தாய்மொழிக் கல்வி, தாய்மொழிப்பள்ளி ஆகியவற்றை பாதுகாக்க மலேசிய கல்விப் பெருந்திட்டத்தில் மாற்றம் வேண்டும்

ஜீவி காத்தையா, ஏப்ரல் 14, 2014.

Neri040414அண்மையைக் காலமாக, மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, மலேசிய கல்வி அமைவுமுறையில் ஓர் அங்கமாக இருந்து வரும் தாய்மொழிக் கல்வியை ஓரங்கட்டும், இன்னும் தெளிவாகக் கூறினால் ஒழித்துக்கட்டும், முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் ஆட்சியில் இருப்பவர்களும் அவர்களின் முகவர்களாக நீதிபரிபாலனதுறை, பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்கள் மன்றங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றை சார்ந்தவர்கள் வெளிப்படையாக தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறி வருகின்றனர். இவர்களின் கோரிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று இப்பேர்வழிகளை பிரதமரோ, கல்வி அமைச்சரோ இன்று வரையில் கண்டிக்கவில்லை.

மாறாக, தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்பவர்களின் கோரிக்கைக்கு வலுவூட்டுவதகாக அமைந்திருக்கிறது கல்வி அமைச்சர் வெளியிட்ட மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025.

இக்கல்விப் பெருந்திட்டத்தில் தேசியமொழிப்பள்ளிகள் பெற்றோர்களின் முதல் தேர்வாக இருக்க வேண்டும் என்பது திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. தாய்மொழிப்பள்ளிகள் பொதுமக்களில் சிலர் கேட்டுகொண்டதற்கிணங்க நிலைநிறுத்தப்படும் என்று இப்பெருந்திட்டத்தில் கூறப்பட்டிருக்கிறதே தவிர அவற்றின் மேம்பாட்டிற்கோ நிரந்தரத்திற்கோ உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.

தாய்மொழிக் கல்வி மீதான அரசாங்கத்தின் செயல்பாடுகள் தாய்மொழிக் கல்வியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தாய்மொழிக் கல்வி மீது மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்ட ஆர்வலர்களும் அரசு சார்பற்ற அமைப்புகளும் தாய்மொழிக் கல்வி அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உரிமை; அந்த உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதோடு தாய்மொழிக் கல்வியின் மேம்பாட்டிற்கு அரசாங்கம் தேசியமொழிக் கல்விக்கு அளிக்கும் அதே ஆதரவை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் திட்டம் ஒன்றை வரைவதில் ஈடுபட்டு அதன் முதல் கொள்கை அறிக்கையை சுருக்கமாக ஏப்ரல் 4 இல் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டனர்.

29* அரசு சார்பற்ற பல்லின அமைப்புகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள தேசிய கல்வி சீரமைப்பு மன்றம், சுருக்கமாக “நெரி”, (Inisiatif Pengislahanb_1tan Pendidikan Nasional (IPPN), National Education Reform Initiative (NERI), 全国教育改革行动联盟, தேசிய கல்வி சீரமைப்பு மன்றம்) மலேசிய கல்வி கொள்கை, கல்வி சட்டங்கள் மற்றும் மலேசிய கல்விப் பெருந்திட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தேசிய கல்வி சீரமைப்பு மன்றத்தின் (நெரியின்) திட்ட வரைவுக் குழு தயாரித்திருந்த கல்வி சீரமைப்புக்கான அதன் கொள்கை அறிக்கையை சுருக்கமாக ஜிபிஎம் என்ற அமைப்பின் தலைவர் டான் இயு சிங் வெளியிட்டார்.

நெரி கோரும் கல்வி சீர்திருத்தம் கீழ்க்கண்டவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று இயு சிங் கூறினார்:

 

1. பன்மை

மலேசியா ஒரு பல்லின, பல பண்பாடுகள் மற்றும் பல மொழிகளைக் கொண்ட மலேசியா பல மொழிப்பள்ளிகளைக் கொண்டிருக்கிறது. எந்தவிதமான கல்விச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் நமது நாட்டின் பன்மை தன்மையை முற்கோளாக கொண்டிருக்க வேண்டும்;

2. அனைத்தும் அடங்கிய அணுகுமுறை

நமது நாட்டின் கல்வி சீர்திருத்தம் அனைத்தும் அடங்கிய அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். அது நீண்ட கால அடிப்படையில் ஒரு சிறந்த மலேசியாவை உருவாக்குவதற்கான பாரபட்சமற்ற மலேசிய நோக்குநிலையைக் கொண்டிருக்க வேண்டும்;

3. பல்வகைமையில் ஒற்றுமை

தேசிய கல்வி சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளவாறு பல்வகைமையின் வழி ஒற்றுமையை வளர்த்து நேர்மையும் புலமையும் பெற்ற மக்களை உருவாக்குவதற்கு அனைத்து மொழிப்பள்ளிகளையும் மேம்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கும் தரமான கல்வி அமைவுமுறைக்கு தேவை இருக்கிறது;

4. அனைத்து மொழிப்பள்ளிகளுக்கும் நியாயம்

அனைத்து மொழிப்பள்ளிகளும் நாட்டின் விலைமதிப்பற்ற சொத்துகளாகும். ஆகவே, தேசிய கல்வி அமைவுமுறைக்குட்பட்ட அனைத்து மொழிப்பள்ளிகளும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும். பல்வகைப்பட்ட மொழிப்பள்ளிகள் தேசிய கல்வி அமைவுக்குள் நிலைத்திருக்க வேண்டும், அதற்கு எதிராக வாதாடக்கூடாது;

5. பகசா மலேசியா தேசியமொழி

தேசியமொழி என்ற முறையில் பகசா மலேசியா காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அது அனைத்து பள்ளிகளிளும் கட்டாயப்பாடமாக இருக்க வேண்டும்;

6. தாய்மொழி ஓர் உரிமையும் ஆற்றல்மிக்க கற்றலுக்கு வழியுமாகும்

ஆற்றல்மிக்க கற்றலுக்கு தாய்மொழி மிகச் சிறந்த கற்பிக்கும் வழியாகும். அது மாணவர்களை திறனாய்வு சிந்தனை செய்யவும், MEB-2013-2025சுயேட்சையாக கற்கவும் வகுப்பில் சுறுசுறுப்பாக பங்கேற்கவும் தூண்டுதலாக இருக்கிறது;

7. ஆங்கிலம் உலகமொழி

ஐயத்திற்கு இடமின்றி, ஆங்கிலமொழி உலகமொழி. நமது மாணவர்கள் உலக மேடையில் போட்டியிடுவதற்கு அவர்களின் ஆங்கிலமொழி புலமையை உயர்த்த வேண்டும். அதற்கு திட்டமிடப்பட்ட விடாமுயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்;

8. சீரழிந்து வரும் கல்வித் தரம்

TIMSS மற்றும் PISA ஆகிய அனைத்துலக அமைப்புகள் மேற்கொண்ட மதிப்பீடுகளில் மலேசிய கல்வியின் தரம் சீரழிந்திருப்பது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது;

9. கற்றல் மகிழ்ச்சி அளிப்பதாக்கப்பட வேண்டும்

இளைஞர்கள் மகிழ்ச்சியான சூழ்நிலையில் சிறப்பாக கற்கின்றனர். நமது கல்வி அமைவுமுறை அவர்களை விரட்டி விடாமல் வரவேற்கும் வழிமுறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். மாணவர்கள் கேள்விகள் கேட்பதற்கும் தங்களுடைய கருத்துகளை தெரிவிப்பதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும். அது வளமான கற்பிக்கும் மற்றும் கற்கும் வழிமுறைக்கு இட்டுச் செல்லும். அதிலிருந்து ஏற்றுக்கொள்ளுதல், புரிந்துணர்வு, மரியாதை மற்றும் நியாயம் போன்றவற்றை நுகர இயலும்;

10. சாவாலை நேரடியாக சந்தித்தல்

உலகளவில் வளர்ந்துள்ள போட்டியை எதிர்கொள்வதற்கு நமது மாணவர்கள் தயார்படுத்தப்படவில்லை. மலேசிய கல்வி அமைவுமுறைக்கான சீர்திருத்தங்கள் அச்சவால்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும்;

11. தரமான கல்விக்கு சமமான வாய்ப்பு

சமூக, இன மற்றும் வேறு எந்த ஒரு பின்னணியையும் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மாணவனும் தரமான கல்வி கற்பதற்கான உரிமை இருக்கிறது. நமது கல்வி அமைவுமுறை ஒவ்வொரு மாணவனுக்கும் இந்த உரிமை இருக்கிறது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

12. கல்விச் சட்டம் 1996 மற்றும் மலேசிய கல்விப் பெருந்திட்டம்

இக்கல்வி சீர்திருத்ததை அடைவதற்கு கல்விச் சட்டம் 1996 திருத்தப்பட வேண்டும். மேலும், மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இன் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மறுபடியும் முறைப்படுத்தப்பட வேண்டும்.

 

ஓம்பட்ஸ்மேன் நியமிக்கப்பட வேண்டும்

 

மேலும், கல்வி கொள்கை, கல்வி சட்டங்கள் தேசிய அளவில் முறையாக அமல்படுத்தப்படுவது, அவற்றின் மீது எழும் புகார்களை விசாரித்து தீர்வு காண்பது போன்றவற்றை மேற்கொள்வதற்கு கல்வி கண்காணிப்பாளர் (Ombudsman) நியமிக்கப்பட வேண்டும் என்பது கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டது.

மலேசிய கல்வி அமைச்சு மலேசிய கல்விப் பெருந்திட்டத்தின் வழி அமல்படுத்த முனைந்திருக்கும் கொள்கைகளும் நடவடிக்கைகளும் ஒரேYap Sin Tian மொழி கல்வி அமைவுமுறையை அடையும் இலக்கைக் கொண்டிருக்கிறது என்று அச்செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டோங் ஸோங் என்ற சீனமொழிக் கல்வி அமைப்பின் தலைவரான முனைவர் யாப் சின் தியன் கூறினார்.

“இக்கொள்கைகளும் நடவடிக்கைகளும் பல மொழிப்பள்ளிகளின் வளர்ச்சி, அவற்றின் மேம்பாடு மற்றும் தாய்மொழிக் கல்வி ஆகியவற்றுக்கு தீங்கானவையாகும்”, என்று யாப் மேலும் கூறினார்.

 

தீங்கு விளைவிக்கும் மலேசிய கல்விப் பெருந்திட்டம்

 

தாய்மொழிக் கல்விக்கும் தாய்மொழிப்பள்ளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளைக் கொண்ட மலேசிய கல்விப் பெருந்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டோங் ஸோங் ஒரு மில்லியன் பொது மக்களின் மற்றும் 3,000 அமைப்புகளின் கையொப்பங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறிய அவர், இதுவரையில் 700,000 பொது மக்கள் மற்றும் 2,700 அமைப்புகளின் கையொப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ள தகவலை வெளியிட்டார்.

இவை நாட்டின் பிரதமர், கல்வி அமைச்சர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் யுனெஸ்கோ ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாரவர்.

டோங் ஸோங்கின் இம்முயற்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று யாப் கேட்டுக் கொண்டார்.

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து தாய்மொழிக் கல்வி மற்றும் தாய்மொழிப்பள்ளி ஆகியவற்றுக்கு தீங்கிழைக்கும் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் மலேசிய கல்விப் பெருந்திட்டத்திலிருந்து அகற்றி அவை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதை யாப் வலியுறுத்தினார்.

 

*List of Initiating NGOs of National Education Reform Initiative (NERI)
1. The KL & Selangor Chinese Assembly Hall (KLSCAH)2. Pertubuhan IKRAM Malaysia (IKRAM)3. Persekutuan Persatuan- Persatuan Lembaga Pengurus Sekolah China Malaysia (Dong Zong)

4. Gabungan Persatuan Guru-Guru Sekolah Cina Malaysia (Jiao Zong)

5. LLG Cultural Development Centre (LLG)

6. Tamil Foundation (TF)

7. Saya Anak Bangsa Malaysia (SABM)

8. National Indian Rights Action Team (NIAT)

9. Negeri Sembilan Chinese Assembly Hall (NSCAH)

10. Muslim Professional Forum (MPF)

11. Centre for Malaysian Chinese Studies (CMCS)

12. Dewan Perhimpunan China Pulau Pinang (PCTH)

13. Dewan Perhimpunan China Melaka

14. Gabungan Pertubuhan-pertubuhan Cina Johor

15. Persekutuan Pesatuan-persatuan Alumni Sekolah China Malaysia

16. The Federation of Alumni Associations of Taiwan Universities, Malaysia (FAATUM)

17. The Association Of Graduates From Universities and Colleges of China, Malaysia

18. Japan Graduates’ Association of Malaysia (JAGAM)

19. Nanyang University Alumni Association of Malaya

20. Merdeka University Bhd

21. The Federation Of Hokkien Associations Malaysia

22. The Federation Of Kwang Tung Association Malaysia

23. Persatuan Kwangsi Malaysia

24. Persatuan San Kiang Association In Malaysia

25. Malaysia-China Chamber of Commerce

26. Malaysia-China Friendship Association

27. Eight Major Chinese Youth-based Organizations (EMCO)

28. Malaysia Christian Youth Association (MCYA)

29. Council of National Clan-based Youth Federation of Malaysia (CNCYFM)