ஸைட் இப்ராகிம்: சமயச்சார்பற்ற மலேசியாவை தற்காக்க புதிய கூட்டணி அமைப்போம்

 

Zaid-secularism1மசீச, டிஎபி, மஇகா மற்றும் கிழக்கு மலேசிய கட்சிகள் ஜனநாயகத்தையும் சட்ட ஆளுமையையும் விரும்பும் ஒரு புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம் அவரது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

“போதும், நிறுத்துங்கள் என்று மலேசியர்கள் கூற வேண்டிய நேரம் வந்து விட்டது. நமது நாடு சமயச்சார்பற்றது. அது அப்படித்தான் தொடர்ந்து இருக்க வேண்டும். போராடுவதற்கான தகைமையுடையது”, என்று இன்னொரு பதிவில் அவர் கூறியுள்ளார்.

அவருடைய வலைப்பதிவில் தீவகற்ப மலேசிய இஸ்லாமிய தலைவர்கள் மீது ஸைட் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார். நாட்டில் விளைந்துள்ள தீமைகளுக்கு அவர்களின் தோல்விகள்தான் காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

சாபா மற்றும் சரவாக்கில் அவர்களின் எதிரிணையர்கள் நாட்டை “இஸ்லாமியமாக்குவதில்” ஆழ்ந்திருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவகற்ப இஸ்லாமிய தலைவர்கள் மனோவியல் நிபுணர்கள் கூறும் “போதாமை என்ற கொள்கைகளுக்கு உகந்த நோய்க் குறியால்” (the inadequacy syndrome) பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாரவர்.

“இது இத்தலைவர்கள் தங்களைப் பற்றி தாங்களாகவே தொடர்ந்து உயர்வாக நினைத்துக்கொள்வதிலிருந்து புலப்படுகிறது, இருந்த போதிலும், இதன் விளைவாக அவர்கள் இன்னும் பெரிய பிரச்சனைகளை உருவாக்கி விடுகின்றனர்.

டிஎபியும் மலேசியாகினியும்

“தாங்கள் சரியாக மதிக்கப்படுவதில்லை என்று கருதும் அத்தலைவர்கள், அவர்கள் விரும்பும் அந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தீவிரமானZaid-secularism2 மனப்பாங்கை வெளிப்படுத்துகின்றனர். அவர்களின் கிளர்ச்சி உணர்வை அடக்குவதற்கான ஒரே வழி டிஎபியை தூக்கிலிடுவதற்கு கயிறு கொடுக்க வேண்டும், மலேசியாகினியை விலக்கி வைக்க வேண்டும் என்பதோடு குற்றவியல் சட்டத் தொகுப்பை (Penal Code) நீக்கி விட்டு அந்த இடத்தில் இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை வைக்க வேண்டும்”, என்று ஸைட் இப்ராகிம் மேலும் கூறினார்.

அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றில் இருக்கும் முஸ்லிம் தலைவர்கள் பலவீனமானவர்கள். இந்நாடு சமயசார்பற்ற ஜனநாயக கோட்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை என்றாரவர்.

“ஆனாலும், தங்களின் சொகுசான வாழ்க்கை முறை மற்றும் சலுகைகளை இழக்க நேரிடும் என்ற பயத்தில் இஸ்லாமியவாதிகள் கோரும் இஸ்லாமிய குருமார்களின் ஆட்சிமுறையைத் தழுவிக் கொள்ள அவர்கள் அஞ்சுகின்றனர். இந்தப் போலியான உறுதியின்மை ஆட்சி அமைவுமுறைக்கு பல பிரச்சனைகளை உருவாக்குகிறது.

“நாம் ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்றால், நாம் அடிப்படை மனித உரிமைகளைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். அனைத்து சட்ட அமல்படுத்தல் மற்றும் அவற்றின் அரசமைப்புச் சட்டத் தன்மை ஆகியவற்றை நிர்ணயம் செய்வதற்கு நமது சிவில் நீதிமன்ற அமைவுமுறைதான் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

“ஆனால், மாறாக, நாம் முதலில் ஓர் இஸ்லாமிய நாடு என்றால், அதன் விளைவாக மனித உரிமைகள் அனைத்தையும் நசுக்கி விடும் வலிமைமிக்க முஸ்லிம் சட்டங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் உட்பட்டதாகிவிடும். அடுத்து, ஷரியா நீதிமன்றங்கள் முதல் சட்டக் கோட்பாடுகளை நிர்ணயம் செய்து அதிகாரத்தை நிலைநாட்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.

“இக்கேலிக்கூத்துடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது”

இந்த அடிப்படையான பிரச்சனைக்களுக்கு முடிவான தீர்வு காணப்பட வேண்டும்.

Zaid-secularism3“பிஎன் மசீசங்கத்தை அவர்களுக்காக சமயச்சார்பற்ற அரசாங்கத்தை தற்காத்து பேச விடுவதும், அதே வேளை அம்னோ அதன் இஸ்லாம்-ஆதரவு இரட்டை நாடகத்தை தொடர்வதும் போதுமானதல்ல. அவ்வாறே, டிஎபி தலைவர்கள் பக்கத்தான் ரக்யாட் சார்பில் சமயச்சார்பற்ற கோட்பாடுகளை தற்காக்கும் வேளையில் அன்வார் இப்ராகிமும் பாஸ்சும் அவர்களின் இஸ்லாமிய திட்டத்தில் விடாப்பிடியாக இருக்கின்றனர்.

“இந்த இஸ்லாமிய தலைவர்கள் ஒரு பலவீனமான கூட்டம். அவர்கள் மக்களிடம் உண்மையாக இருப்பதற்கு அஞ்சுகின்றனர், ஏனென்றால் அவர்களுக்கு ஒப்புயர்வற்றது அதிகாரத்தில் நிலைத்திருப்பது. தாங்கள் நீண்டகாலமாக முட்டாள்களாக்கப்பட்டிருப்பதை மக்கள் உணர வேண்டும் என்பதோடு இப்போது கூட்டாக தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். நாம் இக்கேலிக்கூத்துடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது”, என்பதை ஸைட் வலியுறுத்தினார்.

மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்துவதும்…

ஓர் இந்து தாயாருக்கும் அவருடைய மதம் மாறிய கணவருக்கும் இடையிலான பராமரிப்பு தகராறு பற்றிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காரின் அறிக்கையையும் ஸைட் சாடினார்.

“நீதிமன்ற உத்தரவை மதிக்காத எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க தங்களால் முடியாது அல்லது விரும்பவில்லை என்று போலீஸ்Zaid-secularism4 பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது, ஏனென்றால் ஒரே விவகாரத்திற்கு இரு வேறுபட்ட உத்தரவுகள் இருப்பதாக அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது – ஒன்று ஷரியா நீதிமன்றத்திலிருந்தும் மற்றொன்று சிவில் நீதிமன்றத்திலிருந்தும்.

“நீதிமன்றம் என்ன கூறியது என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு தகப்பன் அவருடைய சொந்த மகனை கடத்துவதற்கான சாத்தியமில்லை என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி அறிவித்திருக்கிறார். இதே போலீஸ்காரர் என்றாவது ஒரு நாள் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரு கணவர் அவரது மனைவியைக் கற்பழிப்பதற்கான சாத்தியமில்லை, அல்லது எந்த ஒரு வல்லுறவு குற்றத்திற்கும் நான்கு சாட்சிகள் இருக்க வேண்டும் என்று கூறலாம்.

“இப்போது போலீஸ் நாட்டின் சட்டங்களுக்கு இறுதி வியாக்கியானம் அளிப்பவர்களாக ஆகியுள்ளனர். அவர்களைத் திருத்துவதற்கோ, அவர்களுக்கு வியாக்கியானம் அளிப்பதற்கோ எவருக்கும் துணிவில்லை. அவர்கள் இந்த நிலைக்கு வந்திருப்பதற்கு காரணம் நமது அரசியல்வாதிகள் எப்போதும் சரியானவற்றுக்கு போராட பயப்படுகின்றனர்.

“இந்த முஸ்லிம் தலைவர்கள் சிவில் திருமணச் சட்டங்கள் அல்லது முஸ்லிம் குடும்பச் சட்டங்கள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அஞ்சுகின்றனர் ( இச்சட்டங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு திருத்தப்பட்ட போதிலும் அவை இன்னும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.)”, என்று ஸைட் இப்ராகிம் மேலும் கூறினார்.

ஒரே ஒரு சட்ட அமைவுமுறைதான் இருக்கிறது

மலேசியாவில் இரட்டையான சட்ட அமைவுமுறை இருக்கிறது என்ற புலப்பாடு போலியானது என்று ஸைட் சுட்டிக் காட்டினார்.

முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட சட்டங்கள் முதன்மையான அமைவுமுறையின் அங்கங்களாகும். அவை நாட்டின் பிரதான சட்ட அமைப்புகளை விஞ்சுவதற்கானவை என்றாகாது என்று வழக்குரைஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் விளக்கினார்.

“இருந்தும், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் சிவில் உயர்நீதிமன்றம்தான் உயர்வான நீதிமன்றம் என்று பகிரங்கமாக அறிவிக்க எவரும் தயாராக இல்லை. நீதிபரிபாலன அதிகாரம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை பொருத்தமட்டில் ஷரியா நீதிமன்றங்களின் எல்லை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது முஸ்லிம்களுக்கு மட்டுமே, அதுவும் தேர்ந்தெடுக்கப்பட விவகாரங்களுக்குத்தான்.

Zaid-secularism5“நோக்கம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றில் முற்றிலும் வேறுபட்டிருக்கும் இரு அமைவுமுறைகள் இருக்கையில், நம்மிடம் இரு அமைவுமுறைகள் சமமாக ஒன்றித்து இருக்கின்றன என்று கூறுவது அறிவிக்குப் புறம்பானது”, என்று அவர் இடித்துரைத்தார்.

“தீவகற்ப மலேசியாவில் இருக்கும் இந்த பலவீனமான முஸ்லிம் தலைவர்கள்” ஷரியாவை எல்லாவற்றுக்கும் மேலானதாக வைக்க விரும்பினால், சாபா மற்றும் சரவாக் தலைவர்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

“பெடரல் அரசமைப்புச் சட்டத்தை திருத்தி இஸ்லாமிய சட்டங்கள்தான் அனைத்து சட்டங்களுக்கும் அடித்தளம் என்று அறிவிப்பதுதான் சரியான செயலாகும். அதற்குப்பிறகு, ஷரியா நீதிமன்றம் (சிவில்) உயர்நீதிமன்றத்தைவிட உயர்வானதாக இருக்கும். அதற்குள், நமக்கு ஓர் உயர்நீதிமன்றம் வேண்டும் என்ற தேவையே இருக்காது.

“அத்தருணத்தில், குரான்தான் நாட்டின் மிக உயரிய சட்டம் என்றும் பெடரல் அரசமைப்புச் சட்டம் அதற்கு கட்டுப்பட்டது என்றும் அறிவிப்பது சரியானதாக இருக்கும். அப்போதாவது நமது நிலை என்ன என்பது நமக்குத் தெரியும். இத்தலைவர்கள் அனைவரையும், போலீஸ்காரர்கள் உட்பட, தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்துவதை அனுமதிக்கவே கூடாது”, என்று ஸைட் மேலும் கூறினார்.

ஹுடுட் சட்டம்

ஹுடுட் சட்டத்தைப் பொறுத்த வரையில், தீவகற்ப முஸ்லிம் ஆதரவாளர்களும் அரசியல்வாதிகளும் ஹுடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்று கோருவதால் அவ்விவகாரம் மீண்டும் தலைதுக்கியுள்ளது. ஆனால், அவ்வாறான கோரிக்கை எதுவும் சபாவிலிருந்தோ, சரவாக்கிலிருந்தோ எழவில்லை என்றாரவர்.

“இதுவரையில், இக்கோரிக்கையை எதிர்க்க அம்னோ அல்லது பாஸ் ஆகியவற்றின் தலைவர் எவரும் துணியவில்லை. விரும்பியவாறே, நாடு முழுமைக்கும் அதனைச் செய்வோம். அனைத்து மலேசியர்களும் இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தின் தாக்கத்தை உணரட்டும். இச்சட்டம் ஒவ்வொருவரையும் உட்படுத்தும் வரையில் எனக்கு இச்சட்டத்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

“எனக்கு வெறுப்பூட்டுவதாக இருப்பது இந்த பலவீனமான தலைவர்களின் மனப்பான்மை. இந்த நோக்கத்தை அடைவதற்கு தனிப்பட்ட உறுப்பினர்கள் (Private Members Bill) மசோதா முன்வைக்கப்பட வேண்டும் என்ற நகைப்பிற்குரிய ஆலோசனை ஏன்? இச்சட்டம் கிளந்தானில் மட்டும் அமல்படுத்தப்படுவது ஏன்? ஹுடுட் அமலாக்கத்திலிருந்து முஸ்லிம் அல்லாதவர்கள் ஒதுக்கப்பட்டிருப்பது ஏன்? நீங்கள் உண்மையாகவே இஸ்லாத்திற்காக போராடுகிறீர்கள் என்றால், இறுதி வரையில் செல்லுங்கள்”, என்றார் ஸைட்.

“பிரதமரும்/துணைப் பிரதமரும் அந்த மசோதாவை தாக்கல் செய்யட்டும். அன்வார் அதனை ஆதரிக்கட்டும். நாம் முழு வேகத்துடன் Zaid-secularism6முன்னோக்கிச் சென்று அனைத்து மலேசியர்களும் ஒரே மாதிரியான சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் உட்படுத்தப்படுவதை உறுதி செய்வோம். இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாகவும் கோழையாகவும் நடந்து கொள்ளவது நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஏன் விலக்கு அளிக்கப்பட வேண்டும்?

“இந்த விலக்கு அளிப்புதான் மலாய்க்காரர் அல்லாதவர்களை, குறிப்பாக டிஎபி, விசுவாசமிக்கவர்களாகவும் பாஸ் கட்சியுடன் மகிழ்ச்சியுடன் இருக்கவும் செய்துள்ளது. பாஸ் கட்சி ஆட்சியில் அமர்வதை டிஎபி விரும்புகிறது, ஏனென்றால் அது அவர்களும் அதிகாரத்தை கைப்பற்ற உதவும். ஹுடுட் சட்டத்திற்கு அவர்கள் உட்படுத்தப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதியில் அவர்களுக்கு திருப்தி.

“அவர்கள் பிஎன்னிலிருக்கும் மசீச தலைவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. அவர்களின் வேலை சீனர்கள் ஹூடுட் சட்டத்திற்கு உட்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதுதான். ஹுடுட் சட்டத்தை விரும்பாத மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை?”, என்றார் ஸைட் இப்ராகிம்.