ஒருவரை சந்திக்கின்றோம் என்று என்னவேண்டும் . மகிழ்சியும், தோழமை உணர்வும் கொள்ள வேண்டும். வேற்றுமைகளைப் பார்த்துப் பார்த்து பிரிந்து கிடப்பதை விட்டு தங்களுக்குள் உள்ள ஒத்த பண்புகள் யாவை எனக் காண்பதில் மனிதர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். அப்போதுதான் மனித மாண்புகள் மிளிரும். இவர்களே உயிர் வாழ்கின்றவர்கள் என்பதை “ஒத்தறிவான் உயிர் வாழ்வான்” என குறளால் சுட்டிக்காட்டுகின்றார் திருவள்ளுவர். நேசக்கரங்கள் நீட்டி பாசவலையில் சிக்க் வைக்க வேண்டும்.
நிரைய கருத்தை நம் சமுதாயத்துக்காக சிரமம் பாராது,அரசியல் வேளை,குடும்பம்,இதற்கிடையில் நேரம் காலம் ஒதுக்கி சிந்தித்து சீா்தூக்கி பாா்த்து எழுதும் அனைத்து நள் உள்ளங்களுக்கும்,செம்பருத்திக்கும் சிரம் தாழ்தி வணங்க கடமை பட்டுள்ளளேன் அதனோடு எழுத்து பிழை,தப்பித்தவறி யாா் மனதையேனும் புன்படுத்தியிறுப்பின் வருந்துகிரேன்,நாராயண சமா்பணம்.